Sunday, February 16, 2014

ஆசையே துன்பத்திற்கு காரணம்










ஆசையே துன்பத்திற்கு காரணம்
 புத்தர் தனது இளமையில் கண்ட
 மரணம், பிணி,மூப்பு இவை அனைத்தும்
 எல்லா மனிதருக்கும் வரும் என்பதை அறிந்த பின்னரே
இவ்வுலக வாழ்வை துறந்து அவற்றின் விடையை காண ஓடினார்.
அவர் காலத்திலும் கடவுளை
 அடைய வழிகள் பல இருந்தன.
எல்லாவற்றையும் துறந்து காட்டுக்கு ஓடுவது,
ஒருவேளை உண்பது, உண்ணாமல் இருப்பது,
மூச்சை இழுத்து விடுவது,கண்ணை மூடி பார்ப்பது,
பேசாமல் இருப்பது,தலை கீழாக நிற்பது,
வேதங்களை கற்பது இவை எல்லாவற்றையும்
 செய்து செய்து உடலும்,மனமும் தளர்ந்து
 போனதுதான் மிச்சம்.
காண வந்த விடை கிடைக்கவில்லை.
விரக்கியின் எல்லையில் எல்லாவற்றையும் கைவிட்டு
 சோர்ந்து மரத்தின் கீழ் படுத்திருந்தார்.
எதுவும் செய்ய வேண்டிய நிலை இல்லாதபோது
 மனமற்ற நிலையில் தன் உண்மையை உணர்ந்தார்.
இதை அடைய எடுத்த முயற்சிகள் அனைத்தும்
 ஆசையின் உந்துதலே என்பதையும்,முயற்சி உள்ளவரை
 மனமும் இருக்கும் என்பதையும் உணர்ந்தார்.
உண்மை எப்பொழுதும் உள்ளது.அது புதிதாக கண்டுபிடிப்பதன்று.இருப்பதை
 மறைப்பது மனமே. உண்மையை அடைய எடுக்கும் முயற்சியே அதை அடைய
 தடை என்பதையே "ஆசை துன்பத்திற்கு காரணம்" என்று உணர்ந்து கூறினார்.
இதையே தாயுமானவனும் "சிந்தையை அடக்கி சும்மா இருப்பது அரிது"
என்றுரைகின்றார்.

No comments:

Post a Comment