Tuesday, February 4, 2014

தீர்த்தம் :


தீர்த்தம் :

அக அழுக்கை நீக்குவது முக்கியமான தீர்த்தம் ஆகும்.அழுக்கிலே இரண்டு வகை உண்டு.முதலாவது புற அழுக்கு.அது குளித்தால் போகும்.இரண்டாவது அழுக்கு மனதை பற்றியுள்ள தீயகுணங்கள்.
அக அழுக்கை நீக்கும் ஆற்றல் உண்மைக்கு உண்டு.அகத் தூய்மை வாய்மையால் காணப்படும் என்றார் வள்ளுவர்.
...
அக அழுக்கு எப்படி எப்போது நீங்கும் :

சிந்தை எனப்படும் உள்ளத்தில் தெளிவு பிறக்க வேண்டும்.மனத் தெளிவு வந்து விட்டால் போதும்,அகத் தூய்மை தானே வந்து விடும்.அத்தகைய தருபவை தீர்த்த எதிரிகள்.

நம்மை தேடித் தீர்த்தங்கள் வருவதில்லை.நம் தன் தேடித் போக வேண்டும்.நடையாய் நடக்க வேண்டும்.இடைவழியில் ஏற்படும் கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டும்.அகதுக்கங்களை சமமாக பாவிக்கும் மனோ நிலை தானே வந்து விடும்.

விட்டுக் கொடுக்கும் தன்மை ,வெறுப்பு காட்டமை,சகிப்புத் தன்மை ,எல்லாவற்றையும் சமமாக பாவிக்கும் நிலை என எராளமான நற்குணங்கள் ,செயல்கள் தானே கிட்ட வழி வகுப்பது தீர்த்த யாத்திரை.

இடை வழியில் எல்லாவற்றையும் சிவமாகப் பாவித்தவனுக்குத் தான் ,நீராட உள்ள நீர்னிலக் கூட சிவமாகவே தெரியத் தொடங்கும்.இப்படிப்பட்ட நிலையை தோற்றுவிக்கும் அக அழுக்கை அகற்றும் நீர்நிலையே புண்ணிய தீர்த்தமாகும்.




No comments:

Post a Comment