இராம கீதை - சில உண்மைகள்!
இந்து சமயத்தைப் பொறுத்தவரை வேறு சில கீதைகளும் உள்ளன. ஆனால், 'கீதை' என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது பகவத் கீதைதான்.
குருக்ஷேத்திரப் போரில் மனச்சோர்வுற்று தொடர்ந்து போரில் ஈடுபட விரும்பாத நிலையில் அயர்ச்சியுடன் அமர்ந்து விட்டான் அர்ச்சுனன். அவனுக்கு ஓர் ஆசானாக, உரிய உபதேசங்கள் செய்து, அந்தப் போரின் முக்கியத்துவத்தைப் பலவாறாக விளக்கிச் சொல்லி அவனுடைய மனக்கிலேசங்களைப் போக்கினார் கிருஷ்ணர்.
பகவான் சொன்ன இந்த பகவத்கீதை உலகப்புகழ் பெற்றது. இந்த பகவத் கீதைக்கு முன்னோடியாக அமைந்ததுதான் இராம கீதை. தன் இராமாவதாரத்தில் தான் சொன்ன கீதையை மிகப் பெரும் அளவில், பல்வேறு கேள்விகளுக்கு பதிலாகவும், பலவகை சந்தேகங்களுக்குத் தீர்வாகவும் தன்னுடைய கிருஷ்ணாவதாரத்தில் மஹாவிஷ்ணு சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த பகவத் கீதைக்கு முன்னோடியாக உரைக்கப்பட்டிருக்கிறது ராமகீதை. இது இராமன் உரைத்த கீதை. தன் அடுத்த அவதாரத்தில் தான் சொல்லப்போகும் கீதையின் தத்துவங்களை இந்த இராம அவதாரத்திலும் திருமால் அடிக்கோடாக உணர்த்தியிருக்கிறார். உறவு, பந்தம், சரணாகதி, மகிழ்தல், அழுதல், சந்திப்பு, பிரிவு, தொடர்பறுக்கும் பக்குவம்.... எல்லாமும் இராமகீதையிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.
தந்தையின் ஆணைப்படி பதினான்கு ஆண்டுகள் வனவாசம் ஏகினான் இராமன். இந்த விவரம் தெரிய வந்த பரதன், தனக்கு அளிக்கப்பட்ட பட்டாபிஷேக மரியாதையை வெறுத்து ஒதுக்கி, அண்ணனையே மீண்டும் அயோத்திக்கு வரவழைத்து அரசை ஏற்றுப் பரிபாலனம் செய்யச் சொல்லி வேண்டுவதற்காக காட்டுக்குச் சென்று சந்தித்தான்.
அவனுடைய உணர்ச்சிவசப்பட்ட போக்கினைக் கண்ட இராமன், அவனை ஆறுதல்படுத்தினான். தந்தையின் உத்தரவைச் சிரமேற்கொண்டிருக்கும் தான், அந்தச் சிரம்மேல் மகுடம் சூட்டிக் கொண்டால் அமரராகிப் போன தந்தையாரை அவமரியாதை செய்வதுபோல ஆகும் என்றான். ஆனாலும் பதைபதைக்கும் பரதனுக்கு மேலும் அறிவுரைகள் கூறினான்.
“ஈஸ்வரன் பூரண சுதந்திரம் உள்ளவன். அவனன்றி ஓரணுவும் அசையாது. உலக இயக்கம் அனைத்துமே அவனுடைய ஆணைப்படிதான் நடக்கும். மனிதனுடைய விருப்பத்திற்கும் எண்ணத்திற்கும் ஏற்ப எதுவும் நடந்துவிடுவதில்லை. இறைவன் ஆட்டுவிக்கும் பொம்மைதான் மனிதன். உண்மையை நெஞ்சிலே பதித்து அதற்கேற்றாற்போல இயங்குபவனே உண்மையான மனிதன்.
உறவு என்ற ஒரு பந்தம் ஏற்படுமானால் நிச்சயம் பிரிவு என்ற துறவுக்கும் தயாராக இருக்க வேண்டும். உறவு என்று கொண்டாடுபவர்கள் எல்லாம் பிரிவு வரும்போது மனவருத்தம் கொள்வதில் நியாயமே இல்லை. உறவு கொள்ளும்போது சந்தோஷம் அடைவதும், பிரியும்போது வருத்தம் கொள்வதும் மனித இயல்பு. ஆனால், இரண்டையும் சமமாக பாவிக்கும் மனப்பக்குவத்தை ஒரு மனிதன் அடைய வேண்டும். உயர்வு என்ற மேல்நிலை ஒருவனுக்கு உண்டு என்றால் அவன் தாழ்வு என்ற கீழ்நிலைக்கும் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உயர்நிலையில் கர்வம் கொள்ளாமல், மேல்நோக்கு ஆணவம் கொள்ளாமல் ஒருவன் இருக்கும்போதுதான் தாழ்நிலையின் தாக்குதல் அவனை பாதிக்காது. அமைதியாக இரு. உறவையும் பிரிவையும் சகஜமாக எடுத்துக்கொள்! உயர்நிலையிலும் தாழ்நிலையிலும் மனம் சஞ்சலமடையாத பக்குவத்தை வளர்த்துக்கொள்.
யமுனை, கடலை நோக்கிச் செல்கிறது. ஆனால், மீண்டும் யமுனையாகவே அது கடலிலிருந்து திரும்ப முடியுமா? கடல் பரம்பொருள். அதனை நோக்கிச் சென்று சரணடைந்துவிட்டால் பரம்பொருளுடன் ஐக்கியமாகிவிடும் பெரும்பேறு கிடைத்துவிடுகிறதே! மீண்டும் யமுனையாகவே திரும்ப அந்த ஆறு விரும்புமா என்ன? நடந்துபோன சம்பவங்கள் நல்லனவே என்ற மன உறுதிகொள். ஓர் இரவு சூரியோதயத்தின்போது காணாமல் போனால் போனதுதான். அடுத்து புது இரவுதான் வருமே தவிர போன இரவு மீண்டும் வராது.
கோடை காலத்தில் சூரியனின் கிரணங்கள் தண்ணீரை உறிஞ்சி, ஆவியாக எடுத்துக்கொள்கின்றன. அந்தக் கிரணங்களைப் போலத்தான் ஒரு நாளின் இரவும் பகலும். இவை இரண்டும் நம் ஆயுளை நம்மிடமிருந்து உறிஞ்சி எடுக்கின்றன. இவ்வாறு குறைவதை நமக்கே உணர்த்துகிறான் இறைவன். நமக்கு இன்னும் எத்தனை நாளோ என்ற கணக்கு நமக்கே தெரியாதபோது மகிழ்தலும், அழுதலும் ஏன்?
சூரியன் உதித்ததும். ஆஹா... புதிய நாள் ஒன்று பிறந்தது என்று மகிழ்கிறோம். ஆனால், அந்த ஆனந்தத்தின் பின்னணியில், அன்றைய ஒருநாள் ஆயுளில் குறையப்போகிறது என்பதை நாம் உணரத் தவறிவிடுகிறோம். எந்த சந்தோஷத்திற்குப் பின்னாலும் ஒரு துக்கம் நிற்கிறது. எந்தத் துக்கத்திற்கும் நிழலாய் சந்தோஷம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பழுத்துவிட்டால், மரத்துடனான தன் தொடர்பை அறுத்துக்கொண்டு பழங்கள் மண்ணில் வீழ்கின்றன. தொடர்பறுப்பது பழமா அல்லது மரமா என்று ஆராய்வதைவிட பழுத்ததன் பலனாய், தொடர்பறுக்கும் பக்குவம் ஏற்பட்டு விடுவதை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். மனம் பழுக்கும்போது மரணமோ, பிரிவோ ஒரு பிரச்னையாகவே இருக்க முடியாது. பழுத்துவிட்டேனே, மரத்திலிருந்து கீழே விழுந்து மண்ணுக்குப் பயன் ஆவேனே... மீண்டும் நான் காயாய், பூவாய், மொட்டாய் மாற மாட்டேனா என்று அந்தப் பழம் ஏங்கினால் அது சாத்தியமாகுமா? நெய் வெண்ணெயாகி, தயிராகி, பாலாகிவிட நினைப்பதுபோல்தான் இதுவும்.
கடலில் கட்டைகள் மிதந்து வருகின்றன. நீரின் வேகத்தால், சுழற்சியால் மிதந்து வரும் கட்டைகள் ஒன்றோடொன்று இணைந்து உரசிக்கொண்டே வருகின்றன. திடீரென்று நீரின் போக்கு மாறுகிறது. சேர்ந்த கட்டைகள் பிரிகின்றன. பிரிந்த நிலையிலேயே ஆற்றின் போக்கில் பயணம் தொடர்கிறது. மறுபடி நீர்ச்சுழற்சி. மறுபடியும் கட்டைகள் இணைகின்றன. இணைவதால் மகிழ்வதோ, பிரிவதால் அழுவதோ அந்தக் கட்டைகளுக்குக் கிடையாது. நீரோட்டம் போகும் போக்கிலேயே போய் தம் பயணத்தை அதே நீரோட்டத்துடனேயே முடித்துக்கொள்ளும் பக்குவம் படைத்தவை அவை. அதேபோல நாம் சந்திக்கிறோம்; பிரிகிறோம். சந்திப்புக்கும் பிரிவுக்கும் இடைப்பட்ட பழக்கத்தில் நாம் ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்துவிடுகிறோம். சார்ந்து வாழ முற்படுகிறோம். பிரிதல் என்பது உண்டென்பதை சந்திப்பின்போதே நாம் பூரணமாக உணர்ந்துவிட்டால் பழக்கத்தில் உணர்ச்சிவசப்பட மாட்டோம்; அதனால் பிரிவில் வலி இருக்காது.
உண்மைதான் சுகம். சத்தியம்தான் இன்பம். உண்மையாய் சிந்திப்பது, பேசுவது செயலாற்றுவது எல்லாமே இனிமையானவை. ஊருக்கு, உலகத்துக்கு, உற்றார் உறவினருக்கு, நம் உண்மைத்துவம் ஏற்புடையதாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நம் மனசுக்கு உகந்தது அது. வெளி எதிர்ப்புகள் எத்தனை ஆயிரம் புறப்பட்டாலும் உள்ளே மனசாட்சி தைரியமாகக் குரல் கொடுக்கும். நமக்குப் போர் தொடுக்கும் ஆற்றலைத் தந்து வெற்றியையும் தேடிக் கொடுக்கும். அந்த உண்மை நிலை எப்போது கைவசப்படும்? இருப்பதைக் கொண்டு திருப்தியடையும்போதுதான். நம் தேவைகளை நாம் சுருக்கிக்கொண்டால் நமக்கென்று இருப்பவை எல்லாமே நமக்கு சுகமளிக்கக் கூடியவைதான். மேலும், மேலும் வேண்டும் என்ற அவாவினைத் தோற்றுவிக்காத, போதும் என்ற அந்த மனமே பொன் செய்யும் மருந்தாகும்.

போதும் என்ற அந்த மனமே பொன் செய்யும் மருந்தாகும்.---- உன்னதமானதொரு பகிர்வு! நன்றி அய்யா!
ReplyDelete