தன்னையே தோண்டினாலும் தோண்டியவரை தாங்கி நிற்கும் நிலம் ----------------------
ஒரு காட்டில் ஒரு பெரிய மரம் இருந்தது. ஒரு நாள் காற்று வீசும்போது அந்த மரத்தின் விதை ஒன்று மரத்திலிருந்து நழுவி காற்றில் மிதந்தது. அது காற்றில் மிதப்பதை மிகவும் விரும்பியது. சந்தோஷமாக பாடல் ஒன்றை பாடிக்கொண்டே காற்றில் மிதந்துகொண்டிருந்தபோது சட்டென்று பூமியில் விழுந்தது அந்த விதை.
தான் சந்தோஷமாக பறந்துகொண்டிருந்ததை தடுத்த இந்த மடையன் யார் என கேட்டு அந்த விதை சத்தம்போட்டு கூப்பாடு போட்டது. பக்கத்...திலிருந்த ஒரு சிறிய செடி ’இதுதான் பூமி’ என்றது. ’யாராய் இருந்தால் எனக்கென்ன. நான் எவ்வளவு பெரிய மரத்தின் விதை தெரியுமா? வானுயர்ந்த அந்த மரமே எனக்குள் அடங்கியிருக்கிறது கீழே கிடக்கும் இந்த பூமியா பெரியது. இதை என்ன செய்கிறேன் பார்’. என்று ஒரு சிறிய வேரைக்கொண்டு பூமியை குத்தியது. பூமிக்கு எதுவுமே ஆகவில்லை. எனவே இன்னும் பெரிதாக வேரை உள்ளே செலுத்தியது. அதுவும் பூமியை ஒன்றும் செய்யவில்லை. அந்த விதை தன்னை ஒரு சிறு செடியாக மாற்றிக்கொண்டு இன்னும் பெரிய வேர்களால் பூமியை துளைத்தபடியே இருந்தது.
பல ஆண்டுகளாக இதை செய்து வந்த அந்த விதை இப்போது உயர்ந்ததொரு மரமாக வளர்ந்திருந்தது. எத்தனை பெரிய வேர்களால் துளைத்தாலும் இந்த பூமிக்கு ஒன்றுமே ஆகவில்லையே என்று நினைத்தபடியே அந்த விதை முதன் முதலாக பூமியை விட்டு பார்வையை திருப்பி தன்னை சுற்றி பார்த்தது. அப்போதுதான் தான் ஒரு பெரிய காட்டிற்கு நடுவில் நின்றுகொண்டிருக்கும் ஒரு சின்ன மரம் என்பதையும் அந்த காட்டையே இந்த பூமிதான் தாங்கிக்கொண்டிருக்கிறது என்பதையும் அது உணர்ந்தது. தன் தவறை உணர்ந்து சிரித்துக்கொண்டே பூமிக்கு நன்றி சொல்லியது.
குறள்:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
பொருள்:
தன்னையே தோண்டினாலும் தோண்டியவரை தாங்கி நிற்கும் நிலத்தைப் போல நம்மை அவமதிப்பவர்களை, நம்மை தொந்தரவு செய்பவர்களையெல்லாம் நாம் பொறுத்துக்கொள்ளுதல் சிறப்பானதாகும்

No comments:
Post a Comment