நரி இனம் என்றாலே ஏமாற்றி பிழைப்பது' என்ற தன் இனத்தின் மீதான குற்றச்சாட்டை போக்க
வேண்டும் என நினைத்தது ஒரு நரி.
இதுபற்றி சக நரிகளிடம் தெரிவித்தது. இனி யோக்கியமாக வாழ வேண்டும் என்று சொன்னது.
மற்ற நரிகள் அதை கேலி செய்ய ஆரம்பித்து விட்டன.
""இது நமக்கென இயற்கை விதித்த சுபாவம். இதை எப்படி மாற்ற முடியும்? முதலில் நீ திருந்து,'' என்றன.
அந்த நரி அவர்களை விட்டுப் பிரிந்து சென்று, யாராவது உணவை தன் பக்கமாக வீசிச்சென்றால் மட்டும் உண்ண ஆரம்பித்தது. மற்ற நேரமெல்லாம் பட்டினி தான். இந்த நற்குண நரி பற்றி ஒரு சிங்கம் கேள்விப்பட்டு, தனது அமைச்சராக்கியது. நரிக்கு சிங்கம் கொடுத்த முக்கியத்துவம், மற்ற மிருக அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை. அதை விரட்ட முடிவெடுத்தன.
ஒருமுறை, சிங்கத்திற்குரிய உணவை, நரியின் வீட்டில் மறைத்து வைத்தன. இதையறிந்த சிங்கம் நரியைக் கண்டித்தது. வருத்தமடைந்த நரி,
பதவியை விட்டு விலகி விட்டது. ஆனால், சிங்கத்தின் தாய்க்கோ நற்குண நரி பற்றி நன்கு தெரியும்.
தன் மகனிடம், நரி எந்தத்தவறும் செய்யவில்லை என்ற உண்மையை நிரூபித்தது.
சிங்கம், நரியை மீண்டும் பதவியேற்க அழைத்தது.
""அரசே! தீர விசாரிக்காமல் நீங்கள் தண்டனை அளித்தீர்கள். எதிர்காலத்திலும் இப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? நான் இனியும் பதவியேற்க மாட்டேன்,'' என்று சொல்லிவிட்டது.
ஒருவர் தவறு செய்ததாகத் தெரிந்தால் தீர விசாரியுங்கள். அதன்பிறகு உங்கள் முடிவை எடுங்கள்.

No comments:
Post a Comment