பக்தர்கள் இருவர் பரந்தாமனை வேண்டிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரின் வேண்டுதலும் தினமும் தவறாது நடைபெறக் கூடியது. ஒரு முறை மகாவிஷ்ணுவிடம், ‘சுவாமி! இந்த இரு பக்தர்களின் யார் தங்களை முழுமையாக நம்புகிறார்கள்?’ என்று மகாலட்சுமி தேவிகேட்டாள்.
அதற்கு மகாவிஷ்ணு, ‘என்னிடம் வேண்ட வரும் அவர்கள் இருவரின், வேண்டுதல்களையும் கேட்டால், உனக்கே புரியும்’ என்று கூறினார். முதல் பக்தன் வேண்டத்தொடங்கினான். ‘கடவுளே! எனக்கு வரும் வருமானத்தில், மாதத்தின் பாதி நாட்களை ஓட்டிவிடுகிறேன்.
மீது பாதி நாட்களில் நான் கஷ்டப்படாமல் இருக்க நீதான் வழிகாட்ட வேண்டும்’ என்று வேண்டினான். இரண்டாவது பக்தன், ‘சுவாமி! எனக்குக் கிடைப்பவை எல்லாமே உன்னருளால் கிடைப்பவைதான்.
அதனைக் கொண்டு பாதி நாட்களுக்கு படி அளக்கும் நீ, மீதி நாட்களுக்கும் படி அளக்க மாட்டாயா என்ன? உன்னருள் கிட்டும் வரை நான் காத்திருப்பேன்’ என்று வேண்டினான். மகாலட்சுமிக்குப் புரிந்து போனது, கடவுள் கருணையாலேயே எல்லாம் நடப்பதாக நம்புபவனே உண்மையான பக்தன் என்பது

No comments:
Post a Comment