பித்ருக்கள் சாபம் விடுவார்களா ??
நாம் சிராத்தம் செய்யும் கடமையிலிருந்து தவறக்கூடாது. சாஸ்திரிகளை குறை சோல்லுவதும், சாக்குபோக்குகளை தேடி கண்டுப்பிடிப்பதும் இப்போது அதிகமாகி வருகின்றது இதைக் கைவிட வேண்டும். யாரிடம்தான் குறையில்லை ? சிராத்தத்தை எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும்.
சிராத்தம் செய்யாதவன் நன்றி கெட்டவன். இதில் சந்தேகமே வேண்டாம். குதர்கக வாதம் செய்யக் கூடாது. சிராத்தம் செய்யாமல் விட்டவர்கள் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்று விபரமாக இங்கு எடுத்துக்கூற அபிப்ராயமில்லை.
சுருக்கமாக சிராத்தம் செய்யாதவர்கள் பித்ரு சாபத்திற்கு ஆளாகலாம் என்பதை மட்டுமாவது ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் நல்லது.
பித்ருக்கள் சாபமிடுவார்களா என்று நினைக்க வேண்டாம். பித்ருக்கள் கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே, நமக்கு தோஷம் ஏற்படும். பெற்ற சீரையும் செல்வத்தையும் இழந்து துன்புறவும் நேரலாம். வம்சவிருத்தி பாதிக்கலாம் !!
No comments:
Post a Comment