உணவு சாப்பிடும்போது முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும்
நமது முன்னோர்கள் சாப்பிடும் பொழுது முதலில் இலையில் இனிப்பான பொருளை வைத்திருந்தார்கள். ஏனென்றால் இனிப்பு என்ற சுவை இரைப்பையையும், மண்ணீரலையும் வேலை செய்ய வைக்கும் சக்தி என்று பார்த்தோம். நாம் சாப்பிடுகிற உணவு முதலில் இரைப்பையில் சென்று விழுகிறது. எனவே இரைப்பைக்கு சக்தியைக் கொடுக்கும் இனிப்பை முதலில் சாப்பிட்டால் உணவு நன்றாக ஜீரணமாகும் என்று கண்டுபிடித்திருக் கிறார்கள். சிலர் உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு கடைசியாக இனிப்புச் சாப்பிடுவார்கள். அதை விட சிறந்தது முதலில் இனிப்புச் சாப்பிட்டு, பிறகு சாப்பிட ஆரம்பிப்பது. எனவே எப்பொழுது சாப்பிடும் பொழுதும் முதலில் இனிப்பை சாப்பிட ஆரம்பியுங்கள். அதற்காக சர்க்கரைப் பொங்கலை இரண்டு கரண்டி வைத்து முழு சர்க்கரைப் பொங்கலையும் முடித்து விட்டுப் பிறகு மற்ற பண்டத்தைச் சாப்பிடலாம் என்று நினைக்காதீர்கள். முதலில் இனிப்பில் ஆரம்பியுங்கள். பிறகு மற்ற எல்லா சுவைகளையும் சாப்பிட்டு விட்டு நடுவில் தேவைப் பட்டால் மீண்டும் இனிப்பையும் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாகவும் இனிப்பை சாப்பிடலாம். இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்பது ஒரு முறை. அவ்வளவு தான். கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை.

மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். பலர் இந்த எல்லா முறைகளையும் படித்து விட்டு ஒவ்வொரு வேளையும் கஷ்டப்பட்டு இந்த முறைகளைக் கையாள வேண்டாம். ஒரு சில நேரத்தில் சில முறைகளைக் கையாள முடியும் அல்லது கையாள முடியாது. எனவே கவலை படாமல், பயப்படாமல் சாப்பிடுங்கள். முதலில் இனிப்பு எடுக்கவில்லையே என்ற எண்ணத்துடன் சாப்பிட்டால் சாப்பாடு ஒழுங்காக ஜீரணம் ஆகாது. எனவே முடிந்த வரை முயற்சி செய்யுங்கள். முடியவில்லை என்றால் கவலைப் படாமல் தைரியமாக சாப்பிடுங்கள். வாழ்வோம் ஆரோக்கியமாக !
No comments:
Post a Comment