Wednesday, March 11, 2015

ப்ரம்மஹத்தி தோஷம் "


ப்ரம்மஹத்தி தோஷம் "

 

ஓம் நமசிவாயஜோதிட நண்பர்களுக்கு வணக்கம். " ப்ரம்மஹத்தி தோஷம் ", பற்றிஒரு உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் பரிமாறிக்கொள்ளும் பதிவு இது. [பாரம்பரிய முறை ]. உதாரண ஜாதகம் தந்து உதவிய திருவிஸ்வம்பரி அவர்களுக்குநன்றி

1. ப்ரம்ம ஹத்தி தோஷம்

தோஷங்களிலேயே இது மிகக்கொடியதாக கருதப்படுவதுதிருக்கோவில்ஸ்தலபுராணங்களில் அதிகமாகவும்இதிகாசபுராணங்களில் பரவலாகவும்இதைப்பற்றி எடுத்து சொல்லப்பட்டுஇதன் தாக்கத்தை பற்றி எச்சரிக்கைஅளிக்கப்பட்டுள்ளதுபழந்தமிழ் நூல்களில் அறம் என்று சொல்லக்கூடிய தருமநெறிதவறி செய்யக்கூடிய செயல்களுக்கு தண்டனை தரக்கூடியது. ' பொய்மை ' என்பதுபஞ்சமாபாதகங்களில் ஒன்று. ' பொய்மையும் வாய்மையிடத்த..............', என்றவகையில் அது மன்னிக்க்ப்படலாம்என்றாலும் எள்ளளவும்எதற்காகவும்மன்னிக்கஇயலாத பாதகச்செயலகளை போன பிறவியில் செய்தோமானால்இப்பிறவியில்உறுதியாக துயரை தந்து வாட்டக்கூடியது.

2. ப்ரம்ம ஹத்தி தோஷ கிரக நிலை

பொதுவாக குரு + சனி சேர்ந்தாலோசமசப்தமபாரவை பெற்றாலோ அல்லது சாரபரிவர்த்தனை அடைந்தாலோ ' ப்ரம்மஹத்தி தோஷம்', என்ற கணிப்பு உள்ளதுஇந்தகணிப்பு ஜோதிட சம்பந்த சாஸ்திரப்படி இயற்றப்பட்ட பழம்பாடல் எதுவும் எனக்குதெரிந்த வரையில் இல்லைஅவ்வாறு ஏதேனும் பாடல் உள்ளதெனில் நமது ஜோதிடநண்பர்கள் தெரிவித்தால் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்எனவேஎன்னைபொறுத்தவரையில் இந்த கணிப்பு பிற்காலத்தில் யாராலோஉருவாக்கபப்ட்டிருக்க வேண்டும்ஆகையால் 'எப்பொருள் யார்யார்வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு', எனும் திருக்குறளுக்கேற்பஇக்கணிப்பை ஆராய்வதில் தவறில்லை என கருதலாம்.

3. கணிப்பு ஆய்வு;

குரு + சனி சேர்ந்தால் ப்ரம்மஹத்தி;

இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லைஎவ்வாறெனில்குரு + சனி கூடினால்குருசண்டாள யோகம் [தோஷம்என கூறப்பட்டுள்ளதுஆதாரம் லிப்கோவெளியிட்டுள்ள குடும்பஜாதகம் நூல்இருவகையான தோஷங்களுக்க் ஒரேவிதிமுறை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்லமேலும் இன்னொரு வகையில்இக்கணிப்பையும் கவனிக்கலாம்குருவும் சனியும் சேர்ந்து ஒரு ராசியில் அதிகபட்சம் ஓராண்டு வரை இருக்கும்எனவே அந்த ஆண்டு முழுவதிலும் பிறந்தஅனைவரும் ப்ரம்மஹத்திதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களாஎன சந்தேகிக்கவேண்டியுள்ளது.

குரு + சனி சமசப்தம பார்வை பெறுவது;

ராசிப்படி பார்த்தால் இதுவும் ஒரு வருஷம் நிகழ்க்கூடியதுஎனவே நக்ஷத்திர சாரப்படிபார்க்கலாம்சனியை விட குரு வேகமாக நகரக்கூடியவர். 9 பாதங்களை கடக்க 12மாதங்கள் என்றால் 1 பாதம் கடக்கும் குருவின் காலம் சராசரியாக 1 மாதம் 10நாட்களாகும்இதில் குருவின் வக்கிர காலங்கள் கணிக்கப்படவில்லைகணித்தால்நாட்களின் எண்ணிக்கை கூடும்ஆக இந்த 1 மாதம் 10 நாட்களில் பிறக்கும்அனைவருமே பிரம்மஹத்திதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களா?

இனி சாரபரிவர்த்தனை கணிப்பு;

குரு ராசிக்கட்டத்தை 12 ஆண்டுகளில் சுற்றி வரும் போதுசனி ஏறக்குறைய 5ராசிக்கட்டங்களை கடக்கிறார்சரியாக சொல்லவேண்டுமெனில் 43 நக்ஷத்திரபாதங்களை கடக்கிறார்இதில் குறைந்த பட்சம் 4 பாதங்களையும்அதிகபட்சம் 9பாதங்களையும் கடக்கும் போது குருவும் சனியும் சாரபரிவர்த்தனை பெற முடியும்.குறைந்தபட்சம் 4 பாதங்களை கடக்கும் காலம் 1 வருஷம் 3 நாட்கள். 9 பாதங்களைகடக்கும் காலம் 2 வருஷம் 6 மாதங்கள்ஆக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைஇக்காலகட்டங்களில் பிறப்பவர்கள் அனைவரும் பிறப்பார்கள் என்பதுநம்பவியலவில்லைஎனவே ப்ரம்மஹத்திதோஷ ஜாதகங்களை தீர்மானிக்கும்கிரகனிலைகளை இன்னும் நுட்பமாக கணித்துப்பார்க்கலாம் எனத்தோன்றுகிறது.

4. இனி உதாரண ஜாதகத்துடன் இதை கணித்துபார்க்கலாம்.

ஜாதகத்தில் குரு + சனி இணைவுஆனால் சனி நீசம்அதேனேரம் சனி நீசபங்கம்பெறவில்லைஅத்துடன் வக்கிர நிலையிலும் இல்லைசனி நீசம் பெறுவது 27வருஷம் 6 மாதங்களுக்கு ஒரு முறை 2 வருஷம் 6 மாதகாலம்ஆகஇக்கிரகனிலையை ஏற்றுக்கொள்வோமானால் ப்ரம்மஹத்திதோஷத்துடன்பிறப்பவர்கள் 27 வருஷம் 6 மாதங்களுக்கு ஒருமுறை பிறக்கிறார்கள்இதிலும் சிலவிதி விலக்குகள் இடம் பெறுகின்றனசந்திரனும்செவ்வாயும் இடமாற்றம்மேற்கொள்ளும்போது சனி நீசபங்கம் அடைந்து நல்ல யோகம் தருவார் என்பதால்அக்காலகட்டத்தில் பிறப்பவர்களுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் இருக்காதுஎனக்கொள்ளலாம்மேலும் சனியின் வக்கிரகாலம் ஏறத்தாழ 3 மாத காலம்.இக்காலகட்டத்தில் நீசசனி கெடுபலனை விலக்கிக்கொள்வார் என்பதாலும்அக்காலகட்டத்தில் பிறப்பவர்களுக்கும் ப்ரம்மஹத்திதோஷம் இருக்காது எனவும்கொள்ளலாம்நீசசனி வக்கிரம் பெற்றால் கெடுபலன் விலகும் என்பது பலரதுகருத்தாகவும்என் சொந்த அனுபவமாகவும் உள்ளதுமேலும் சனி அஸ்தங்கம்ஏற்படுவதுண்டுஇக்காலகட்டத்தில் சூரியனின் ஆளுமையாலும் அவரதுபூர்வபுண்ணியஸ்தானாதிபதிய தன்மையாலும் சனியின் கெடுபலனைமாற்றிவிடுவார்இக்காலத்தில் பிறப்பவர்களுக்கும் ப்ரம்மஹத்திதோஷம் இருக்காதுஎன்றும் கொள்ளலாம்ஆக ப்ரம்மஹத்திதோஷம் இவ்வளவு விதிகளையும் கடந்துஜாதகரை அடைய வேண்டியுள்ளது

உதாரண ஜாதம் இவ்வகையான விதிவிலக்குகளுக்கு உட்படவில்லைமேலும்தர்மகர்மாதிபதிகள் இணைந்தால் நல்லயோகம் என்ற விதியும்பார்க்கவேண்டியுள்ளதுஇதன்படி இருவரில் ஒருவர் கூட கெடக்கூடாதுஅப்படிகெட்டால் நல்லயோகம் அடிபட்டுவிடும்ஜாதகத்தில் இருவர் இணைந்து சனியின்கிரக நிலையால் நல்லயோகம் இல்லாமல் போய்விட்டதுஎனவே ஜாதகருக்குப்ரம்மஹத்திதோஷம் உறுதியாகிறதுஆக 27 வருஷம் 6 மாதங்களுக்கு ஒருமுறைஒரு வருஷ கால கட்டத்திற்குள் பிறப்பவர்களுக்குத்தான் மிகவும் கடுமையானது எனகருதப்படும் ப்ரம்மஹத்திதோஷம் ஏற்படுகிறது என கொள்வது சரியானதாகும்என்பது என் கருத்து.

5. இனி உதாரண ஜாதகத்தை கொண்டு தோஷனிவர்த்தி கிரக நிலைகளைபார்க்கலாம்.

இறைவன் கருணையே வடிவானவன்எனவே ஜாதகத்தில் தோஷனிவர்த்தி தரும்கிரகனிலையோடு பிறக்கவும் வைக்கிறான்உதாரண ஜாதகத்தில்பூர்வபுண்ணியஸ்தானத்துக்கு குருவின் பார்வை கிடைக்கிறதுஇதனால் சந்திரன்,புதன் கிரகங்களில் பாபபார்வை இருந்தாலும்ஸ்தானம் புனிதப்பட்டுவிடுகிறதுஅதேநேரம் பூர்வபுண்ணியாதிபதியும் சுபகரமாக இருக்கவேண்டியது அவசியமாகும்.ஜாதகத்தில் அதிபதி பகைஸ்தானத்தில் இருப்புஅவர் கேதுவுடன் கூடினாலும் கிரகபாத சாரப்படி சூரியனுக்கு பாதிப்பு கேதுவால் இல்லை என்றாலும் பகை என்பதால்.அவர் தோஷத்திற்கு ஆட்பட்டவர் என்பது புரிகிறதுகுருவின் பார்வையால்கிடைத்துள்ள சுப அனுகூலத்தின் துணை கொண்டு தோஷ நிவர்த்தி பெறலாம்.இதற்காக பூர்வபுண்ணியஸ்தானத்தின் புண்ணியபலனை இப்பிறவியில் பெற்று தரும்ஸ்தானத்தின் அனுகூலமும் தேவைப்படுகிறதுஇதற்காக நாம் ஒன்பதாம்ஸ்தானத்தின் சுபத்தன்மையும் பார்க்க வேண்டியுள்ளதுஜாதகத்தில் ஒன்பதாம்இடத்திற்கு குருபார்வைஅத்துடன் ஸ்தானாதிபதி குரு லக்னத்தில் இருப்புஆனால்நீசசனியுடன் இணைவாக உள்ளாரேஎன்ற கேள்வி எழலாம்இத்தகைய சனியுடன்சேர்ந்ததால் தானே ஜாதகம் தோஷ ஜாதகமாக அமைகிறதுஎனவே இவ்விஷயத்தில்குருவின் இருப்பைவிட தோஷனிவர்த்திக்கான கிரக நிலைக்கே முதலிடம் தரவேண்டும் என்பது எனது கருத்துஇவ்வகையில் ஜாதகர் இறைவன் கருணையால்தோஷனிவர்த்தி பெறும் வாய்ப்பு கிடைக்கிறதுஇவ்வகை கிரகனிலை அமையாதஜாதகங்களை பெற்றவர்கள்இறைவனால் கூட மன்னிக்க இயலாத படுபாதகர்கள்என நாம் இனம் கண்டு கொள்ளலாம்.

6. தீர்வு.

ப்ரம்மஹத்திதோஷம் ஜாதகரை தாக்கும் காலகட்டமாக குருதசைசனிபுக்திகாலத்தையும்சனிதசைகுருபுக்தி காலமாக கொள்ளலாம்அக்காலகட்டத்தில்கோசரத்தில் 5ம் இடம் மற்றும் 9ம் இடம் பாதிப்பு இல்லாத காலகட்டம் பார்த்துபரிகாரவழிபாடுகளை மேற்கொண்டால் நிச்சயம் தோஷம் விலகும்தோஷம்விலகவேண்டும் அவ்வளவுதானே என அப்போதைக்கென்னஇப்போதேசெய்துவிடலாம் என கொண்டு ஜாதகதோஷ பரிகாரவழிபாடுகளை நம் விருப்பத்திற்குவளைத்துக்கொள்வது மிகத்தவறாகும்பரிகாரவழிபாடுகளின் தத்துவமே செய்தபாவங்களுக்கு மனம் திருந்தி மன்னிப்பை இறைவனிடம் கோருவது என்பதாகும்.இதை நாம் உணராமல் போனோமானால் இந்து தர்ம வழிபாடுகளை வகுத்து தந்த நம்முன்னோர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும்எனவே ஜாதகர் காலமறிந்துதோஷபரிகாரம் மேற்கொள்வது சிறந்த வழியாகும்ஜாதகருக்கு தற்பொழுதுபாலவயதுதோஷகாலகட்டத்தில் அவருக்கு வயதுக்கேற்றால் போல் தோஷ தாக்கம்ஏற்படும்பரிகாரத்திற்குண்டான வழியும் பிறக்கும்ஜாதகம் மேஷ லக்னமாகஅமைந்திருப்பதும் இறைவன் அருளாகும்.

No comments:

Post a Comment