சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவங்கள் சிவதாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிவபெருமான் தண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் தாண்டவங்களை உருவாக்கி கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவபெருமானின் தாண்டவம் உலக நலனை நோக்கியே நிகழ்ப்படுவதாகவும், அதனுடைய நோக்கமானது உயிர்களை மலங்கள் (குற்றங்கள்) பிடியிலிருந்து விடுவிப்பதாகும். சிவதாண்டவத்தில் சிவனின் உடலமைப்பு அணி கலன்கள் கைகளில் உள்ள படைக்கலன்கள், தலைமுடி மற்றும் பாதங்களின் அமைப்பு ஆகிய அனைத்திற்குமே மெய்ப்பொருளியல் விளக்கங்கள் சைவர்களால் எடுத்துரைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தாண்டவங்களும் வெவ்வேறு மெய்பொருளியல் கோட்பாடுகளை விளக்குகின்றன.[1]
சிவதாண்டவ வகைகள்
ஐந்து தாண்டவங்கள்
முதன்மைக் கட்டுரை: ஐம்பெரும் தாண்டவங்கள்
ஏழு தாண்டவங்கள்[
சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் ஏழு தாண்டவங்கள் சப்த ஸ்வரங்களை குறிப்பதாக அமைகின்றன. இந்தஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், கஜ சம்ஹாத் தாண்டவம், கெளரி தாண்டவம், காளிகா தாண்டவம் என்ற ஏழு தாண்டவங்களும் சப்த தாண்டவங்கள் என்று வழங்கப்படுகின்றன. சிவபெருமானை சுந்தரர், ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே என்று போற்றியுள்ளார்.
- காளிகா தாண்டவம் - ச
- சந்தியா தாண்டவம் - ரி
- கௌரி தாண்டவம் - க
- சம்கார தாண்டவம் - ம
- திரிபுர தாண்டவம் -ப
- ஊர்த்துவ தாண்டவம்- த
- ஆனந்த தாண்டவம் - நி
சப்த விடங்க தாண்டவங்கள்
- அஜபா தாண்டவம்
- வீசி தாண்டவம்
- உன்மத்த தாண்டவம்
- குக்குட தாண்டவம்
- பிருங்க தாண்டவம்
- கமல தாண்டவம்
- ஹம்சபாத தாண்டவம்
நவ தாண்டவங்கள்
முதன்மைக் கட்டுரை: நவ சிவதாண்டவங்கள்
நவராத்திரியின் காலத்தில் சிவபெருமான் ஒன்பது தாண்டவங்கள் ஆடுவதாக நம்பப்படுகிறது. அவையாவன,.
- நவராத்திரியின் முதல் நாள் : ஆனந்த தாண்டவம்
- நவராத்திரியின் இரண்டாம் நாள் : ஸந்தியா தாண்டவம்
- நவராத்திரியின் மூன்றாம் நாள் : திரிபுரதாண்டவம்
- நவராத்திரியின் நான்காம் நாள் : ஊர்த்துவ தாண்டவம்
- நவராத்திரியின் ஐந்தாள் நாள் : புஜங்க தாண்டவம்
- நவராத்திரியின் ஆறாவது நாள் : முனி தாண்டவம்
- நவராத்திரியின் ஏழாவது நாள் : பூத தாண்டவம்
- நவராத்திரியின் எட்டாவது நாள் : சுத்த தாண்டவம்
- நவராத்திரியின் ஒன்பதாம் நாள் : சிருங்காரத் தாண்டவம் [3]
பன்னிரு தாண்டவங்கள்
முதன்மைக் கட்டுரை: பன்னிரு சிவதாண்டவங்கள்
சிவபெருமானது தாண்டவங்களில் பன்னிரு தாண்டவங்கள் என்று சிறப்புபெறுபவை கீழே.
- ஆனந்த தாண்டவம்
- சந்தியா தாண்டவம்
- சிருங்கார தாண்டவம்
- திரிபுர தாண்டவம்
- ஊர்த்துவ தாண்டவம்
- முனித் தாண்டவம்
- சம்ஹார தாண்டவம்
- உக்ர தாண்டவம்
- பூத தாண்டவம்
- பிரளய தாண்டவம்
- புஜங்க தாண்டவம்
- சுத்த தாண்டவம்
நூற்றியெட்டு சிவதாண்டவங்கள்
முதன்மைக் கட்டுரை: நூற்றியெட்டு சிவதாண்டவங்கள்
நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளை குறிக்கும் நடன தாண்டவங்களை சிவபெருமான் ஆடினார்.
- தாளபுஷ்பபுடம்
- வர்த்திதம்
- வலிதோருகம்
- அபவித்தம்
- ஸமானதம்
- லீனம்
- ஸ்வஸ்திக ரேசிதம்
- மண்டல ஸ்வஸ்திகம்
- நிகுட்டம்
- அர்தத நிகுட்டம்
- கடிச்சன்னம்
- அர்த்த ரேசிதம்
- வக்ஷஸ்வஸ்திகம்
- உன்மத்தம்
- ஸ்வஸ்திகம்
- பிருஷ்டஸ்வஸ்திகம்
- திக்ஸ்வஸ்திகம்
- அலாதகம்
- கடீஸமம்
- ஆஷிப்தரேசிதம்
- விக்ஷிப்தாக்ஷிப்தம்
- அர்த்தஸ்வஸ்திகம்
- அஞ்சிதம்
- புஜங்கத்ராசிதம்
- ஊத்வஜானு
- நிகுஞ்சிதம்
- மத்தல்லி
- அர்த்தமத்தல்லி
- ரேசித நிகுட்டம்
- பாதாபவித்தகம்
- வலிதம்
- கூர்நிடம்
- லலிதம்
- தண்டபக்ஷம்
- புஜங்கத்ராஸ்த ரேசிதம்
- நூபுரம்
- வைசாக ரேசிதம்
- ப்ரமரம்
- சதுரம்
- புஜங்காஞ்சிதம்
- தண்டரேசிதம்
- விருச்சிககுட்டிதம்
- கடிப்ராந்தம்
- லதா வ்ருச்சிகம்
- சின்னம்
- விருச்சிக ரேசிதம்
- விருச்சிகம்
- வியம்ஸிதம்
- பார்ஸ்வ நிகுட்டனம்
- லலாட திலகம்
- க்ராநதம்
- குஞ்சிதம்
- சக்ரமண்டலம்
- உரோமண்டலம்
- ஆக்ஷிப்தம்
- தலவிலாசிதம்
- அர்கலம்
- விக்ஷிப்தம்
- ஆவர்த்தம்
- டோலபாதம்
- விவ்ருத்தம்
- விநிவ்ருத்தம்
- பார்ஸ்வக்ராந்தம்
- நிசும்பிதம்
- வித்யுத் ப்ராந்தம்
- அதிக்ராந்தம்
- விவர்திதம்
- கஜக்ரீடிதம்
- தவஸம்ஸ்போடிதம்
- கருடப்லுதம்
- கண்டஸூசி
- பரிவ்ருத்தம்
- பார்ஸ்வ ஜானு
- க்ருத்ராவலீனம்
- ஸன்னதம்
- ஸூசி
- அர்த்தஸூசி
- ஸூசிவித்தம்
- அபக்ராந்தம்
- மயூரலலிதம்
- ஸர்பிதம்
- தண்டபாதம்
- ஹரிணப்லுதம்
- பிரேங்கோலிதம்
- நிதம்பம்
- ஸ்கலிதம்
- கரிஹஸ்தம்
- பர ஸர்ப்பிதம்
- சிம்ஹ விக்ரீடிதம்
- ஸிம்ஹாகர்சிதம்
- உத் விருத்தம்
- உபஸ்ருதம்
- தலஸங்கட்டிதம்
- ஜநிதம்
- அவாஹித்தம்
- நிவேசம்
- ஏலகாக்ரீடிதம்
- உருத்வ்ருத்தம்
- மதக்ஷலிதம்
- விஷ்ணுக்ராந்தம்
- ஸம்ப்ராந்தம்
- விஷ்கம்பம்
- உத்கட்டிதம்
- வ்ருஷ்பக்ரீடிதம்
- லோலிதம்
- நாகாபஸர்ப்பிதம்
- ஸகடாஸ்யம்
- கங்காவதரணம்
தமிழிலக்கியங்களில் சிவதாண்டவம்
சிவதாண்டவத்தினைப் பற்றி தமிழிலக்கியமான கலித்தொகையின் இறைவணக்கத்தில் முதல் குறிப்பு உள்ளது. காரைக்கால் அம்மையின் பாடல்கள், எ எல் பாஷ்யம் சிவதாண்டவம் ஆகியவற்றிலும், சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்தந்தாதியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவதாண்டவங்களை அறியத் தந்தீர்கள்.
ReplyDelete