அதிசய ஜோதிடர் நாஸ்டர்டாமஸ்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது.
'நூற்றாண்டுகள்' என்ற இவரது நூல் 942 செய்யுட்களைக் கொண்டது. ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு வரிகள் உள்ளன. இவைகள் காண்டமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு காண்டத்திலும் நூறு பாடல்கள் உள்ளன..
14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது.
ஆனால் ஹிந்து மதம் மிக உயரிய நிலையை இந்த நூற்றாண்டில் அடையப் போகிறது என்பதையும் இவர்தான் கூறியுள்ளார்.
லண்டனில் ஏற்பட்ட மாபெரும் தீ விபத்து, பிரெஞ்சுப் புரட்சி, ஹிட்லரின் எழுச்சியும் வீழ்ச்சியும், கென்னடியின் கொலை போன்றவற்றை இவரால் எப்படித் துல்லியமாகக் கூற முடிந்தது என்பது ஆச்சரியகரமான விஷயம்தான்!
லத்தீனில் ஆழ்ந்த புலமை பெற்ற நாஸ்டர்டாமஸ் அம்மொழியின் செழுமையான வார்த்தைகளைக் கையாண்டிருப்பதால் அதன் உள் அர்த்தம் புரியாமல் அறிஞர்களும் ஜோதிட ஆர்வலர்களும் இன்று வரை அச்சொற்பொருள்களை அறிய தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளில் இந்நூலை முடித்து 1555ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி வெளியிட்டார். நூல் அச்சிடப்பட்ட மேஸ்பான்ஹோம் பிரஸ்ஸின் முன்னே வெகு தூரத்திற்கு நீண்ட வரிசையில் மக்கள் நின்று இதை வாங்கி மகிழ்ந்தனர். ஆனால் சங்கேத மொழியில் பலன்களைக் கொண்டுள்ள பாடல்கள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தின
அவரது மகனுக்கே அவர் ஒரு எச்சரிக்கையை சங்கேத மொழியில் அளித்திருந்தார். ஒரு கடித வடிவில் அது இருந்தது, சீஸர் என்ற பெயருடைய அவரது மகன் 22ம் வயதில் தன் தந்தையின் பெயரைத் தீய வழியில் பயன்படுத்துவார் என்றும் அது அவருக்கு நலம் பயக்காது என்றும் எச்சரித்திருந்தார் நாஸ்டர்டாமஸ்.
இதை அலட்சியப்படுத்திய சீஸர், தந்தையைப் போல் பலன்கள் கூற வேண்டும் என்ற ஆர்வத்தில் விவாரிஸ் என்ற நகர் அழியப் போகிறது என்று ஆரூடம் கூறினார். ஆனால் அரசாங்கப் படைகளின் பாதுகாப்பில் இருந்த அந்த நகரத்திற்கு ஒரு ஆபத்தும் நேரவில்லை. மக்கள் சீஸரைச் சூழ்ந்து கொண்டு எப்போது நமது நகரம் அழியப் போகிறது என்று கேட்கலாயினர். பளீரென்று சீஸர் 'இன்னும் மூன்று நாட்களில்' என்றார். அடுத்த நாள் இரவு அவரே நகருக்குத் தீ வைக்க முயன்ற போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு அரசாங்க வீரர்களால் கொல்லப்பட்டார்.
இதே போல நடந்த இன்னொரு விசித்திரமான சம்பவம் அவர் புகழை வெகுவாகப் பரப்பி விட்டது. புகழ் பெற்ற மருத்துவராகவும் தீர்க்கதரிசியாகவும் அவர் திகழ்ந்ததால் பிரான்ஸிலுள்ள பெரும் தனவந்தர்களும் பிரபுக்களும் அவரை அழைத்துத் தங்கள்குறைகளைப் போக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்தது,
ஒரு சமயம் லொரெய்ன் என்ற மாகாணத்தில் இருந்த பெயின்ஸ் கோட்டையின் உரிமையாளரான லார்ட் ப்ளோரின்ஸ்வில்லி அவரை அழைத்தார். அவரது தாயாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பிரபு ப்ளோரின்ஸ்வில்லி கேட்டுக் கொள்ளவே சலான் என்ற தனது நகரிலிருந்து பயணப்பட்டு லொரெய்ன் வந்து தன் சிகிச்சையைத் தொடங்கினார் நாஸ்டர்டாமஸ். சீக்கிரமே அவர் குணமடைந்தார். இதனால் மனம் மகிழ்ந்த பிரபு தன் தாயார் குணமடைந்ததைக் கொண்டாட ஒரு பெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.
விருந்து நடக்கும் நாளன்று காலையில் தோட்டத்தில் நாஸ்டர்டாமஸுடன் அவர் உலாவச் சென்றார். அங்கே ஒரு இடத்தில் இரண்டு குட்டிப் பன்றிகள் இருந்தன. ஒன்றின் நிறம் கறுப்பு. இன்னொன்றின் நிறம் வெள்ளை. அதைச் சுட்டிக் காட்டிய ப்ளோரின்ஸ்வில்லி நாஸ்டர்டாமஸிடம் கிண்டலாக "இந்த இரண்டு பன்றிகளின் எதிர்காலம் பற்றிச் சொல்ல முடியுமா" என்று கேட்டார். நாஸ்டர்டாமஸின் உண்மையான பெருமை அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
இரண்டு பன்றிகளையும் உற்றுப் பார்த்த நாஸ்டர்டாமஸ் ப்ளோரின்ஸ்வில்லியிடம் "இதோ இந்த கறுப்புப் பன்றி ஒரு ஓநாய்க்கு உணவாகப் போகிறது. இதோ இந்த வெள்ளைப் பன்றி நமக்கு இரவு விருந்தில் உணவாகப் போகிறது" என்றார். ப்ளோரின்ஸ்வில்லி இதைப் பொய்யாக்கி விட வேண்டுமென்று எண்ணம் கொண்டு தனது சமையல்காரரை ரகசியமாக அழைத்து கறுப்புப் பன்றியை விருந்து உணவிற்குக் கொல்லுமாறு கட்டளையிட்டார்.
இரவு விருந்தில் தனது அருகில் உட்கார்ந்திருந்த நாஸ்டர்டாமஸிடம் "உங்கள் கூற்றுப் பொய்யாகி விட்டது. இதோ நாம் சாப்பிடுவது கறுப்புப் பன்றியைத்தான்" என்றார்.
நாஸ்டர்டாமஸோ சிரித்தார்
"இல்லை, இது நான் சொன்ன வெள்ளைப் பன்றிதான்" என்றார். உடனே பிரபு தன் சமையல்காரரை அழைத்தார். சமையல்காரர் நடந்ததை விளக்கினார். "கறுப்புப் பன்றியைக் கொன்ற பின்னர் சில நிமிடம் நான் வெளியே போனேன். அப்போது ஒரு நொண்டி ஓநாய் உள்ளே வந்து அந்த மாமிசத்தை உண்டு விட்டது. வேறு வழியின்றி வெள்ளைப் பன்றியையே சமைத்தேன்" என்றார்.
இந்த விஷயம் வெளியில் பரவவே நாஸ்டர்டாமஸின் புகழ் பெருமளவில் பரவியது. அவரை பய பக்தியுடன் அனைவரும் வணங்கினர்.
இன்னொரு சம்பவம்: ஒரு நாள் மாலையில் அவரைத் தாண்டிச் சென்ற ஒரு இளம் பெண் தனது மாலை வணக்கத்தைத் தெரிவித்து அருகிலுள்ள காட்டில் சுள்ளிகளைப் பொறுக்கப் போவதாகச் சொன்னாள். நாஸ்டர்டாமஸும் அவளிடம் "மாலை வணக்கம் இளம் பெண்ணே" என்று கூறினார். சற்று நேரம் கழிந்து இரவான போது அவள்திரும்பி வந்தாள். அவருக்குத் தனது இரவு வணக்கத்தைத் தெரிவித்தாள். நாஸ்டர்டாமஸ், "மாலை வணக்கம் கூறிய போது இளம் கன்னியாகப் போனாய்; இப்போது இளம் மனைவியாக வந்து விட்டாயே" என்று சிரித்துக் கொண்டே கூறினார். அரண்டு திகைத்துப் போன அவள் ஓடியே விட்டாள். தனது காதலனைக் காட்டில் சந்தித்த அவள் கன்னிமை இழந்ததை நாஸ்டர்டாமஸ் போகிற போக்கில் கூறியது அவரது எதையும் உணரும் ஆற்றலை உணர்த்தியது.
நாளுக்கு நாள் அவர் புகழ் பெருகவே அவர் வாயிலிருந்து என்ன சொல் உதிரப் போகிறது என்பதை அனைவரும் அறிய ஆவலுற்றனர். அவர் மரணத்திற்குப் பின்னும் கூட அவர் ஆரூடம் பலித்ததுதான் விசித்திரத்திலும் விசித்திரம்!
மரணத்திற்குப் பின் அவர் வாழ்வில் நிகழப்போவதைப் பற்றி கூறிய ஆரூடம் பலித்தது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமான விஷயம்!
மரணத்திற்குப் பின் அவர் வாழ்வில் நிகழப்போவதைப் பற்றி கூறிய ஆரூடம் பலித்தது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமான விஷயம்!
"என் கல்லறையைத் தோண்டி என் பிணத்தை எடுக்க முயல்பவர் உடனே இறந்து போவார்" என்று தன் கல்லறை மீது பொறிக்குமாறு அவர் இறக்கு முன்னர் வேண்டிக் கொண்டார்.
1566ம் ஆண்டு அவர் இறந்தபின்னர் அவரது கல்லறையில் இதே வாசகம் பொறிக்கப்பட்டது. வருடங்கள் உருண்டோடின. அவரது கல்லறை வாசகங்களைப் பார்த்துச் சிரித்த மூன்று பேர் கல்லறையைத் தோண்டி அவர் எலும்புக்கூட்டை எடுத்தனர். பிரெஞ்சு புரட்சியின் உச்சகட்ட நேரம் அது!
மிகவும் புகழ் பெற்ற ஜோதிடரான அவரது மண்டை ஓட்டில் ஒயினை ஊற்றிக் குடித்தால் எதிர்காலம் கூறும் பிரபல ஜோதிடர் ஆகலாம் என்று நம்பி அந்த மூன்று பேரும் கல்லறையைத் தோண்டியிருந்தனர்.
அதில் ஒருவன் மண்டையோட்டை எடுத்து பையில் இருந்த ஒயினை எடுத்து அதில் ஊற்றிக் குடித்து விட்டு ஒரு அடி எடுத்து வைத்தான். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு துப்பாக்கிக் குண்டு அவனைத் துளைத்து அவன் உயிரைக் குடித்தது. புரட்சிக்காரன் ஒருவனின் குண்டுதான் அவனை இறக்க வைத்திருந்தது.
மற்ற இரண்டு பேரும் திரும்பி எலும்புக்கூட்டைப் பார்த்த போது எலும்புக்கூட்டின் மார்பில் ஒரு தாமிரத் தகடு கட்டப்பட்டிருப்பதைப் பார்த்தனர். அதில் மே 1793 என்று எழுதப்பட்டிருந்தது. சரியாக அதே 1793ம் ஆண்டு மே மாதம் தான் அந்த எலும்புக்கூட்டை அவர்கள் தோண்டி எடுத்திருந்தனர். இதனால் பயந்து போன அவர்கள் ஓடத் தொடங்கினர்.
தன் கல்லறையை எந்த வருடம் எந்த மாதம் தோண்டி தன் எலும்புக்கூட்டை எடுக்கப் போகிறார்கள் என்பதைக் கூட அவர் துல்லியமாகக் கணித்துச் "சொல்லியிருந்தது" உலகினர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது!
இந்தியத் தலைவர்கள் பற்றிய அவரது ஆரூடங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன
அவரது ஆறாம் காண்டத்தில் 74ம் பாடலில் அவர் இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதைக் கணித்துக் கூறியுள்ள வாசகங்கள் நம்மை அயர வைக்கும்!
"மூன்று புறம் கடல் சூழ்ந்த நாட்டில் பெரும் அதிகாரம் கொண்ட பெண்மணி எதிர்கட்சிகள் ஒற்றுமை இன்றி இருப்பதால் அதிகாரத்தை மீண்டும் பெறுவார். தனது சொந்த மெய்காப்பாளர்களாலேயே அவர் 67ம் வயதில் கொல்லப்படுவார். இது நூற்றாண்டு முடிய 16 ஆண்டுகள் இருக்கும்போது நடக்கும்"
எமர்ஜென்ஸியினால் தேர்தலில் தோற்றுப்போன இந்திரா காந்தி எதிர்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டதால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதையும் 1984ல் அவர் சொந்த மெய்காப்பாளர்களில் ஒருவனால் சுடப்பட்டதும் உலகம் அறிந்த சம்பவம்!
இதே போல ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதை அவர் ஒன்பதாம் காண்டத்தில் 53ம் பாடலில் தெரிவித்துள்ளார்.
"நேரு குடும்ப மூன்றாம் தலைமுறையினரின் இளைஞர் துருப்புகளை அனுப்பி எரிக்கச் செய்வார். இந்த நிகழ்வுகளிலிருந்து தூர இருக்கும் மனிதனே உண்மையில் சந்தோஷமானவன். மூவர் அவரை இரத்தம் வெளிப்படச் செய்து கொல்வர்"
"நேரு குடும்ப மூன்றாம் தலைமுறையினரின் இளைஞர் துருப்புகளை அனுப்பி எரிக்கச் செய்வார். இந்த நிகழ்வுகளிலிருந்து தூர இருக்கும் மனிதனே உண்மையில் சந்தோஷமானவன். மூவர் அவரை இரத்தம் வெளிப்படச் செய்து கொல்வர்"
இதில் விசித்திரம் என்னவென்றால் இந்தப் பாடல் பிரபல கன்னட வாரப் பத்திரிக்கையான 'விக்ரம' என்ற பத்திரிக்கையின் 28-4-1991 தேதியிட்ட இதழில் பிரசுரிக்கப்பட்டிருந்ததுதான்! சரியாக மூன்று வாரங்கள் கழித்து அவர் கொல்லப்பட்டார்! இலங்கைப் போரில் அவர் துருப்புகளை ஈடுபடச் செய்ததையும் பின்னர் மூன்று தற்கொலைப் படையினர் சதி செய்து தமிழகத்தில் அவர் வருகை புரிந்த போது அவரைக் கொன்றதும் வரலாற்று உண்மை!
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றிய அவரது கணிப்பு அமெரிக்கர்கள் உள்ளிட்ட உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்தது; திகைக்க வைத்தது!
"கடவுளின் நகரம் மீது இடி இடிக்கும்! இரண்டு சகோதரர்கள் குழப்பத்தில் நாசம் அடைவர்! கோட்டை காக்கப்படும் போது பெரிய தலைவர் இறந்துபோவார். மூன்றாம் உலகப் போர் மூளும்!'
இன்னும் ஒரு பாட்டில், "ஒன்பதாம் மாதம் பதினொன்றாம் நாளில் இரண்டு இரும்புப் பறவைகள் பெரிய சிலைகள் மீது மோதும்" என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால் இதை விட துல்லியமாக 10ம் காண்டம் 72ம் பாடலில் அவர் கூறுவது:- "1999ல் ஒன்பதாம் மாதம் வானிலிருந்து ஒரு பெரிய அரக்கன் தோன்றுவான்"!
இந்தச் சம்பவத்தை அவர் சுட்டிக் காட்டும் பாடலாகவே நாஸ்டர்தாமஸை வியந்து போற்றுவோர் கூறுவர்
நாஸ்டர்டாமஸ் சிறுவயதில் யூதர்களின் மொழியான ஹீப்ரு மொழியைத் தன் தாத்தாவிடமிருந்து கற்றுக் கொண்டார். லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றதோடு கணிதத்திலும் தேர்ச்சி பெற்றார். இத்தோடு ஜோதிடத்தின் மர்மங்களையெல்லாம் ஆழ்ந்து கற்று அதில் நிபுணரானார். தாத்தா இறந்தவுடன் தன் சொந்த ஊருக்குத் திரும்பி பெற்றோருடன் வாழலானார். இயற்கையாகவே செழுமையான குடும்பமாக இருந்ததால் அவர் வாழ்நாளில் ஒரு நாளும் பணத்திற்காகத் துன்பப்பட்டதுமில்லை; செலவழிக்கத் தயங்கியதுமில்லை!
பதினேழாவது வயதில் சட்டம் பயில அவிக்னான் என்ற பெரிய நகருக்கு அவர் சென்றார். அங்கு அவரது புத்தி சாதுரியத்தால் அனைவரையும் விஞ்சி நின்றார். ஆயினும் அவர் பைபிளுக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலாகச் சொல்லவே அவரது பெற்றோர் அவருக்குத் தண்டனை கிடைத்து விடும் என்று பயந்து அவரை ஊருக்குத் திரும்பி வரச் சொல்லி வற்புறுத்தினர்.
சொந்த ஊருக்கு வந்த நாஸ்டர்டாமஸ் பின்னர் மாண்ட்பெல்லியர் என்ற நகருக்குச் சென்று தனது 19ம் வயதில் மருத்துவம் பயில ஆரம்பித்தார். 1526ல் பெரிய மருத்துவரானார்.
சலான் என்ற நகரில் அவரது வீட்டில் மேல் மாடியில் ஒரு சிறிய அறை இருந்தது. அதைத் தனது பணிகளுக்கான அறையாகக் கொண்ட அவர் அதில் அடிக்கடி தீவிர தியானத்தை மேற்கொண்டு சமாதி நிலையை அடைந்தார். அவர் அகக்கண்ணில் எதிர்காலம் பற்றிய காட்சிகள் தோன்றலாயின அவர் எதிர்காலத்தில் பயணிக்கும் காலப் பயணியாக மாறித் தனக்குப் புலப்பட்டதை எல்லாம் குறித்துக் கொண்டார். அதன் விளைவுதான் அவரது ‘செஞ்சுரீஸ்' என்ற எதிர்காலக் கணிப்பு நூல்!.
அந்நூலில் சங்கேத பாஷையில் அமைந்த அவரது பாடல்களில் இருந்து சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.
மூன்றாம் காண்டத்தில் 57வது க்வாட்ரெய்னில் (நான்கு வரிச்செய்யுள்) உள்ள நான்கு வரிகள் இவை:-
பிரிட்டிஷ் தேசம் ஏழு முறைகள் மாறுதலைச் சந்திக்கும்
290 ஆண்டுகளில் ரத்தக் கறை தோயும்
ஜெர்மனியில் விடுதலைக்கு ஆதரவிருக்காது
துருக்கிய காலிப்கள் மாறியிருக்கும் ரஷியாவைக் காண்பர்
290 ஆண்டுகளில் ரத்தக் கறை தோயும்
ஜெர்மனியில் விடுதலைக்கு ஆதரவிருக்காது
துருக்கிய காலிப்கள் மாறியிருக்கும் ரஷியாவைக் காண்பர்
இங்கிலாந்து சந்தித்த ஏழு மாறுதல்கள்
1)1485ல் பெஸ்வொர்த்தில் நடந்த போர். இங்கிலாந்தை ட்யூடர் வம்சம் ஆள ஆரம்பித்தது
2)1533ல் ரோமுடனான தொடர்பை எட்டாம் ஹென்றி முறித்துக் கொண்டார்.
3)1553ல் ஹென்றியின் மகள் மேரி ரோமன் கத்தோலிக்க மதத்தை மீண்டும் கொண்டு வந்தார். ப்ராடஸ்டண்டுகள் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர்
4)1558 மேரியின் ஒன்றுவிட்ட சகோதரி ப்ராடஸ்டண்டு மஹாராணி ஆனார்.
5)1649ல் பிரிட்டிஷ் அரசர் முதலாம் சார்லஸின் தலை பொதுமக்கள் முன்பாக வெட்டப்பட்டது. ஆலிவர் க்ராம்வெல் சர்வாதிகாரியானார்.
6)1688ல் முதலாம் சார்லஸின் மகன் இரண்டாம் ஜேம்ஸ் செட்ஜ்மூர் போரைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது
7)1775ல் பங்கர் ஹில் போரைத் தொடர்ந்து அமெரிக்கா பிரிட்டனுடனான தொடர்பை முறித்துக் கொண்டது. உலகில் வானளாவிய அதிகாரம் கொண்டிருந்த பிரிட்டிஷ் வீழ்ச்சியை நோக்கிச் சரிய ஆரம்பித்தது. அமெரிக்கா உலகின் உன்னத இடத்தை நோக்கி நடை போட ஆரம்பித்தது.
1)1485ல் பெஸ்வொர்த்தில் நடந்த போர். இங்கிலாந்தை ட்யூடர் வம்சம் ஆள ஆரம்பித்தது
2)1533ல் ரோமுடனான தொடர்பை எட்டாம் ஹென்றி முறித்துக் கொண்டார்.
3)1553ல் ஹென்றியின் மகள் மேரி ரோமன் கத்தோலிக்க மதத்தை மீண்டும் கொண்டு வந்தார். ப்ராடஸ்டண்டுகள் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர்
4)1558 மேரியின் ஒன்றுவிட்ட சகோதரி ப்ராடஸ்டண்டு மஹாராணி ஆனார்.
5)1649ல் பிரிட்டிஷ் அரசர் முதலாம் சார்லஸின் தலை பொதுமக்கள் முன்பாக வெட்டப்பட்டது. ஆலிவர் க்ராம்வெல் சர்வாதிகாரியானார்.
6)1688ல் முதலாம் சார்லஸின் மகன் இரண்டாம் ஜேம்ஸ் செட்ஜ்மூர் போரைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது
7)1775ல் பங்கர் ஹில் போரைத் தொடர்ந்து அமெரிக்கா பிரிட்டனுடனான தொடர்பை முறித்துக் கொண்டது. உலகில் வானளாவிய அதிகாரம் கொண்டிருந்த பிரிட்டிஷ் வீழ்ச்சியை நோக்கிச் சரிய ஆரம்பித்தது. அமெரிக்கா உலகின் உன்னத இடத்தை நோக்கி நடை போட ஆரம்பித்தது.
இதே போல ஒவ்வொரு பாடலும் ஒரு எதிர்காலக் காட்சியைக் காட்டுவது வியப்பூட்டுவதாக உள்ளது.
ஹிந்து மதம் பற்றிய நாஸ்டர்டாமஸின் எதிர்காலக் கணிப்பு இரண்டாம் காண்டத்தில் 13வது பாடலாக மலர்கிறது:-
ஆன்மா இல்லாத உடல் இனியும் புனிதமாகக் கருதப்படமாட்டாது
இறந்த தினத்தன்று ஆன்மா அடுத்த பிறவியை நோக்கிப் பயணிக்கிறது
இறைவனின் நினைப்பு ஆத்மாவை சந்தோஷத்திற்குள்ளாக்கும்
என்றுமுள்ள அக்ஷரத்தைக் கண்டவுடன்.
இறந்த தினத்தன்று ஆன்மா அடுத்த பிறவியை நோக்கிப் பயணிக்கிறது
இறைவனின் நினைப்பு ஆத்மாவை சந்தோஷத்திற்குள்ளாக்கும்
என்றுமுள்ள அக்ஷரத்தைக் கண்டவுடன்.
இதர மதங்கள் மறுபிறவியை ஏற்பதில்லை. ஹிந்து மதம் ஒன்றே உடல் ஆத்மாவிற்கு ஒரு சட்டை தான்; நலிந்து கிழிந்த சட்டையை உதறுவது போல ஆன்மா பழைய சரீரத்தை உதறி விட்டு அடுத்த சரீரத்தை நோக்கிச் செல்கிறது என்று கூறுகிறது. இறுதி வரியில் வரும் அக்ஷரம் ஓம் என்பதாகும். ஆக மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தும் ஹிந்து மதக் கொள்கை உலகில் ஓங்கி உயரும் என்பதை நாஸ்டர்டாமஸ் இந்தப் பாவில் தெளிவாக விளக்குகிறார்'.
இப்படி ஒரு விளக்கத்தைத் தருபவர் பெங்களூரைச் சேர்ந்த திரு ஜி.எஸ்,ஹிரண்யப்பா. இவர் ஹிந்து டெஸ்டினி இன் நாஸ்டர்டாமஸ் என்ற நூலில் ஹிந்து மதம் பற்றி நாஸ்டர்டாமஸ் பல பாடல்களில் பூடகமாகக் கூறியுள்ளதைத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
நாஸ்டர்டாமஸின் பாடல்களை விளக்கி உலகின் அனைத்து மொழிகளிலும் ஆயிரக்கணக்கான நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தகுந்த ஒரு செய்தியாகும்!
No comments:
Post a Comment