Wednesday, November 29, 2017

பஞ்சகச்சம் –இதை பற்றிய ஒரு ச்லோகம்

பஞ்சகச்சம் –இதை பற்றிய ஒரு ச்லோகம்
குக்ஷித்வயே ததா ப்ருஷ்டே நாபௌ த்வௌ பரிகீர்த்திதௌ
பஞ்சகச்சா:ஸ்து தே ப்ரோக்தா: சர்வ கர்மஸு ஷோபனா: -….
குக்ஷி என்றால் இடுப்பு,
குக்ஷித்வயே = இரண்டிடுப்பில் ( வலது இடுப்பில் ஒன்று இடது இடுப்பில் ஒன்று )
ததா = அவ்வாறு
ப்ருஷ்டே =பின்புறத்தில் ஒன்று
நாபௌ = தொப்புளில் இரண்டு
கச்சம் என்றால் சொருகுதல்
பஞ்சகச்சா: = ஐந்து சொருகலானது
சர்வ கர்மஸு = எல்லா காரியங்களிலும்
ஷோபனா: = மன்களகரமானதாக
ப்ரோக்தா: = கூறப்படுகிறது
அதாவது வலது இடுப்பில் ஒரு சொருகல், இடது இடுப்பில் ஒன்று, பின்புறத்தில் ஒன்று,
தொப்புள் பகுதியில் இரண்டு என்று ஐந்து சொருகுதல் முறையையே பஞ்சகச்சம் என்று பெரியோர்களால் கூறப்படுகிறது.
✌️

No comments:

Post a Comment