Wednesday, February 23, 2011

சிவபெருமான்


சந்திரனைச் சடைமுடியில் ஏன் தரித்துக்கொண்டிருக்கிறார். அதுவும்

ஒருகலையுள்ளதாயிருக்கினறதேயல்லது சோடசகலை யுள்ளதாகயிருக்கவில்லையே?



தக்கன்

தன்னுடைய இருபத்தேழு பெண்களையும் சந்திரனுக்கு விவாகஞ்செய்து கொடுத்தபோது

இவர்களெல்லாரிடத்திலும் ஒரே தன்மையான இஷ்டமுள்ளவனாய் இரு என்று சொல்லி

அவ்வண்ணமாகயிருந்த சந்திரன் தன் ஸ்திரீகளுள் மிகுந்த சவுந்தரியமுள்ள

கார்த்திகை உரோகணி யென்னும் இரண்டு ஸ்திரீகளிடத்தில் மாத்திரம் மிகுந்த

இஷ்டமுள்ளவனாய் மற்ற இருபத்தைந்து ஸ்திரீகளிடத்திலும்
இட்டமில்லாதவனாயிருந்தான். அவர்கள் மனம்வருந்தித் தக்கனிடத்தில்
சொல்லிக்கொண்டார்கள். அவன் கோபங்கொண்டவனாய்ச் சந்திரனுடைய சோடசகலைகளும்அழிவுறும்படிச் சபித்தான். அந்தச்சாபத்தின்படி தினம் ஒவ்வொரு கலையாகப்பதினைந்து கலை குறையக்கண்ட சந்திரன் துயரங்கொண்டு தேவேந்திரனிடத்தில்சொல்ல, இந்தச்சாப மென்னால் நீக்கத்தக்கதல்ல வென்னப் பிரமதேவனிடத்திலபோய்ச் சொல்லிக்கொண்டான். “நான் சொன்னாலுந் தக்கன் இந்தசாபத்தை நிவர்த்திசெய்யமாட்டான். நீ வைகுந்தத்துக்குப் போய் விண்டுவிடத்திலவிண்ணப்பஞ்செய்துகொள்" எனச் சந்திரன் அப்படியே செய்ய, தன்னால் முடியாதுஸ்ரீ கைலாசகிரிக்குப்போய்ப் பரமசிவனிடத்தில் விண்ணப்பஞ்செய்துகொண்டால்இந்தச் சாபம் நிவர்த்தியாகுமென்று விண்டு சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டசந்திரன் ஸ்ரீகைலாயகிரிக்குப்போய், பரமசிவனைப் பணிந்து தோத்திரம்செய்தான். பரமசிவன் கிருபை கூர்ந்து சந்திரனிடத்தி லிருந்த ஒருகலையினையுந் தமது முடியில் தரித்துக்கொண்டு இது உன்னிடத்திலிருந்தால்தக்கன் சாபம் இதனையுமழித்துவிடும். இனி நம்முடைய திருமுடியிலிருக்கிற கலையைத் தொடராது. இந்தக் கலையழியாமலிருப்பதனால் உனக்கு முன்னிருந்ததுபோலநாளுக்கு நாளொவ்வொரு கலையாக வளர்ந்து சோடசகலைகளும் நிறைவுபடும். அப்படி நிறைந்தாலும் வளர்ந்ததுபோல மறுபடி குறைவுபடுகிறதும் வளருவதுமாகஇருக்குமென்று அநுக்கிரகஞ் செய்தார். சந்திரன் சந்தோஷத்துடன் சுவாமியைத்தோத்திரஞ்செய்து விடைபெற்றுக்கொண்டு தன் பதவியிற்போய் சேர்ந்தான்.பரமசிவன் ஒரு திருக்கரத்தில் மான் தரித்துக் கொண்டிருப்பதற்குக் காரண மென்ன?
அந்தமான் தாருகாவனத்து ரிஷிகளால் அனுப்பப்பட்டது. அவர்களேன்
அனுப்பினார்களெனில் பரமசிவன் பிக்ஷ¡டன மூர்த்தமாகத் தாருகாவனத்துக்கெழுந்தருளினபோது ரிஷிபத்தினிகள் கண்டு மோகித்துத் தங்கள் கற்புகுலைந்தார்கள். அதைக்கண்டு தாருகாவனத்து ரிஷிகள் கோபமுடையவர்களாய் ஒருவேள்விசெய்து அதிலுண்டான புலியை நோக்கிச் சிவனைக் கொல்லும்படியேவஅதனைக்கொன்று தோலை யாடையாக அணிந்து கொண்டார். பின்னுமந்தவேள்வியில்மானுண்டாகிவர அதனையிடக்கையில்வைத்துக்கொண்டருளினார்.பின்புமழுவுண்டாய்வந்தது. அதனைஆயுதமாகவைத்துக்கொண்டனர்.பின்புசர்ப்பங்களுண்டாய்வரஅவைகளைஆபரணமாகத் தரித்துக்கொண்டார். பின் முயலகனென்னு மசுரனுண்டாகிவர அவனைக் கீழேதள்ளி முதகிலேறி நின்றார்.மந்திரங்களை யேவினார்கள்; அவகைள் டமருக ரூபங்கொண்டு வர திருக்கரத்தில்வைத்தருளினார்.
மீன் கண், ஆமையோடு, பன்றிக்கொம்பு, எலும்புமாலை, கையில் கபாலம் இவைகளை ஏன் தரித்துக்கொண்டிருக்கிறார்?
விஷ்ணு கடலில் மச்சாவதாரங்கொண்டு வேதங்களை யபகரித்துக்கொண்டுபோன ஒரு அசுரனை வதைத்த இரத்த வெள்ளங்குடித்து மயக்கமுற்று உலகம் வருந்தும்படிக் கடலைக்கலக்கியபோது தேவர்கள் கயிலையிற்சென்று தாங்கள்வந்த காரியத்தை விண்ணப்பஞ்செய்துகொள்ளச் சுவாமி கிருபை கூர்ந்து ஒரு வயிரவரையனுப்ப அவர்போய் வலைவீசியந்த மீன்கண்களைப் பெயர்த்துக் கொண்டுவர அவைகளைத் தேவர்கள் வேண்டுதலினால்தமது ஸ்ரீபாதங்களிலே தரித்துக் கொண்டருளினார். அமிர்தமுண்டாகும்படித்தேவர்கள் பாற்கடலில் மந்தரகிரியை மத்தாக நாட்டி வாசுகியாகிய பாம்பினைத்தாம்பாகச் சுற்றி வலிக்கும்போது அந்த மந்தரகிரி கடலிலாழ அதைக்கண்டுதேவர்கள் விஷ்ணுவைத் தோத்திரஞ்செய்ய அவர்வந்து ஆமையாகி மந்தரகிரிதன்முதுகில் நிற்கும்படித் தாங்கின காலத்தில் மமதை கொண்டு கடலைக் கலக்கஅதைக்கண்ட தேவர்கள் கயிலாயபதிக்கு விண்ணப்பம் பண்ணிக்கொண்டார்கள். சுவாமிகிருபைகூர்ந்து விநாயகரையனுப்ப அவர்போய்த் தம்முடைய துதிக்கையை நீட்டிக் கடநீரை யெல்லாம் உறிஞ்சுகையில் ஆமையும் அந்தத் துதிக்கைக்குள் போய்விட்டது. பின்பு விநாயகர் நீரைச்சிந்தினார். அந்த நீருடன் ஆமையும்
வெளிவந்து விழுந்து மதிமயங்கிக்கிடக்க அதை விநாயகர்கண்டு அதன் ஓட்டினைத்தன்னுடைய தந்தத்தினால் பெயர்த்துக் கொண்டுவந்து சுவாமிக்குக்
காணிக்கையாகக் கொடுக்கக்கண்டு மகிழ்ந்து தேவர்கள் வேண்டுதலினால் தலைமாலையுடன் அந்த ஆமையோட்டையும் மார்பில் தரித்துக் கொண்டருளினார்.ரணியாட்சனென்னும் ஒரு அசுரன் பிரமதேவனை தோத்தித் தவஞ்செய்துவரம்பெற்றுக்கொண்டு போகிறவன் பூமியைக் கவர்ந்து கொண்டு போய்விட்டான்.அதையறிந்து விஷ்ணு வராக அவதாரஞ்செய்து அவனைக்கொன்று மமதையடைய, தேவர்கள்கயிலாயபதிக்கு விண்ணப்பம் பண்ணிக்கொண்டார்கள். பரமசிவன்திருவுளமிரங்கிச்சுப்பிரமணியரையனுப்ப அவர்போயந்தப் பன்றியின் தலையை வேலினால் குத்தியமுக்கி யதன் கொம்பினைப் பறித்துக்கொண்டு வந்து சுவாமியினிடத்தில் வைக்கஅதை முன்போலத் தரித்துக்கொண்டார். பிரம விஷ்ணுக்களை யுண்டாக்கி யவர்களில்பிரமனைக் கொண்டு சிருட்டித்தும் விஷ்ணுவைக் கொண்டு இரக்ஷ¢த்தும் பின்புசங்கரித்தும் பலவாறு இம் முத்தொழில்களைச் செய்கையில் பிரம விஷ்ணுக்களைமுடிவான காலத்தில் சங்கரித்து அவர்கள் எலும்புகளையும் சிரங்களையும்மாலையாக அணிந்தருளினார். அவர்களுக்கு நன்மையுண்டாக வேண்டுமென்று தரித்துக்கொண்டதேயல்லது பெருமை பாராட்டுக்காகத் தரித்துக்கொண்டதேயல்ல. முன்பொருகற்பமுடிவில் இவர்களையெல்லாம் நெற்றிக்கண் பொறியால்நீறுபடுத்தியந்தப்பொடியைத் தமது திருமேனியில் தரித்துக்கொண்டருளினார். இதுவும்அவர்களுக்கு நன்மையுண்டாகவேண்டுமென்கிறகாருண்யமேயாம்.முன்னொருகாலம்பிரமா அகந்தைகொண்டிருக்க அதை யடக்கும் பொருட்டு அவருக்கிருந்த ஐந்துதலையில் நடுத்தலையைக்கிள்ளிக் கையிற் கபாலமாக வைத்தருளினார். அது முதல்பிரமனுக்குச் சதுர்முகனென்று பெயராயது. பரமசிவன் சிரமாலையணிந்திருப்பதனால் சிரமாலியென்றும் கபாலந்தரித்துக்கொண் டிருப்பதனால்கபாலியென்றும் பெயருண்டாயது.
கண்டத்தில் விஷம் பொருந்தி யிருப்பதற்குக் காரணமென்ன?
தேவர்கள்அமிர்த முண்டாவதற்காகப் பாற்கடல் கடைந்தபோது ஆலகாலவிஷமுண்டாயது. அதைக்கண்டு தேவர்கள் முறையிட அவர்களை இரக்ஷ¢க்கும் பொருட்டு விஷத்தைக்கண்டத்தில் வைத்தருளினார். இந்தக் காரணத்தினால் காளகண்டன், கறைமிடற்றன்,நீலகண்டன் எனப்பெயர்பெறுவர்.
பரமசிவனுக்கு ரிஷபவாகன முண்டானதற்குக் காரணமென்ன?
தருமதேவதையானதுபிரமவிஷ்ணு முதலானவர்களெல்லாம் அழிந்துபோவதைக்கண்டதானவ்வாறுமாண்டுபோகாமல்என்றும்நித்தியமாயிருக்கவேண்டும்மென்கிற எண்ணங்கொண்டுரிஷபரூபமாகிப் பரமசிவனிடத்திற்சென்று பணிந்து “கர்த்தனே!நானிறவாமலிக்கும்படி அடியேனை வாகனமாகக் கொண்டருள வேண்டு" மென்று தோத்திரஞ்செய்ய சுவாமி கிருபைகூர்ந்து அதனைத் தமக்கு வாகனமாகக் கொண்டருளினார்.
இன்னும் யார் ரிஷப மானது?
விஷ்ணு திரிபுரசம்ஹாரகாலத்தில் ரிஷபமாகிக் கயிலாயபதி தன்னை வாகனமாகக் கொண்டருளும் பேறுபெற்றார்.
பரமசிவன் வீணாதண்டம் வைத்திருக்கக் காரணமென்ன?
விஷ்ணுவாமனாவதாரத்தில் விஸ்வரூபம் கொண்டபோது மமதையடைந்து உலகினையழிக்கமுயலுகையில் சிவபெருமான் திருவுளமிரங்கி வைரவரையனுப்ப, அவரந்த
விஸ்வரூபத்தைச் சம்ஹாரம் செய்து அதன் வீணாதண்டத்தைக் கொண்டுவந்துஎம்பெருமானிடத்தில் வைக்க, சுவாமி அதனைத் தனக்கு ஒரு கோலாகவைத்துக்கொண்டார்.
பரமசிவனுக்குச் சிம்ஹாசனம் இருப்பதற்குக் காரணம் என்ன?
இரணியனைக்கொல்லவந்த விஷ்ணு நரசிம்மாவதாரம் செய்து அவனைக்கொன்று மமதையடைய, தேவர்கள்கயிலாயபதிக்கு விண்ணப்பித்துக்கொள்ள, அவர் சரபரூபமெடுத்து அச்சிம்மத்தின்தலையைப்பிளந்து இரத்தத்தைக் குடித்துக்கொன்றனர். தேவர்களதன்தோலையுரித்துச் சுவாமிக்குத தவிசாக வைத்துச் சுவாமியை வேண்டிக்கொள்ளஅவரும் அவ்வாறே அங்கீகரித்தனர்.
பரமசிவன் யானைத்தோல் போர்த்திருப்பதற்குக் காரணமென்ன?
யானைரூபமாகத்தோற்றிய கஜாசுரனென்பவன் பிரமதேவனை நோக்கித் தவஞ்செய்துதேவர்களையெல்லாம்வென்று ஜயம்பெற வேண்டுமென்கிற வரங்கேட்டான். பிரம தேவன்அப்படியே வரங்கொடுத்துப், பரமசிவனெதிரில் போகாதே, போனால் இந்தவரமழிந்துபோமென்று சொல்லக் கேட்டுக்கொண்டு போனவன் தேவேந்திரன்முதலானவர்களுடன் யுத்தஞ்செய்து வென்று திரியும்போது, முனிவர்கள் கண்டுபயந்து ஓடிக் காசி சேர்ந்தார்கள். அங்குமவர்களைத் தொடர்ந்து சென்றான்.
அவர்கள் கண்டு பயந்து மணிகர் நிகையென்னும் ஆலயத்துக்குப் போய்ப்
பரமசிவனைச் சரணாகதியடைந்தார்கள். கஜாசுரனுக்குக் காலமுடிவு நேரிட்டதனால்பிரமதேவன் சொன்னதை மறந்து அங்குஞ் சென்று முனிவர்களைக் கொல்லவேண்டுமென்றுஉறுமுகிறபோது சுவாமி கோபத்துடன் உக்கிரமூர்த்தியாய்க் கஜாசுரன் மத்தகத்தைமிதித்து உடலைக் கிழித்துத் தோலையுரித்துப் போர்த்தருளினார்.
சிவபெருமான் கொக்கிறகைத் தரிக்கக் காரணமென்ன?
குரண்டாசுரனென்னும்ஓரசுரன் கொக்கு ரூபமாயிருந்து அண்டமனைத்துங் கொரித்துக்கொரித்து, தேவர்களைவருத்தி வந்தமையால் சிவபெருமான் அவனைச் சம்ஹாரம் செய்து அவனது இறகையணிந்தருளினார்.



Tuesday, February 22, 2011

துருவன் கதை


துருவன் கதை
'உத்தான பாதருக்கு ஸுருசி என்று இரு மனைவியர். ஸுநீதிக்கு துருவன் என்று ஒரு மகனும், ஸுருசிக்கு உத்தமன் என்று ஒரு மகனும் இருந்தனர். உத்தானபாதருக்கு தனது மனைவிகளில் ஸுருசியின் மேலும் மகன்களில் உத்தமன் மேலும் அதிக பாசம். ஒரு நாள் உத்தானபாதரும் ஸுருசியும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது உத்தமன் தன் தகப்பனார் மடியில் அமர்ந்து கொஞ்சிக் குலாவிக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் குழந்தை துருவன் அங்கு வந்தான். ஆசையாக அப்பாவின் மடிமேல் அமர்ந்து உத்தமன் போல் தானும் விளையாட நினைத்தான்.
அப்பாவின் மடியில் அமரமுயன்ற துருவனை ஸுருசி தடுத்து, 'நீ என் வயிற்றில் பிறக்காததால் அவர் மடியில் உட்கார உனக்குத் தகுதி இல்லை. நீயும் உனது தகப்பனாரின் மடியில் அமர்ந்து கொஞ்ச வேண்டுமென்றால் நீ என் வயிற்றில் பிறக்க வேண்டும். எனவே காட்டுக்குப் போய், என் வயிற்றில் பிறக்க வேண்டும் என நாராயணனை நோக்கிக் கடுந்தவம் செய். அப்படிச் செய்து ஆசிபெற்று என் வயிற்றில் பிறந்தாய் என்றால்தான் அவர் மடியில் அமரலாம்' எனக் கடுமையாகக் கூறி ஐந்து வயது இளம் குழந்தையான துருவனைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளிவிட்டாள்.
உத்தானபாதரும் இதற்கு உடன்பாடாகப் பேசினார். இதனால் மிகவும் வருத்தப்பட்ட துருவன் தனது தாயாரிடம் சென்று 'ஓ' என்று அழுதுகொண்டே நடந்ததைக் கூறினான். அதற்கு ஸுநீதி 'குழந்தாய்! நீ என் வயிற்றில் பிறந்தது துரதிருஷ்டமே உன் சித்தி கூறியபடி தவம் செய்' என்று கூறி துருவனை சமாதானம் செய்து ஆசி வழங்கி அனுப்பினார்.
துருவன் ஐந்து வயதுக் குழந்தையாக இருந்த பொழுதிலும், ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவம் செய்ய உறுதியுடன் கானகம் சென்றான். கானகம் செல்லும் வழியில் நாரத மகரிஷி துருவனை சந்தித்து, விவரங்களை அறிந்தார்.
துருவனை அன்பொழுக அரவணைத்துக் கொண்டு நாரதர், 'குழந்தாய்! நீ மிகச் சிறுவயது பாலகன். கானகத்தில் தவம் செய்வது மிகக் கடினம். குழந்தைகள் புகழ்ச்சி, இகழ்ச்சி என்றெல்லாம் பார்க்கக்கூடாது. எனவே, நீ திரும்பவும் உன் வீட்டிற்குச் சென்று சமத்தான பையனாக இரு' என்று அறிவுறுத்தினார்.
ஆனால் குழந்தை சிறுவன் அசரவில்லை. ஓநீங்கள் முக்காலும் அறிந்த முனிவர். நீங்கள் இப்படிச் சொல்லலாமா? நான் கானகம் சென்று கடுந்தவம் செய்வது என்று உறுதி பூண்டுள்ளேன். இந்த வைராக்கியம் நிலைத்து நின்று நான் தவவேள்வியில் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துங்கள்ஔ எனக்கூறிப் பணிந்தான்.
பிரம்மரிஷிக்கு மிகவும் ஆச்சரியமாகவும், ஆனந்தமாகவும் இருந்தது. அவர் துருவனை அரவணைத்து 'குழந்தாய்! ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவம் செய்யும்பொழுது 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்ற மகாமந்திரத்தை ஜெபி. எல்லா தேவர்களும் உனக்குப் புலப்படுவார்கள். ஸ்ரீமன் நாராயணனே உன்முன் தோன்றி நீ வேண்டிய வரம் அருள்வார்ஔ என்று கூறி ஆசீர்வதித்தார்.
கானகம் சென்ற துருவன் தவம் மேற்கொண்டான். மனதை ஒருமுகப்படுத்தி, தன் இதயக்கமலத்தில் சங்கு சக்கர கதாபாணியான ஸ்ரீமன் நாராயணனின் அழகு உருவத்தை வீற்றிருக்கச் செய்து அருந்தவம் செய்தான். இந்தக் கடுந்தவத்தால் அகில உலகமே ஸ்தம்பித்துவிட்டது.
தேவர்கள் ஸ்ரீமன் நாராயணனிடம் முறையிட்டனர். கருணைக்கடலான ஸ்ரீமன் நாராயணன், தேவர்கள் புடைசூழ துருவன் முன் தோன்றினார். துருவனின் உள்ளத்தில் இருந்த ஸ்ரீமன் நாராயணனின் திருவுருவம் திடீரென்று மறைந்துவிடவே, தன் கண் முன் ஸ்ரீமன் நாராயணன் எழுந்தருளி இருப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தான்.
'பிரபோ! இந்த உலகத்தில் இருக்கும் எல்லா சரீரங்களுக்குள்ளும் மூச்சுக் காற்றாகப் புகுந்து, அவற்றில் இச்சாசக்தி, கிரியாசக்திகளாக மாறி அந்த தேகங்களை உயிரோட்டமுள்ளதாகச் செய்யும் மூலசக்தியாக விளங்கும் ஆதிமூலமே! எல்லா உலகையும் படைத்து, காத்து, அழிக்கும் முத்தொழிலையும் செய்யும் மும்மூர்த்திகளுக்கும் ஒருமூர்த்தியாய் விளங்கும் பரம்பொருளே! ஆதியும் அந்தமும் இல்லாத ஆனந்தமூர்த்தியே உன்னைச் சரண் அடைகிறேன்ஔ என்று பலவாறாகப் போற்றினான்.
ஸ்ரீமன் நாராயணன், துருவனை ஆசீர் வதித்து, 'நீ உன் தாய் தகப்பனிடம் செல், அவர்கள் உன்னை அன்புடன் வரவேற்பார்கள். உன் தந்தையின் ராஜ்ய பாரத்தை ஏற்று நல்லாட்சி நடத்து. அதன் பிறகு எல்லா விண்மீன்களும் சுற்றிவரும் துருவ நட்சத்திரமாகப் பல்லாயிரம் ஆண்டுகள் விண்ணில் நீ பிரகாசிப்பாய்' என்று அருள் பாலித்தார்.
இதற்கிடையில், வனத்திற்குப் போகும் வழியில் துருவனைச் சந்தித்து, ஆசியும் தவநெறி முறைகளையும் அவனுக்கு வழங்கிய நாரத முனிவர், உத்தானபாதரைச் சந்திக்கச் சென்றார். மகாராஜா உத்தானபாதர், தன்னுடைய மனைவியின் மேலுள்ள அதிகமான பாசத்தால் மதிமயங்கி ஐந்து வயது பாலகனைக் காட்டிற்கு அனுப்பிவிட்டோ மே என்று மிக வருத்தத்துடன் இருந்தார்.
நாரதமுனிவரை வரவேற்ற உத்தானபாதரும் அவர் மனைவிகளும் அவர்கள் செய்த தவறைக் கூறி 'மாமுனிவரே! நீங்கள்தான் எங்கள் துயரைத் துடைக்க வேண்டும்' என்று வேண்டினர்.
நாரதமுனிவர் அவர்களைச் சமாதானப்படுத்தி, 'உங்கள் புத்திரனுக்குச் சிறுவயதாக இருப்பினும் இதுவரை யாருமே செய்யாத கடுந் தவம் செய்ய முனைந்திருக்கிறான். யாருமே பெறாத பெரும்பேரைப் பெற்று உங்கள் குலத்தை விளங்கச் செய்வான். நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்று கூறி ஆசீர்வதித்துச் சென்றார்.
ஸ்ரீமன் நாராயணனால் ஆசீர்வதிக்கப்பட்ட துருவன், தனது அரண்மனைக்கு வந்து பெற்றோர்களை வணங்கி ஆசிபெற்றான். சிலகாலம் சென்றபின் தகுந்த மனைவியைக் கைப்பிடித்து உத்கலன் முதலிய சிறந்த மக்களைப் பெற்றுத் தன் தகப்பனாருக்குப் பிறகு இராஜ்யத்தை நல்ல முறையில் அரசாண்டு வந்தார்.



பகீரதப் பிரயத்தனம்

பகீரதப் பிரயத்தனம்

ஒரு அசாத்தியமான காரியத்தை, மிகுந்த பொறுமையோடும் தளராத விடாமுயற்சியோடும் செயல்படுத்தி வெற்றி காண்பதை 'பகீரதப் பிரயத்தினம்' என்று கூறுவது வழக்கம். இதற்கான காரணத்தை விளக்குவதுபோல் அமைந்த ஒரு கதை கீழே வர்ணிக்கப்படுகிறது.
முன்காலத்தில், பெரிய மன்னர்கள் எல்லாம் தங்களது புகழை நிலை நிறுத்தவும் பராக்ரமத்தை பறைசாற்றும் விதமாகவும் 'அஸ்வமேத யாகம்' செய்வது வழக்கம். சூரிய வம்சத்திலே வந்த 'சகரர்ஒ என்ற மன்னரும் அதுபோல் ஒரு மஹத்தான அஸ்வமேத யாகம் செய்ய விரும்பினார். அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் விதிப்படி மேற்கொள்ளப்பட்டது. யாகத்திற்குப் பூர்வாங்கமாக, த்ரிடதன்வா என்ற மஹாரதன் மேற்பார்வையில் மன்னரது குதிரை பல தேசங்கள் வழியாக வலம்வர அனுப்பப்பட்டது. ஆனால், ஒரு அமாவாசை இரவில் அரக்க உருவத்திலே வந்த இந்திரன் குதிரையைக் கவர்ந்து சென்றுவிட்டான். குதிரை காணாமல் போனதால் யாகத்தை நடத்த முடியாத நிலை ஏற்பாட்டது. துவங்கிய யாகமானது முடிவு பெறாமல் பாதியில் நின்றுவிடுமானால் அமங்கலம் ஏற்படும். ஆகவே குதிரையைத் தேடுவதற்காக தனது 60,000 புதல்வர்களையும் பணித்தார். உதயபர்வதம் முதல் அஸ்தமனகிரி வரையிலும் தேவலோகம், நாகலோகம், பிரம்ம லோகம், மற்றும் கருடனது மாளிகை வரை தேடுங்கள் ஒவ்வொருவரும் ஒரு யோஜனை தூரம் வீதம் அனைத்துப் பிரதேசங்களையும் விடாமல் தேடினால் வெற்றி நிச்சயம் என்று ஆசி கூறி அனுப்பிவிட்டு, சகர மன்னர் யாக தீஷையில் இருந்தார். தந்தையாரை வணங்கி உற்சாகத்துடன் புறப்பட்ட அவர்கள் வழியில் தென்படும் அனைவரையும் ஹிம்சித்துக்கொண்டே குதிரையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இவர்களது தொல்லை பொறுக்கமாட்டாத தேவர்கள் எல்லாம் பிரம்மதேவரிடம் முறையிட்டனர். அவர்களது வேதனையை செவி மடுத்த பிரம்மதேவர், ஓபூமி தேவியை பகவானுடைய பத்தினியாக மதித்து மரியாதை செய்யப்பட வேண்டியவள் ஆதலால், பூமியை ஹிம்சை செய்யும் அந்தச் சகரப் புதல்வர்கள் கபில வாஸுதேவரின் கோபத்தால் அழியப்போகிறார்கள் கவலை வேண்டாம்' என்று சமாதானம் செய்தார்.
அனைத்து இடங்களிலேயும் விரிவாகத் தேடியும், குதிரை காணப்படாததால், சகர மைந்தர்கள், மன்னரிடம் தெரிவிக்க திருப்தியடையாத அவர் பூமியிலே காணவில்லையானால் பாதாளம் வரை தோண்டிச் சென்று கீழ் உலகம் அனைத்திலும் தேடி, குதிரையைக் கண்டுபிடியுங்கள் என்று வலியுறுத்திக் கூறவே, அந்த 60,000 புதல்வர்களும் கடப்பாரை, கலப்பைகள் சகிதமாக பூமியை எல்லா இடத்திலும் தோண்ட ஆரம்பித்தனர். பூமியைக் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளிலும் தாங்கி நிற்கும் விரூபாக்ஷன், மஹாபத்மன், சௌமனஸன் மற்றும் பத்ரன் போன்ற திக்கஜங்கள் அனைவரையும் வணங்கி வலம்வந்து, தொடர்ந்து தோண்டிக்கொண்டே வந்த அவர்கள் ரஸாதலத்தை அடைந்தனர். அங்கு தவம் செய்துகொண்டிருக்கும் மாமுனிவர் கபில வாஸுதேவரைக் கண்டனர். அருகிலே யாகக் குதிரை மேய்ந்துகொண்டிருந்தது. கோபத்தினால் நிதான புத்தி இழந்த அவர்கள், முனிவர்தான் குதிரையை அபகரித்து வந்துவிட்டார் என்று எண்ணி, அவரை ஆயுதங்களாலும் கற்களாலும் தாக்க ஆரம்பித்தனர். கோபம் அடைந்த கபில வாஸுதேவர் தன் உக்கிரமான பார்வையால் அவர்கள் அனைவரையும் எரித்துச் சாம்பலாக்கினார்.
ரொம்ப காலமாகியும் குதிரையைத் தேடிச் சென்ற 60,000 புத்திரர்களும் திரும்பி வராததால், கவலையடைந்த 'சகரர்' தனது பேரனான அம்சுமானை அழைத்து, சென்றவர்கள் கதி என்னவாயிற்று என்று தெரிந்து வரும்படி அனுப்பினார். ஆயுதங்கள் சகிதமாகப் பெரியவர்களை வணங்கி ஆசிபெற்றுப் புறப்பட்ட அம்சுமான், பல இடங்களிலும் தேடிக்கொண்டே வந்து திக் கஜங்களையும் வணங்கி ஆசி பெற்றுச் சென்றார். ரஸாதலம் வந்தடைந்து எரிக்கப்பட்டு சாம்பல் குவியலாக இருக்கும் தன் முன்னோர்கள் கதியைப் பார்த்துத் துக்கம் மேலிட அழ ஆரம்பித்தார். அருகிலே யாகக் குதிரையும் காணப்பட்டது. இறந்தவர்களுக்கு ஈமக்கிரியைச் செய்யும் நோக்கத்தோடு, நீர்நிலைகள் இருக்கிறதா என்று நாற்புறமும் தேடியும் ஒன்றுமே காணப்படவில்லை. அதிக விசனமடைந்த அவர் முன் பறவைகளின் அரசனும் தன் முன்னோர்களின் தாய்மாமனுமான சுபர்ணன் வந்து சேர்ந்தார். கபிலவாஸு தேவரால் பஸ்மமாக்கப்பட்ட அவர்களைக் கரையேற்ற வேண்டுமானால், கங்கையின் தீர்த்தத்தைக் கொண்டுவந்து சம்ஸ்காரம் செய்ய வேண்டும்; ஆகவே அதற்கான ஏற்பாடுகளைச் செய்வாயாக; இந்தக் குதிரையைக் கூட்டிச் சென்று சகரர் துவங்கிய யாகத்தை பூர்த்தி செய்ய ஆவன செய்வாயாக என்று கூறினார்.
குதிரையை அழைத்துக்கொண்டு சகர மன்னரிடம் சென்ற அம்சுமான், நடந்த விவரங்களையெல்லாம் விவரமாக எடுத்துக் கூற, வேதனையடைந்த மன்னர், பெரியோர்களின் ஆலோசனைப்படி முதலில் தான் துவங்கிய அஸ்வமேத யாகத்தை நிறைவு செய்தார். 30,000 வருஷம் அரசாண்ட சகர மன்னர், கங்கையைக் கொண்டுவர என்ன செய்யலாம் என்று ஆலோசித்து ஆலோசித்து, ஒன்றும் செய்ய முடியாமல் ஜீவனை விட்டார். அம்சுமான் தனது புதல்வன் திலீபனிடம் ராஜ்யத்தை ஒப்படைத்துவிட்டு, ஹிமயமலைச் சாரலில் 32,000 வருஷங்கள் தவம் செய்தும் கங்கையைக் கொண்டுவரும் விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் உயிர் நீத்தார். அடுத்து பட்டம் ஏற்ற திலீபனும் 32,000 வருஷங்கள் பலவித யாகங்கள் செய்தும், கங்கையைக் கொண்டுவரும் எண்ணம் வெற்றி பெறாமல் வியாதியால் பீடிக்கப்பட்டு முக்தியடைந்தார்.
திலீபனின் புதல்வரான பகீரதன், முன்னோர்களின் கதியை நினைத்து நினைத்து மனம் வருந்தினார். அவருக்குச் சந்ததியும் இல்லாததால் கவலை மேலும் அதிகமாகியது.
உறுதியான நெஞ்சங்கொண்ட பகீரதன் கோகர்ண ஷேத்ரம் சென்று, கைகளை மேலே கூப்பியபடி, நாற்புறமும் அக்னி வளர்த்து, சூரியனின் வெம்மையில் இருந்துகொண்டு 'பஞ்சாக்னிதவம்' என்னும் முறையில், மாதம் ஒருமுறை ஆகாரம் உண்டு, ஆயிரம் வருஷங்கள் பிரம்மதேவரை நோக்கிக் கடும் தவம் புரிந்தார். தவத்தினால் சந்தோஷமடைந்து, முன்னால் தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்ட பிரம்மதேவரை, கண்களில் நீர் மல்க சாஷ்டாங்கமாக நமஸ்கரித்த பகீரதன், 'பிரபுவே! எனது வம்சம் விருத்தியடைய ஒரு புதல்வன் வேண்டும். மேலும், எனது முன்னோர்கள் முக்திபெற ஏதுவாக, ஆகாயத்திலிருக்கும் கங்கை நதி பூமியிலே பாய்ந்து வரவேண்டும்' என்று பிரார்த்தித்தான். பிரம்ம தேவர் 'பகீரதனே! அப்படியே ஆகட்டும். உனது குலம் விளங்க உத்தமமான ஒரு புதல்வன் தோன்றுவான். ஹிமவான் புதல்வியான இந்தக் கங்கையின் வேகத்தை பூமியால் தாங்க முடியாது. அதன் மஹத்தான வேகத்தைத் தாங்கும் சக்தி சூலபாணியான சிவபெருமான் ஒருவருக்குத்தான் உண்டு; ஆகவே இந்தக் காரியத்தில் வெற்றிபெறச் சிவபெருமானை நோக்கி பிரார்த்தனை செய்வாயாக என்று ஆலோசனை கூறி, கங்கா தேவியிடமும் சொல்லிவிட்டு' சிருஷ்டிக் கடவுளான அவர், தன் இருப்பிடமான சத்யலோகம் சென்றார்.
கால் கட்டை விரலைத் தரையிலே ஊன்றி, கைகள் இரண்டையும் தலைமேல் கூப்பி, இரவுபகலாக ஆகாரமின்றி வாயு யஷணம் செய்பவராய், அசையாமல் கட்டைபோல் நின்ற கோலத்தில், சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் செய்தார் பகீரதன். ஒரு வருஷம் கழிந்தது. தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் பகீரதன் முன் தோன்றினார். மலையரசன் மகளான கங்கையைத் தன் தலையிலே தாங்கிக்கொள்வ தாக வாக்களித்தார். அதை ஏற்ற கங்கா தேவியும் மஹத்தான சப்தத்தோடு, சிவ பெருமான் ஜடாமுடியில் பிரவேசம் செய்தாள்.
அதிவேகத்தோடு சிவபெருமானையும் சேர்த்துக்கொண்டு பாதாளம் அடைவேன் என்று கர்வம்கொண்ட கங்கா தேவியின் எண்ணத்தை அறிந்த மஹேஸ்வரன், தன் ஜடையிலிருந்து கங்கையைக் கீழே தரையில் விடவில்லை. சிவபெருமானின் ஜடாமண்டலத்தில் மோகம் அடைந்தவளான கங்கையும் கீழே இறங்க மனமின்றித் தலையிலேயே சுற்றிவரத் தொடங்கினாள். பல ஆண்டுகள் கழிந்தன. பகீரதன் பக்தியோடு மீண்டும் தீவிரமாகத் தவம் இயற்றினார். கருணாமூர்த்தியான சிவபெருமான், தலையிலிருந்து கங்கையை பூமியிலே, பிந்துசரஸ் என்ற இடத்தை நோக்கிப் பாயச் செய்தார். ஏழு கிளைகளாகப் பிரிந்த கங்கை நதியின், ஹ்லாதினீ, பாவனீ, நளினீ என்ற மூன்று கிளைகள் கிழக்கு நோக்கியும் சுஸக்ஷி ஸீதா, ஸிந்து என்ற மூன்று கிளைகள் மேற்கு நோக்கியும் ஏழாவது கிளை பகீரதனைப் பின்தொடர்ந்தும் செல்ல ஆரம்பித்தது.
பலதரப்பட்ட நீர்வாழ்ப் பிராணிகளோடு வேகமாக, பெரிய சப்தத்தோடு, பகீரதனைப் பின்தொடர்ந்து செல்லும் கங்கா நதியைக் கண்ட தேவர்கள், மஹரிஷிகள், கந்தர்வர்கள் மற்றும பூலோகவாசிகள் அனைவரும் மிகவும் ஆச்சரியம் அடைந்தவர்களாக, ஆஹா! விஷ்ணுவின் பாதத்திலிருந்து உற்பத்தியாகி, சந்திர மண்டலத்தையெல்லாம் புனிதப்படுத்திவிட்டு, சிவபெருமான் மேனியிலிருந்து வரும் இந்தக் கங்கை நதி மிகவும் பவித்ரமானது என்று சொல்லிக்கொண்டே, தங்களது பாவங்கள் தீர்வதற்காக, அதில் நீராடியும், ஜலத்தைப் பாணம் செய்தும் மகிழ்ந்து தங்கள் இருப்பிடத்தை அடைந்தார்கள்.
பகீரதனது ரதத்தைத் தொடர்ந்து செல்லும் கங்கா நதி, பாதையிலே அமைந்திருந்த 'ஜஹ்னுஒ மஹரிஷியின் ஆஸ்ரமத்தை மூழ்கடித்துவிட்டது. கோபம் அடைந்த மஹரிஷி, தனது தவ வலிமையால் ஆசமனம் செய்து கங்கையை முழுவதுமாகக் குடித்துவிட்டார்.
ஆக, மறுபடியும் சோதனை! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை! மனம் தளராத பகீரதன் ஜஹ்னு மஹரிஷியிடம் கங்கையை விடுவித்து உதவ வேண்டும் என்று பணிவோடு பிரார்த்தனை செய்ய, அதே நேரத்தில் அங்கு வந்த தேவர்களும் மஹரிஷியே! இந்தக் கங்கை தங்களது புத்ரிக்கு ஒப்பானவள்; உலக நன்மையைக் கருதி, தாங்கள் உதவவேண்டும் என்று கேட்டுக்கொள்ளவே, சந்தோஷமடைந்த ஜஹ்னு மஹரிஷியும் தன் காது வழியாகக் கங்கையை வெளியே அனுப்பினார். அதனால் கங்கைக்கு ஜாஹ்னவீ என்றும் பெயர் ஏற்பட்டது.
இப்படிப் பெரிய முயற்சியோடு கொண்டு வரப்பட்ட கங்கை நதியின் ஜலம், பகீரதனுடைய முன்னோர்களின் அஸ்தியின் மேல் பாய்ந்ததால் அவர்கள் அனைவரும் முக்தி அடைந்தார்கள். பிரம்மதேவரும், பகீரதனே! உலகிலே சமுத்திரங்கள் உள்ளவரை உனது முன்னோர் கள் சுவர்க்கலோகத்திலே நிலைபெற்று இருப்பார்கள். அதோடு இந்தக் கங்கை நதியும் உனது புதல்வியாகப் போற்றப்பட்டு, பாகீரதி என்ற பெயரையும் அடைவாள் என்று ஆசீர்வதித்தார்.



கிருஷ்ண பக்தை – ஜனாபாய்

வறட்டிகள் எழுப்பிய விட்டல் நாமம்.

(கிருஷ்ண பக்தை – ஜனாபாய்)
பண்டரிபுரத்தில் நாமதேவரின் இல்லத்தில் எப்போதும் பாண்டுரங்கனின் மகிமை பாடப்பட்டுவந்தது. நாமதேவரின் புதல்வி ஜனாபாய் பாண்டுரங்கனிடமும் அவரது அடியார்களிடமும் மிகுந்த பக்தியோடு சேவை செய்து வந்தாள்.
அன்று கீர்த்தனை முடிந்ததும் பாகவதர்களுக்காக உணவு சமைக்க ஜனாபாய் இல்லத்திற்கு விரைந்து வந்தாள். அடுப்பிற்காக வைத்திருந்த வறட்டிகளை அடுத்த வீட்டுக்காரி அபகரித்திருந்தது அவளுக்கு தெரிந்தது. ஜனாபாய் வறட்டிகளைக் கேட்க அந்த பெண் மறுக்க இருவருக்குள்ளும் வாய்ச் சண்டை வந்துவிட்டது. அங்கு வந்த நாம தேவர் அதிர்ச்சி அடைந்தார்.
"உன் வறட்டிகளை நான் எடுக்கவில்லை" என்று அந்த பெண் மறுக்க, "இல்லை நீதான் எடுத்திருக்கிறாய், அதை நான் நிரூபிப்பேன்" என்று ஜனாபாய் தந்தையிடம் உரைத்தாள்.
அடுத்த வீட்டிலிருந்து எல்லா வறட்டிகளும் கொண்டுவரப்பட்டன. ஜனாபாய் இறைவனிடம் "பாண்டுரங்கபிரபு, தீன தயாளா, அடியார் தொண்டில் ஈடுபடும்போதும், வறட்டி தட்டும்போதும் 'விட்டல், விட்டல்' என்று உன் நாமத்தை நான் ஜெபிப்பது உண்மையானால் நீ அதை நிரூபித்து அருள வேண்டும்" என்று வேண்டினாள்.
ஜனாபாய் வறட்டிகளை ஒவ்வொன்றாக கீழே போட்டார். ஜனாபாயின் வறட்டிகள் 'விட்டல், விட்டல்' என்ற திருநாம ஒலியுடன் கீழே விழுந்தன. மற்றவை வெறும் சத்தத்தை மட்டும் எழுப்பின.
கூடியிருந்த மக்கள் "ஆஹா என்னவோர் அற்புதம், ஜனாபாயின் வறட்டிகள் கூட விட்டலின் நாமத்தை கூறுகின்றனவே" என்று வியந்தனர்.







பகவத் கீதை - ஸ்லோகங்கள்

பகவத் கீதை - ஸ்லோகங்கள்

1. எனக்காய் செயல் புரிவோனும்

பக்தியோடு என்னைப் பணிவோனும்

உலகில் பற்றோ வெறுப்போ இன்றி

வாழும் அன்பன் எனை அடைவான்.

- அத் (11,55)
2. எல்லா உயிரிலும் சமமாயுள்ளேன்

நண்பன் வைரி எனக்கில்லை

எனினும் என்னை அன்பால் அடைவோர்

என்னுள் அவர். அவரில் யான்.

- அத் (9,29)
3. ஸாமங்களிலே பிருஹத் ஸாமம் யான்

சந்தங்களில் யான் காயத்ரி

மாதங்களில் மார்கழி யானே

ருதுக்களிலே யான் வசந்தம்தான்.

- அத்(10,35)
4. யாருள் உயிர்கள் நிலை பெற்றிடுமோ

யாரால் யாவும் நிறைவுறுமோ

பரம்பொருளாகிய அப் பரமாத்மா

அனன்ய பக்திக்கு அகப்படுவான்.

-அத்(8,22)
5. நீரில் சுவையும் வானில் ஒலியும்

மதியில் ரவியில் ஒளியும் யான்-

வேதம் அனைத்திலும் ஒங்காரம் யான்

மாந்தரில் ஆண்மை யானேதான்.

-அத்(7,8)
6. நேயர், நண்பர், பகைவர், இதரர்

நடுவர், வெறுப்போர், பந்துக்கள்

ஸாத்விகர், பாவியர் என்பாரிடமும்

சமமதி உடையோன் மேலோனாம்.

-அத்(6,9)
7. தன்னைவென்று மனத் தெளிவுற்றோன்

குளிர் வெப்பச் சுக துக்கத்தில்

புகழொடு வசையில் சமநிலையுற்றோன்

பரமாத் மாவின் அருளுற்றான்.

-அத்(6,7)
8. தவத்தொடு யாகம் துய்ப்போன் யானே

உலகுக் கெல்லாம் ஈசுவரனே

எல்லா உயிர்க்கும் தோழன் நானே

என அறிவோனே சாந்தியுளான்.

-அத்(5,29)
9. தீமை இல்லாச் சொல்லொடு ஸத்தியம்

இனிமை நலனும் பயக்கும் சொல்

வேதம் ஓதல் நாம ஜபங்கள்

யாவும் வாக்குத் தவமாகும்.

-அத்(17,15)

10. வானவர் அந்தணர் குருக்கள் ஞானியர்

யாவரிடத்திலும் பணிவன்பு,

தூய்மை, நேர்மை, புலன்மேல் ஆட்சி

அஹிம்சை யாவும் உடல் தவமாகும்.

-அத்(17,14)

பகவத்கீதையில் உணவு.

பகவத்கீதையில் உணவு.

ஆயுள், ஸத்துவம், சக்தி, சுகமும்
குன்றா நலனும் உடல் வலிவும்,
இனிமை, கனிவு, இவற்றை நல்கும்
உணவே ஸாத்விகர் நாடுவதாம்.

கசப்பு, புளிப்பு, உவர்ப்பாம் இவற்றொடு
சூடுகாரம் உறைப்புகளும்
எரிச்சல் துன்பம் நோய்தரும் பாங்குள
உணவே ராஜஸர் நாடுவதாம்.

காலம் கடந்தும் சுவையிலா உணவும்
நாற்றம் வீசும் பழையனவும்
எச்சில் உணவும் அசுத்த உணவும்
தமோ குணத்தார் வேண்டுவதாம்.

பகவத்கீதை உணர்த்தும் தான வகைகள்

பகவத்கீதை உணர்த்தும் தான வகைகள்

கைம்மா றென்றும் செய்யாதார்க்கும்
காலத்தால் செயும் தானமெல்லாம்
தக்க இடத்தில் தக்கார்க்(கு) ஈந்தால்
ஸாத்விக தானம் எனப்படுமே.

கைம்மா(று) ஒன்றே கருத்திற் கொன்டு
பலனை நாடிய தானமெல்லாம்
தூய மனத்தால் செய்யாமையினால்
ராஜஸ தானம் எனப்படுமே.

தக்கார்க்(கு) அல்லால் ஈயும் தானம்
தகாத இடத்தில், காலத்தால்
பணிவே இன்றி இழிவாய்ச் செய்யின்
அதுவே தாமஸ தானமுமாம்.


-அத்(17),ஸ்லோகம்(20-22)

ஸர்வே பவந்து ஸுகின" ஸ்லோகத்தின் பொருள்

ஸர்வே பவந்து ஸுகின" ஸ்லோகத்தின் பொருள்

ஸ்லோகம்:
ஸர்வே பவந்து ஸுகின:
ஸர்வே ஸந்து நிராமயா :!
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாத் பவேத்!!
பொருள்:
எல்லோரும் சுகமாக வாழ்வார்களாக !
எல்லோரும் நோய் நொடியில்லாமல் வாழ்வார்களாக !
எல்லோருக்கும் மங்களம் உண்டாவதாக !
ஒருவரும் துன்புராது இன்புற்று இருப்பார்களாக !

ஸ்ரீராம பிரானின் க்ஷத்திரிய தர்மம்.

ஸ்ரீராம பிரானின் க்ஷத்திரிய தர்மம்.
ராமர், சீதை, லக்ஷ்மணர் மூவரும் சுதீட்சணர் ஆசிரமத்திலிருந்து புறப்படும் சமயத்தில் சமயத்தில் சீதையின் உள்ளத்தில் ஒரு சந்தேகம் தோன்றியது..
தங்களுக்கு ஒருபோதும் தீங்கிழைக்காத அரக்கர்களை முனிவர்களுக்காக கொல்வது சரியாகுமா? என்பதுதான் சீதையின் சந்தேகம்..
ஆதலால் சீதை, ராமரிடம் பணிவுடன் 'தங்களிடம் போருக்கு வராத அராக்கர்களை கொல்வதன் மூலம் அவர்களை விரட்டி ஆக்கிரமித்தல் என்ற குற்றத்திற்கு ஆளாகிவிடுவீர்களோ என்று அஞ்சுகிறேன்' என்று தெரிவித்தார்..
ராமர் "தேவி, க்ஷத்திரியர்களாகிய நாங்கள் எங்கே எந்த இடத்தில் இருந்தாலும் கொடியவர்களை தண்டித்து நல்லவர்களை காப்பாற்றக் கடமைப்பட்டிருகிறோம். அதுவே அரச தர்மமாகும்.ஆகவே அரக்கர்களை தண்டிப்பதில் ஆக்கிரமித்தல் என்ற குற்றத்திற்கு இடமில்லை" என்றார். மேலும் "உன்னுடைய உயர்ந்த பண்பு மிக்க பேச்சு, நாம் பிறந்த இரண்டு குலத்தவர்க்கும் பெருமை தருவதாக உள்ளது. என் உயிரிலும் மேலாக உன்னை நான் நேசிக்கிறேன்" என்று உவகையுடன் கூறினார்.

- (ராமகிருஷ்ண மிஷனின் 'பக்திக் கதைகள்' புத்தகத்திலிருந்து).

நோய் தீர்க்கும் தன்வந்திரி வழிபாடு

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது.

நோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம்

நோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்:
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய அம்ருத கலச ஹஸ்தாய !
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய் மகாவிஷ்ணவே நம !
பொருள்:
அமிர்த கலசத்தை கையில் ஏந்திய வாசுதேவனே,
தன்வந்திரி பகவானே, எல்லா நோய்களையும்
தீர்ப்பவரே, மூன்று உலகங்களுக்கும் அதிபதியான
ஸ்ரீ மஹாவிஷ்ணுவாகிய உங்களுக்கு நமஸ்காரம்.

தன்வந்திரி இந்து மதத்தில் வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். தன்வந்திரியை முதல் மருத்துவர் என்று நம்புகின்றார்கள் இந்துக்கள். விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தனி சந்நிதியில் தன்வந்திரி காணப்படுகிறார்.




Saturday, February 19, 2011

இந்து சமயம்

இந்து சமயம்

இந்து சமயம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது [1][2]. பெரும்பாலன இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள். நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனைக் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.
ஆகக் குறைந்தது, கி.மு 1500 ஆண்டுக்கு அணித்தான வேத கால பண்பாட்டில் தோற்றம் பெற்றது.
முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.
ஒரு இந்துவுக்கு, 'நிலையான தர்மம்' என்பதை வரையறுப்பதில், இந்த எண்ணமே உந்து சக்தியாக உள்ளது.

ஒரு சுருக்கமான மேலோட்டம்

இந்து சமயம் வேதங்களையும், தொடர்ந்து வந்த உபநிடதங்கள் மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக அடிப்படையில் தங்கியுள்ளது. ஆறு வேத/தத்துவஞானப் பிரிவுகள், பக்தி இயக்கப் பிரிவுகள், மற்றும் தந்திர ஆகமப் பிரிவுகள் என்பவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் சிந்தனையோட்டங்கள் அனைத்தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன.
சனாதன தர்மம்
"சனாதன தர்மம்" அல்லது "நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை" என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும். இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்ட construct களைக் கடந்து, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது.
யோக தர்மம்
இந்து சமயத்தில் பல வகையான தர்மங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் பக்தி யோகம், கர்ம யோகம், இராஜ யோகம், மற்றும் ஞான யோகம் ஆகியன முக்கியமானவை. இந்த யோகங்கள் இந்து மதத்தின் இரண்டு முக்கியமான புத்தகங்களான பகவத் கீதை மற்றும் யோக சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வாழ்வின் நான்கு இலக்குகள்

இந்துக்கள் கொள்ள வேண்டிய தலையாய நான்கு இலக்குகளாக அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை கருதப்படுகின்றன. அனைத்து உயிர்களும் இளமையில் பொருள், இன்பம் (உடல், உள்ளம், மற்றும் உணர்வு) ஆகியவற்றைத் தேடுதல் இயல்பு என்றும், மனம் முதிர்வடைந்தவுடன் இவற்றின் நெறிசார்ந்த தேடுதலை உயர்கட்டமைப்பான அறத்தின்கீழ் முறைப்படுத்துவரென்றும் கூறப்படுகிறது. இருந்தும், வாழ்வில் நிலையான யாவுங்கடந்த மகிழ்நிலையைத் தருவது வீடு, முக்தி, உய்வு, கடைத்தேற்றம் என்று பலவாறாக அழைக்கப்படும் பிறப்பு இறப்பற்ற விடுதலை நிலையேயென கூறப்பட்டுள்ளது. இந்த நான்கு இலக்குகளையும் அறம், வீடு என்ற கரைகளுக்கு இடையில் ஓடும் இன்பம், பொருள் என்ற நதி எனவும் சிலர் நோக்குவர்.

இறை தொண்டு / சமூக சேவை
இறை தொண்டு என்பது கோவில்களைக் காப்பாற்றி அக்கோவில்களில் குடியிருக்கும் கடவுளுக்கான வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வதும், கோவில்கள் இல்லாத ஊர்களில் கோவில்கள் கட்டி வழிபாடுகள் ஏற்பாடு செய்வதும், பல ஊர்களில் சேதப்பட்டிருக்கும் கோவில்களை புனரமைத்து வழிபாடு முறைகளைத் தொடரச்செய்வதும் ஆகும். மக்கள் சேவை என்பது, ஏழை மக்களுக்கும், இல்லாத/இயலாத மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், நோய்க்கு மருந்து, கல்விச்செல்வம் ஆகியனவற்றை அளிப்பதும் ஆகும்.

விஷ்ணுவின் அவதாரங்கள்

1.மச்ச அவதாரம்
மச்ச அவதாரம் வைணவ சமயக் கடவுள் திருமாலின் முதல் அவதாரம். மச்சம் என்பது சமசுகிருத மொழியில் மீன் எனப்பொருள் தரும். இந்த அவதாரத்தில் திருமால் நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவருபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.

இதில் மச்சாவதாரத் தோற்றம், திருமால் நீர்ப்பிரளயத்திலிருந்து உலகைக் காத்தமை, பிரம சிருட்டி, திரிபுர வதம், தாரகாசுரனுடன் போர், பார்வதி சிவபெருமானை மணத்தல், கந்தனாகிய முருகனின் தோற்றம் ஆகியவற்றை உணர்த்துகிறது. (அபிதான சிந்தாமணி - பக் 1236)
2. கூர்ம அவதாரம்
கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி திருமால் எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும். இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).

திருப்பாற்கடலை அசுரரும் தேவரும் மந்திரமேருவை மத்தாக வைத்துக் கடைகையில் அடியில் பிடிமானத்திற்காகத் திருமால் ஆமை உரு எடுத்து மத்திற்குப் பிடிமானமாக இருந்தார். (பாகவதம்- கூர்ம புராணம்)

3. வராக அவதாரம்
வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.

4.நரசிம்ம அவதாரம்

நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார்.தன் பரமபக்தனான பிரகலாதனை இரட்சித்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்பது ஐதிகம்.


5.வாமன அவதாரம்
வாமன அவதாரம் என்பது மாலியத்தார் (வைணவர்கள்) முழுமுதற் கடவுளாகக் கருதும் திருமால் (விஷ்ணு) நில உலகில் தோன்றிய ஐந்தாம் அவதாரம் ஆகும். அவதாரம் என்றால் இறைவன் மனித அல்லது வேறு ஒரு உருவில் இவ்வுலகில் பிறத்தல். இதன் நோக்கம் தருமத்தை நிலைநாட்டலாகும். இந்த அவதாரத்தில் இவர் கேரளத்தில் பிராமண குலத்தில் பிறந்தார். இவர் குள்ளமான உருவம் கொண்டவராய் இருந்தார். இவர் உபேந்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
6.பரசுராமர்
பரசுராமர் அல்லது பரசுராம பார்கவர் என்பவர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். கடல் கொந்தளித்த போது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார் என்பது தொன்நம்பிக்கை.

7.பலராமர்இந்து மதத்தில் பலராமர் கிருஷ்ணரின் அண்ணன் ஆவார். இவர் பலதேவர், பலபத்ரர், ஹலாயுதர் என்றும் அழைக்கப்படுகிறார். வைணவத்திலும் தென்னிந்திய இந்து புராணங்களிலும் பலராமர் விஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்படுகிறார். எனினும் இவர் விஷ்ணு படுத்திருக்கும் ஆதி சேஷனின் வடிவம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவர் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்ததாகக் கூறப்படுகிறது.

8.இராமர்
இராமர் இந்துக் கடவுள்களுள் ஒருவராவார். விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

கம்ப இராமாயணம்



கம்பரால் தமிழில் இயற்றப்பட்ட இராமாயணம் கம்ப இராமாயணம் ஆகும். இது சிறந்ததோர் இலக்கியமாகும்.






இந்து சமய இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் இவரது வாழ்க்கையை விவரிப்பதாக அமைந்துள்ளது. இராமாயணத்தில் சீதை இவரது மனைவி. இவர் இலட்சுமியின் அவதாரமாக கருதப்படுகிறார்.
இராயணம்
தசரதன் என்ற அரசன் அயோத்தியை அரசாண்டு வந்தான். அவனுக்கு கோசலை, கைகேயி, சுமத்திரை என்ற மூன்று மனைவியர் உண்டு. எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். யாகங்கள் பல செய்தான். அதன் பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர்.


இராமர் பிறந்தார்
தசரத‌னி‌ன் முதல் மனைவி கோசலை ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் இராமராகப் பிறந்தார். இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில் பரதன் பிறந்தான். மூன்றாம் மனைவி சுமத்திரை வயிற்றில் இலக்குவன், சத்துருக்கன் என்ற இருவரும் பிறந்தனர்.
தசரதன் தம் மக்கள் நால்வரையும் குலகுருவாகிய வசிட்டரிடம் கல்வி கற்கச் செய்தான். அவர்கள் நால்வரும் கல்வி கேள்விகளிலும், போர்ப்பயிற்சிகளிலும் சிறந்து விளங்கினர்.
தாடகை வதம்
விசுவாமித்திரர் என்ற முனிவர் காட்டில் வேள்வி செய்தார். தாடகை முதலான அரக்கர்கள் அவர் வேள்விக்கு இடையூறு செய்தனர். விசுவாமித்திரர் தசரதனிடம் வந்தார். தம் வேள்வியைக் காக்கும் பொருட்டு இராமனை அனுப்புமாறு கேட்டார். தசரதர் இராமனுடன் இலக்குவனையும் அனுப்பி வைத்தான். இராமரும், இலக்குவனும் தாடகை முதலாய அரக்கர்களை வதம் செய்து முனிவர் வேள்வியைக் காத்தனர். வேள்வியும் சிறந்த முறையில் முடிந்தது.


சீதை திருமணம்
பிறகு விசுவாமித்திரர் இராமனையும் இலக்குவனையும் அழைத்துக் கொண்டு மிதிலை சென்றார். சனகன் என்ற மன்னன் மிதிலையை ஆண்டுவந்தான். அவனுக்குச் சீதை என்ற ஓர் அழகிய மகள் இருந்தாள். தம்மிடம் உள்ள வில்லை வளைப்பவருக்குச் சீதையைத் திருமணம் செய்து கொடுப்பதாக அவன் அறிவித்திருந்தான்.


மன்னர்கள் பலர் அவ்வில்லை வளைக்க முயன்றனர், முடியவில்லை. இராமர் அவ்வில்லை வளைத்து முறித்தார். சனகன் மகிழ்ந்து தன் மகள் சீதையை இராமருக்கு திருமணம் செய்து கொடுத்தான். திருமணம் முடிந்து வந்த இராமருக்கு முடிசூட்ட எண்ணினான் தசரதன். அதற்கு நாளும் குறித்து விட்டான். எல்லா ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன.


கூனி சதி
கைகேயியின் தாதி கூனி ஆவாள். அவள் கைகேயியின் மகன் பரதனுக்கு முடிசூட்ட எண்ணினா‌ள். அதனை கைகேயியிடம் தெரிவித்தாள். முதலில் கைகேயி ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு பலவிதமாகச் சொல்லிக் கூனி கைகேயியின் மனத்தை மாற்றிவிட்டாள். கைகேயி, தசரதனிடம் பிடிவாதம் செய்து தம்மகன் பரதன் நாடாளும்படியாகவும், இராமர் பதினான்கு ஆண்டு காடாளும்படியாகவும் உறுதிமொழி வாங்கி விட்டாள். தந்தை சொற்படி இராமர் உடனே காட்டிற்குச் சென்றார். சீதையும், இலக்குவனும் உடன் சென்றனர். அதனை அறியாத தசரதன் உயிர் துறந்தான்.
கேகய நாட்டிற்குச் சென்ற பரதன் அப்பொழுதுதான் திரும்பி வந்தான். வந்தவுடன் நடந்ததை அறிந்தான். மிகவும் வருந்தினான். தன் தாயை வெறுத்தான். தந்தைக்குரிய ஈமக்கடன்களைச் செய்தான். உடனே இராமரை அழைத்து வரக் காட்டிற்குச் சென்றான்.
காட்டிற்குச் சென்ற பரதன், இராமரைக் கண்டு வணங்கினான். திரும்பி வந்து நாடாளும்படி வேண்டினான். தந்தை சொற்படி பதினான்கு ஆண்டு கழித்து வருவதாகவும், அது வரை பரதனை நாட்டை ஆளும்படி இராமர் கூறினார். பரதன் இராமரின் பாதுகைகளைப் பெற்று வந்து, அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தான்.


இராவணன்
இராவணன் என்னும் அரக்கன் இலங்கையை ஆண்டு வந்தான். அவன் தங்கை சூர்ப்பனகை ஆவாள். அவள் காட்டில் வாழும் இராம இலக்குவனரைக் கண்டாள். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தினாள். இலக்குவன் கோபம் கொண்டு சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து எறிந்தான்.
சூர்ப்பனகை அழுதுகொண்டு இராவணனிடம் சென்றாள். நடந்த செய்திகளைச் சொல்லவில்லை. `இராமன் மனைவி சீதையை உனக்காக தூக்கி வர முயன்றேன். அவன் தம்பி இலக்குவன் என் மூக்கை அறுத்துவிட்டான்' என்று கூறி அழுதாள். இராவணன், சூர்ப்பனகையைச் சமாதானப்படுத்தினான். அவர்களைத் தண்டிப்பதாகவும் கூறினான்.
மாயமான்
இராவணன், மாரீசன் என்பவனை மாயமானாக அனுப்பி இராம இலக்குவரைத் தனியாகப் பிரித்தான். பிறகு, சீதை தனித்து இருப்பதை அறிந்து பர்ணசாலையோடு பெயர்த்துச் சீதையை தூக்கிக் கொண்டு சென்றான். வழியில் கழுகு அரசனாகிய சடாயு தடுத்தான். அவனை வெட்டி வீழ்த்தி விட்டு இராவணன் இலங்கையில் உள்ள அசோக வனத்தில் சீதையை மறைத்து வைத்தான்.


திரும்பி வந்த இராம, இலக்குவர் சீதையைக் காணாமல் தேடினர். வருந்தி வந்து கொண்டிருக்கும்பொழுது குற்றுயிராய்க் கிடந்த சடாயு என்ற கழுகு அரசன் உண்மையைக் கூறிவிட்டு உயிர் துறந்தான். தொடர்ந்து தேடி வரும்பொழுது சுக்ரீவனைச் சந்தித்தனர்.
சுக்ரீவனுக்குப் பட்டம்
சுக்ரீவன் குரங்குகளுக்கு அரசனாகிய வாலியின் தம்பி ஆவான். வாலி தன்னை துரத்தி விட்டதாகக் கூறினான் சுக்ரீவன். உடனே இராமர் வாலியைக் கொன்று சுக்ரீவனுக்குப் பட்டம் கட்டினார். பிறகு சுக்ரீவனும் அனுமாரும் குரங்குகளும், இராமருக்குத் துணையாக வந்தனர்.
இலங்கையில் சீதை இருக்கும் இடத்தை அறிந்து வருமாறு, இராமர் அனுமாரை அனுப்பினார். உடனே அனுமார் கடலைத்தாண்டி இலங்கையை அடைந்தார். எங்கும் தேடினார். கடைசியாக அசோக வனத்தில் சீதை இருப்பதைக் கண்டார். இராமர் கூறிய செய்திகளைக் கூறிவிட்டு திரும்பி வந்தார். இராமரிட‌ம் வந்து பணிவுடன் சீதை இருக்கும் இடத்தைத் தெரிவித்தார்.
அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்லவேண்டும். எனவே குரங்குகள் கல்லையும் மரத்தையும் கொண்டு கடலில் அணைகட்டின. அவ்வணையின் வழியாக அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்றனர்.
வீடணன்
இராவணனுக்குக் கும்பகருணன், வீடணன் என்ற இரண்டு தம்பியர் உண்டு. அவருள் வீடணன் நல்ல அறிஞன். அவன் இராவணனுக்குப் பல அறிவுரைகள் கூறினான். சீதையைக் கொண்டு போய்விட்டு விடும்படியும் சமாதானமாக வாழும்படியும் கூறினான். இராவணன் மறுத்துவிட்டான். எனவே, வீடணன், இராவணனை விட்டு விட்டு இராமர் பக்கம் வந்து சேர்ந்து கொண்டான்.
பிறகு, இராமரின் படைகளுக்கும், இராவணனின் படைகளுக்கும் போர் தொடங்கியது. போரில் இராவணன் தம்பி கும்பகர்ணன் மாண்டான். இராவணன் மகன் இந்திரசித்தும் மாண்டான். படைவீரர்கள் பலரும் மாண்டனர்.
இராவணன் மரணம்


கடைசியாக இராமருக்கும் இராவணனுக்கும் போர் கடுமையாக நடந்தது. முடிவில் இராமர் : இராவணனைக் கொன்றார். அதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரித்தனர். இலங்கைக்கு அரசனாக வீடணனுக்குப் பட்டம் கட்டினார் இராமர்.
இராமர் சீதையை மீட்டுக் கொண்டு அயோத்திக்குத் திரும்பி வந்தார். பரதன் இராமரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தான். ராமர் அயோத்திக்கு அரசராக முடிசூட்டிக்கொண்டார். தம்பியர் துணையுடன் சிறந்த முறையில் நாடாண்டார். மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.


9.கிருஷ்ணர்
கிருஷ்ணர் இந்து சமய கடவுளாவார். இவர் விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள். இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். வருடந்தோறும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நந்நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப் படுகிறது.

கிருஷ்ணரின் கதை

இளமை
வசுதேவர், தேவகி தம்பதியினருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவில் கிருஷ்ணர் பிறந்தார். கொடுமைக்கார அரசனான இவரது மாமன் கம்சனிடமிருந்து காப்பதற்காக இவர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனைக்கு அப்பால் இருந்த பிருந்தாவனத்தில் யாதவ குலத்தினரான நந்தகோபர், யசோதையிடம் ஒப்படைத்தார். குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார்.
வாலிபம்
இள வயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் தெய்வீகக் காதல் புரிந்தார்.
வாலிப வயதை அடைந்தவுடன் மதுரா சென்று கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிரசேனரிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார். தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜூனனுடன் நட்பு கொண்டார். பின்னர் துவாரகை எனும் ஊருக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.
கீதை
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில் தனது சேனையை கௌரவரர்களிடம் கொடுத்துவிட்டு தான் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார். இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.
முடிவு
பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார். ஒரு நாள் காட்டில் ஒரு வேடனின் அம்பு தாக்கி காலமானார். யாதவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்களை அழித்துக்கொண்டனர். துவாரகை நகரமும் மூழ்கியது.
சமீபத்திய ஆராய்ச்சி
குஜராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது. அது மகாபாரத்திலும் பாகவத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது, மேலும் அங்கே கண்டெடுக்கப் பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
10.கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.





























Tuesday, February 15, 2011

ராமாயாணத்திலிருந்து கற்க வேண்டியவை

ராமாயாணத்திலிருந்து கற்க வேண்டியவை

ராமன்
தந்தை சொல் தட்டாதவன். சித்தியையும் தாயாக மதித்து நடப்பவன். ஒரு மனைவி சட்ட-திட்டங்கள் இல்லாத காலத்திலும் ஒரு பெண்ணுடன் வாழ விழைந்தவன். படகோட்டியான குகனை மார்போடு அணைத்து இன்றோடு ஐயவரானோம் என்று சொல்லி ஏற்ற தாழ்வு மனிதருள் இல்லை என்று காட்டியவன். மக்கள் சந்தேகம் கொண்டு தன் மனைவியை தவறாக பேசிவிடுவார்களோ என்று அவளை தீக்குளிக்க சொன்னவன். தன் மனைவி தவறு இழைக்காதவள் அதனால் அதிலிருந்து மீண்டு வருவாள் என்று நம்பிக்கை கொண்டவன்.
சீதை
வசதியாக வாழ்ந்திருந்தாலும் கணவன் இருக்கும் இடம் சொர்க்கமாக நினைத்து காட்டுக்கு பின் தொடர்ந்தவள்.
தசரதன்பல மனைவிகள் கொண்டவன். கதை எழுதப்பட்ட காலத்தை கொண்டு பார்த்தால் ஒரு மனைவி சட்டம் இல்லாதிருந்திருக்கும். ஒரு மனைவி சட்டம் சமீபத்தில் வந்ததது தான். தன் மகன் மேல் அதிக பாசம் கொண்டிருந்தவன். தன் மனைவியிடம் செய்து கொடுத்த சத்தியம் காக்க உயிர் துறந்தவன்.
லக்ஷமணன்
சகோதர பாசம். சகோதர மதிப்பு. தம்பியுடையான படைக்கு அஞ்சான். அண்ணி தாயுக்கு சமம் என்பதை உணர்த்தியவன். இதற்கு நேர் எதிர் வாலி.தம்பி மனைவியை அபகரித்தவன்.
பரதன்
தாய் செய்தது தவறு என்று எடுத்துக் காட்டியவன். அண்ணனுடைய நாற்காலிக்கு ஆசை படாதவன்.

கைகேயி - முதல் பாதி
தன் கணவனுடைய இன்னொரு மனைவிக்கு பிறந்தவனாக இருந்தாலும் ராமனை தன் மகன் போல் பாவித்தவள். இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டால் இன்று சித்தியரால் முதல் மனைவி பிள்ளைகளுக்கு வரும் கஷ்டம் வராது. இரண்டாவது பாதி கைகேயி படி நடக்கக்கூடாது என்பதற்காக ஒரு நேர்மறையான பாத்திரம்.
கூடவே இருந்தவர்கள் என்றாலும் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டால் ஆபத்து தான் என்பதை உணர்த்திய பாத்திரம்.
கூனி-மந்தரை
யார் வீட்டில் உண்கிறோமோ அவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது
சூர்பனகை
திருமணமான ஆணின் மீது ஆசை கொள்ளக் கூடாத
ராவணன்
இசையில் தேர்ந்தவன். தெய்வ பக்தி கொண்டவன். பிறர் மனை நோக்குதல் பாவம் என்று உணர்த்த ஒரு பாத்திரம். அப்படியே அவளை கடத்தி வந்த தப்பு செய்தாலும் கடைசி வரை அவளை தொடாமல் கண்ணியம் காத்தவன். பாடம் - ஒரு பெண்ணை அவள் விருப்பம் இல்லாமல் தொடக்கூடாது. ஒரு ஹீரோ கதையில் இருந்தால் ஒரு வில்லனும் உண்டு. அதற்கு அடிவகுத்தவை இக்கதைகள். இன்னும் சினிமாவில் இதே தொடர்கின்றன. ராமாயணத்தில் வந்த ஒவ்வொரு வரியையும் வைத்து ஆயிரம் படங்கள் வந்தாயிற்று.
மண்டோதரி
கணவன் தவறான பாதையில் சென்றாலும் கடைசி வரை எப்படியாவது அவனை நேர்வழிக்கு கொண்டு வர முடியும் என்று நம்பியவள். அதில் தோற்று பாடம் கற்பித்தவள்.

கும்பகர்ணன்

தவறே செய்திருந்தாலும் சகோதரன் பக்கம் நின்றவன். சகோரத்துவத்தில் இது ஒரு வகை.லக்ஷமணனுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை.
விபீஷணன்
தவறே செய்திருந்தாலும் தர்மத்தின் பக்கம் நின்றவன். சகோதரத்தில் இதுவும் ஒரு வகை தான். இது துரோகமா என்று வாதிட முடியும். ஆனால் கடைசியில் ராவணன் குலம் தழைத்தது இவனால் தான். தர்மத்தின் பக்கம் நின்றதால் இவன் பரதனுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை.
வாலி
தம்பி மனைவியை தன் மனைவியாக எண்ணுவது தவறு.
சுக்ரீவன்
அண்ணனால் தவறாக எண்ணப்பட்ட ஒரு பாத்திரம். அண்ணன் மகனை இளவரசனாக்கி சகல மரியாதையோடு நடத்தியவன்.

அனுமான்
தலைவன் - தொண்டனுக்கு இடையில் இருக்கும் ஒரு அற்புத பந்தம்.சேவையில் உயர்ந்தவன். தன் தலைவன் மீது அசரா நம்பிக்கை கொண்டவன். தன் தலைவனுக்காக எதையும் செய்யத் துணிந்தவன். எதிலும் தன் தலைவனையே கண்டவன்.
புஷ்பகவிமானம்
இன்றைய விமானத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வித்திட்ட ஒரு கற்பனை கதை.
வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றது
நல்ல பட்டிமன்ற தலைப்பு. வாலி ஒரு குரங்கு. ராமன் மனிதன். வேட்டையில் எந்த ஒரு சட்டத்தையும் மீறவில்லை ராமன். ராமன் ஒரு ஹீரோ என்பதால் மறைந்திருந்து கொன்றது சற்று ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம்.
ராமாயணத்தில் வரும் பல துணைகதைகளும் நல்ல விஷயங்களை சொல்லவே முயன்றிருக்கின்றன.
இறைவனை நம்பாதவர்களுக்கு - ராமாயணத்தை நல்ல கதையாக கருதலாம். அதில் சொன்ன நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாம்.
காலம் காலமாக மக்கள் மனதில் நின்றுவிட்ட கதை. கதையில் அடிப்படை கோளாறு இருந்தால் என்றோ மறைந்து போயிருக்கும். நமக்கு பல சந்தேகங்கள் தோன்றலாம். ஆனால் மூலக்கதை அறியாமல் கேட்டதை வைத்த இந்த கதை வளர்ந்திருக்கிறது.



கடவுள் நம்மோடு இருக்கிறார்......

கடவுள் நம்மோடு இருக்கிறார்......
முனிவர் ஒருவர் ஆசிரமம் ஒன்றை நிர்வகித்து வந்தார்.

மிகப் பழமையான ஆசிரமம் அது. ஒரு காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்தது அது. பக்தர்கள் எப்போதும் நிரம்பி வழிவார்கள். உலகமெங்கும் அந்த ஆசிரமத்துக்கு நல்ல பெயர் இருந்தது.
ஆனால் கொஞ்ச காலமாய் ஆசிரமம் பொலிவிழக்கத் துவங்கியதை உணர்ந்தார் முனிவர். காரணம், சீடர்களுக்குள் ஒற்றுமை இல்லை. நூற்றுக்கணக்கான சீடர்கள் அந்த ஆசிரமத்தில் உண்டு. தான் என்கிற கர்வமும், போட்டி மனப்பான்மையும் அவர்களுக்குள் நிரம்பி, அடிக்கடி சீடர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள்.
முனிவர் மிகவும் நொந்து போனார். சஞ்சலமடைந்தார். இப்படியே சென்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் ஆசிரமம் சீர் குலைந்து விடுமோ என்ற கவலை அவரை வதைத்தது.
இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவது எப்படி என்று யோசித்தார். அப்போது முனிவரின் பால்ய கால நண்பரான சகல கலைகளையும் கற்ற இன்னொரு முனிவ்ர், வட நாட்டிலிருந்து அங்கே வருகை புரிந்தார். இருவரும் அளவளாவினார்கள்.
வட நாட்டு முனிவர் , ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தார். அத்தனை சீடர்கள் முன்னிலையில் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்.
அதிலே ஓர் ஆச்சர்யமான விஷயத்தை அவர் சொன்னார்.
‘‘இந்த ஆசிரமம் பற்றி ரகசியம் ஒன்றை நான் சொல்லப் போகிறேன். அதைச் சொல்வதற்காகத்தான் கயிலையிலிருந்து இங்கே நான் வந்திருக்கிறேன். கடவுள் சிவ பெருமான் , கயிலையில் என்னிடம் அசரீரியாகப் பேசினார். அவர் சொன்னது இதுதான். இந்த ஆசிரமத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான சீடர்களில் ஒருவராக மனித உருவில் தானும் இருப்பதாகச் சிவபெருமான் என்னிடம் கூறினார். அந்த அற்புத தகவலைச் சொல்வதற்காகவே நான் இங்கே வந்தேன்.சிவனாக இங்கேயிருக்கும் சீடர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை. அந்த சக்தி என்னிடம் இல்லை. அதனால் பொதுவாக அத்தனை சீடர்களையும் நான் வணங்குகிறேன்.’’ என்று கண்களில் நீர் கசிய கை கூப்பினார் வடநாட்டு முனிவர்.
மறுநாளிலேயே ஆசிரமத்தில் மாற்றம் தெரிந்தது. சீடர்கள் தங்களுக்குள் இருந்த சச்சரவை மூட்டை கட்டி வீசினார்கள். ஒவ்வொருவரும் மற்றவரை மரியாதையாகப் பார்த்தார்கள். மற்றவரின் திறமையை மதித்தார்கள். இதில் யார் சிவபெருமான் என்று சரியாகத் தெரியாததால் அனைவரையும் அன்புடன் நோக்கினார்கள். பணிவுடன் நடந்து கொண்டார்கள்.
ஆசிரமத்தின் சங்கடங்கள் தீர்ந்தன. மீண்டும் ஆசிரமத்தின் புகழ் பரவத் துவங்கியது.
இரண்டு முனிவர்களும் பேசி வைத்துக் கொண்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கலாம். அதைப் பற்றி நமக்கு என்ன கவலை? ஆனால் நான் சொல்ல வந்தது வேறு.
நம்மைச் சுற்றியும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். கடவுள் மனித உருவத்தில் வருபவர் என்பதால், நம்மைச் சுற்றியுள்ளவர்களில் ஒருவராக கடவுளும் இருக்கக் கூடும் என்பதை உணருங்கள். அனைவரையும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்துங்கள்.
நீங்கள் கடவுளைக் கண்டுபிடிக்கிறீர்களோ இல்லையோ, மற்றவர்கள் உங்களை மதிப்புடன் ஒரு கடவுள் போன்று நடத்துவதை உணர்வீர்கள்.உங்களைச் சுற்றி அன்பு மயமாவதைப் புரிந்து கொள்வீர்கள். இது நிச்சயம்.

செய்து பார்க்கிறீர்களா மனிதக் கடவுளே!



இறைவன் எங்கு?

இறைவன் எங்கு
இறைவன் கோயிலில் இருக்கிறான், புண்ணிய தீர்த்தங்களில் இருக்கிறான், புனித மலைகளில் இருக்கிறான், மசூதியில் இருக்கிறான், தேவாலையத்தில் இருக்கிறான் என்றெல்லாம் தேடிப் போகும் மக்களில் பெரும்பாலானோர் இறைவன் தங்கள் மனதின் உள்ளே இருக்கிறானா என்று தேடிப் பார்ப்பது போல் தெரியவில்லை. காரணம் உள்ளே நிரப்பியிருக்கும் அந்தக் குப்பைகூளங்களுக்கு இடையில் இறைவன் எங்கே தங்கியிருக்கப் போகிறான் என்ற அறிவார்ந்த சந்தேகமாக இருக்கலாம்.

வீட்டைத் தினமும் கூட்டித் துடைக்கிறோம். அணியும் ஆடைகளைத் துவைத்து சுத்தம் செய்து கொள்கிறோம். தினமும் குளிக்கிறோம். இதெல்லாம் செய்வது கூட அடுத்தவர் பார்வைக்காகவே என்று எனக்குத் தோன்றுவதுண்டு. உள்ளத்தை யாரும் பார்ப்பதில்லை என்பதால் அதை பெரும்பாலோர் குப்பையாகவே வைத்திருக்கிறோம்.
அகங்காரம், பொறாமை, பேராசை, கோபம், வெறுப்பு என்று எத்தனையோ அழுக்குகள் மனதிற்குள் இருக்கிறது. அதைத் துடைத்து எடுப்பதற்குப் பதிலாக அழுக்கின் மேல் அழுக்காக சேர்த்துக் கொண்டே போகிறோம். எத்தனை கால அழுக்குகளைச் சேர்த்து வைத்திருக்கிறோம் என்று ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். நம் எல்லாத் துயரங்களுக்கும் இந்த அழுக்குகள் தான் காரணமாக இருக்கின்றது. ஆனால் அதை உணர்வதற்குக் கூட உள்ளத்தில் ஒரு ஊசிமுனை இடமாவது சுத்தமாக இருக்க வேண்டும். அதுவும் இல்லாதவர்களுக்கு இந்த உண்மை புலப்படாது.
இந்த அழுக்குகளைத் துடைத்தெடுக்க என்ன தான் வழி? தியானம், நல்ல நூல்களைப் படித்தல், மேலோரின் நட்பு, சத்சங்கம், ஆத்மவிசாரம், சுயநலமில்லாத நற்செயல்கள் என்று எத்தனையோ வழிகளைப் பெரியோர்கள் சொல்கிறார்கள். உங்களுக்குப் பொருத்தமான, உங்கள் இயல்பிற்குத் ஏதாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுங்கள். நாட்பட்ட அழுக்குகளைக் களைவது அத்தனை சுலபமல்ல.
ஆனால் உங்கள் மனத்தை உங்களால் தூய்மைப்படுத்தி வைக்க முடிந்தால் இறைவனைத் தேடி நீங்கள் கோயில்களுக்குப் போக வேண்டாம். உங்களைத் தேடி இறைவன் வருவது உறுதி.
இப்போது உள்ளே எட்டிப்பார்த்து சொல்லுங்கள். இறைவன் உள்ளே இருக்கிறானா? இல்லையென்றால் உள்ளத்தை சுத்தம் செய்து இறைவனை வரவழையுங்கள். அந்த இறையானுபவத்தை, அதனால் ஏற்படும் சச்சிதானந்தத்தை உணருங்கள். பின் ஒரு போதும் அந்த அழுக்குகள் உங்களை நெருங்குவதை நீங்கள் சகிக்க மாட்டீர்கள்..



முழுநீறுபூசியமுனிவர் புராணம்

முழுநீறுபூசியமுனிவர் புராணம்


கற்பமநு கற்பமுப கற்ப மென்றிக்
கடனணைந்த திருநீறுங் கனற்க ணீறும்
பொற்புடைய வரனாசா னங்கி யாறு
பொல்லாத பூமியெதிர் புனைத லாகா
வற்புதமாந் திரிபுண்ட மதியின் பாதி
யகிலாங்கத் தீபமிகு மழகார் வட்ட
முற்பொலிய வுடலணியு முறையா ரன்றோ
முழுநீறு பூசவல்ல முனிவர் தாமே.

உற்பத்தியினாலே கற்பம் அநுகற்பம் உபகற்பம் என மூவகைப்படும். விபூதியையாயினும், நித்தியாக்கினியில் எடுத்த விபூதியையாயினும் சிவபெருமான் முன்னும் அக்கினிமுன்னும் குருமுன்னும் அசுத்தநிலத்தும் வழி நடக்கும்போதும் பூசாது, உத்தூளனம் திரிபுண்டரம் பிறைவடிவம் முக்கோணம் வட்டமாகச் சிவாகமவிதிப்படி அன்போடு பூசுகின்றவர்கள் முழுநீறுபூசிய முனிவரென்று சொல்லப்படுவார்கள்.



முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார் புராணம்

முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார் புராணம்


செப்பலருந் தவமுடைய செம்மை யாளர்
சிறுகாலை மலர்வாவி திகழ மூழ்கி
யொப்பிறிரு நீறணிந்து நியதி யாற்றி
யோவாமே யைந்தெழுத்து முரைத்து மேன்மை
தப்பில்சிவா கமவிதியா லின்பா லன்பாந்
தன்மையா னன்மையாந் தகையா ரென்று
முப்பொழுதுந் திருமேனி தீண்ட வல்ல
முறைமையார் பிறவிதெறுந் திறமை யாரே.

சிருட்டிகாலத்திலே அநாதிசைவராகிய சதாசிவமூர்த்தியுடைய சத்தியோசாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என்னும் பஞ்சவத்திரத்தினின்றுந் தோன்றிய கெள்சிகர், காசிபர், பாரத்துவாசர், கெளதமர், அகத்தியர் என்னும் பஞ்சருக்ஷி கோத்திரத்திலே ஜனித்த சிவப்பிராமணர்கள் ஆதிசைவரென்று சொல்லப்படுவார்கள். அவர்களுள்ளே சமய தீக்ஷை விசேஷதீக்ஷை, நிருவாணதீக்ஷை ஆசாரியாபிஷேகங்களைப் பெற்றவர்களே சர்வாதிகாரிகளென்றும், உத்தமோத்தம சிவாசாரியர்களென்றும், சிவாகமங்கள் செப்பும், பரார்த்தப் பிரதிட்டை பரார்த்த பூசைகள் செய்தற்கு அவர்களே உரியவர்கள் மற்றையர்கள் உரியர்களல்லர். அதனால் அவர்களே சிவாகம விற்பன்னர்களாகிக் கிருத கிருத்தியர்களாய் முப்பொழுதினுஞ் சிவலிங்கத்தை அருச்சிப்பார்கள். ஆதலால் அவர்களே முப்பொழுதுந் திருமேனி தீண்டுவாரென்று சொல்லப்படுவார்கள்.



திருவாரூர்ப்பிறந்தார் புராணம்

திருவாரூர்ப்பிறந்தார் புராணம்


பொங்கியமா தவமுடையார் வருண நான்கிற்
பொருந்தினர்க ளல்லாத புகழி னுள்ளார்
சங்கையிலா வருந்தவமுன் புரிந்தா ரிங்குச்
சார்விலா ரிறைவனருள் சார்த லாலே
கங்கைவாழ் சடைமுடியா னருளை நீங்காக்
கணநாத ரெனவாழுங் கருத்தார் கன்னிச்
செங்கண்வரால் வளர்வாவி திகழு மாரூர்ச்
சிறந்துளா ரெமையாளப் பிறந்து ளாரே.

பூர்வஜன்மத்திலே செய்த புண்ணியத்தினாலே திருவாரூரென்னுஞ் சிவஸ்தலத்திலே சைவமரபினராய்ப் பிறந்தவர்கள் பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நான்குவருணத்தாராயினும் சங்கரசாதியாராயினும், பரமசிவனுடைய திருவருளை அடைதலால், சிவகணநாதர்களாய் இருப்பார்கள். திருவாரூர்ப் பிறந்தாரெல்லாருஞ் சிவகணநாதர்கள் என்று சிவபெருமானே நமிநந்தியடிகணாயனாருக்கு அருளிச்செய்தனர். அந்நாயனாரும் அவர்களெல்லாருஞ் சிவகணநாத வடிவினராய்த் தோன்றக் கண்டனர்.



சித்தத்தைச்சிவன்பாலேவைத்தார் புராணம்

சித்தத்தைச்சிவன்பாலேவைத்தார் புராணம்


பாரணவும் புலனந்தக் கரண மொன்றும்
படராமே நடுநாடி பயிலு நாதங்
காரணபங் கயன்முதலா மைவர் வாழ்வுங்
கழியுநெறி வழிபடவுங் கருதி மேலைப்
பூரணமெய்ப் பரஞ்சோதிப் பொலிவு நோக்கிப்
புணர்ந்தணைந்த சிவாநுபவ போக மேவுஞ்
சீரணவு மவரன்றோ வெம்மை யாளுஞ்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்து ளாரே.

உச்சுவாசம் நிச்சுவாசம் இரண்டையும் அடக்கி, சுழுமுனா மார்க்கத்திலே பிராணவாயுவை நிறுத்தி, விஷயங்களின் வழி மனசைப் போகவொட்டாமல் திருப்பி, ஒரு குறிப்பிலே நிறுத்தி, மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்கினை யென்னும் ஆறாதாரங்களின் அந்தர்மாதிருகாக் கிரமத்தை அறிந்து, அவ்வவ்வாதாரங்களின் அதிதேவதைகளைத் தியானித்து, அவ்வாறாதாரங்களினும் அசபாசத்தி சிவான் மிகையாய் நிற்கும் முறைமையைப் பார்த்து, மூலாதாரந் தொடங்கி விநாயகர் முதலாகிய தேவதைகளைப்பொருந்தி அபிமுகம் பண்ணிக்கொண்டு ஆறாதாரத்துக்கும் மேலாகிய பிரமரந்திரமளவும் அசபையுடன் சென்றணைந்து, அந்தப் பிரமரந்திரத்திலே அதோ முகமாய்ச் சகஸ்ரதளமாய் இருக்கிற தாமரை முகையைச் சோதி சோதிபதோச்சாரணத்தாலே உதிக்குஞ் சிவார்க்கனாலே அலரச்செய்து, அந்தத் தாமரைப் பூவின் கேசராக்கிரத்திலே உள்ள சந்திரமண்டலத்தை ஆகுஞ்சனஞ்செய்தலினாலே மூலாக்கினியை அக்கினிபீசாக்கர உச்சாரணத்தினாலே எழுப்பி, நாடிசக்கரத்தைப் பேதித்து, அவ்வக்கினியினாலே சந்திரமண்டலத்தை இளகப்பண்ணி, அந்த அமிர்தத்தைச் சர்வநாடிவழியாக நிரப்பி, அவ்விடத்தில் உண்டாகிய சுகோதயத்தில் அந்தமயமான ஞானாமிதாவத்தையை அடைந்து நின்று, சோம சூரியாக்கினிப்பிரகாசாதிகளாகிய பிரத்தியேகப் பிரகாசங்ளெல்லாஞ் சூரியோதயத்திலே நக்ஷத்திராதிப்பிரகாசங்கள் அடங்கினாற்போலத் தன்னிடத் தடங்கச் சர்வதோமுகமாய் ஸ்வய பரப்பிரகாசமாய் இருக்கின்ற பூரணப்பிரகாசத்தைப் பாவிக்கின்றவர்களே சித்தத்தைச் சிவன்பாலே வைத்தாரென்று சொல்லப்படுவார்கள்.



பரமனையேபாடுவார் புராணம்

பரமனையேபாடுவார் புராணம்


அருந்தமிழால் வடகலையா லருளா லொன்றா
லறிவுநெறி மருவுமருங் கவிகள் யாவுந்
திருந்தியவா னவர்பணிய மன்று ளாடுந்
தேவர்பிரான் கழலிணையே சேர வோதி
விருந்திடுநா வுடையபயன் மேவி னோர்தா
மேலானோ மெனமகிழ்ந்து விழிநீர் சோரப்
பரிந்தருளாற் பரமனையே பாட வல்ல
பான்மையா ரெமையாளு மேன்மை யாரே.

சமஸ்கிருதம் தமிழ் என்னும் பாடைகளைக் கற்று வல்லர்களாகி, சனன மரணப்பட்டு உழல்கின்ற பசுக்களாகிய பிரம விட்டுணு முதலிய தேவர்களையும் மனிதர்களையும் மதித்து அவர்களுக்குக் கர்மாநுகுணமாகக்கிடைத்த அநித்தியமுந் துக்கமுமாகிய வாழ்வை மெய்யெனக் கருதி அவர்களைப் பாடி வாணாளை வீணாளாகப் போக்காது, பதியாகிய சிவபெருமானது மகிமையை வேதசிவாகம புராணவழியால் உள்ளபடி அறிந்து அவருடைய திருவடிகளை அடைந்து, மனங்கசிந்துருக உரோமஞ்சிலிர்ப்ப ஆனந்த வருவி சொரிய அவரையே மெய்யன்போடு பாடி, "நாம் சுவதந்திரராகிய பரமசிவனுக்கே ஆளாயினோம், பரதந்தரராகிய மற்றுள்ளோர்களில் ஒருவருக்கும் குடியல்லேம். அவர்களெல்லாருக்கும் மேலானோம்" என்று இறுமாப்பு அடைந்து திரிகின்றவர்களே பரமனையே பாடுவார் என்று சொல்லப்படுவார்கள்

பத்தராய்ப்பணிவார்

பத்தராய்ப்பணிவார் புராணம்


தொண்டரடித் தொழல்பூசைத் தொழின்மகிழ்த லழகார்
துளங்கியவர்ச் சனைபுரித றொகுதிய மங்கள்
கொண்டபணி திருவடிக்கே கொடுத்த லீசன்
குணமருவு மருங்கதையைக் குலவிக் கேட்டு
மண்டிவிழி துளும்பன்மயிர் சிலும்ப லுன்னன்
மருவுதிருப் பணிகாட்டி வருவ வாங்கி
யுண்டிகொளா தொழிதலென விவையோ ரெட்டு
முடையரவர் பத்தரென வுரைத்து ளாரே.

சிவனடியார்களைக் கண்டால் அவர்களுடைய சாதியை விசாரியாமல் அவர்களைச் சிவபிரானெனப் பாவித்து நமஸ்கரித்து குதுகுதுத்துக் கொண்டாடி மனமகிழ்ந்து அத்தியந்த ஆசையுடன் பசுவுக்குப் பின் கன்று அணைதல் போல அணைந்து, அவர்களுடன் பேசுங்காலத்து அவர்களைப் பேசும் பூச்சிய வசனமும் தங்களைப் பேசும் நைச்சியவசனமுந் தப்புமோ என்னுங் கூச்சத்துடனே பேசி, அவர்களுக்கு வேண்டுங் கருமமே தங்களுக்கு வேண்டுங் கருமமாகச் செய்தலும், சிவபெருமானை மிகுந்த அன்பினோடு எவ்விடத்தும் யாவர்க்கும் விதிப்படி அருச்சித்தலைக் கண்டால் மனமகிழ்தலும் சிவபெருமானையும் அவருடைய அடியார்களையும் தெவிட்டாத விருப்பத்தோடு சைவாகம விதிப்படி அருச்சித்தலும், தங்கள் உடம்பினாலே செய்யும் புண்ணியங்களெல்லாவற்றையும் சிவபெருமானது திருவடிக்கே கொடுத்தலும், சிவசரித்திரங்களையே அன்பினோடு கேட்டலும், சிவபெருமானையே வணங்கி மன நெக்குநெக்குருகிச் சரீரநடுக்குற்று உரோமப்புளகம் உண்டாக மதகினிற் புறப்படுஞ்சலம்போல ஆனந்தபாஷ்பம் பொழிய நாத்தழும்பப் பரவசமாதலும், நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் உண்டாலும் துயின்றாலும் விழித்தாலும் சிவபெருமானை ஒருபோதும் மறவாதிருத்தலும், சிவவேடந்தரித்துத் திருத்தொண்டர்போல் நடித்து அதனாற் சீவனஞ் செய்யாமையும், ஆகிய இவ்வெட்டினையும் உடையவர்களே பத்தராய்ப் பணிவாரென்று சொல்லப்படுவார்கள்.



பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்

பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்


பொய்யறியாக் கபிலரொடு பரண ராதிப்
புலவோர்பொற் பார்கலைகள் பொருந்த வோதிச்
செய்யுளிடை வளராக மதுர நல்ல
சித்திரம்வித் தாரமெனத் தெரிக்குஞ் செம்மை
மெய்யுடைய தொடைகளெல்லா மன்று ளாடன்
மேவியகோ னிருதாளில் விரவச் சாத்திக்
கையுடையஞ் சலியினரா யருளான் மேலைக்
கருதரிய வமருலகங் கைக்கொண் டாரே.

பாண்டிநாட்டிலே சிறந்து விளங்குகின்ற துவாதசாந்தபுரமாகிய மதுராபுரியிலே, சோமசுந்தரக்கடவுளிடத்திலே, சதுரமாய் இரண்டு சாணளவினதாகி மெய்ப்புலவர்களுக்கெல்லாம் முழம் வளர்ந்து இருத்தற்கு இடங்கொடுக்கின்ற சங்கப்பலகையைப் பெற்று, அதனில் இருந்துகொண்டு தமிழ் மொழியை வளர்த்த கடைச்சங்கப்புலவர்கள் கபிலர், பரணர், நக்கீரர் முதலாக நாற்பத்தொன்பதின்மர். அவர்கள் விபூதி ருத்திராக்ஷதரர்களாய், ஸ்ரீ பஞ்சாக்ஷர ஜபபரர்களாகி, அகத்தியம் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்களின்படி, ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னு நாற்கவிகளினாலும் மெய்யன்போடு பரமசிவனையே பாடி, பொய்யடிமையில்லாத புலவர்கள் எனப் பெயர்பெற்றுச் சிவபதம் அடைந்தார்கள்.



திருநீலகண்டயாழ்ப்பாணநாயனார்

திருநீலகண்டயாழ்ப்பாணநாயனார் புராணம்


பிறங்கெருக்கத் தம்புலியூர் வாழும் பேரியாழ்
பேணுதிரு நீலகண்டப் பெரும்பாண னார்சீர்
நிறந்தருசெம் பொற்பலகை யால வாயி
னிமலன்பாற் பெற்றாரூர் நேர்ந்துசிவன் வாயி
றிறந்தருளும் வடதிசையே சேர்ந்து போற்றித்
திருஞான சம்பந்தர் திருத்தாள் வாழ்த்தி
யறந்திகழுந் திருப்பதிகம் யாழி லேற்றி
யாசிறிருப் பெருமணஞ்சேர்ந் தருள்பெற் றாரே.

நடுநாட்டிலே திருவெருக்கத்தம்புலியூரிலே திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனுடைய திருப்புகழை யாழில் இட்டுப்பாடுவாராகி, சோழநாட்டில் உள்ள சிவஸ்தலங்களை வணங்கிக் கொண்டு சென்று, பாண்டிநாட்டிற் சேர்ந்து, மதுரையில் இருக்கின்ற சொக்கநாத சுவாமியினுடைய திருக்கோயில் வாயிலை அடைந்து நின்று, பரமசிவன் மேலனவாகிய பாணிகளை யாழில் இட்டு வாசித்தார். சொக்கநாத சுவாமி அதனைத் திருவுள்ளத்துக் கொண்டு அன்றிரவிலே தம்முடைய அடியார்களெல்லாருக்கும் சொப்பனத்திலே தோன்றி ஆஞ்ஞாபிக்க, அவர்கள் மற்றநாள் திருநீலகண்டப் பெரும்பாணரைச் சுவாமிக்குத் திருமுன்பே கொண்டுவந்தார்கள். திருநீலகண்டப் பெரும்பாணர் அது சுவாமியுடைய ஆஞ்ஞை என்று தெளிந்து, திருமுன்பே இருந்து யாழ் வாசித்தார். அப்பொழுது "இந்தப் பாணர் அன்பினோடு பாடுகின்ற யாழ் பூமியிலே உள்ள சீதம் தாக்கினால் வீக்கு அழியும். ஆதலால் இவருக்குப் பொற்பலகை இடுங்கள்' , என்று ஆகாயத்தினின்றும் ஓரசரீரிவாக்கு எழுந்தது. அதைக் கேட்ட அடியார்கள் பொற்பலகையை இட, திருநீலகண்டப் பெரும்பாணர் அதில் ஏறி, யாழ் வாசித்தார்.
பின்பு பல தலங்களையும் வணங்கிக்கொண்டு, திருவாரூரிற் சேர்ந்து, திருக்கோயில்வாயிலை அடைந்து, யாழ் வாசிக்க பரமசிவன் வடதிசையிலே ஒரு திருவாயில் வகுக்க; திருநீலகண்டப் பெரும்பாணர் அதன் வழியாகப் புகுந்து, திருமூலட்டானப் பெருமானாகிய வன்மீகநாதரை வணங்கினார். நெடுநாளாயினபின், அவ்விடத்தினின்றும் நீங்கி, சீர்காழியை அடைந்து, சமயகுரவராகிய திருஞானசம்பந்தமூர்த்திநாயனாருடைய திருவடிகளை வழிபட்டு, அவரை ஒருபொழுதும் பிரியாது. அவர் பாடியருளுந் திருப்பதிகங்களை யாழில் இட்டு வாசிக்கும் பெரும்பேற்றைப் பெற்று, திருநல்லூர்ப் பெருமணத்திலே அவருடனே சிவபதத்தை அடைந்தார்.





கோச்செங்கட்சோழநாயனார் புராணம்

கோச்செங்கட்சோழநாயனார் புராணம்


வெண்ணாவ விறைக்கொளிநூற் பந்தர் செய்த
வியன்சிலம்பி யதுவழித்த வெள்ளா னைக்கை
யுண்ணாடிக் கடித்தவுட லொழியச் சோழ
னுயர்குலத்துச் சுபதேவன் கமலத் தோங்கும்
பெண்ணாகி யவள்வயிற்றில் வைகிச் செங்கட்
பெருமானாய்த் தென்னவனாய்ப் பெருங்கோயில்பலவுங்
கண்ணார்வித் துயர்தில்லை மறையவர்க்கு முறையுள்
கனகமய மாக்கியருள் கைக்கொண் டாரே.

சோழமண்டலத்திலே, சந்திரதீர்த்தத்தின் பக்கத்திலே ஒரு வனம் இருந்தது. அதிலே நின்ற ஒரு வெண்ணாவன் மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் வெளிப்படலும், ஒரு வெள்ளானை அதைக்கண்டு, நாடோறும் புழைக்கையினாலே தீர்த்தம் முகந்து ஆட்டி, புஷ்பங்களைச் சாத்தி, வழிபட்டு ஒழுகுவதாயிற்று. அதனால் அந்த ஸ்தலத்துக்குத் திருவானைக்கா என்று பெயராயிற்று. அறிவினையுடைய ஒரு சிலந்தி, அந்தச் சிவலிங்கத்தின் மேலே சருகு உதிராவண்ணம், தன் வாய்நூலினாலே மேற்கட்டி செய்தது. சிவலிங்கத்தை வணங்கவந்த வெள்ளானை அதைக்கண்டு, அது அநுசிதம் என்று நினைந்து, அதைச் சிதைக்க; சிலந்தி மீளவும் மேற் கட்டி செய்தது, வெள்ளானை மற்றநாளும் அதைச் சிதைத்தது. அது கண்டு சிலந்தி "எம்பெருமான் மேலே சருகு உதிராவண்ணம் நான் வருந்திச் செய்த மேற்கட்டியை இது அழிக்கலாமா" என்று கோபித்து, வெள்ளானையினது புழைக்கையினுள்ளே புகுந்து கடிக்க; வெள்ளானை கையை நிலத்திலே மோதிக்கொண்டு விழுந்து இறந்தது. கையை நிலத்திலே மோதியபோது, அதனுள்ளே புகுந்த சிலந்தியும் இறந்தது வெள்ளானை சிவகணநாதராகித் திருக்கைலாசமலையை அடைந்து, சிவபெருமானைச் சேவித்துக் கொண்டிருந்தது.
சுபதேவனென்னுஞ் சோழமகாராஜன் தன் மனைவியாகிய கமலவதியுடன் சிதம்பரத்தை அடைந்து, சபாநாயகரை உபாசனை செய்துகொண்டிருக்கு நாளிலே; கமலவதி புத்திரபாக்கியம் இன்மையால் வரம் வேண்ட; அந்தச் சிலந்தி சபாநாயகரது திருவருளினாலே அவளுடைய வயிற்றிலே மகவாய் வந்து அடைந்தது. கமலவதிக்குப் பிரசவகாலம் அடுத்தபொழுது, சோதிடர்கள் "இந்தப்பிள்ளை ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமாகில், முப்புவனங்களையும் அரசாளும்" என்றார்கள். கமலவதி "என் பிள்ளை இப்போது பிறவாமல் ஒருநாழிகை கழித்துப் பிறக்கும்படி என்னைத் தலைகீழாகக் கட்டித் தூக்குங்கள்" என்று சொல்ல; அங்குள்ளவர்கள் அங்ஙனங் கட்டித் தூக்கி, சோதிடர்கள் குறித்த காலம் அணையக் கட்டவிழ்த்து விட்டார்கள். கமலவதி பிள்ளையைப் பெற்று, அது பிறக்குங்காலந் தாழ்த்தமையாற் சிவந்த கண்களையுடையதாய் இருத்தல்கண்டு, "என்கோச்செங்கண்ணானோ" என்று சொல்லிக்கொண்டு, உடனே இறந்துவிட்டாள். சுபதேவன் அப்புதல்வரை வளர்த்து முடிசூட்டி, அரசை அவரிடத்தில் ஒப்பித்து, தான் தவஞ்செய்து சிவலோகத்தை அடைந்தான்.
கோச்செங்கட்சோழநாயனார் பரமசிவனது திருவருளினாலே பூர்வசன்ம வுணர்ச்சியோடு பிறந்து, சைவத்திருநெறி தழைக்க அரசியற்றுவாராகி, சிவாலயங்கள் பலவற்றைக் கட்டுவிக்கத் தொடங்கினார். திருவானைக்காவிலே தாம் முன்னே அருள் பெற்றதை அறிந்து, அங்கே வெண்ணாவலுடன் பரமசிவனுக்குத் திருக்கோயில் கட்டுவித்தார். மந்திரிகளை ஏவி, சோழநாட்டில் வெவ்வேறிடங்களிலே சிவாலயங்கள் கட்டுவித்து, அவ்வாலயங்கடோறும் பூசை முதலியவற்றிற்கு நிபந்தங்கள் அமைத்தார். பின்பு சிதம்பர ஸ்தலத்தை அடைந்து, சபாநாயகரைத் தரிசித்து வணங்கி தில்லைவாழந்தணர்களுக்குத் திருமாளிகைகள் கட்டுவித்து, பின்னும் பல திருத்தொண்டுகளைச் செய்து கொண்டிருந்து, சபாநாயகருடைய திருவடி நீழலை அடைந்தார்.



Monday, February 14, 2011

நேசநாயனார்

நேசநாயனார் புராணம்


சாலியர்கோக் காம்பீலித் தலைவர் மேன்மை
தாவாத புகழ்நேசர் தஞ்சொ லென்றுங்
கோலியவைந் தெழுத்தோதிச் சிந்தை யுன்னிக்
கொண்டபொரு ளன்பர்கொளக் கொடுத்து வாழ்வார்
சீலமிகுந் திருத்தொண்டர்க் குடையுங் கீளுந்
திருந்தியவொண் கோவணமுஞ் சேர வீந்து
பாலனைய வொளிநீற்றான் பாத மேத்திப்
பரலோக முழுதாண்ட பான்மை யாரே.
காம்பீலிநகரத்திலே, சாலியர் குலத்துக்குத் தலைவராகிய நேசநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய மனத்தின் செய்கையைப் பரமசிவனுடைய திருவடிக்கு ஆக்கி, வாக்கின் செய்கையை ஸ்ரீ பஞ்சாக்ஷரத்துக்கு ஆக்கி, கையின் செய்கையைச் சிவனடியார்களுக்கு ஆக்குவாராகி, வஸ்திரமுங் கீளுங் கோவணமும் நெய்து, தம்மிடத்தில் வருஞ் சிவனடியார்களுக்கு இடையறாது கொடுத்து நாடோறும் அவர்களை வணங்கித் துதித்துக் கொண்டிருந்து சிவபதத்தை அடைந்தார்.



பூசலார் நாயனார்

பூசலார் நாயனார் புராணம்



பொருவருந்தண் டகநாட்டு நின்ற வூர்வாழ்
பூசுரர்கோப் பூசலார் பந்தி யாலே
யிருநிதியந் தேடியா லயமு மாக்கி
யெழுந்தருளப் பண்ணுவதா வெண்ணுங் காலை

யரனதனைக் காடவர்கோற் கருள மன்ன

னந்நகர மணைந்தவ்வா றறிந்து தாழவிரவுமனக் கோயிலுற விருத்தி யங்கண்வேண்டுவகொண் டிறைஞ்சியருண் மேவி னாரே.

தொண்டை மண்டலத்திலே, திருநின்றவூரிலே, பிராமண குலத்திலே, பூசலார்நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்களுக்கு வேண்டுவனவற்றை எப்படியுந் தேடிக் கொடுத்து, பரமசிவனுக்கு ஓராலயங் கட்டுதற்கு விரும்பி, எங்கும் வருந்திப் பொருள்தேடி, அற்பமுங் கிடையாமையால் நைந்து, "இதற்கு யாதுசெய்வேன்" என்று ஆலோசித்து மனோபாவனையினாலே ஆலயங்கட்டத் துணிந்து, மனசினாலே அதற்கு வேண்டுந்திரவியங்களையும் உபகரணங்களையும் சிற்பரையும்தேடி, சுபதினத்திலே அடிநிலை பாரித்து, இரவிலும் நித்திரையின்றி, நெடுநாட்கூடக் கோயில் கட்டி முடித்து, பிரதிட்டை செய்தற்கு உரிய சுபதினத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அது நிற்க.
காடவராஜாவானவர் காஞ்சீபுரத்திலே ஒரு சிவாலயங்கட்டுவித்தார் அதிலே பிரதிட்டை செய்ய நிச்சயித்த சுபதினத்துக்கு முதற்றினத்திலே பரமசிவன் பூசலார்நாயனாருடைய அன்பை விளக்கும் பொருட்டு அவ்வரசருக்குச் சொப்பனத்திலே தோன்றி, 'நின்றவூரில் இருக்கின்ற பூசலென்பவன் நமக்கு ஒரு கோயில் கட்டியிருக்கின்றான். அதிலே நாளைக்கு நாம்போவோம் உன் கோயிலில் பிரதிட்டையை நாளைக்கு ஒழித்து பின் கொள்வாய்" என்று அருளிச்செய்து மறைந்தருளினார். காடவராஜா விழித்து எழுந்து அந்தப் பூசலார்நாயனாரை வணங்குதற்கு விரும்பி, திருநின்றவூரை அடைந்து, அங்குவத்தார் சிலரை நோக்கி, "பூசலார்நாயனார் கூட்டிய திருக்கோயில் எவ்விடத்தது " என்று வினாவ; அவர்கள் "அவர் இங்கே கோயில் கட்டிற்றிலர்" என்றார்கள். உடனே காடவராஜா அவ்வூர்ப் பிராமணர்களை அழைப்பித்து "பூசலார் நாயனார் என்பவர் யாவர்" என்று வினாவ; அவர்களெல்லாரும் "அவர் பிராமணர் இவ்வூரார்" என்று சொல்லி அவரை அழைத்தற்குப் புறப்பட்டார்கள். அப்பொழுது காடவராஜா அவரை அழைக்க வொட்டாமல். தாமே அவரிடத்திற்சென்று அவரை வணங்கி "சுவாமீ! நீர் ஒருசிவாலயங்கட்டியிருக்கின்றீர் என்றும், பிரதிட்டைசெய்யும் நாள் இன்று என்றும், சிவபெருமானால் அறிந்து, உம்மைத் தரிசித்து வணங்குதற்கு வந்தேன் அவ்வாலயம் யாது" என்று விண்ணப்பஞ்செய்ய; பூசலார்நாயனார்மருண்டு நோக்கி, "சிவபெருமான் என்னை ஒருபொருளாகக் கொண்டு அருளிச்செயத்து நான் திரவியம் இல்லாமையால் மனோபாவனையிலே கட்டிய கோயிலையே" என்று நினைந்து நிகழ்ந்ததை எடுத்துச்சொன்னார். காடவராஜா அதைக் கேட்டு வியந்து, அவரைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துத் தோத்திரஞ்செய்து அநுமதி பெற்றுக்கொண்டு, தமது ஊருக்குத் திரும்பிவிட்டார். பூசலார் நாயனார் தரம் மனசினாலே கட்டிய திருக்கோயிலிலே சுபமுகூர்த்தத்திலே பரமசிவனைப் பிரதிட்டைசெய்து, நெடுங்காலம் பூசைசெய்து கொண்டிருந்து, சிவபதத்தை அடைந்தார்.





புகழ்த்துணைநாயனார்

புகழ்த்துணைநாயனார் புராணம்


புண்ணியர்கள் புகழழகார் திருப்புத் தூர்வாழ்
புகழ்த்துணையா ரகத்தடிமைப் புனிதர் சின்னாண்
மண்ணிகழ மழைபொழியா வற்க டத்தால்
வருந்துடல நடுங்கிடவு மணிநீ ரேந்தி
யண்ணன்முடி பொழிகலச முடிமேல் வீழ
வயர்ந்தொருநாட் புலம்பவர னருளா லீந்த
நண்ணலரு மொருகாகப் படியால் வாழ்ந்து
நலமலிசீ ரமருலக நண்ணி னாரே.

செருவிலிபுத்தூரிலே, ஆதிசைவர் குலத்திலே, புகழ்த்துணைநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவாகம விதிப்படி பரமசிவனை அருச்சனைசெய்து வருங்காலத்திலே பஞ்சம் உண்டாயினமையால் பசி மிகப் பெற்றும், "அருச்சனையை விடுவேனல்லேன்" என்று அல்லும் பகலும், அருச்சிப்பார். ஒருநாள் திருமஞ்சனமாட்டும் பொழுது, மிகுந்த பசி நோயினால் கைசோர்ந்து கலசந் திருமுடிமேல் விழ, தாந்திருவடியிலே விழுந்து அயர்ந்து, திருவருளினாலே நித்திரை அடைந்தார். அப்பொழுது பரமசிவன் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "பஞ்சம் நீங்கும் வரைக்கும் உனக்குத் தினந்தோறும் இங்கே ஒவ்வொரு காசு வைப்போம்" என்று அருளிச்செய்தார். புகழ்த்துணை நாயனார் விழித்து எழுந்து பீடத்தின்கீழே ஒருகாசு இருக்கக் கண்டு, அதனைக் கைகொண்டு வாழ்ந்தார். அந்நாளிலே போல எந்நாளிலும் அப்படியே ஒவ்வொரு காசு பெற்று, பஞ்சநீங்கிய பின்னும் நெடுங்காலம் மெய்யடிமைத் தொழில்செய்து, பரமசிவனது திருவடிநிழலை அடைந்தார்.



புகழ்த்துணைநாயனார் புராணம்

புகழ்த்துணைநாயனார் புராணம்


புண்ணியர்கள் புகழழகார் திருப்புத் தூர்வாழ்
புகழ்த்துணையா ரகத்தடிமைப் புனிதர் சின்னாண்
மண்ணிகழ மழைபொழியா வற்க டத்தால்
வருந்துடல நடுங்கிடவு மணிநீ ரேந்தி
யண்ணன்முடி பொழிகலச முடிமேல் வீழ
வயர்ந்தொருநாட் புலம்பவர னருளா லீந்த
நண்ணலரு மொருகாகப் படியால் வாழ்ந்து
நலமலிசீ ரமருலக நண்ணி னாரே.

செருவிலிபுத்தூரிலே, ஆதிசைவர் குலத்திலே, புகழ்த்துணைநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவாகம விதிப்படி பரமசிவனை அருச்சனைசெய்து வருங்காலத்திலே பஞ்சம் உண்டாயினமையால் பசி மிகப் பெற்றும், "அருச்சனையை விடுவேனல்லேன்" என்று அல்லும் பகலும், அருச்சிப்பார். ஒருநாள் திருமஞ்சனமாட்டும் பொழுது, மிகுந்த பசி நோயினால் கைசோர்ந்து கலசந் திருமுடிமேல் விழ, தாந்திருவடியிலே விழுந்து அயர்ந்து, திருவருளினாலே நித்திரை அடைந்தார். அப்பொழுது பரமசிவன் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "பஞ்சம் நீங்கும் வரைக்கும் உனக்குத் தினந்தோறும் இங்கே ஒவ்வொரு காசு வைப்போம்" என்று அருளிச்செய்தார். புகழ்த்துணை நாயனார் விழித்து எழுந்து பீடத்தின்கீழே ஒருகாசு இருக்கக் கண்டு, அதனைக் கைகொண்டு வாழ்ந்தார். அந்நாளிலே போல எந்நாளிலும் அப்படியே ஒவ்வொரு காசு பெற்று, பஞ்சநீங்கிய பின்னும் நெடுங்காலம் மெய்யடிமைத் தொழில்செய்து, பரமசிவனது திருவடிநிழலை அடைந்தார்.



செருத்துணைநாயனார்

செருத்துணைநாயனார் புராணம்

இரைத்தணையார் புனற்பொன்னி மருத நன்னாட்
டெழிலாருந் தஞ்சைநக ருழவ ரேத்துஞ்
செருத்துணையார் திருவாரூர் சேர்ந்து வாழ்வார்
செல்வமிகும் பல்லவர்கோன் றேவி வீழ்ந்த
மருத்துணையார் மலரெடுத்து மோப்பக் கண்டு
வனமலிபூங் கத்தியா லவண்மூக் கீர்ந்த
கருத்துணையார் விறற்றிருந் தொண்டினையே செய்து
கருதலரு மமருலகங் கைக்கொண் டாரே.

சோழமண்டலத்திலே, மருகனாட்டிலே, தஞ்சாவூரிலே வேளாளர் குலத்திலே, சைவசிரோமணியாகிய செருத்துணை நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருவாரூரை அடைந்து, காலந்தோறும் வன்மீகநாதரை வணங்கித் திருத்தொண்டுகள் செய்துகொண்டிருந்தார். இருக்கு நாளிலே. அங்கே சுவாமி தரிசனஞ் செய்யவந்த கழற் சிங்கநாயனாருடைய மாதேவி பூமாலை கட்டும் மண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்தாள் என்று நினைத்து, கத்தியினாலே அவளுடைய மூக்கை அரித்தார். பின்னும் நெடுங்காலத் திருத்தொண்டின் வழி நின்று சிவபதத்தை அடைந்தார்.



இடங்கழிநாயனார்

இடங்கழிநாயனார் புராணம்

கோனாட்டுக் கொடும்பாளு ரிருக்கும் வேளிர்
குலத்தலைவ ரிடங்கழியார் கொங்கிற் செம்பொ
னானேற்றார் மன்றின்முக டம்பொன் மேய்த்த
வாதித்தன் மரபோர் நெற் கவர்ந்தோ ரன்பர்
போநாப்ப ணிருளின்கட் காவ லாளர்
புரவலர்முன் கொணரவவர் புகலக் கேட்டு
மானேற்று ரடியாரே கொள்க வென்று
வழங்கியர சாண்டருளின் மன்னி னாரே.
கோனாட்டிலே கொடும்பாளுரிலே, குறுநிலமன்னர் குலத்திலே, கனகசபையின் முகட்டைக் கொங்கிற் செம்பொன்னால் வேய்ந்த ஆதித்தன் குடியிலே, இடங்கழிநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சைவநெறியும் வைதிக நெறியுந் தழைக்க, சிவாலயங்களெங்கும் நித்திய நைமித்திகங்கள் சிவாகம விதிப்படி நடக்க, அரசியற்றுங்காலத்திலே, சிவனடியார்களைத் திருவமுதுசெய்விக்கும் ஓரடியவர் ஒருநாள் திருவமுதுசெய்வித்தற்குப் பொருள் எங்கும் அகப்படாமையால் மனந்தளர்ந்து, மாகேசுரபூசைமேல் வைத்த அத்தியந்த ஆசையினால் விழுங்கப்பட்டமையால் செயற்பாலது இது என்பது தெரியாமல், அவ்விடங்கழி நாயனாருடைய பண்டாரத்திலே நெற்கூட்டு நிரைகள் நெருங்கிய கொட்டகாரத்தில் அந்த ராத்திரியிலே புகுந்து முகந்து எடுத்தார். காவலாளர்கள் அதைக் கண்டு, அவரைப் பிடித்து இடங்கழிநாயனாருக்கு முன்கொண்டு வந்தார்கள். இடங்கழி நாயனார் அவ்வடியவரைப் பார்த்து, "நீர் ஏன் நம்முடைய நெற்பண்டாரத்தைக் கவர்ந்தீர்" என்று வினாவ, அவ்வடியவர் "நான் சிவனடியார்களைத் திருவமுது செய்வித்தற்குப் பொருள் இன்மையால் இங்ஙனஞ் செய்தேன்" என்றார். இடங்கழிநாயனார் அது கேட்டு மிக இரங்கி, "எனக்கு இவரன்றோ பண்டாரம்" என்று சொல்லி, "சிவனடியார்களெல்லாரும் நெற்பண்டாரத்தை மாத்திரமின்றி மற்றை நிதிப் பண்டாரங்களையும் எடுத்துக் கொள்க" என்று எங்கும் பறை யறைவித்தார். பின்னும் நெடுங்காலம் திருநீற்றின் நெறி தழைக்கும்படி தண்ணளியோடு அரசியற்றிக்கொண்டிருந்து சிவபதத்தை அடைந்தார்.