Friday, November 29, 2013

கலியுக அரக்கர்களிடமிருந்து எம்மைக் காப்பாற்று கிருஷ்ணா!

கலியுக அரக்கர்களிடமிருந்து எம்மைக் காப்பாற்று கிருஷ்ணா!
_________________________________________________________________
“எப்பொழுதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட அவதாரம் செய்வேன்” என்றாயே! இன்னும் நேரம் வரவில்லை என்று நினைக்காதே!

கிருகயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் ஆகிய மூன்று யுகங்களிலும் வாழ்ந்து உன்னுடைய அவதாரங்களால் அழிக்கப்பட்ட அரக்கர்கள் ஒரு விதத்தில் மிகவும் நேர்மையானவர்கள். அவர்கள் தங்களை அரக்கர்களாகவே பறைச்சாற்றிக் கொண்டார்கள். அத்துனை அதர்மங்களையும் வெளிப்படையாகவே செய்தார்கள்....

இன்றைய கலியுக அரக்கர்கள் அவர்கள் அளவிற்கு நேர்மையானவர்களாக இல்லை, தாங்கள் நல்லவர்கள் என்று மக்களை நம்ப வைத்து, அவர்களுக்கே துரோகம் செய்கிறார்கள்.

நாட்டின் மண் முதல் மலை வரை நீர் முதல் நிலக்கரி வரை என்று பஞ்ச பூதங்களில் வாயு மற்றும் ஆகாயத்தைத் தவிர அத்துனையையும் திருடி விட்டார்கள், அல்லது அந்நிய தேசங்களுக்குத் தாரை வார்த்து விட்டார்கள். வாயு, காற்றினைத் திருடமுடியாததாலோ என்னவோ, அதை நச்சாக்கி விட்டார்கள். இவர்கள் நாளை அந்த ஆகாயத்தைக் கூடத் தங்களது ஆகாரம் ஆக்கிவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை.

அந்த வகையில் முதல் மூன்று யுகங்களில் வாழ்ந்த அரக்கர்களை விட இவர்கள் மிகவும் ஆபத்தானவர்களாகிவிட்டார்கள்.
கலியுகத்தில், பெருமாலான மக்கள் இன்னும் தன்னிலை உணராதவர்களாகவே இருக்கின்றார்கள். அதனாலேயே அவர்கள் சில நூறு அல்லது சில ஆயிரம் பேர்களின் கொடுமைகளுக்கும் நம்பிக்கைத் துரோகங்களுக்கும் ஆளாகி அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எனது தேசத்தின் இந்தத் தற்காலிகமான இழி நிலையை மாற்றி, நமது பாரம்பரியம் தர்மம் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு தாங்களும் சிறப்பாக வாழ்ந்து உலக சமுதாயத்தையும் சிறப்பானதாக மாற்ற அவர்களுக்கு உன் அருளை வழங்கு!

ஹரே கிருஷ்ண! ஹரே கிருஷ்ண! கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!!

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு -

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு.
...
- கடுவெளிச் சித்தர்

இதன் பொருளாக அடியேன் புரிந்து கொண்டது பின்வருமாறு...

"ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு"

பொறி ஐந்து (மெய், வாய், கண், மூக்கு, செவி)

புலன் ஐந்து (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்)

ஐந்து பொறிகள் சூழ்ந்து இருக்கும் காடு... நம் உடல்...
இந்த பொறிகள் உண்டாக்கும் ஐந்து புலன்கள் (கரண அறிவு) சென்றடையும் நாடு.. ... நம் மனம்...

இந்த மனம் தான் நம்மை உண்மை அறிய விடாமல்... தடை செய்கிறது...

"முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு"

இந்த பொறி-புலன் சேர்க்கையில் சிக்காமல் உய்வதற்காக ஏங்க வேண்டும்... அவற்றை.. கடந்து.. உள்ளே செல்லும் மார்கத்தை தேட வேண்டும்...

உள் +கட = கடவுள்...

அதற்க்கு மூலமான பொருளை... (கடவுளை) உணர்ந்திடின்... முக்தி/வீடு-பேறு வாய்க்கும்...

இந்த கடைசி இரண்டு அடிகளுக்கு... யோக விளக்கமும் உண்டு...

"முந்தி... வரும்(தீ).. நீ தேடு..." (சுழுமுனை சுவாசத்தை / அக்னி நாடியை தேடு...)

அது உரையும்.. இடமான மூலாதாரத்தை அறிந்து விட்டாயானால்...

"(வா)முத்தி வீடு" - வாசியின் துணைகொண்டு... மூலக்கனலை.. மூலாதாரத்திலிருந்து... முக்தி வீடான... உச்சிக்குழிக்கு... (புருவமத்திக்கு).. எடுத்துச் செல்...

சிவலிங்கம் காட்டுவது என்ன...?

சிவலிங்கம் காட்டுவது என்ன...?

கடவுள் உண்டா இல்லையா என்ற வாதம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது கடவுளுக்கு உருவம் இருக்கிறதா? இல்லையா? என்பது மூல பரம்பொருள் என்று அழைக்கப்படும் ஆதி மூல வஸ்துக்கு உருவம் தேவையில்லை அது இயக்கங்கள் அனைத்திற்கும் ஆதார இயக்கு சக்தியாக இருப்பதனால் உருவம் என்பது இல்லாமலேயே அதுவால் இயங்க முடியுமென்று இயக்க முடியுமென்று சிலர் சொல்கிறார்கள்

இல்லாத ஒன்று இயங்க இயலாது இயங்கும் அனைத்துக்கும் உருவம் வேண்டும் உருவம் இல்லை என்றால் இயக்கத்தை அறிந்துகொள்ள முடியாது அனுபவிக்கவும் முடியாது எனவே அனைத்தையும் இயங்க வைக்கும் ஆதி சக்தியான கடவுள் உருவத்துடனே இருக்கிறார் அவரை உருவாகவே தரிசிக்க முடியுமென்று சிலர் சொல்கிறார்கள்

இறைவன் எல்லாம் வல்லவன் அவரால் ஆகாதது என்று உலகில் எதுவும் இல்லை அப்படி சர்வசக்தி வாய்ந்த கடவுள் உருவம் இல்லாமலும் இருக்கலாம் உருவத்தோடும் இருக்கலாம் அருவுருவாக இருக்கும் பரம்பொருளை தியானிக்க வேண்டியதே ஜீவர்களின் லட்சியம் என்று சிலர் சொல்கிறார்கள் இந்த மூன்று கருத்துக்களும் முடிவே இல்லாமல் உலக முழுவதும் இன்றுவரை விவாதிக்கப்பட்டு வருகிறது

கடவுள் விஷயத்திலும் சரி மற்ற எந்த விஷயத்திலும் சரி அநுபூதி ஒன்றே இறுதி முடிவு என்பது இந்துமதத்தின் மைய கருத்து அதாவது அனுபவத்தால் பெறுகின்ற விடையே இறுதியானது உண்மையானது என்பது இதன் பொருளாகும் அதனாலேயே இறைவனை பற்றி பேசும்போது இந்துமதம் சகுன நிர்குண பிரம்மம் என்று வலியுறுத்தி பேசுகிறது அதாவது அருவுருவான பரம்பொருள் என்பது இதன் ஆதார சுருதியாகும்

அருவுருவான அதாவது உருவம் உடைய உருவம் இல்லாத கடவுளை மனித சிந்தனைய்க்கு எப்படி அடையாள படுத்தி காட்ட முடியுமென்று சிந்தித்த நமது ஞான புருசர்கள் இறைவனின் அருவுரு தன்மையை சிவலிங்கம் மூலம் கண்டறிந்து மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினார்கள் லிங்கம் என்பது அநாதி காலம் தொட்டு பக்தர்களால் வழிபடப்பட்டு வருவதற்கு இந்த அருவுருவ தத்துவமே மூலம் எனலாம்.

அண்ட சராசரங்கள் அனைத்தையும் கடந்த சிவபெருமான் என்ற மூல பரம்பொருளின் பரத்துவ நிலையை உணர்த்துவது தான் சிவலிங்கமாகும் நிற்குனமான இறைவனின் நிலையை வெளிப்படுத்தும் சிவலிங்கம் மூன்று பகுதிகளை தனக்குள் கொண்டது லிங்கத்தின் பாணபகுதி என்று அழைக்கப்படும் உச்சிபகுதி சிவபாகம் ஆகும் இது பிரபஞ்சத்தின் சம்ஹாரத்தை காட்டுவதாகும் நடுப்பகுதியான ஆவுடையார் மூலபரம்பொருள் காக்கும் சக்தியாக திகழும் விஷ்ணுவை தனக்குள் கொண்டதாகும் கடேசியாக உள்ள அடிப்புறபகுதி சிருஷ்டி என்பது உலகங்களின் அஸ்திவாரம் என்பதை காட்டும் பிரம்ம பகுதியாகும் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலும் இறைவன் ஒருவனிடத்தில் இருந்தே நடைபெறுகிறது என்பதை தெளிவாக காட்டும் தத்துவமே சிவலிங்கம்

நாம் சிவலிங்கத்தை லிங்கம் என்ற ஒரே பெயரால் அழைத்தாலும் அதற்கு பல பெயர்கள் இருக்கிறது அதாவது இறைவன் உயிர்களுக்கு சாநித்தியராய் நின்று அருள்செயும் லிங்கத்தை பரார்த்த லிங்கம் என்றும் தானாக தோன்றியதை சுயம்பு லிங்கம் என்றும் தேவர்கள் உருவாக்கியதை கண லிங்கம் என்றும் பிரம்மன் மற்றும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டதை தைவீக லிங்கம் என்றும் முனிவர்கள் அசுரர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதை ஆரிட லிங்கம் என்றும் மனிதர்கள் செய்ததை மானுட லிங்கம் என்றும் மண் அரிசி வெண்ணை சந்தனம் புஷ்பம் சக்கரை மாவு ஆகியவற்றால் உருவானதை சணிக லிங்கம் என்றும் அழைக்கிறார்கள்

சகலாதிகரம்,காசியப சிற்ப சாஸ்திரம் ,கந்தபுராணம், தென் குடி திட்டை புராணம்,சிவபரக்ரமம் ஆகிய பழம்பெரும் நூல்கள் சிவலிங்கத்தின் நான்கு வகைகளை பற்றி பேசுகிறது தாளக்குடை போன்ற வடிவுடைய சத்ரகாரம் கோழிமுட்டை வடிவுடைய குக்குண்டாகாரம் வெள்ளரி பழம் வடிவுடைய திருபுடாகாரம் பாதிநிலா வடிவுடைய அர்த்த சந்திராகாரம் என்று லிங்கத்தின் நான்கு வித வடிவங்களுக்கு பெயர் சூட்டி நமக்கு தெரியபடுத்துகின்றது

இதுதவிர ஆயிரம் முகம் கொண்ட பாணலிங்கம் முதல் ஐந்து முகம் கொண்ட பாணலிங்கம் வரை இருக்கிறது முத்து பவளம் வைடூர்யம் படிகம் மரகதம் நீலம் மாணிக்கம் வைரம் கோமேதகம் ஆகிய ரத்தினங்களிலும் சிவலிங்கத்தை உருவாக்கலாம் என்று பல சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றன சிவலிங்கம் செய்ய பயன்படும் ரத்தினங்கள் குற்றமற்றவைகலாக இருக்க வேண்டும் அதன் அளவு இரண்டு அங்கலம் முதல்கொண்டு ஆறு அங்குலம் வரை இருக்கலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன

ஆலயங்களில் உள்ள லிங்கங்களை தவிர மேற்சொன்ன பொருட்களில் லிங்க வடிவங்களை செய்து வீட்டில் வைத்து வழிபட்டால் அரச உறவு தீர்க்க ஆயுள் ஆரோக்கிய உடம்பு செல்வ வளர்ச்சி பகைவர் வீழ்ச்சி நன்மக்கள் பேறு சர்வ வசியம் ஏற்படும் என்று நமது முன்னோர்கள் வரையறுத்து வைத்திருக்கிறார்கள்

இந்துமத வழிபாடுகள் எனபது தத்துவங்களையும் விஞ்ஞான ரகசியங்களையும் மட்டும் கொண்டது அல்ல சாதாரண மனிதனின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வதற்கு கூட இந்து மத வழிபாட்டு முறைகள் தவறுவது இல்லை அதனால் தான் ஆயிரம் வருடங்கள் அந்நிய காட்டுமிராண்டி மதத்தவர்கள் கண்மூடி தனமான தாக்குதல் நடத்தினாலும் இன்றும் புத்திளமையோடு திகழ்கிறது நாளையும் திகழும்.!

பிராணாயாமத்தைப் பொறுத்தவரை அது எவ்வாறு குண்டலினி தவத்தில் உதவுகிறது ?

குண்டலினி தவத்தைப் பொறுத்தவரை, மனதாலும், சாதனை முறைகளின் தீவிரத்தாலும் குண்டலினியைக் கிளப்பி விடத் தாமதமாகும் நிலையைத் தவிர்ப்பதற்கு பிராணாயாமம் உதவும். அதாவது மூன்றாவது நாடியாகிய சுழுமுனை திறப்பது என்பது நிகழும் வரை சாதகர் காத்திருக்க வேண்டும். ஆனால் பிராணாயாமத்தில் பிராண சக்தியை அதிகரித்து, அபாணனோடு கலக்கச் செய்யும் போது சுழு முனைநாடி திறக்கும். சுழுமுனை நாடி திறக்காமல் பிரம்மச்சர்யம் இருப்பவர், அல்லது திருமணம் ஆகாதவர்கள் குண்டலினி தவத்தில் ஈடுபடும் போது விந்து சக்தி அதிகரித்து சாதகருக்கு காம உணர்வைத் தூண்டி விடும். அப்படிப்பட்ட வேளையில் உணவுக் கட்டுப்பாட்டின் மூலமாக அந்த விந்து சக்தியின் வீரியத்தை சமன் செய்யலாம். திருமணமானவர்கள் சம்போகம் மூலம் சமன் செய்து கொள்ளலாம். எனவே இல்வாழ்வில் உள்ளவர்களும் குண்டலினி தவத்தைச் செய்து மேன்மையடையலாம் என்பது திண்ணம். ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வரும் வரை பிரம்மச்சரியத்தை விரதமாக அனுஷ்டிப்பது அவசியம்.

பிராணாயாமத்தைப் பொறுத்தவரை அது எவ்வாறு குண்டலினி தவத்தில் உதவுகிறது ? என்று பார்த்தால், அதில் உள்ள பந்தங்கள் அபாணனையும், பிராணனையும் இணைத்து நடுநாடி திறக்க உதவி செய்கின்றன. நுரையீரலில் தங்கும் பிராணனையும், அடிவயிற்றில் தங்கும் அபாணனையும் இணைத்தால் குண்டலினி சக்தி வலிமை அடைந்து, வெப்ப சக்தி உண்டாகி அது நடுநாடியை மோதித் திறந்து கொண்டு மேல்கிளம்பும். பிராணனையும் அபாணனையும் இணைக்கும் பயிற்சியாக ஒட்டியாணாவும், ஜலந்திர பந்தமும் உதவி செய்கிறது. அது எவ்வாறெனில் ஜலந்திர பந்தம் செய்வதால் பிராணன் கீழ்நோக்கி வருகிறது, ஒட்டியாணா செய்வதால் அபாணன் மலக்குடலுக்குள் செல்லாமல் மேல் நோக்கி நகர்கிறது. இப்போது இந்த இரண்டும் இணைய வேண்டும் என்றால், அதற்கு மூலபந்தம் போட வேண்டும்.

குதிரை சாணம் போட்டவுடன் ஒரு சில தடவைகள் ஆசனவாயை இறுக்கி, விரித்து, இறுக்கி, விரித்துக் கொண்டே இருக்கும். அது போல நாம் முறைப்படி செய்வதற்குப் பெயர்தான் அஸ்வினி முத்திரை. இந்த அஸ்வினி முத்திரைப் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் மூன்று நாடிகளும் இணைந்து செயல்படும். நடுநாடி திறந்து பிராணன் உட்புகும். தாம்பத்ய உறவில் ஈடுபடுபவர்களுக்கு அஸ்வினி முத்திரை ஒரு புதையல்தான். இதனால் அந்தரங்க உறுப்புகள் வலிமையடைகின்றன. விந்து கட்டிப்பட்டு விடுவதால் பீச்சுதல் நிகழும் போது ஒருவிதமான சுகம் கிடைப்பதை உணரலாம். குண்டலினி தவம் செய்பவர்களுக்கு பிராணனை நடுநாடி வழியாக கிளப்பி விட இந்த பயிற்சி மட்டுமே துணை நிற்கிறது. பிராணாயாமத்தின் மூலம் பெறப்பட்ட அதிகபட்ச பிராணனை கும்பகம் செய்து மூன்று பந்தங்களையும் போட்டு அஸ்வினி முத்திரையை இயக்கும் போது பிராணன் கீழே இறங்காமல் மேலே ஏறும். அப்போது சாதகர் அடையும் அனுபவ உணர்வுகளை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. நாடிநரம்புகள் அனைத்திலும் பிராணன் பிரவாகித்து ஓடும் அழகை உணரலாம். அதிலும் நடுநாடி திறந்து அதில் பிராணன் நுழையும் போது மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். குப்பென்று வியர்த்து விடும். ஒரு விம்மல் ஏற்படும். ஏனென்றால் பிராணசக்தி என்பதுவும் ஒரு மின் சக்தியே. இதை அதிகமாக சேமித்து வைத்தால் எப்படி ஒரு அணு இயக்கக் கலனில் அணுசக்தி இருக்குமோ அது போல குண்டலினி சக்தியானது அதிக பிராண சக்தியின் தூண்டுதலால் செயல்பாட்டிற்கு வரும்.

சிலருக்கு மூன்று பந்தங்களையும் ஒன்று சேர்ந்தார்ப் போல செய்து அஸ்வினி முத்திரை போட முடியாது. அப்படிப்பட்டவர்கள் வேறொரு முறையைப் பின்பற்றி பிராணனையும், அபாணனையும் இணைக்கலாம். பத்மாசனத்திலோ, சித்தாசனத்திலோ நன்கு நிமிர்ந்து அமர்ந்து கொண்டு வாயைச் சற்று திறந்தபடி வைத்துக் கொள்ள வேண்டும். நாக்கின் நுனி மேலண்ணத்தின் கூரையைத் தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். இந்த நிலையில் சுவாசிக்கும் போது இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகக் காற்று புகுந்து தொண்டைக் குழி வழியாகப் பகுதியாக உள்ளே போகும். இப்போது மூலபந்தம் போட்டுக் கொண்டு, ஒருமுறை நன்கு இழுந்து சுவாசித்து விட்டு, ஜலந்திரபந்தத்தைப் போட வேண்டும். இதை எல்லோரும் இயல்பாகவும், எளிமையாகவும் செய்யலாம். அதாவது முதலில் பத்து சுற்று நாடி சுத்தி செய்யவேண்டும். மூலபந்தம் போட வேண்டும். பிறகு மேலண்ணத்தில் நாக்கை ஒட்ட வைத்துக் கொள்ள வேண்டும். நன்றாக சுவாசத்தை உள்ளே இழுக்க வேண்டும். பிறகு ஜலந்திர பந்தம் போட்ட நிலையில் ஐந்து முறை அஸ்வினி முத்திரையைப் போட வேண்டும். பிறகு தலையை உயர்த்தி கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்த பிறகு, மீண்டும் சுவாசத்தை உள்ளிழுத்து, ஜலந்திர பந்தம் போட்டு விட்டு அஸ்வினி முத்திரை போட வேண்டும். இது போல அவரவர் உடல் தகுதிக்கு ஏற்ப சுற்றுகளைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். எனினும் பயிற்சியின் துவக்கத்திலிருந்து, இறுதி வரை மூலபந்தத்தை விடாமல் இருக்க வேண்டும்.

இந்த முறையில் பயிற்சி செய்யும் போது, மூலபந்தம் போட்டிருப்பதால் அதிகமான அபாணன் கீழிறங்காது. அஸ்வினி முத்திரை போடுவதால் அது மேலே ஏறும். ஜலந்திர பந்தமும், மூலபந்தமும் போடுவதால் பிராணனும், அபாணனும் செலவழியாமல் ஒன்றாக இணையும். இதனால் மூலாதாரத்தில் மூன்று நாடிகளும் கூடும் இடத்தில் பிராணனின் தாக்குதல் ஏற்படும். பயிற்சியில் தீவிரமடைய அடைய திடீரென்று ஒருநாள் சுழுமுனை திறந்து குண்டலினி மேலே ஏறத்துவங்கும்.

பிராணனையும், அபாணனையும் இணைத்து பயிற்சி செய்து வருபவர்களுக்கு நரை, திரை மறையும். உடல் வலிமை அடைவதோடு, பிராணன் திணிவு பெற்றுத் திகழும். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராணனின் ஒரு பகுதி சிறு குடல் மற்றும் பெருங்குடலுக்குள் நுழையும். இதையே அபாணன் என்பார்கள். உணவின் மூலமாகவும் அபாணன் குடலில் சேமிக்கப்படும். மலக்குடலில் அபாணனின் இயக்கம் சரிவர நடைபெறவில்லை என்றாலோ, குறைந்தாலோ, உடல் பலவீனமடையும். உணவுப் பொருள்களை கூழாக்கி, அதன் சத்துக்களை உறிஞ்சி, கழிவுகளை வெளியேற்றுவதற்கு பிராணனும், அபாணனும் உதவி செய்கின்றன. தச வாயுக்களில் மிக முக்கியமானவை பிராணனும், அபாணனுமே. சிலர் உணவுப் பழக்கத்தை சரிவர கைகொள்வதில்லை. அவர்களுக்கு குடல் பகுதியில் அபாணன் அதிகரித்து விடும். இதனால் தொந்தி விழுவதுடன், எப்போதும் வாயு அண்டவாயுவாக அடிவயிற்றில் தேங்கி நின்று வியாதியை ஏற்படுத்தும். பிராணனையும் அபாணனையும் இணைக்காத வரை சமநிலை அவசியம். இணைத்த பிறகு அபாணனை அதிகப் படுத்த இருபது நிமிடம் சவாசனம் பயிறன்சி செய்து விட்டு பத்து சுற்று நாடி சுத்தி செய்ய வேண்டும். அல்லது நாவை மேலண்ணத்தில் வைத்து மூலபந்தம் போடாமல் சுவாசிப்பது போன்ற பயிற்சிகளைக் கடைபிடிக்கலாம். பிராணனை அதிகப்படுத்த பிராணாயாமம் செய்ய வேண்டும்

ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபட்ட பிறகு நேராக வீட்டுக்கு வரவேண்டும் வழியில் வேறெங்கும் செல்ல கூடாது என்று பெரியவர்கள் சொல்வது ஏன்?

 
ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபட்ட பிறகு நேராக வீட்டுக்கு வரவேண்டும் வழியில் வேறெங்கும் செல்ல கூடாது என்று பெரியவர்கள் சொல்வது ஏன்?

கோயிலுக்கு போனபிறகு வீட்டுக்கு தான் வரவேண்டுமே தவிர மற்ற இடங்களுக்கு போகக்கூடாது என்று எந்த சாஸ்திரமும் தடை சொல்லவில்லை கோயிலுக்கு சென்று வரும் வழியில் யாரோ ஒருவர் சாலையில் நோய்வாய்பட்டு கிடக்கிறார் என்று வைத்து கொள்வோம் அவரை அப்படியே விட்டு விட்டு வீட்டுக்கு வரமுடியுமா? அப்படி வந்தால் அது மனிதாபிமானம் ஆகுமா? என்னை கேட்டால் கோவிலுக்கு போய் இறைவனை வழிபடுவதை விட திக்கற்றவருக்கு உதவி செய்வதையே கடவுள் சிறந்த வழிபாடாக எடுத்துகொள்வார் என்று சொல்வேன்

ஆனாலும் நமது பெரியவர்கள் இப்படி சொல்வதற்கு எந்த காரணமும் இல்லாமலா இருக்கும் எதையும் யோசித்து பேசுவதே நமது பெரியவர்களின் இயல்பாகும் அதனால் இதற்குள்ளும் நல்ல காரணம் மறைந்திருக்க வேண்டும் அதை ஆழமாக சிந்தித்தால் உண்மை தெரியவரும்...

ஆலய வழிபாடு முடித்தவுடன் நமது மனம் குழப்பங்கள் நீங்கி மிகவும் தெளிவாக இருக்கும் நான் படும் கஷ்டங்களுக்கெல்லாம் கடவுள் நிச்சயம் நல்வழி காட்டுவார் என்ற நம்பிக்கை இதயம் முழுவதும் வியாபித்து இருக்கும் அந்த தெளிவோடும் நம்பிக்கையோடும் நேராக வீட்டிற்கு வந்தால் வீட்டில் காத்திருக்கும் பிரச்சனைகளை சிக்கல்களை மன தைரியத்தோடு எதிர்கொள்ளலாம் அல்லது நம் மனதில் இருக்கும் சாந்தி வீட்டில் உள்ளவர்களையும் பற்றிக்கொள்ளலாம் மாறாக வேறு எங்கோ செல்வோம் என்றால் ஆலயத்தில் பெற்ற நல்ல சிந்தனைகள் தடமாறி போக வாய்ப்புண்டு அதை தவிர்க்கவே நேராக வீட்டிற்கு வாருங்கள் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கலாம்

எனவே சாதரணமான நேரங்களில் பெரியவர்கள் சொன்னப்படி வீட்டிற்கு வந்துவிடலாம் தவிர்க்க முடியாத காரியங்கள் நம் முன்னால் இருக்கும் போது வீட்டுக்கு தான் போவேன் என்று அடம்பிடிக்க வேண்டிய அவசியமில்லை சிலர் இந்த மாதிரி விஷயங்களில் வீண் பிடிவாதம் பிடித்து அவசியமான அவசரமான காரியங்களை செய்யாமல் இருப்பது தவறு மட்டுமல்ல அறியாமையும் ஆகும்.

யார் உங்களின் உண்மை கடவுள் ?

யார் உங்களின் உண்மை கடவுள் ? "...

"சிவனா, விஷ்ணுவா, முருகனா, விநாயகனா ?"

"இத்தனை கடவுள்களை வைத்துக் கொண்டு எந்த இறைவனைத்தான் நீங்கள் வழிபடுவீர்கள்?...

உண்மைதான். இன்னும் ஆயிரமாயிரம் கடவுள்களும் இருக்கிறார்கள். சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள், விஷ்னு புராணம் படித்தால் விஷ்ணுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம்.

**முதலில் இந்துக் கடவுள்களை விமர்சிக்க நீங்கள் தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர்.

** சிவா என்றால் புணிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்ணு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன், இராமன் என்றால் ஒளி மிக்கவன்.

** இப்படி ஒவ்வொரு பெயர்களும் ஒரு தன்மையைதான் குறிக்கிறதே தவிர, தனித் தனி கடவுள்களை அல்ல. நீங்கள் பொறுத்தி பார்த்தால், இறைவனுக்கு இந்த அனைத்து பெயர்களும் பொருந்தும் அல்லவா ?

**கீதையில் கிருஷ்ணனும் “யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது என்று சொல்கிறார்”. இங்கே கிருஷ்ணன் யார் ? புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, பசுவிற்கு பக்கத்தில் நிற்பவன் மட்டும் அல்ல அவன். பரமாத்மா எனும் அனைத்திலும் வியாபித்து இருக்கும் இறைவன். அவனை நீங்கள் சிவனின் உருவத்திலும் நினைக்கலாம், முருகனின் உருவத்திலும் நினைக்கலாம், ஏன் ஏசு எனும் அரூபத்திலும் நினைக்கலாம்.

**இன்னும் சொல்லப்போனால் இறைவன் நம் எண்ணிக்கைகளுக்கு அடங்க மாட்டான்.அறிவுக்கு புலப்படாத இறைவனை, ஒன்று, இரண்டு, நூறு என்று நம்மால் எண்ணி தீர்க்க முடியாது.

**நீங்கள் ஒன்று என்று நினைத்தால் ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால் பல தெய்வங்களாக காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால் இல்லாமல் இருப்பான்.

**புராணங்கள் எனப்படும் தெய்வீக கதைகள், சாமான்ய மணிதர்களுக்கு இறைவனின் பல்வேறு தன்மைகளை குறித்த பல்வேறு விடயங்களை விவரித்து, அதன் மேல் ஒரு லயிப்பு ஏற்படும் வகையில் சுவாரஸ்யமாக சொல்கின்றன.

**இறைவனின் ஒவ்வொரு தன்மையும், ஒவ்வொரு விதமான உருவங்களில் சித்தரிக்கப்படுகிறது. இறைவனுக்கு எண்ணிடங்கா குணங்கள் அல்லது தண்மைகள் இருக்கின்றன, ஆகவே எண்ணிலடங்காத உருவங்களில் அவனை வழிபடுகிறாகள்.

மனிதவாழ்வின் அஸ்திவாரம்...


 
மனிதவாழ்வின் அஸ்திவாரம்...
* தர்மத்தை நாம் வாழ வைத்தால் தனது பங்காகத் தர்மம் நம்மை வாழ வைக்கும். தர்மத்தை நாம் அழித்தால் தர்மம் நம்மை அழித்து விடும். தர்மத்தின் அடிப்படையில் மட்டுமே நாம் செயல்களைச் செய்ய வேண்டும். இயன்றவழி வகைகளில் எல்லாம் தர்மத்தைப் பின்பற்ற வேண்டியது நம் கடமை.
ராமகாவியத்தைப் பாடிய கம்பன் தமது முடிந்த முடிவாக, ""அறம் வெல்லும்; பாவம் தோற்கும்'' இதுவே ராமகாதையின் சாரம் என்று குறிப்பிடுகிறார்.
* பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும். அதைச் செய்யமுடியாத போது பிறருக்கு தீங்கு செய்யக் கூடாது. ""நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், அல்லவை செய்தல் ஓம்புமின்!'' என்று வலியுறுத்துவதைப் புறநானூறு வலியுறுத்துவதைக் காணலாம்.
* மனிதன் காமம், பயம், பேராசை ஆகியவற்றுக்கு ஆட்படும்போது தான் அதர்மம் செய்கிறான். எனவே, இப்படிப்பட்ட தீயகுணங்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
* பாம்பு, தேள் போன்ற விஷஜந்துக்கள் நம் வீட்டில் புகுந்தால் எப்படி நாம் எச்சரிக்கையாக இருக்கிறோமோ அதுபோல, தீயகுணங்களிலிருந்து மனிதன் தன்னை காத்துக் கொள்ளாவிட்டால் அக்குணங்களுக்குஆளாகி பலியாகிவிட நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெரிய கட்டடத்தை அதன் அஸ்திவாரம் தாங்குகிறது. அதுபோல, மனித வாழ்க்கைக்கு தர்மமாகிய அறமே அஸ்திவாரம் என்று சாஸ்திரங்கள் பேசுகின்றன

ஓம்' காரத்தின் உள்ளொளி

ஓம்' காரத்தின் உள்ளொளியாய் விளங்குபவன் முருகன். ...
வேதத்தின் வித்தான "ஓம்" என்ற பிரணவத்தின் பொருளே சுப்பிரமண்யம் தான்.
'அ' காரோ விஷ்ணு ருத்ரிஷ்ட
'உ' காராஸ்து மகேச்வர:
'ம' காராஸ்து ஸ்ம்ருதோ பிரும்மா...
பிரணவஸ்தி த்ரியாத்மக:
அகார உகார மகாரம் இணைந்த பிரணவ ஸ்வரூபம் அவரே. அவரே பிரும்மா விஷ்ணு ருத்ர ஸ்வரூபி.
இவரே வேதத்தின் பொருள்....

Thursday, November 28, 2013



கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்!






கிருதயுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள்
திரேதாயுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள். (ஸ்ரீ ராமர் வாழ்ந்த யுகம் எனப்படுகிறது)
துவாபரயுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள். (ஸ்ரீ க்ருஷ்ணர் வாழ்ந்த யுகம் எனப்படுகிறது)
கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்.
(கலியுகத்தில் அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழ தொடங்குவங்குவார்களாம். (50க்கு50) , சில நேரம் தேவர் பல நேரங்களில் அசுரர். கடவுள் பாதி மனிதன் பாதி. அதனால் தான் இந்த காலத்தில் யாரையும் நிரந்தரமான நல்லவர்கள் என்று முழுமையாக நம்ப முடிவதில்லை.)
யுகங்களில் கலியுகம் குறைந்த வருடங்களைக் கொண்டது. இப்போது நாம் கலியுகத்தில் இருக்கிறோம். கலியுகம் பிறந்தது பிப்ரவரி 18, 3102 என்று காலக்கணக்கீட்டு நிபுணர்கள் கண்டறிந்து இருக்கிறார்களாம், ஆக இந்த 2010 ஆம் வருடம் கலியுகத்தின் 5112 ஆம் வருடம் ஆகின்றது என்கிறார்கள்.
அதாவது கலியுகம் முடிய இன்னும் சுமார் 4,26,888 வருடம் இருக்கின்றது என்கிறார்கள். கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.
ஆம், காலம் சக்கரம் அல்லவா!
இவற்றில் கலியுகத்தில் தர்மங்கள் சார்ந்த வாழ்க்கை சீர்குலையுமென்றும் கலியுகத்தின் முடிவில் அதர்மவாதிகளே உச்சமாக ஆட்சி செய்யும் தருணத்தில் கல்கி அவதாரம் நிகழும் என்றும் கூறப்படுகிறது. கலியுகத்தில் அப்படி என்னென்ன நடக்குமாம். பார்ப்போம்..
கலியுகத்தில் தர்மம், ஸத்யம், பொறுமை, தயை, ஆயுள் தேஹ பலம், ஞாபகம் ஆகிய இவைகள் நாளுக்கு நாள் குறையும்.
கலியில் பணமுள்ளவனே மேலான குலத்தில் பிறந்தவன் ஆவான்.
பணமுள்ளவன் எவனோ அவனே ஆசாரம் உள்ளவனாக கருதப்படுவான்.
பலமுள்ளவன் எவனோ அவன் மட்டுமே தர்மம், ஞாயம் போன்றவற்றை தீர்மானிப்பான்.
மணம் செய்து கொள்பவர்கள் அவரவர் சொந்த விருப்பத்தின் படியே இயங்குவார்கள். குலம் மறைந்து போகும்.
மனிதர்கள் அவர்களின் குணங்களைக் கொண்டு சிறந்தவர்களாக போற்றப்பட மாட்டார்கள்.
பிராமணர்களுக்கு பூனூல் அடையாளமாக மட்டுமே இருக்கும்.
அதிகமாகப் பேசுபவனே பண்டிதன் என்ற புகழை அடைவான்.
(மேடைக்கு மேடை பேசியே மயக்கும் அரசியல் வாதிகளைப் பார்த்தாலே தெரிகிறதே!)
ஏழையாக இருப்பவர்களே பழிபாவங்களுக்கு ஆளாவார்கள். பணமுள்ளவனே நல்லவன் என்று பெயரெடுப்பான்.
மனிதர்கள் அதிகம் சாப்பிடுபவர்களாகவும், காமவெறி கொண்டவர்களாகவும், தரித்திரர்களாகவும் இருப்பார்கள்.
ஆணும் பெண்ணும் சம்மதித்து புணர்ந்தாலே விவாஹம் செய்து கொண்டதாகக் கருதப்பட்டு விடும். விவாஹம் தேவையற்றதாகும். (விவாகரத்தை வரவேற்கும் பெரிய கூட்டமும் திருமணம் தாலி போன்றவற்றை அவமதித்து வெளியேறத்துடிக்கும் கூட்டமுமே இதற்கு அறிகுறியாகிறார்கள் என்று தோன்றுகிறது)
ஸ்த்ரீகள் பதிவிரதைகளாக இருக்க மாட்டார்கள். வேசிகளைப் போலவே நடந்துகொள்பவராக இருப்பார்கள். ஸ்த்ரீகள் வெட்கம் இல்லாதவர்களாகவும், கடுஞ்சொல் பேசுபவர்களாகவும், திருட்டுத்தனம், மாயை, பிடிவாதம் அதிகம் கொண்டவர்களாக இருப்பர்.
மனிதர்கள் பூமியை தங்களுடையது என்று சொல்லிக்கொள்வார்கள். பூமையை சொந்தம் கொண்டாட தந்தையுடன் சண்டையிடுவார்கள். சகோதரர்கள் அடித்துக் கொள்வார்கள்.
அருகிலிருக்கும் கோவிலை விட தூரதேசத்தில் இருக்கும் க்ஷேத்திரமே புண்ணிய க்ஷேத்திரமாக கருதப்படும்.
புகழுக்காக மட்டுமே தானங்கள் செய்யப்படும்.
மயிர் வளர்ப்பு அழகுக்கான முக்கியப் பொருளாகிவிடும்.
தைரியமாகப் பேசுபவனே சபைக்குரியவனாகக் கருதப்படுவான்.
(இப்போதெல்லாம், உதார் விடுறவன் தானே பெரிய ஆள்! ரௌடிகள் வளர்வதும் இப்படித்தானோ!)
திருடர்கள், கருணையற்றவர்கள் மற்றுக் அயோக்கியர்கள் போன்றவர்களே அரசனாக இருப்பார்கள்!
அரசாள்பவர்கள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். வேதமார்கம் கெடுக்கப்படும்.
ப்ரஜைகளுடைய பணங்களை அரசர்களே திருடிக்கொள்வார்கள்! அவர்களால் உபத்திரவிக்கப்பட்டு மக்கள் மலைகளிலும் காடுகளிலும் ஒளிந்து வாழ நேரிடும்.
பருவகாலங்கள் மாறிப்போகும். மக்கள் குளிர், காற்று, வெயில், மழை, பசி, தாகம், வியாதி, கவலை இவர்களால் கஷ்டப்படுவார்கள்.
கலியுகத்தில் இருபது, முப்பது வயதே பரம ஆயுளாகும்.
பசுக்கள் பாலிலும் உருவத்திலும் ஆடுகள் போல் ஆகிவிடும். கறக்காத பசுவை பாதுகாக்கவோ வளர்க்கவோ விரும்பமாட்டார்கள்.
(அடிமாடு கொண்டு செல்லும் லாரியைப் பார்த்தாலே தெரிகிறதே)
ஜாதிகளெல்லாம் பெரும்பாலும் சூத்திர ஜாதிகளாகிவிடும்.
சந்நியாசிகள் எல்லாம் குடும்பஸ்தர்கள் போலவே நடந்துகொள்வார்கள். பணத்திலேயே மிக்க ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆண்களுக்கு பெண்டாட்டி வீட்டு பந்தங்களே முக்கியமானவர்களாகிப் போவார்கள். மச்சினி, மைத்துனர்களிடம் பிரிமயாகப் பழகுவார்கள். சொந்த தந்தை, சகோதர சகோதரிகளிடம் பிரியம் வைக்க மாட்டார்கள்.
மரங்கள் எல்லாம் வன்னி மரங்களாகவே இருக்கும்.
மேகங்களில் மின்னல்கள் அதிகமாக இருக்கும். வீடுகள் மகிழ்ச்சியற்று சூனியமாகவே காட்சியளிக்கும்.


கைகளை மடக்கி கடவுளை பார் !

கைகளை மடக்கி கடவுளை பார் !

அவதாரங்கள் என்று வந்துவிட்டாலே மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களை பற்றி மட்டுமே பலருக்கு தெரியும் சிவபெருமான் அவதாரங்கள் எடுத்திருக்கிறாரா? இல்லையா? என்று ஒருவர் கூட யோசித்து பார்த்து கேள்விகள் கேட்டிருக்க மாட்டோம். போக சுகத்தை அள்ளித்தந்து முக்தி தருகின்ற பெருமாள் மட்டுமல்ல யோக மார்க்கத்தை மனிதகுலத்திற்கு தந்த சிவபெருமான் கூட சில அவதாரங்களை எடுத்திர்க்கிறார். சிவபெருமானின் அவதாரங்கள் பக்தர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அவ்வளவாக பேசபடாததற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். ஒன்று பெருமாளின் அவதாரம் போல் சிவனின் அவதாரம் மனதை சுலபமாக கவரக்கூடியதாக இல்லை இரண்டாவது சிவன் எடுத்த அவதாரங்கள் மிக கடினமான முக்தி வழியை காட்டுவதாக இருப்பது.

சிவபெருமான் விறகு வெட்டியாக பிட்டுக்கு மண் சுமப்பவராக சுந்தரரை தடுத்தாட்கொள்ள பித்தனாக பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும் அவற்றில் மிக முக்கியமானது தஷ்ணாமூர்த்தி அவதாரமாகும். இந்த அவதாரத்தின் மூலம் சாதாரண மனிதன் தனது மனித நிலையிலிருந்து படிப்படியாக மாறி கடவுள் நிலையை அடைவதற்கான பல வழிவகைகளை அவர் சொல்லியிருக்கிறார். அதனால் தான் தஷ்ணாமூர்த்தி அவதாரத்தை யோக தஷ்ணாமூர்த்தி என்றும் ஜெகத்குரு என்றும் ஞானிகள் போற்றி வணங்குகிறார்கள்.

பகவான் தஷ்ணாமூர்த்தியாக வந்தபோது சனகாதி முனிவர்களுக்கு நான்மறையை உபதேசித்து உலக வாழ்வுக்கான சரியான இலக்கணம் என்று கருதபடுகிற அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கு தத்துவங்களையும் வரிசை படுத்தி சொல்லி முடித்து உலக வாழ்வில் பரிபூரண நிலையை அடைந்தவர்கள் இறைவனோடு நேரடியாக தொடர்பு கொள்ள விரும்பினால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன வழிமுறையை பின்பபற்ற வேண்டும்? என்பதை நாளை சொல்கிறேன் நீங்கள் இன்று போய் நாளை வாருங்கள் அப்படி நீங்கள் வரும் போது எனது உபதேசம் வார்த்தைகளாக இருக்காது நீங்கள் அனுமானித்து புரிந்துகொள்ளும் வண்ணம் குறியீடாக இருக்கும் என்று கூறி அனுப்பி வைத்தார்.

மகாகுருவான ஸ்ரீ தஷ்ணாமூர்த்தி பகவானின் கட்டளையை ஏற்ற சனகாதி முனிவர்கள் அடுத்த நாள் சூரிய உதையத்திற்கு முன்பே குளித்து முடித்து சிவ சின்னங்களை அணிந்து குருநாதரை தரிசனம் செய்ய சென்றார்கள். அபோது அவர்கள் அங்கே கண்ட காட்சி மிகவும் வியப்பாகவும் சிலிர்ப்பை ஏற்படுத்தும் வண்ணமும் இருந்தது. தென்முக கடவுள் யோக சமாதி நிலையில் அமர்ந்திருந்தார். அவரின் இரண்டு கரமும் தொடைகளின் மீது மேல் நோக்கிய வாறு இருந்தது. கைவிரல்களில் ஆள்காட்டி விரலும் கட்டை விரலும் இணைந்திருக்க மற்ற மூன்று விரல்களும் தனித்தனியாக ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உரசாமல் பிரிந்து இருப்பதை கண்டார்கள்.

பிரிந்து நிற்கும் நடுவிரல் மோதிரவிரல் சுண்டுவிரல் ஆகிய மூன்று விரல்களும் ஆணவம், கர்மா, மாயை ஆகிய தத்துவங்களை குறிப்பதாகவும் அந்த மும்மலங்கள் விலகிய ஜீவாத்மாவாகிய ஆள்காட்டி விரல் பரமாத்மா என்ற கட்டை விரலோடு இணைந்திருக்கும் தத்துவத்தை புரிந்து கொண்டார்கள். அதாவது ஒரு மனிதன் கடவுள் நிலையை அடைய வேண்டுமானால் அவனுக்கு தவம் என்பது முக்கியம் அந்த தவத்திற்கு ஆசனமும் முத்திரையும் மிக தேவையானது என்பதை தஷ்ணாமூர்த்தி பகவான் சொல்லாமல் சொன்னார். ஆசனம் என்றால் என்னவென்று பலருக்கு புரியும் முத்திரை என்பதை பற்றி ஒரு சிலர் மட்டுமே அறிவார்கள். அதிலும் குறிப்பாக தஷ்ணாமூர்த்தி காட்டிய முத்திரையின் அடையாளம் சின்முத்திரை என்பது வெகு சிலருக்கே தெரியும்.

முத்திரைகள் பல உண்டு அவற்றில் சின் முத்திரை என்பதை முத்திரைகளின் தலை ராஜ முத்திரை என்றே சொல்லலாம். கோவில்களில் உள்ள தெய்வங்களின் திருவுருவ சிலைகள் எதாவது ஒரு முத்திரையை காட்டியவண்ணம் இருப்பதை நாமறிவோம். இந்த முத்திரைகள் அழகுக்காக சிற்பங்களின் கலைத்தன்மையை எடுத்து காட்டுவதற்காக அமைக்கப்பட்டது அல்ல அதில் பல அற்புதமான சங்கதிகள் அடங்கி உள்ளன. நமது முன்னோர்கள் கடுகை தரித்து கடலை புகுத்துவதில் வல்லவர்கள் மிக சிறிய காரியத்திற்குள்ளேயே மிகபெரிய விஷயங்களை அடக்கி விடுவார்கள். அதே நேரம் அறிவை உழைத்து பெற எவன் தகுதி வாய்ந்தவனாக இருக்கிறானோ அவனுக்கு மட்டுமே உண்மைகள் விளங்க வேண்டும் என்ற கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து பல விஷயங்களை சூசகமாகவே தெரிவிப்பார்கள். அவற்றில் ஒன்று இந்த சின்முத்திரை.

முத்திரைகள் ஒவ்வொன்றும் உலகத்தில் உள்ள ஜீவராசிகளை இயக்குகின்ற தேவதைகளை அல்லது தெய்விக சக்திகளை குறிப்பதாகும். தெய்வ உலகத்தோடு மனித ஜென்மங்கள் தொடர்பு வைத்து கொள்ள முத்திரைகள் காரணமாக இருக்கிறது அதாவது கண்ணுக்கு தெரியாத தெய்வீக சக்திகளுக்கும் நமக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்துவது முத்திரைகளே இந்த முத்திரைகளின் பயனாகவே மனிதனின் பிராத்தனைகள் தெய்வ சக்திகளிடம் சென்றடைந்து அவர்கள் தருகின்ற அருள்சக்தி நம்மிடம் வந்து சேருகிறது. இறைசக்திகள் நமக்கு தருகின்ற இத்தகைய ஆற்றலால் நாம் பெறுகின்ற பயன்கள் ஒன்றிரண்டு அல்ல ஏராளம் மிக குறிப்பாக சொல்வது என்றால் சின்முத்திரையின் மூலம் நாம் அடைகின்ற உடல் மற்றும் உளவியல் ரீதியிலான பயன்கள் நிறையவே உண்டு என்று சொல்ல்லலாம்.

ஒரு விரலை இன்னொரு விரலோடு சேர்த்து வைப்பதில் என்ன பெரிய பயன் கிடைத்துவிட போகிறது. என்று சிலர் நினைக்க கூடும். நானும் அப்படி தான் ஆரம்பகாலத்தில் நினைத்திருந்தேன். ஆனால் காலம் செல்ல செல்ல மனிதர்களை பற்றிய அனுபவ அறிவு முதிர்ச்சி அடையும் போது நமது முன்னோர்கள் சொல்லி சென்ற எந்த விஷயமும் தவறானது அல்ல மிகவும் பயனுடையது என்பதை புரிந்துகொண்டேன். ஹஸ்த ரேகை சாஸ்திரம் என்ற கைரேகை சாஸ்திரத்தை நான் படிக்கும் ஆரம்ப கட்டத்தில் அதில் சொல்லப்பட்ட சில விஷயங்கள் எனக்கு வியப்பை தந்தன. ஆனால் அவைகளை அனுபவத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது பெரிய உண்மைகள் பல எனக்கு தெரிந்தன.

உதாரணமாக இரண்டு கைகளையும் எப்போதும் ஆடைகளுக்குள் மறைத்து வைத்து கொண்டு இருப்பவர்கள் மற்றவர்களை பழிவாங்குவதில் கொக்கை போல காத்திருப்பார்கள் என்றும் கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு நடப்பவர்கள் ஆளுமை தன்மை அதிகமாக உடையவர்கள் என்றும் படித்திருக்கிறேன். அதை பரிசோதனை செய்து பார்த்த போது அது வெறும் படிப்பல்ல அனுபவ சத்திய வார்த்தை என்பதை தெரிந்து கொண்டேன். அதே போலவே சாதாரணமாக விரல்களை மடக்காமல் கைகளை துவைய வைத்து கொண்டிருந்தால் மனதில் குழப்பங்களும் சஞ்சலங்களும் மட்டுமே வரும் உறுதி இருக்காது மன உறுதி அடைய வேண்டுமானால் வேலை நேரத்தில் தவிர மற்ற நேரங்களில் கைகளை இறுக மூடிக்கொள்ள வேண்டும் அதுவே பழக்கமாகி விட்டால் நாளடைவில் அசாத்தியமான மன துணிச்சல் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளதை என் சொந்த வாழ்விலும் கடைப்பிடித்து அதனால் நல்ல பலனை இதுவரை பெற்றும் வருகிறேன்.

அதன் அடிப்படையில் முத்திரையை பற்றி நமது முன்னோர்கள் சொல்லியிருக்கும் சங்கதிகளை நாம் புறக்கணித்து விட கூடாது. அவைகளை பயன்படுத்தி பல நல்ல பலன்களை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் மேற்குலக விஞ்ஞான ஆய்வு படி சின்முத்திரையை நாம் முறைப்படி செய்தால் உடம்பில் இரத்த ஓட்டம் சுறுசுறுப்பாக இருக்கும் கோபம் குறைந்து மன இறுக்கம் மறையும் நல்ல நினைவாற்றல் ஏற்படும் தூக்கமின்மையும் அதீத தூக்கமும் பக்கத்திலயே வராது. மனநோய் கூட குணமாகிவிடும் என்று சொல்லபட்டிருக்கிறது.

நமது நாட்டு ஞானிகள் சின்முத்திரையை அன்றாட வாழ்வில் சிறந்த பழக்கமாக கொண்டால் மனம் எப்போதுமே மகிழ்வாக இருக்கும் துக்கம் என்பதே நம்மை தீண்டாது மன ஒருநிலைப்பாடு ஏற்படுவதனால் பிரபஞ்ச ரகசியத்தையும் இறைவனோடு ஐக்கியமாகும் நிலையையும் மனிதன் பெறலாம் என்று சொல்கிறார்கள். இது நம்மை திருப்தி படுத்துவதற்காக சொல்லப்பட்டவைகள் அல்ல நம் வாழ்வை சீரமைப்பதற்காக கூரியவைகளே ஆகும். இது உண்மையா? பொய்யா? என்பதை அறிந்துகொள்ள நடைமுறைபடுத்தி பார்க்கலாம்.

நீங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ அல்லது பேருந்து பயணத்திலோ இருக்கும்போது கூட ஆள்காட்டி விரலையும் கட்டைவிரல் நுனியையும் இணைத்து வைத்து பாருங்கள் இந்த பழக்கம் தொடர தொடர உங்கள் மனவளம் வளருவதை கண்கூடாக காண்பீர்கள். சாதாரண பலன்கள் வேண்டாம் இறை அனுபவம் வேண்டும் என்பவர்கள் பத்மாசனத்தில் அமர்ந்து சின்முத்திரையை பழகி பாருங்கள் இறைவன் என்ற மகர ஜோதி உங்கள் புருவ மத்தியில் சுடர்விடுவதை காண்பீர்கள்.

மனப் புயலை அடக்கி விடு

மனப் புயலை அடக்கி விடு

* தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.

* சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி அடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும் வென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக மதிப்பவனுமே யோகியருக்கெல்லாம் தலைசிறந்த யோகியாகிறான்....

* எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப் படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.

* ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை அடக்க வேண்டும்.

* வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது. அதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால நேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக் கொண்டிருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை
.
* சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும், விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல் இருப்பான்

- பகவத் கீதை.

குரு என்பவர் யார் !!

குரு என்பவர் யார் !!

குரு மரணப் படுக்கையில் இருந்தார். அவரிடம் ஒரு சிஷ்யன் கேட்டான்: சுவாமி! உங்கள் குருநாதர் யார்? எனக்கு ஆயிரக்கணக்கான ஆசான்கள்.. இருப்பினும் மூவரைச் சொல்கிறேன். முதல் குரு ஒரு திருடன். ஒரு முறை நான் ஒரு கிராமத்தை அடைந்த போது இருட்டிவிட்டது. வீட்டுக் கதவுகள் எல்லாம் மூடியிருந்தன. கடைசியில் திருடன் ஒருவன் ஒரு வீட்டிற்குள் நுழைவதற்காக சுவரில் கன்னமிட்டுக் கொண்டிருந்தான். நான் அவனிடம் தங்குவதற்கு இடம் கேட்க, உங்களுக்கு ஒரு திருடனுடன் தங்குவதில் ஆட்சேபணை இல்லையென்றால் என்னுடன் தங்கலாம் என்றான். அவனுடன் ஒரு மாதம் தங்கினேன். தினமும் இரவில் அவன், நான் வேலைக்குப் போகிறேன். நீங்கள் வீட்டில் தியானம் செய்யலாம்; அல்லது ஓய்வெடுக்கலாம் எனச் சொல்லிவிட்டுப் போவான். அவன் திரும்பி வந்ததும் ஏதாவது கிடைத்ததா? என்று கேட்பேன் அவன், இன்று ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால், நாளை மறுபடியும் முயற்சி செய்வேன்.

கடவுள் அருள் இருந்தால் கிடைக்கும்! என்று நம்பிக்கையுடன் பதில் சொல்வான். நான் தியானம் செய்யும்போது, ஒரு பலனும் இல்லையே என பலமுறை நம்பிக்கை இழந்திருக்கி...றேன். உடனே அந்தத் திருடனின் திட நம்பிக்கை நினைவுக்கு வரும். உடனே, கடவுள் அருள் கிட்டினால் நாளை நமக்கு ஞானம் பிறக்கும் என்று உற்சாகமடைவேன்! என்னுடைய அடுத்த குரு ஒரு நாய். நான் தண்ணீர் பருக ஒரு நதிக்குச் சென்றேன். அங்கு ஒரு நாய் வந்தது. நீர் குடிக்க வேண்டி நதியை நோக்கிக் குனிந்தது. அங்கே தன் பிம்பத்தைப் பார்த்து இன்னொரு நாய் இருப்பதாக எண்ணி பயந்து. குரைத்துக்கொண்டே ஓடியது; மீண்டும் தாகத்தால் வரும், ஓடும். இப்படிப் பலமுறை செய்த பின் நதியில் குதித்தது. பிம்பம் உடனே மறைந்துவிட்டது! பயங்களை வென்று செயலில் இறங்க வேண்டும் என்பது இதன் மூலம் புரிந்தது.

மூன்றாவது ஒரு சிறுவன். நான் ஒரு ஊருக்குள் சென்றபோது, அவன் எரியும் மெழுகுவர்த்தியுடன் வந்து கொண்டிருந்தான். அவனிடம், மெழுகுவர்த்தியின் ஒளி எங்கிருந்து வந்ததென்று உன்னால் சொல்ல முடியுமா? என்று கேட்டேன், உடனே சிறுவன் சிரித்துக்கொண்டே மெழுகுவர்த்தியை வாயால் ஊதி அணைத்துவிட்டு, ஒரு வினாடி முன் ஒளி இருந்தது; இப்போது இல்லை. அது எங்கே போயிற்று? நீங்கள் சொல்லுங்கள்! என்றான் என்னிடம். நான் அதிர்ச்சியில் பேச்சிழந்து போனேன். மெத்தப் படித்த அறிவாளி என்ற அகங்காரம் ஒரு நொடியில் மாயமாயிற்று! அன்றிலிருந்து அகங்காரப்படுவதை விட்டொழித்தேன். சிஷ்யன் என்றால் கற்றுக்கொள்ளத் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதாவது, கற்றுக் கொள்ளக் கற்றுக்கொடுப்பதே ஆசிரியரின் தலையாய கடமை என்று குரு சொல்லி முடிக்க, சீடர்கள் தெளிவடைந்தனர்

இதுவே உண்மைப் பொருள்.!



.
இதுவே உண்மைப் பொருள்.!

எனக்கு வெகு நாட்களாகவே ஒரு சந்தேகம் இருந்து வருகிறது. சிவனுடைய ஓம் நமச்சிவாய என்ற பஞ்சாச்சர மந்திரத்திற்கு என்ன பொருள் அது எதை குறிப்பாக சுட்டிக்காட்டுகிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தத்துவங்கள் மறைபொருள்கள் என்ற ரீதியில் இல்லாமல் எளிமையான பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். காரணம் என்னால் அவைகளை புரிந்து கொள்ள இயலாது. தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

நீங்கள் தத்துவங்கள் வேண்டாம் மறைபொருளான விளக்கங்கள் வேண்டாம் என்று சொல்வதை முற்றிலுமாக ஏற்றுகொள்கிறேன். காரணம் கடவுளும் கடவுளின் திவ்விய நாமக்களும் அவைகளுக்கு அப்பாற்பட்டவைகள். மறைபொருளான விளக்கங்கள் வித்தியா கர்வத்தை கொடுக்கும் தத்துவங்கள் என்பதோ சொல்லாடலின் மயக்கத்தை கிரக்கத்தை கொடுக்கும் கடவுள் மயக்கம் கிரக்கம் கர்வம் இவைகள் அனைத்தையும் தாண்டியவன் அல்லவா?...

அம்பலத்தில் ஆடுகின்ற என் அப்பனின் சொத்துக்கள் அனைத்துமே மேதாவிகளாலும் அறிவாளிகளாலும் புரிந்து கொள்ள முடியாது. ஒரு குழந்தையை போல இப்போது தான் புதிதாக பிறந்தோம் என்ற மனநிலையில் எவன் இருக்கிறானோ அவனால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். கரையில் நின்று கடல் அலையை ரசிக்கும் கவிஞனுக்கும் கடலுக்குள் இறங்கி படகு விடும் மீனவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லாவா?

கவிஞன் கடல் அழகை கற்பனையில் மட்டுமே ரசிக்கிறான் எண்ணங்களால் மட்டுமே அனுபவிக்கிறான் மீனவன் அப்படி அல்ல. அவனுக்கு கற்பனை செய்ய தெரியாது சிந்தனை குப்பைகளும் அவனிடத்தில் கிடையாது. அறிவாளிகள் கவிஞர்களை போல பக்தர்கள் மீனவனை போல எனவே நாம் மீனவர்களாக இருப்பதே இறைவனை அறிந்து கொள்ள அறிந்து அவனோடு கலந்து ஒட்டி உறவாட சரியான வழி.

நமது இறைவழிபாடு என்பது வெறும் பிராத்தனைகளால் தொழுகை முறைகளால் உருவானது அல்ல. அண்ட சராசரங்களில் நிறைந்துள்ள ஆகர்ஷன சக்திகளோடு தொடர்பு கொண்டதாகும். எனவே இறைவனது திருப்பெயர்களும் மந்திரங்களாக அயனவெளியில் சஞ்சரிக்கின்ற அதிர்வலைகளாக இருக்கிறது.

இதன் அடிப்படையில் பஞ்சாசரத்தில் முதலாக வருகின்ற ஓம் உலகின் மூல ஒலியான பிரணவத்தை காட்டுகிறது. சி - என்பது சிவபெருமானையும், வா - என்பது அம்பாளையும், ய -என்பது மனிதர்களான ஜீவன்களையும் நம - என்பது ஜீவன்களை பற்றியுள்ள மாயை ஆணவம் கர்மம் என்ற மும்மலத்தையும் காட்டுவதாகும். அதாவது மலங்களால் சூழபட்டிருக்கின்ற நான் அவற்றிலிருந்து விடுபட அம்மையப்பனின் பாதங்களை பற்றி கொள்கிறேன் என்பதை ஓம் நமசிவாய என்ற மூல மந்திரத்தின் எளிய பொருள். இதுவே உண்மை பொருள்.

தண்ணீர் விடுங்கள்.....

தண்ணீர் விடுங்கள்.....

* எங்கு மக்கள் துன்பப்படுகிறார்களோ, அங்கே வலுவில் சென்று நம்மால் ஆகக்கூடியதை எல்லாம் செய்ய முயல வேண்டும். பணத்தாலோ, உடலாலோ, வாக்காலோ பிறருக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டியது நம் கடமை.

* தினமும் செடி கொடிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். மிருகங்களுக்கு அன்போடு உணவு கொடுக்கவேண்டும். வாயில்லா ஜீவன்களுக்கு பரிவு காட்டுவது அவசியம். ஒருபோதும் அவற்றைக் கொடுமைப்படுத்தக் கூடாது....

* பக்தி இல்லாமல் வெறுமனே கடமையில் ஈடுபடுவது கூடாது. கடவுளே நம் நன்மைக்காக கடமைகளை விதித்து, அதற்கான பலனையும் தருகிறார்.

* மனம் நாலாதிசைகளிலும் வெறிநாய் மாதிரி ஓடிக் கொண்டிருக்கிறது. அதை இடைவிடாத முயற்சியாலும் பக்தி உபாசனையாலும் கட்டுப்படுத்த வேண்டும்.

* எப்போது மனதில் ஆசை முளைக்கிறதோ அப்போதே துன்பத்திற்கும், அழுகைக்கும் அடித்தளம் உண்டாகி விட்டது என்று அர்த்தம்.

- காஞ்சிப்பெரியவர்

பொறுமையே மிகவும் சிறந்த தவம்

பொறுமையே மிகவும் சிறந்த தவம்

* இறைவன் ஒருவனே என்றாலும், எண்ணற்ற தோற்றங்களில் அவன் காட்சி தருகிறான். அனைத்து உயிர்களையும் படைத்து காத்து அருள்புரிபவன் அவனே.

* ஒவ்வொருவரும் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கின்றனர். ஆனால், உள்ளத்தில் அன்பு இல்லாமல் வெறும் உச்சரிப்பால் மட்டுமே அவனை அடைய முடியாது....

* செல்வச்சீமான் என்றாலும், நாடாளும் மன்னன் ஆனாலும் எல்லா உயிர்களும் இறைவன் முன் சமமே. சிறு எறும்பும் இறைவனின் அன்புப்படைப்பே.

* சகதி நிறைந்த சேற்றில் பிறக்கும் தாமரை, அதிலிருந்து எப்படி விலகி இருக்கிறதோ, அதுபோல வாழ்வில் பட்டும் படாமலும் இருக்கப் பழகுங்கள்.

* நன்மை செய்தவர்க்குத் திருப்பி நன்மை செய்வது உலக இயல்பு. ஆனால், தீமை செய்தவர்க்கும் நன்மை செய்வது உத்தமருக்குரிய உயர்ந்த குணம்.

* பொறுமையை விடச் சிறந்த தவம் வேறொன்றும் உலகில் இல்லை. திருப்தியை விடச் சிறந்த இன்பம் இல்லை. மன்னிப்பதை விட மகத்தான ஆயுதம் வேறில்லை. இவற்றை வாழ்வில் கடைபிடியுங்கள்.

இனிமேலாவது திருநீறு பூசுங்க!.......

இனிமேலாவது திருநீறு பூசுங்க!.......

சிவசின்னங்களான திருநீறு, ருத்ராட்சத்தை அணிவது மட்டுமின்றி பார்த்தாலே புண்ணியம்.இதனை விளக்குவதற்காக வாரியார் கூறும் கதை இது.:

சிதம்பரத்தில் நெசவாளி ஒருவன் இருந்தான். சைவனாகப் பிறந்தும், விபூதி அணிய மாட்டான்.தானுண்டு தன் வேலையுண்டு என துணி நெய்தபடி இருப்பான். ஒருநாள் மகான் ஒருவர்கோயிலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். நெசவாளியின் மனைவி, தன்கணவரையும் அவரிடம் ஆசி பெற வருமாறு அழைத்தாள். அவன் மனைவியிடம், ""ஏழைகளுக்குபூஜை செய்ய நேரமேது? இருந்தால் எல்லாம் செய்யலாம். நாம் நெய்தால்தான் அடுப்பு எரியும்.எனக்கு விபூதி பூசக் கூட நேரம் கிடையாது,'' என்றான். அவளோ, "இந்த உடம்புக்காகப் பாடுபடும்நீங்கள், உயிருக்காகவும் பாடுபடவேண்டாமா?.'' என கேட்டாள். நெசவாளிக்கு கோபம் வந்துவிட்டது. ""அடியே! வேலையை கெடுக்காதே! நீ போய் சிவபூஜை செய். நீ செய்யும் பூஜையில்எனக்கும் பங்கு கிடைக்கும், போ...போ...'' என விரட்டினான். அவள் விடாக்கண்டி. "நான்சாப்பிட்டால் உங்கள் வயிறு நிரம்புமா?,'' என்று எதிர்க்கேள்வி கேட்டாள். நெசவாளி அதை காதில்வா...ங்கவே இல்லை. அவன் அவளுடன் செல்ல மறுத்துவிட்டான்.
அப்போது, நெசவாளியின் வீட்டு வழியாகவே, அந்த மகான் வந்து கொண்டிருந்தார். நெசவாளியின்மனைவி ஓடிச்சென்று அவரிடம் ஆசி பெற்றாள். நெசவாளியோ தறியை விட்டுஇறங்கவில்லை. மகான் அவனருகே வந்தார். "தம்பி! மனிதப்பிறவி மிக அரியது. அதை வழிபாடுசெய்து பயனுடையதாக்கிக் கொள். சிவசின்னமான திருநீறு தரித்துக் கொள்,'' என்றார். "சுவாமீ!எனக்கு திருநீறு மீது வெறுப்பு கிடையாது. ஏழையான எனக்கு நெய்வதற்கே நேரம் போதவில்லை,இதில் வழிபாட்டுக்கு ஏது நேரம்?'' பதிலளித்தான். "மகனே! நீ திருநீறு பூசவேண்டாம். திருநீறுஅணிந்த யாராவது ஒருவரை பார்த்தபின் தினமும் சாப்பிடு,'' என்றார். நெசவாளி தலையசைத்தான்.
பக்கத்து வீட்டில், தினமும் திருநீறு பூசும் பழக்கமுள்ள மண்பாண்டத் தொழிலாளியை பார்க்கமுடிவெடுத்தான். அவர், நெசவாளியிடம் மூக்குப்பொடி கேட்பதற்காக வருவார். ஜன்னல் வழியேகையை நீட்டுவார். அப்போது பொடி கொடுத்தபடி அவரது முகத்தைப் பார்ப்பான். "கொண்டாசாப்பாடு'' என மனைவியை அழைப்பான். அவள் கூழைக் கொடுத்ததும் "கடகட' என குடித்துவிட்டுநெய்ய ஆரம்பிப்பான்.
ஒருநாள் குயவர் வரவில்லை. நேரமானதால் நெசவாளிக்கு பசித்தது. இருந்தாலும் பொறுத்துக்கொண்டு வேலை செய்தான். பசி தாளவில்லை. தறியை விட்டு இறங்கி, குயவரைத் தேடிப்போனான். அவர் மண்ணெடுக்க ஆற்றுக்குச் சென்றிருந்தார். இவனும் அங்கு சென்றான். அங்குகுயவர் மண்வெட்டியால் பள்ளம் தோண்டிக் கொண்டு இருந்தார். அப்போது "டங் டங் ' என சத்தம்கேட்டது. அந்த இடத்தில் செப்புக்குடத்தில் தங்கக்காசுகள் புதையலாக இருந்தது. ஆச்சரியத்துடன்அக்குடத்தை எடுத்த மண்பாண்டத் தொழிலாளி நிமிர்ந்து பார்த்தார். நெசவாளி நின்றார். குயவரின்திருநீறு பூசிய முகத்தைப் பார்த்தவுடனேயே வீட்டுக்கு திரும்பி விட்டார்.

நெசவாளி, தான் புதையல் எடுத்ததைப் பார்த்துவிட்டு ஓடுவதாக நினைத்த, பாண்டத்தொழிலாளிபுதைய<லுடன் அவசரமாக வீட்டுக்கு வந்தார். நெசவாளியின் வீட்டுக்குச் சென்று, பாதிதங்கக்காசுகளை நெசவாளி மனைவியிடம் ஒப்படைத்தார். அவள் கணவரிடம் விஷயத்தைதெரிவித்தாள். நெசவாளியிடம் அவள், "நீறணிந்த நெற்றியைப் பார்த்ததற்கே இவ்வளவு நன்மைஎன்றால், பூசினால் எவ்வளவு நல்லது! இனிமேலாவது திருநீறு பூசுங்க!,'' என்று வேண்டிக்கொண்டாள். அவனும் மகானிடம் தீட்சை பெற்று சிவபூஜை செய்யத் தொடங்கினான்.

உழைப்பு:-

உழைப்பு:-


ஒரு துறவி தன பயணத்தில் ஒரு ஊருக்கு வந்தார்.அப்போது நன்பகல்.கடுமையாய் வெயில் அடித்துக் கொண்டிருந்தது அந்த ஊரில் கடுமையான வறட்சி.துறவிக்கோ கடுமையான தண்ணீர் தாகம்.அலைந்து பார்த்தும் எங்கும் நீர் கிடைக்கவில்லை.அப்போது ஒரு இளைஞன் தன வயலில் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டு இருந்ததைக் கண்டு அங்கு விரைந்து அவனிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார்.அவனும் தண்ணீர் கொடுக்க அவருக்கு தாகம் தீர்ந்தது.அவர் இளைஞனிடம் சொன்னார்,''தம்பி,நீ கொடுத்து வைத்தவன்.ஊரே வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது உன் நிலம் மட்டும் பசுமையாக இருக்கிறது.உன் கிணற்றில் மட்டும்தான் நீர் இருக்கிறது.கடவுளின் பூரண அருள் உனக்கு இருக்கிறது.''இளைஞன் துடிப்புடன் சொன்னான்,''அய்யா.வந்த வழியில் பார்த்திருப்பீர்கள்.இந்த ஊரில் நிலம் எல்லாம் பாறையாக இருக்கிறது.இந்த இடமும் அப்படித்தான் இருந்தது.ராப்பகலாய் கடுமையாய் உழைத்து இந்த நிலத்தை சீர் திருத்தி அதன் பலன் இப்போதுதான் கிடைத்திருக்கிறது.அப்படி நான் உழைத்ததன் பலனை,சாதாரணமாக வெறும் கடவுளின் அருள் என்று சொல்லி விட்டீர்களே!''துறவி சொன்னார்,''தம்பி,உன் உழைப்பு என்பதெல்லாம் உண்மைதான்.இருந்தாலும் கடவுள் அருள் இல்லாமல் உன் கிணற்றில் தண்ணீர் ஊறி உன் வயலில் விளைச்சல் வந்திருக்குமா?''என்று கேட்டார். அதற்கு இளைஞன் சொன்னான்,''அய்யா,நான் இங்கு வருவதற்கு முன்னும் இந்த நிலமும் இருந்தது.கடவுளும் இருந்தார்.நான் இங்கு வராமல் கடவுள் மட்டும் இருந்தபோது இந்த நிலத்தைப் பார்க்க சகிக்கவில்லையே!''

தானத்தை தம்பட்டம் அடிக்காதீர்கள்!!!

தானத்தை தம்பட்டம் அடிக்காதீர்கள்!!!

*அரிது, அரிது மானிடராக பிறத்தல் அரிது' என்று புலவர்கள் எல்லாம் சொல்கிறார்கள். இந்த மனிதப்பிறவி எவ்வளவு நல்ல விஷயமோ அதே அளவிற்கு அஞ்சத்தக்க விஷயமும் ஆகும். ஏனெனில், மனிதர்கள் தங்கள் செய்கையால் இந்த பிறவியை மேலாகவோ, கீழாகவோ செய்கிறார்கள். நல்லதைச் செய்தால் இதைவிட நற்பிறவி கிட்டும். தீமையை செய்தால் மீண்டும் விலங்காகப் பிறக்க வேண்டி வரும்.

* ஒரு மனிதனின் தயவைப் பெறுவதற்குக்கூட நீண்டநாள் போராடுகிறீர்கள். அரசாங்கத்தின் தயவு வேண்டுமானால் இன்னும் அதிகநாள் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த சாதாரண ஜென்மங்களுக்கே இப்படி காத்திருக்க வேண்டியது என்றால், கடவுளின் அருளைப் பெறுவதற்கு எவ்வளவுநாள் காத்திருக்க வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே அவரது கருணையைப் பெற பொறுமையுடன் காத்திருங்கள். மிகப்பெரிய பலன் கிடைக்கும்....

* பாவம் செய்யும்போது எப்படி மறைவாக செய்கிறீர்களோ அதேபோல மிகுந்த புண்ணியமான அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் அமைதியாக செய்ய வேண்டும். அப்படியானால்தான் அந்த தானத்திற்குரிய பலன் வெகுவாக கிடைக்கும்.

- பாம்பன் சுவாமிகள்.

பெண்களுக்கு அழகு எது?

பெண்களுக்கு அழகு எது?

* பயனில்லாத பொருள்களை நாம் தூக்கி எறிவது போல், பயனற்றவர்களின் அன்பையும் உதறித் தள்ளுவதே அறிவுடைமை.

* ஒருவர் பலமுறை கூறி, அதன் பின் செயலை செய்து முடிப்பது பண்பாகாது. தானே தனது கடமையைச் செய்ய வேண்டும்....

* மன எழுச்சியைப்பெற அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது சரியான வழி முறையாகும்.

* பெரியோர் இருக்குமிடத்தில் பேசும் போது நம் வாதங்களை, முகத்தில் அடித்தால் போல் நிதானமிழந்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.

* கணவனைக் காத்தல், வீட்டைக் காத்தல், அறத்தைக் காத்தல், அன்பைக் காத்தல் என நல்லனவற்றைக் காப்பதே பெண்ணுக்கு அழகு.

* தீயவனவற்றைக் காப்பாற்றக் கூடாது, அவை அழிவுக்கு காரணமானதாகும், நல்லனவற்றையே காத்தல் நம்மையும் ஒரு பொருட்டாக உலகம் மதிக்க வழி ஏற்படுத்தித் தரும்.

* நல்ல நூல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர் கூறும் அறிவுரைகளையும் உள்ளத்தில் வைத்து காத்தல் வேண்டும்.

- ஔவையார்.

சொர்க்கம் போக மறுத்தவர் !

சொர்க்கம் போக மறுத்தவர் !

அடர்ந்த காட்டில் சலசலக்கும் அழகிய நீரோடையை ஒட்டி அமைந்திருந்த அந்த அழகான குடிலில் கணவன் மனைவி மற்றும் ஒரு குழந்தை என்று அளவான குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது.

அந்தக் குடும்பத்தில் வறுமையின் அடையாளம் சற்று தெரிந்தாலும், எளிமையான வாழ்க்கையால் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை.

குடும்பத் தலைவரான முத்கலனை சிறந்த ஞானி என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ஒழுக்கமும், அறிவாற்றலும் மிக்கவராகத் திகழ்ந்தார்.

ஒருநாள்

“சுவாமி...” வாசலில் நின்று கொண்டு யாரோ ஒருவர் குரல் கொடுக்க, சத்தம் வந்த திசையை நோக்கி எட்டிப் பார்த்தார் முத்கலர். குடிசைக்கு வெளியே மாமுனிவர் துர்வாசர் நின்று கொண்டிருந்தார்.

“வாருங்கள் துர்வாசரே... தாங்கள் இங்கு வருகை தந்தது நான் செய்த பாக்கியம்” என்று கூறி அவரை மனமார வரவேற்றார் முத்கலர்.

“எனக்கு உன்னால் விருந்து படைக்க முடியுமா?” துர்வாசரின் வார்த்தைகளில் அதிகாரம் தெரிந்தது.

“என்ன சொல்லி விட்டீர்கள் சுவாமி? உங்களுக்கு நான் விருந்து படைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது என் கடமை. ஆனால்...”

“என்ன ஆனால்...?”

“என்னிடம் இருப்பதைக் கொண்டுதான் உங்களை உபசரிக்க முடியும். தாங்கள்தான் அதை பெருந்தன்மையுடன் ஏற்று எனக்கு அருள்புரிய வேண்டும்...”

“அப்படியே ஆகட்டும்!” என்றார் துர்வாசர்.

தொடர்ந்து, முத்கலர் தனது மனைவியிடம் பத்து நாட்களுக்குப் போதுமான தானியங்களைக் கொடுத்தார். சிறிது நேரத்தில் நறுமணம் கமழ சமையல் தயாரானது. சுவையான அந்த உணவை ஒட்டு மொத்தமாக சாப்பிட்டு விட்டு, அந்த ஏழைத் தம்பதியருக்கு ஆசி கூட வழங்காமல் சென்றார், துர்வாசர்.

பத்து நாட்களுக்கு தேவையான உணவை அவர் மொத்தமாக சாப்பிட்டு விட்டதால், அவர்களுக்கு அடுத்த பத்து நாட்களுக்கு அரையும் குறையுமாக தான் வயிறு நிறைந்தது.

11வது நாள் சமைக்கத் தேவையான தானியங்களைச் சேர்த்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார் முத்கலர்.

“இன்று நாம் முழுவேளை உணவு சாப்பிடப் போகிறோம்...” என்கிற திருப்தியுடன் வீட்டிற்கு வந்தவர், மனைவியிடம் அந்தத் தானியங்களைக் கொடுத்தார்.

சிறிது நேரத்தில் சுடச்சுட உணவு தயாரானது. சமையலில் இருந்து தவழ்ந்து வந்த மணம் வாசல் வரை வந்து, சற்றே கண்ணயர்ந்த முத்கலரை எழுப்பியது. அதேவேளையில், அங்கு வந்த துர்வாசரின் குரலும் அவரை திடுக்கிட வைத்தது.

“வாருங்கள் சுவாமி...” என்று அன்புடன் அழைத்து, தயாரான உணவை அவருக்கு விருந்து படைத்தார் முத்கலர்.

இந்த முறை விருந்தில் பங்கேற்ற துர்வாசருக்கு ஒரே ஆச்சரியம். முத்கலரை பார்த்தார். அவரது முகத்தில் எந்தவித வருத்தமும் இல்லை. அவரது மனைவி மற்றும் மகனின் முகத்திலும் எந்தவித சலனமும் தென்படாதது அவருக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும், அந்த ஆச்சரியத்தை வெளிக்காட்டாமல், விருந்து உண்டபின் அவசரமாக கிளம்பிச் சென்றார். இந்த முறையும் அந்த ஏழைக் குடும்பத்திற்கு அவர் ஆசி வழங்கவில்லை.

இரண்டாவது முறையாக துர்வாசருக்கு விருந்து படைத்ததால் அடுத்த பத்து நாட்களுக்கு முத்கலருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் வழக்கம்போல் அரைகுறை சாப்பாடுதான். அடுத்த பதினோறாவது நாள் அவர் தானியங்கள் சேகரித்தவுடன், மூன்றாவது முறையாக வந்து நின்றார் துர்வாசர்.

இப்போதும் மனம் கோணாமல் அவருக்கு விருந்து அளித்தார் முத்கலர். வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு எதுவும் சொல்லாமல் கிளம்பினார் துர்வாசர்.

இப்படியாக முத்கலர் தானியங்களை சேகரிக்கும் பதினோறாவது நாள் தவறாமல் வந்து கொண்டிருந்தார் துர்வாசர். அவரும் எந்தவித மனஸ்தாபமும் இல்லாமல் நிறைவான மனதுடன் அவருக்கு குறையில்லாமல் விருந்து உபசரித்து வந்தார். அவரும், அவருடைய குடும்பத்தாரும் வயிறார சாப்பிட்டு மாதக்கணக்கானது.

அன்றையதினமும் தானியங்கள் சேகரித்த பதினோறாவது நாள் வந்து சேர்ந்தார் துர்வாசர். அவருக்கு விருந்து பரிமாறப்பட்டது. மனைவி, மகனுடன் புன்னகை மாறாமல் உபசரித்துக் கொண்டிருந்தார் முத்கலர். ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக, ஆச்சரியத்தை வெளிப்படுத்திய துர்வாசர், அதை வார்த்தைகளாக காட்டினார்.

“முத்கலரே..! உனது விருந்தோம்பலில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். முதல்நாள் போன்று என்றும் மாறாமல் உபசரித்த உன் உள்ளத்தை மெச்சுகிறேன். அதற்கு கைமாறாக உனக்கு ஒரு பரிசு தர இருக்கிறேன். இப்போதே வாசலில் நிற்கும் தங்கத் தேரில் சொர்க்கத்துக்குச் செல். அங்கு உன்னை வரவேற்கத் தேவதைகள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்...” என்றார்.

ஆனால், முத்கலர் முகத்தில் எந்தவித பரபரப்பும், ஆச்சரியமும் இல்லை. வழக்கம்போல் அமைதியாகவே பேசினார்.

“சுவாமி... உங்கள் கருணைக்கு மிக்க நன்றி. ஆனால், ஒரு சிறிய வேண்டுகோள். எனக்குத் தாங்கள் சொன்ன சொர்க்கம் என்ன என்பதுதான் புரியவில்லை. தாங்கள் தயவு செய்து அதை எனக்கு உபதேசிக்க வேண்டுகிறேன்...”

“முத்கலரே! நீ வாழ்ந்து கொண்டு இருப்பது கர்மபூமி. சொர்க்கம் என்பது போக பூமி. நீ இங்கு செய்த புண்ணியங்களுக்கான பலன்கள் எல்லாம் அங்குதான் உனக்கு கிடைக்கப் போகிறது. அங்கு நீ இதுவரை காணாத இன்பத்தை அள்ளி அள்ளிப் பருகலாம். இந்த பூமியில் நல்ல செயல்களைச் செய்து வருபவர் மட்டுமே அங்கு செல்ல முடியும்”

“சரி சுவாமி.. அங்கு குறைகள் என்று ஏதாவது உள்ளதா?”

“குறைகள் என்றால், ஒன்று மட்டுமே உள்ளது. நீ அங்கு சென்றால் தரும செயல்கள் எதுவும் செய்ய முடியாது. ஏற்கனவே நீ செய்த புண்ணியங்களுக்கான பலன்கள் மட்டுமே கொடுக்கப்படும் இடம்தான் சொர்க்கம்.”

“சுவாமி... தரும காரியங்கள் செய்யும்போது கிடைக்கும் இன்பம் தான் எனக்கு வேண்டும். வெறும் போகம் தரும் இடம் எனக்கு தேவையில்லை. நான் இங்கேயே வாழ்ந்து கொள்கிறேன்” என்று சொர்க்கம் செல்ல மறுத்த முத்கலரை வியப்போடு பார்த்தார் துர்வாச முனிவர்.

“பணம்... பணம்...” என்று அலையும் இன்றைய மனிதர்களில் தரும காரியங்கள் செய்யும்போது கிடைக்கும் இன்பம் தான் எனக்கு வேண்டும் என்று சொல்லும் முத்கலர் போன்ற ஒருவரை அடையாளம் காண்பது அரிது.

நாம் சிந்தனை செய்ய வேண்டிய விஷயம் நாமும் முடிந்த அளவு தான தர்மம் செய்தல் வேண்டும் என்பதே.

ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை !

 
ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை !

ராமாயணத்தில் ஒரு காட்சி...

யுத்தம் முடிந்துவிட்டது சீதையை சிறைபிடித்த ராவணனும் அவனுக்கு துணையாக நின்ற வீரர்களும் மாய்ந்துவிட்டார்கள் இலங்கை ராவவணனின் ஆட்சியிலிருந்து விடுபட்டு விட்டது. யுத்த பூமியில் பெருக்கெடுத்து ஓடிய குருதி ஆறு கூட காய துவங்கி விட்டது.

ராமனும் சீதாவும் அவர்களின் நிழல் போன்ற இளையபெருமானும் அயோத்திக்கு கிளம்ப சித்தமாகி விட்டார்கள் வானரவீரர்களுக்கு ஒரே சந்தோசம் கிஷ்கிந்தா என்ற தனது தாய்நாட்டை மீண்டும் காணபோகின்றோம் என்ற சந்தோசம் மட்டும் அவர்களுக்கு இல்லை உலக நாயகனான ராமபிரானின் துயரத்தை துடைக்க தோள்கொடுத்தோம் என்ற சந்தோசம் உயிரையும் துச்சமாக மதித்து ஈடுபட்ட போரில் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற சந்தோசம் இதற்கெல்லாம் மேலாக பிரிந்திருந்த ராமபிரானும் சீதாப்பிராட்டியும் இணைந்துவிட்டார்கள் என்ற சந்தோசம்.

வானரர்களின் வெற்றிவிழா கொண்டாட்டம் இலங்கையிலேயே துவங்கி விட்டது. ஆடலும் பாடலுமென மகிழ்ச்சி மத்தாப்பு பளிச்பளிசென்று நாலாபுறமும் வெடித்து சிதறின வெற்றி களிப்பில் ஆடிகொண்டிருந்த ஒரு சில வாணர்களுக்கு கடலை தாண்டி இலங்கையை அடையும் போது தங்களோடு இருந்த இணைபிரியாத தோழர்கள் பலர் இப்போது இல்லை ராம சேவைக்காக தங்களது இன்னுயிரை அர்பணித்து விட்டார்கள். அவர்களின் மரணத்திற்கு கவலைபடாமல் ஆடி பாடி கூத்தடிப்பது நியாயமா என்று தோன்றியது.

கால் வண்ணத்தால் கல்லாகி கிடந்த அகலிகையை பெண்ணாக சமைத்த கருணை வடிவான ராமனின் சேவகர்கள் அல்லவா வானரர்கள் தனது தோழர்களின் வீர மரணத்திற்காக மட்டுமா வருந்துவார்கள் ராவணனுக்காக போர்புரிந்து உயிரை கொடுத்த லட்சோப லட்ச அசுர வீரர்களுக்காகவும் வருந்தினர். அண்ணனை இழந்து அருமை துணைவனை இழந்து பெற்ற தந்தையை இழந்து உதிரத்தில் சுமந்த மகனை இழந்து எத்தனை எத்தனை அசுர மாதர்கள் கண்ணீர் வடித்து கொண்டிருப்பார்கள். என்று அவர்களில் பலரின் சிந்தனையில் தோன்றியது உடனே ஆட்டமாடிய வானரங்கள் அனைத்தும் சோக மயமாக அமர்ந்துவிட்டன.

அப்படி அமர்ந்த வான வீரர்களில் ஒருவன் கேட்டான் நாம் அனைவரும் ராமனுக்காக சண்டை செய்தோம் முறைதவறி அன்னை சீதாவை கவர்ந்து சென்ற ராவணனின் ஆணவத்தை அடக்க போர் செய்தோம் அது தவறல்ல ஆயிரம் தான் தர்ம யுத்தமாக இது இருந்தாலும் எத்தனையோ உயிர்கள் நமது கைகளால் கொல்லபட்டனவே கடமைக்காக கொலை செய்தோம் என்றாலும் கொலை கொலைதானே? அது பாவம் தானே ஒரு உயிரை படைக்க நம்மால் முடியாத போது அதை பறிக்கும் உரிமை நமக்கு ஏது? நமது யுத்தத்திற்கான காரணம் நியாத்தொடு இருந்தாலும் கொலை செய்த பாவம் நம்மையும் நமது தலைமுறையினரையும் தாக்கும் அதிலிருந்து விடுபட என்னவழி

வானர வீரனின் வார்த்தைகள் ஒவ்வொரு வானரன் காதுகளிலும் எதிரொலித்தது ஆமாம் நான் நூறு பேரை கொன்றேன் நான் கொன்றதோ ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும். நான் செய்த கொலைக்கு கணக்கே இல்லை இதற்க்கெல்லாம் என்ன பரிகாரம் என்று எல்லா வானரங்களும் ஒரே குரலில் பேச ஆரம்பித்தன அமைதியான அந்த பிரேதேச முழுவதும் வானர குரல்கள் எதிரொலித்தன பெரும் சலசலப்பை அது உண்டுபண்ணியது பாசறையில் ஓய்வாக இருந்த ராமச்சந்திர மூர்த்தியின் காதுகளிலும் அந்த குரல்கள் வந்து விழுந்தன தம்பியை அழைத்து வீரர்களின் சலசலப்புக்கு காரணம் என்ன என்று அறிந்து வா என்று அனுப்பி வைத்தான்.

அண்ணனில் ஆணையை சிரமேற் கொண்ட இளையபெருமான் வானரவீரர்களிடம் சென்று விசாரித்தான் அவர்களும் தங்களது மனதிற்குள் ஓடிய கொந்தளிப்பை லஷ்மனனிடம் கொட்டி தீர்த்தார்கள். அண்ணணி வாக்கை மட்டுமே கேட்டு பழக்கப்பட்ட தம்பிக்கு பதில் சொல்ல தெரியவில்லை காரணம் இதுவரை அவன் அண்ணன் செய் என்று சொன்னால் செய்வான் நிறுத்து என்றால் நிறுத்துவான். அது பாவமா? புண்ணியமா? என்று எப்போதுமே நினைத்து கூட பார்த்ததில்லை அண்ணன் சொல்வது தர்மமாக மட்டுமே இருக்கும் என்பது அன்பு தம்பியின் அசைக்க முடியாத நம்பிக்கை அப்படியே வாழ பழகியவனுக்கு வீரர்களின் கேள்விகளுக்கு விடை சொல்ல முடியாதது விந்தை அல்ல.

அன்பான வீரர்களே இதுவரை நான் அண்ணின் வார்த்தையை மட்டுமே சத்திய பாதையாக கொண்டதனால் பாவ புண்ணியங்களை யோசித்ததில்லை அதனால் பரிகாரங்களை பற்றி எனக்கு தெரியாது. அறியாத விஷயத்தை அறிய செய்வது பெரியோரின் கடமை எனவே அசுர வீரர்களை கொன்ற பாவத்திற்கு என்ன பரிகாரமென்று அண்ணனிடமே சென்று அடிவணங்கி கேட்போம். வாருங்கள் என்று அனைவரையும் அழைத்து கொண்டு ராமன் முன்னால் வந்து நின்றான்.

தாமரை மலர் போன்ற ராமனின் வதனத்தை தரிசனம் செய்த வானர வீரர்கள் தங்களது நெஞ்சிக்குள் புகைந்து கொண்டிருந்த குமுறல் நெருப்பை அண்ணலின் திருப்பாத கமலங்களில் சமர்பித்தார்கள். ஐயா தசரத குமாரா நாம் செய்தது தர்ம யுத்தம் அதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. ஆணவம் கொண்ட ராவணனை வீழ்த்தியதற்காக நாங்கள் வருந்தவில்லை நாங்கள் அனைவருமே உங்கள்மீது கொண்ட அளவற்ற பக்தியால் இந்த யுத்தத்தை உத்வேகத்தோடு செய்தோம். அதனால் எங்களுக்கு காயங்கள் கூட வலிக்கவில்லை.

ஆனால் அசுர வீரர்கள் மகிழ்வோடு யுத்த களத்தில் குதிக்கவில்லை தங்கள் அரசன் செய்தது மன்னிக்க முடியாத மாபெரும் தவறு என்று அவர்களுக்கு தெரியும். ஆனாலும் அவர்கள் அரச கட்டளைக்காக ஒரு வேலையாகத்தான் சண்டையில் பங்கு பெற்றார்கள். அவர்கள் அனைவருமே கொன்று தீர்த்து விட்டோம். உயிர்களை கொல்வது பாவமல்லவா? அந்த பாவத்தை தர்மத்திற்காக செய்தாலும் பாவம் பாவம் தான் அதிலிருந்து விடுபட என்ன வழி எங்கள் ஆத்மா கடைத்தேற என்ன பரிகாரம் என்று எங்களுக்கு தெரியவில்லை நீர் இருட்டை விரட்டும் ஞான சூரியன் எங்களது அஞ்ஞனம் என்னும் சந்தேக இருட்டை நீக்கி தெளிவை தாருங்கள் என்று வணங்கி நின்றார்கள்.

நாளை முதல் நீயே அரசன் என்ற போது எப்படி மலர்ந்து இருந்ததோ அப்படியே நாளை நீ காட்டுக்கு போ என்ற போது இருந்ததே அதே அழகிய ராமனின் வதனம் வானர வீரர்களின் கேள்வியை கேட்டவுடன் மலர்ந்தே இருந்தது. ஆனாலும் அந்த சந்திர முகத்தில் சிந்தனை மேகம் சூல்கொள்ள துவங்கியது. ராமன் அமைதியானான் ஆழமான சிந்தனை அவனை சுற்றி படர்ந்தது. வெகு நேர சிந்தனைக்கு பின் ராமனின் திருவாய் மலர்ந்து வார்த்தைகள் வந்தன.

தவிர்க்க முடியாத நிலையில் கொலை செய்தாலும் அந்த கொலைக்கான பாவ கணக்கில் எந்த ஜீவனும் தப்ப முடியாது. ஆனாலும் அந்த பாவ நெருப்பு முழுமையாக நம்மை சுட்டு விடாமல் இருக்க ஒரு வழி உண்டு மனம் கசிந்து இறைவனிடம் முறையிட்டால் பாவம் விலகும் இங்கே நடந்து முடிந்த சத்திய யுத்தத்தில் நீங்கள் பெற்ற பாவ சுமையை இறக்க வேண்டுமென்றால் கற்புக்கரசியான மண்டோதிரியின் திருநாமத்தை மந்திரம் போல் ஜெபித்து இறைவனிடம் முறையிடுங்கள் அதுவே சிறந்த வழி என்றான் ராமன்,

கேட்ட அனைவருக்கும் வியப்பு வந்தது மண்டோதிரி மாண்டு போன எதிரியின் மனைவி அவன் செய்த அத்தனை தவறுக்கும் சரிபங்கு பொறுப்பை ஏற்கும் சகதர்மிணி அப்படி பட்டவளின் பெயரை சொன்னால் பாவம் போகுமா? என்று அவர்களுக்கு தோன்றியது. அதனால் அதற்கான விளக்கத்தை தருமாறு ராமனிடம் முறையிட்டார்கள்.

மண்டோதிரியை இலங்கை அரசனின் மனைவியாக மட்டும் நீங்கள் பார்கீரீர்கள் நான் அவளை அப்படி பார்க்கவில்லை என் தாயாகவே அவளை கருதுகிறேன். அதற்கும் காரணமுண்டு தாய் மட்டுமே தன் மகனிடம் இல்லாத சிறப்புகள் இருப்பதாக மிகைபடுத்தி கூறுவாள் அது தான் தாய்மையின் சிறப்பு தாய்மையின் பாச வெகுளித்தனம் என்றும் சொல்லலாம். ராவணனின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஒவ்வொரு முறையும் அவள் என் சிறப்புகளை என் வீரத்தை புகழ்ந்தே பேசினாள் ராமனோடு சண்டை போடாதே அவன் அசகாய சூரன் ராமனோடு சமாதானமாக போ அவனே உன் ரச்சகன் அவன் மனைவியை கவர்ந்து வந்தது பாவத்திலும் பாவம் ஆனாலும் நீ மன்னிப்பு கேட்டால் கருணையோடு மன்னிப்பதில் ராமன் ஒரு இமையம் என்றெல்லாம் பேசினாள் ஒரு தாய் மட்டுமே இப்படி பேச முடியும்.

இவைகளால் மட்டும் மண்டோதிரி சிறந்தவள் என்று நான் கூறவரவில்லை அவள் பிறந்த போது அவளை தாய்தந்தையர் இருவரும் புறக்கணித்து அனாதையாக வனத்தில் விட்டு விட்டார்கள். அன்று துவங்கியது அவளின் துயரம் அனாதையாக திரிந்த மண்டோதிரியை இரக்கமே வடிவாக கொண்ட அசுரன் ஒருவன் தனது மகளாக போற்றி வளர்த்தான். அவளை ராவணன் கண்டு மணம் பேசிய பிறகு கணவன் செய்த ஒவ்வொரு தவறுகளையும் எண்ணி எண்ணி அழுதாள் அகங்காரமே வடிவாக கொண்ட தனது இல்லற நாயகன் என்றாவது ஒருநாள் சரியான தண்டனைக்கு உள்ளாவான் என்று ஒவ்வொரு வினாடியும் தனது மாங்கல்யம் பறிபோய்விடுமே என்றும் அழுது கொண்டே இருந்தாள்.

ராவணன் செய்த ஒவ்வொரு தவறுக்கும் அவன் பெற்ற ஒவ்வொரு சாபத்திற்கும் அவனை கரம்பிடித்தவள் என்ற ஒரே காரணத்திற்காக செய்யாத பாவத்திற்கு தண்டனை சுமந்தாள். அவள் இருந்தது அரச மாளிகையாக இருக்கலாம் ஆனாலும் அது அவளுக்கு நெருப்பு மாளிகையாகதான் இருந்தது. கட்டிய கணவன் கண்கண்ட தெய்வம் அவன் செய்வது ஒவ்வொன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அதை தட்டி கேட்பது மனைவிக்கு அழகல்ல என்று அவள் எப்போதுமே கருதியதில்லை மனைவி மதி சொல்லும் மந்திரியும் கூட கணவனின் தவறை திருத்த சொல்வது தன் கடமை என்று எண்ணினாள் அதை தன் வாழ்நாளில் கடேசி வினாடி கூட கடைபிடித்தாள் ஆனாலும் கருத்து குருடனான கணவன் மனைவியின் அறிவுரையை மதிக்கவே இல்லை ராஜ மாளிகையில் அவள் ஒரு அலங்கார பதுமையாகவே ராவணனால் கருதபட்டாள். மனைவி உடலாக மட்டுமே கணவனோடு வாழ்வது மிகபெரிய துயரம் அந்த துயரம் அவளுக்கு சாகும்வரை நீங்கவே இல்லை.

அன்பர்களே இதையெல்லாம் விட பெரிய துயரத்தை மண்டோதிரி அனுபவித்தாள். அதற்காக அவள் மெளனமாக அழுத அழுகை அவளை சுற்றி உள்ள நான்கு சுவர்களே அறியும். ஒரு பெண்ணுக்கு மிக பெரிய துயரம் எது தெரியுமா? தான் உயிரோடு இருக்கும் போது தனது கணவன் இன்னொரு பெண் மீது மோகம் கொண்டு தன்னை புறக்கணித்து நிற்கிறானே என்ற துயரத்திற்கு ஈடு இணையே கிடையாது. அவன்தான் எல்லாம் என்று அர்பணித்து வாழும் மனைவியை விட்டு விட்டு மற்றொரு பெண்ணை நாடும் கணவனோடு வாழ்வதே பெரிய நரகம் அந்த நரகத்தில் மண்டோதிரி கிடந்தாள். இப்படி தனது வாழ்நாள் முழுவதும் துயரத்தை மட்டுமே கண்டறிந்த ஒரு ஆத்மாவால் தான் மற்றவர்களின் துயரத்தின் பாரம் என்னவென்று அறிய முடியும். துன்பபட்டவர்களுக்கு தான் மன்னிக்கும் தகுதி இருக்கிறது. அது மண்டோதிரியிடம் மட்டுமே மிகுதியாக இருக்கிறது. எனவே அவளை பிராத்தனை செய்யுங்கள் அது சிறந்த பரிகாரம் என்றான்.

இந்த ராமாயண கதை நமக்கு சொல்வது என்ன? கிளி மாதிரி பெண்டாட்டி இருந்தாலும் கோட்டான் மாதிரி கூத்தியாள் வைப்பான் என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு மலர்க்கு மலர் தாவும் வண்டுகளை போன்ற ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கட்டியவளை கண்ணீரில் தவிக்க விட்டு விட்டு கண்டவளோடு உல்லாசம் புரியும் ஆண்கள் என்றாவது ஒருநாள் ராவணனை போல் வீழ்ந்து கிடப்பார்கள். காரணம் மனைவிக்கு செய்த துரோகம் அதற்கான சம்பளம் மரணத்திற்கு பின் அல்ல வாழும் போதே கிடைக்கும். எனவே தான் தாவும் மனதை கட்டி போட வேண்டுமென்று ஆண்கள் எச்சரிக்க படுகிறார்கள்

இருப்பதை பிறருக்கு கொடுங்கள்...

இருப்பதை பிறருக்கு கொடுங்கள்...

* தானங்கள் நான்கு வகையாகும். அவை உணவு, மருந்து, சாஸ்திரம், அபயம் என்பன. இந்த நான்கு தானங்களையும் நாம் முடிந்த அளவிற்கு செய்ய வேண்டும்.

* உண்மையை மறந்து பொய்யின் பக்கம் சென்றுவிடுதல் பாவமாகும். உண்மையை மட்டும் பேசி வாழ்தல் என்பது எப்போதும் கடினம் தான். இருந்தாலும் பிறருக்கு தீங்கிழைக்காத படி நாம் பேச வேண்டும்....

* மிதமிஞ்சி உணவை ருசிக்காகச் சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த துன்பத்தைத் தரும். உடல் மட்டுமின்றி அதிக உணவால் மனமும் கெட்டுவிடும்.

* பேராசை உடையவனுக்கு இந்த உலகம் முழுவதையும் வழங்கினாலும் திருப்தி உண்டாவதில்லை. வயதான நிலையிலும் ஆசை மனிதனை விடுவதில்லை. இதனால் மரணம் நெருங்கும்போதும் அவன் பெருந்துன்பத்திற்கு ஆளாகிறான்.

* கடுஞ்சொல் பேசாதவர்கள் மென்மையான மலர் போன்றவர்கள். அவர்களை எல்லோரும் உயர்வாக மதித்துப் போற்றுவர். உலகில் மலரை விரும்பாதவர்கள் யார்?

* நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் வேண்டும். அத்துடன் கொடுக்கின்ற மனம் உடையவர்களைத் தடுக்கின்ற மனம் அறவே கூடாததாகும்.

- மகாவீரர்.

யாகங்கள் என்பது நெருப்பை வளர்த்து நெய்யை ஊற்றும் ஒரு அர்த்தமற்ற சடங்கு அல்ல

யாகங்கள்...!

ஆதிகால மக்களும் சரி மன்னர்களும் சரி தங்களது கோரிக்கைகளை வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்ள மிகபெரிய யாகங்களை நடத்தி இருக்கிறார்கள். நம் நாட்டில் உள்ள புராண குறிப்புகளும் சரித்திர ஆதாரங்களும் பல யாகங்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்ற செய்யப்பட்டதாக தகவல்கள் தருகின்றன.

யாகங்கள் என்பது நெருப்பை வளர்த்து நெய்யை ஊற்றும் ஒரு அர்த்தமற்ற சடங்கு அல்ல சில குறிப்பிட்ட கணித அளவுகள் படி யாக குண்டங்களை வடிவமைத்து நமது கோரிக்கைகளுக்கான நிவாரண மந்திரங்களை முறைப்படி சொல்லி சில மூலிகை பொருள்களை அக்னியில் ஆகுதி செய்வதனால் மந்திரங்களால் எடுத்து சொல்லப்படும் நமது வேண்டுதல்கள் குறிப்பிட்ட தேவதைகளிடம் சென்றடைகிறது. முறைப்படி செய்யப்படும் எந்த யாகமும் தோற்று போனதாக சரித்திரம் இல்லை....

இன்று பொதுவாக செய்ய படுகின்ற பல யாகங்கள் வேதங்களில் உள்ள கர்ம காண்டத்தை பின்பற்றியே நடத்த படுகிறது. வேதங்களில் உள்ள கர்ம காண்ட வழிகாட்டுதலின் படி செய்ய படுகின்ற யாகத்தின் பயனை மிக விரைவாக அடைய சித்தர்கள் என்ற மகரிஷிகள் பலர் பல ரகசிய வழிகளை ரகசிய பொருள்களை கூறி இருக்கிறார்கள். அவைகளை பற்றி பல ஆச்சாரிய பெருமக்களுக்கு சரிவர தெரியாது.

காரணம் அவர்கள் வேதங்களை மட்டும் முறைப்படி கற்றவர்களே தவிர சித்தர்களின் மூலிகை ரகசியங்கள் தாந்திரீக வழிபாட்டு சூட்சமங்கள் போன்றவற்றை அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பு இல்லை ஒருசில ஆச்சாரியார்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து முறைப்படி யாகங்களை நடத்துவோமானால் பண்டைய கால அரசர்கள் போன்று பலாபலனை உடனடியாக பெற்றது போல நாமும் பெறலாம்.

இது கடவுளுக்கு பிடித்த உணவு

இது கடவுளுக்கு பிடித்த உணவு

* உயர்ந்த வழிபாட்டை "சமாராதனை' என்று குறிப்பிடுவர். "சம்' என்றால் "நல்ல', "ஆராதனை' என்றால் "வழிபாடு' என்பது பொருள். ஏழைக்குச் சேவை செய்வது சமாராதனை எனப்படும்.

* கோயிலில் ஆடம்பரத்துடன் படைக்கும் பொங்கலை இறைவன் ஏற்கிறானா என்பது சந்தேகமே. ஆனால், ஏழைகளுக்காக தானம் செய்வதற்காக தயாரிக்கப்படும் பொங்கலை, இறைவன் மிக விருப்பத்தோடு உகந்து ஏற்பான்....

* நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் என்னும் சித்தர், கோயிலில் இருக்கும் இறைவனை "படமாடும் கோயில்' (சிற்பம்) என்றும், ஏழை எளியவர்களை "நடமாடும் கோயில்' என்றும் குறிப்பிடுகிறார்.

* தபால்களை நேரே தபால் நிலையத்தில் சேர்த்தால், வீதிகளில் இருக்கும் தபால் பெட்டிகளுக்கு அவை வரத் தேவையில்லை. ஆனால், வீதிகளில் உள்ள தபால் பெட்டிகளில் இட்ட தபால் தலைமை தபால் அலுவலக்ததிற்கு வர வேண்டியது அவசியம். தபால் பெட்டி ஏழை எளியவர்களைப் போன்றது. அஞ்சல் நிலையம் ஆண்டவன் வாழும் கோயில்.

* ஆலயங்களில் செய்யப்படும் வழிபாட்டைக் காட்டிலும் ஏழைகளுக்குச் செய்யும் தொண்டுகள் மூலம் இறைவனை அடைவது சிறந்தது. அதனால் தான் இறைவழிபாட்டை "ஆராதனை' என்றும், ஏழைகளுக்குத் தானம் செய்வதை "சமாராதனை' என்றும் குறிப்பிடுகிறார்கள்.

- வாரியார்.

நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...!

.
 
 
நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...!


பிரணாயாமம் என்ற மூச்சு பயிற்சி ஆரோக்கியமான வாழ்கைக்கு சிறந்தது என்று கேள்விப்படுகிறோம்

அதை செய்யும் முறையை குரு மூலம் தான் அறிய வேண்டும் என்பதும் நமக்கு தெரியும் ...

அந்த பயிற்சியை செய்ய துவங்கும் முன் அதை எப்போது செய்ய வேண்டும் அதற்கான உணவு கட்டுப்பாடு ஏதேனும் உண்டா என்பதை அறிந்து கொண்டால் நம்மால் ஆகுமா ஆகாதா என்று முடிவு செய்யலாம் என சிலர் நினைக்கிறார்கள்

மூச்சு பயிற்சி என்பது ஆயுள் காலத்தை நீட்டிக்கும் ஒரு முயற்சி மட்டுமல்ல வாழும் காலம் எவ்வளவு ஆனாலும் அதில் ஆரோக்கியமாக இருக்கும் வழியேயாகும்.

முறைப்படி மூச்சு பயிற்சியை காலை மாலை இரு வேளைகளில் தான் செய்ய வேண்டுமென யோக நூல்கள் சொல்லுகின்றன

சூரிய உதய நேரத்திலும் மறையும் வேளையிலும் தரையில் பத்மாசனம் இட்டு அமர்ந்து முதுகு தண்டுவடம் நேராக நிற்பது போல் நிமிர்ந்து அமர வேண்டும்.

புலித்தோல், மான்தோல் போன்ற விரிப்புகளை தான் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது.

பருத்தி மற்றும் கம்பளி துணிகளையும் பயன்படுத்தலாம்.

தர்ப்பையால் ஆன பாய் சிறந்தது ஆகும்.

நாம் மூச்சு பயிற்சி செய்கின்ற அறையில் நமக்கு பிடித்தமான கடவுள் படங்களை வைத்து கொள்ளலாம்.

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் இயற்கை காட்சி படங்களை வைக்கலாம். இந்த பயிற்சி கடவுள் நம்பிக்கை இல்லாதவனை கூட கடவுளிடம் அழைத்து செல்லும்

மிக முக்கியமாக அந்த அறை காற்றோட்ட வசதி உள்ளதாகவும், வெளிச்சம் வர கூடியதாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.

ஊதுபத்தியோ அல்லது மற்ற வாசனை பொருட்களோ உபயோகப்படுத்த கூடாது.

அந்த நேரத்தில் மனிதர்களின் நடமாட்டமும் செல்லப் பிராணிகளின் அருகாமையோ கூடாது.

அதிகமா ஒளியும் அங்கு வர கூடாது.

மனதை கூடியமானவரை அலைய விடாமல், கண்களை மென்மையாக மூடி நிதானமாக அவசரமே இல்லாமல் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது நேற்று ஒரு நேரம் இன்று ஒரு நேரம் என நமது விருப்பப்படி பிராணாயாமம் செய்யும் நேரத்தை வைத்துக் கொள்ள கூடாது.

தினசரி மிக கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.

சத்தமாக பேசுதல் வன்மையான வார்த்தைகளை பயன்படுத்துதல் கூடாது.

கூடியமான வரை மனதை காம வசப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி சாதத்துடன் சிறிது நெய், பருப்பு கலந்த உணவை அரை வயிற்றுக்கு எடுத்து கொள்ள வேண்டும்.

கால் வயிற்றுக்கு நீரும், மீதம் வயிறு காற்றாலும் நிரம்பியிருக்க வேண்டும்.

உணவு சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து வாழை பழம் மாம்பழம், ஆரஞ்சு பழம், சீத்தா பழம் ஆகிய பழங்களில் எதாவது ஒன்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

வயிறு நிறைவாக இருக்கும் போதோ, பசியோடு இருக்கும் போதோ மூச்சு பயிற்சி செய்யக் கூடாது.

மல ஜலம் கழித்த பிறகு குளித்து முடித்தே இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இப்படி செய்பவர்கள் இடத்தில் பெரிய நோய்கள் எதுவும் வராது
 
 
 
 

வெற்றிலையின் மகத்துவம்

 
வெற்றிலையின் மகத்துவம்
 
 மற்றும் நன்மைகள் பொதுவாக நமது இந்துமத கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்க ளிலும் முன்னிலை வகிக்கும் இன்றியமையாத ஒரு மங்கள பொர...ுட்கள்தான் வெற்றிலை, பாக்கு ஆகும்.வெற்றிலையில் ஐந்து தெய்வங்கள் உறைந்துள்ளன. வெற்றிலையின் நுனியில் மூதேவியும் வெற்றிலையின் காம்பில் மகாலட்சுமியும் வெற்றிலையின் நரம்பில் பிரம்மாவும் வெற்றிலையின் முன் பகுதியில் சிவனும் வெற்றிலையின் பின் பகுதியில் சக்தியும் என ஐம்பெரும் தெய்வங்கள் உறைந்துள்ளனர். எனவே வெற்றிலை போடும்போது நுனியையும், காம்பையும், நரம்பையும் நீக்கி விட்டு சுண்ணாம்பு தடவி போடுதல் நன்று. 40 - வயதிற்கு மேல் மதிய உணவிற்குப் பின் வெற்றிலை, பாக்கு சேர்தது உண்ணுதல் மிகவும் அவசியம் ஆகும். ஏனென்றால் இந்த வயதிற்குப் பிறகு செரிமான சக்திகள் குறைய தொடங்கும். நாம் உண்ணும் உணவு முறையாக செரிக்கப் பட்டு சத்துக்கள் உடலில் முழுமை யாய் சேருவதற்கும், உடலின் அனைத்து எலும்புகளுக்கு தேவையான சுண்ணாம்பு [Calcium] சத்தை சமன் செய்யவும் வெற்றிலை, பாக்கு போடுதல் மிகவும் தேவை யாகும். வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது.கலோரி அளவு 44. தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். வெற்றிலைக்கு முன்னம் பெறும் பாக்கை வாயிலிட்டால் குற்றமுறும் உறவோர் கூட்டம்போம்-வெற்றிலையை முன்னிட்டுப் பாக்கருந்த மூதறிவோர் தம் மார்பின் மன்னிட்டு வாழும் பூ மாது.. வெற்றிலை, பாக்கு போடும்போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது.இது குற்றமாகும்.பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும்.மயக்கம், மூர்ச்சை அடைய ஏதுவாகும். மேலும் சொந்த பந்த உறவினர்கள் பிரிந்து விடுவர் என சாஸ்திர விதிகள் கூறுகிறது.அதனால் முதலில் வெற்றிலையை மென்று பின்பு பாக்கை வாயிலிட்டு மெல்ல மகா விஷ்ணுவின் இடது மார்பில் வாழும் பூமகள் மகாலட்சுமியின் அருள் கிட்டும். அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம் அதி பித்தம் இரண்டாவதூறு நீரே கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான் கனமதுர நான்காவதூறு மந்நீர் மடையெனவே ஐந்தாறிற் சுரந்துள் ஊறி வருநீர் களைச் சுகித்து தடையுருப் பித்தமொடு மந்த நோயும் தளர்பாண்டு நோயும் உண்டாம் தரம் சொன்னோம். வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பு சேர்த்து உண்ணும் போது முதலில் வாயில் ஊறும் உமிழ்நீர் நஞ்சாகும் இதனை உமிழ்ந்துவிட [துப்பி விட]வேண்டும். இரண்டாவது மெல்லும் போது ஊறும் உமிழ்நீர் அதிக பித்தமாகும். இதனையும் உமிழ்ந்து விட வேண்டும்.மூன்றாவது மெல்லும் போது வாயில் ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும். இதனை மட்டும் விழுங்க வேண்டும். நான்காவது ஊறும் உமிழ்நீர் அதிக இனிப்பாக இருக்கும் இதனை விழுங்கலாம்.இதன் பிறகு ஊறும் உமிழ்நீரை விழுங்கக்கூடாது அதனால் மந்தம்,பித்தம்,பாண்டு போன்ற நோய் உண்டாகும். வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.
 
 
 

தங்க நகைகள் அணிதல்

தங்க நகைகள் அணிதல்

நகைகள் என்பது இந்திய பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அழகிற்கும் ஆடம்பரத்திட்கும் மட்டுமே நககைகள் என்று நினைப்பது முற்றிலும் தவறான விடயம்....
இந்திய பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிருப்பவை. அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை.
நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.
எத்தனையோ பெறுமதியான பொருட்கள் இருந்த போதிலும், அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற கீழைத்தேச நாடுகள், பூமத்தியரேகைக்கு அண்மையில் இருப்பதால் வெப்பமான நாடுகளாகும். இந்த வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது.
அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.
இன்று தங்கத்தை சாதாரண மக்கள் உபயோகிப்பது குறைந்து வருகிறது ஏன் என்றால் தங்கத்தின் விலை மிக உயர்ந்ததாகவும் பலவிதமான நவீன நகைகள் சந்தைக்கு வந்ததே காரணமாகும்.
நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.
தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) நாம் நகை அணிதல் கட்டாயமாக இருந்தது நமது இந்திய பாரம்பரியத்தில். அது நமது ஆரோக்கியத்தை முன் நிறுத்தியே ஆகும்.
 
 
 
 

“மௌனம்”

]
 
மௌனம்:
--------------
வார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம். ஆனால், வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மௌனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மௌனம் என்பது இருட்டு. எல்லாத்துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மௌனம் என்பது மூடி! இதை தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம். மௌனம் என்பது போதி மரம். இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.

“மௌனம் என்பது வரம்” நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்!”

எங்கோ, எப்பொழுதோ படித்திதயத்தை வருடிய வரிகள், உலகத்திலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். நமக்குப் பிடித்த பேச்சு நமது பேச்சுதான். அதனால் நாம் பேச ஆரம்பித்தால் மணிக்கக்காகப் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரிகளில் பேசுகிறோம். நாம் பல சமயம் யாரிடம் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம எந்த இடத்தில் பேசுகிறோம் எனபதைப் பற்றியே சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை பேச வேண்டும் என்பது, மட்டுமே நமது இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு,, மௌனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகிறான். பேசுவதால் நம் இருப்பை பிறர்க்கு உணர்த்துகிறோம். நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால் சில நேரங்களில் வருத்தப்படுவோம். நமது நாக்கு ஈரமுடையது.

நாவின் அமைப்பைப்போல் நம் சொல்லும் இரக்கத்தில் மலர்ந்த இன்சொல்லாக இருக்க வேண்டும். நிலைபெறும் நீங்கில் என் உயிரும் நீங்கும் – வள்ளலார். எல்லா உறுப்புகளையும் இரண்டாகப் படைத்த இறைவன், நாக்கை மட்டும் ஒன்றாகப் படைத்ததில் காரணம் “வரப்புயர” என்று சுருங்கப் பேசி வாழ்வதற்காகத்தான். இரட்டை நாக்கு உடையவர்களை உலகம் நம்புவதில்லை. பொய் சொல்ல முயன்றால் சுற்றியுள்ள பற்கள் நாக்கைக் கடிக்கும். பொய் பேசியபின் பிறர் அறியாமல் நாக்கைக் கடித்துக்கொள்கிறோமல்லவா? அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை உலகம் மதிக்கிறது. பேசாத ஞானியை உலகம் தொழுகிறது.

மௌனத்தின் வெளிப்பாடுகள் பல. கல்யாணப் பெண்ணின் மௌனம் சம்மதமாகிறது. கரை கடந்த இன்பத்தில் மனிதன் மௌனிக்கிறான். துன்பத்தின் உச்சியில் மௌனமே பேசுகிறது. மௌனம் இறைவன் மொழி, அது தட்சினாமூர்த்தி த்துவம். “பிள்ளை மதி செஞ்சடையான், பேசாப்பெருமையினான்” என்று, தாயுமானவர் தன் மௌன குருவைப் பாடுவார். “நீதி நடஞ்செய், ஏரின்ப நிதி, அதை ஓதி முடியாது என்று வள்ளலார் பாடுவார்.

“சும்மா இரு சொல்லற என்றதுமே அம்மா பொருள் என அறிந்திலமே” என்று, முருகன் அருணகிரிநாதருக்கு உபதேசித்த ம்திரமொழி மௌனம் தான். கல் ஆலின் கடை அமர்ந்து மௌனித்து உடல்மொழியால் (Body Language) சின் முத்திரை த்த்துவத்தை போதித்த தட்சினாமூர்த்தியை “வாக்கு இறந்த பூரணம் சொல்லாமல் சொன்னவன்” என்று திருவிளையாடற் புராணம் வர்ணிக்கும். அமைதி வேறு. மௌனம் வேறு. போருக்கு பின் அமைதி வரும். அமைதி மேலோட்டமானது. மோனம் உள்ளிருந்து வருவது. மௌனம் என்பது வார்த்தைகளற்ற நிலையல்ல. எண்ணங்கள் அற்ற நிலை. மௌனத்தை நம் முன்னோர்கள் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தால் உணர்த்தினார்கள்.

ஓம் என்ற பிரணவத்தை = அ+உ+ம் என பிரிக்கலாம். (அ) அறிவாக, உள்ள இறைவனை, (உ) உயிராக உணர்கிற மனிதன், (ம்) பேரின்ப நிலையாகிய மௌனத்தில் ஆழ்கிறான் என்பது பிரணவப் பொருள். “நற்பூதி அணிந்த திருவடிவம் முற்றும் தோழி, நான் கண்டேன்! நான் புணர்ந்தேன்! நான் அது ஆனேன்!” வள்ளலார்.

இது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள். வாய்க்கும் வயிறுக்கும் போராட்டம். நின்று, நிலைக்க நேரமில்லை, வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம் ஒரு முறை தினசரிக் காலண்டரில் ஞாயிறன்று ஆறு நாட்களைச் சேர்த்து கிழிக்கிறோம். தேவை நிம்மதி. தேவை மன அமைதி. தேவை மகிழ்ச்சி. இது மௌன தவத்தால் கிட்டும்.

உடம்பு அசையாமல் யோகநிலையில் கட்டைபோல் தன்னை வைத்திருப்பது காஷ்ட மௌனம். அதாவது இம்மௌனத்தில் உடல் பேசாது (No body language). இரண்டாவது வாக் மௌனம். வாய்மூடி மௌனமாக இருத்தல். இதைத்தான் பொதுவாக மௌன விரதம் உள்நோக்குகிறான். கடவுளோடு பேசுகிறான் என்கிறோம். இந்த மௌனத்தை மேற்கொள்ளும் சிலர் கையில் நோட்புக் வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக எழுதி அறுப்பார்கள். மௌனத்திலிருந்து பெறும் அகத்தாய்வையும் அனுமதியையும் இவர்கள் இழக்கிறார்கள். அடுத்து மனோ மௌனம். இதுவே தலைசிறந்த மௌனம். இதில் மனம் அலைபாயாத விச்ராந்தியாக இருக்கும். சலனமற மனமே மோனத்தன் நிறைநிலை. இந்த மௌனத்தில் மனிதன் தன்னை உள்நோக்குகிறான். கடவுளோடு பேசுகிறான்.

மௌன தவம் செய்பவன் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்கிறான். அவனது புறக்கதவுகள் மூடி அக்கதவுகள் திறக்கின்றன. அவன் பேசாதபொழுது அவனுள்ளிருக்கும் இறைவன் பேசுகிறான். தனது நிறை, குறைகளை அவன் ஆராய்கிறான். அவனது பேராசை நிறை மனமாகிறது. சினம் பொறைமாயக மாறுகிறது. கடும்பற்று ஈகையாகிறது. முறையற்ற பால்கவர்ச்சி கற்பாக மாறுகிறது. வஞ்சம் மன்னிப்பாகிறது. அவன் அனைத்தையும் சமன் செய்து சீர்தூக்குகிறான். அவனது தன் முனைப்பு, அகந்தை அகன்று தான் பரம்பொருளின் அம்சம் என உணர்கிறான். முடிவு வாழ்க்கை கல்வியில் தேர்ச்சி.

“தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே! ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே” வள்ளலாரின் பாடல் அவன் காதில் ஒலிக்கிறது. தான் இறைவனின் அம்சம் என்று உணர்ந்த மறுகணமே (யத்பாவம் த்த் பவதி) அவன் இறைவனது பேராற்றலையும், பேரறிவையும் பெறுகிறான். சாதனைகள் கைகூடுகிறது. அவன் மனம் நிறைகிறது.

மௌன நோன்பு இருவகைப்படும். ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்று மன உறுதியோடு சங்கற்பம் செய்து கொண்டு அவ்வேலை முடியும் வரை பேசாமல் இருப்பது. இது மனதையும், உள்ளாற்றலையும் சிதறாமல் பாதுகாக்கும். காரியம் வெற்றியுறும். இரண்டாவது ஆன்ம தூய்மைக்காக குடும்பம், பொருளாதாரம், வாணிபம் இவற்றில் விலகி நின்று நோன்பு எடுப்பது. இந்நோன்புதான் அகத்தாய்வுக்கு உதவும். அறிவின் இயக்கத்தில் சீரமைக்க உதவும் குண்டலினி யோகம், துரியாதீத தவம் போன்றவை மௌன தவமாகாது. அவை குறுகிய கால உளப்பயிற்சியாகும்.

ஜான்கேஜ் என்பவர் “மௌனம்” என்ற புத்தகத்தில் எழுதுகிறார், எந்த சப்தமும் வராத ஒரு அறையை ஆக்ஸஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கினார்கள். கேஜ் அதில் நுழைந்ததும் இரண்டு சப்தங்களைக் கேட்டார். ஒன்று இருதயம் இயங்குகிற சப்தம். அதாவது இரத்த ஓட்டத்தின் சப்தம். (Cardiac Echo) மற்றொன்று மனம் வேலை செய்கிற சப்தம். கேஜ் ஆச்சரியமாகச் சொன்னார். “இதுவரை நான் இந்த சப்தங்களைக் கேட்டதேயில்லை.”

மௌனம் அனுசரிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி ஒரு கதையுண்டு. மூன்று துறவிகள் மௌனம் இருந்தனர். ஐந்து நிமிடங்கள் ஆயிற்று. முதல் துறவி மற்றொரு துறவியின் முகத்தில் கரித்தூளைக் கண்டார். “உன் முகத்தில் கரி” என்றார். இரண்டாம் துறவி “நீ பேசிவிட்டாய்” என்றார். மூன்றாம் துறவி “நான் மட்டும்தான் பேசவில்லை” என்றார். தமிழன்பனின் உள்ளொலியை மௌனமாக்க்கேளுங்கள். உன் வார்த்தைகளிலேயே மிக அழகானது எது? உதடு திறகாமல் பதில் சொன்னது மொழி. ஓசை இல்லாமல் பதில் சொன்னது மொழி, வார்த்தை இல்லாமல் பதில் சொன்னது மொழி.

“மௌனம்”

சண்டிகேஸ்வரர் போற்றி


சண்டிகேஸ்வரர் போற்றி


ஓம் அருள்வடிவே போற்றி
ஓம் அபய வரதனே போற்றி
ஓம் அந்தணனே போற்றி
ஓம் அநுகூலனே போற்றி
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
ஓம் அகத்துளாழ்ந்தவனே போற்றி
ஓம் அன்பர்க்கெளியவனே போற்றி
ஓம் அரவப்புரியோனே போற்றி
ஓம் ஆதிசிவன் வடிவே போற்றி
ஓம் ஆதிசண்டேசுவரனே போற்றி
ஓம் இடையனே போற்றி
ஓம் இனியவனே போற்றி
ஓம் இடையூறு களைபவனே போற்றி
ஓம் இறையருள் கூட்டுவிப்பவனே போற்றி
ஓம் ஈராறு கண்ணனே போற்றி
ஓம் ஈசானத்தமர்ந்தவனே போற்றி
ஓம் உத்தமனே போற்றி
ஓம் உபகாரனே போற்றி
ஓம் உறுதுணையே போற்றி
ஓம் உட்பிரகாரத்திருப்போனே போற்றி
ஓம் எளியவனே போற்றி
ஓம் எச்சதத்தன் சேயே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி
ஓம் கஜவாகனனே போற்றி
ஓம் கமண்டலதாரியே போற்றி
ஓம் கலியில் இருகரனே போற்றி
ஓம் கரியுரியணிந்தவனே போற்றி
ஓம் களங்கமிலானே போற்றி
ஓம் காச்யப கோத்ரனே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி
ஓம் கிருதயுகத்துபதினாறுகரனே போற்றி
ஓம் கும்பிடுங்கையனே போற்றி
ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
ஓம் கோ ரக்ஷகனே போற்றி
ஓம் சங்கு நிறனே போற்றி
ஓம் சடை முடியனே போற்றி
ஓம் சச்சிதானந்தனே போற்றி
ஓம் சண்டீசன் ஆனவனே போற்றி
ஓம் சாந்த ரூபனே போற்றி
ஓம் சாயுஜ்யம் அளிப்பவனே போற்றி
ஓம் சிவபக்தனே போற்றி
ஓம் சிவகண நாயகனே போற்றி
ஓம் சிவபாலனே போற்றி
ஓம் சிங்க வாகனனே போற்றி
ஓம் சிவபூஜைப் பிரியனே போற்றி
ஓம் சிவப்ரசாதம் ஏற்போனே போற்றி
ஓம் சிவனருள் பெற்றவனே போற்றி
ஓம் சிவாலயத் தேவனே போற்றி
ஓம் சிரஞ்சீவியே போற்றி
ஓம் சிவனிடமிட்டுச் செல்வோனே போற்றி
ஓம் சுருதிப்பிரியனே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூழ்வினையறுப்பவனே போற்றி
ஓம் சேய்ஞலூரானே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞாலக்காவலே போற்றி
ஓம் தவசியே போற்றி
ஓம் தனித்திருப்போனே போற்றி
ஓம் தயாபரனே போற்றி
ஓம் தனிச்சன்னதியுளானே போற்றி
ஓம் தாதைதாள் தடிந்தவனே போற்றி
ஓம் துவாபரத்து நாற்கரனே போற்றி
ஓம் தியானேஸ்வரனே போற்றி
ஓம் திரேதாயுகத்தெண்கரனே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தேஜோ ரூபியே போற்றி
ஓம் நாற்கரனே போற்றி
ஓம் நாயனாராவனவனே போற்றி
ஓம் நடனன்ரூபனே போற்றி
ஓம் நாடப்படுபவனே போற்றி
ஓம் நல்வழிப்படுத்துபவனே போற்றி
ஓம் நால் வடிவினனே போற்றி
ஓம் நித்தியனே போற்றி
ஓம் நிர்மலனே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் நிறைவளிப்பவனே போற்றி
ஓம் ப்ரம்மசாரியே போற்றி
ஓம் ப்ரம்ம ஞானியே போற்றி
ஓம் ப்ரசண்டனே போற்றி
ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
ஓம் பவித்ரனே போற்றி
ஓம் பவித்ரை குமாரனே போற்றி
ஓம் பத்மாசனனே போற்றி
ஓம் பதமளிப்பவனே போற்றி
ஓம் புனிதனே போற்றி
ஓம் பூஜைபலன் அருள்வோனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பேரருளாளனே போற்றி
ஓம் மண்ணிக்கரைமணியே போற்றி
ஓம் மறையோருள் மாணிக்கமே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் முன்னிலையறிந்தோனே போற்றி
ஓம் மோனனே போற்றி
ஓம் மோக்ஷமளிப்பவனே போற்றி
ஓம் ரிஷபவாகனனே போற்றி
ஓம் ரக்ஷிப்பவனே போற்றி
ஓம் ருத்ராம்சனே போற்றி
ஓம் ருத்ராக்ஷமணிந்தவனே போற்றி
ஓம் வழித்துணையே போற்றி
ஓம் வரமருள் தேவனே போற்றி
ஓம் வித்தகனே போற்றி
ஓம் விசாரசர்மனே போற்றி
ஓம் வில்வப்பிரியனே போற்றி
ஓம் வீடளிப்பவனே போற்றி
ஓம் சர்வோபகாரனே போற்றி
ஓம் சண்டிகேசுவரனே போற்றி.

63 நாயன்மார்கள் போற்றி

63 நாயன்மார்கள் போற்றி



ஓம் அதிபத்தநாயனாரே போற்றி
ஓம் அப்பூதியடிகளே போற்றி
ஓம் அமர்நீதிநாயனாரே போற்றி
ஓம் அரிவாட்டாயரே போற்றி
ஓம் ஆனாய நாயனாரே போற்றி
ஓம் இசைஞானியாரே போற்றி
ஓம் இடங்கழி நாயனாரே போற்றி
ஓம் இயற்பகை நாயனாரே போற்றி
ஓம் இளையான்குடி மாறரே போற்றி
ஓம் எறிபத்தரே போற்றி
ஓம் ஏனாதிநாதரே போற்றி
ஓம் ஏயர்கோன்கலிக்காமரே போற்றி
ஓம் ஐயடிகள் காடவர்கோனே போற்றி
ஓம் கணநாதரே போற்றி
ஓம் கணம்புல்லரே போற்றி
ஓம் கண்ணப்பரே போற்றி
ஓம் கலிக்கம்பரே போற்றி
ஓம் கலிய நாயனாரே போற்றி
ஓம் சுழற்றறிவாரே போற்றி
ஓம் சுழற்சிங்கரே போற்றி
ஓம் காரி நாயனாரே போற்றி
ஓம் காரைக்கால் அம்மையே போற்றி
ஓம் குங்கிலியக்கலியரே போற்றி
ஓம் குலச்சிறையாரே போற்றி
ஓம் கூற்றுவ நாயனாரே போற்றி
ஓம் கோட்புலி நாயனாரே போற்றி
ஓம் கோச்செங்கட் சோழரே போற்றி
ஓம் சடைய நாயனாரே போற்றி
ஓம் சண்டேசுவரரே போற்றி
ஓம் சக்தி நாயனாரே போற்றி
ஓம் சாக்கிய நாயனாரே போற்றி
ஓம் சிறுத்தொண்டரே போற்றி
ஓம் சிறுப்புலி நாயனாரே போற்றி
ஓம் சுந்தரரே போற்றி
ஓம் செருத்துணையாரே போற்றி
ஓம் சோமாசிமாறரே போற்றி
ஓம் தண்டியடிகளே போற்றி
ஓம் திருக்குறிப்புத்தொண்டரே போற்றி
ஓம் திருஞானசம்பந்தரே போற்றி
ஓம் திருநாவுக்கரசரே போற்றி
ஓம் திருநாளைப்போவாரே போற்றி
ஓம் திருநீலகண்டரே போற்றி
ஓம் திருநிலநக்கரே போற்றி
ஓம் திருநீலகண்டயாழ்ப்பாணரே போற்றி
ஓம் திருமூலரே போற்றி
ஓம் நமீநந்தியடிகளே போற்றி
ஓம் நரசிங்கமுனையரையரே போற்றி
ஓம் நேச நாயனாரே போற்றி
ஓம் நின்றசீர்நெடுமாறரே போற்றி
ஓம் புகழ்ச்சோழரே போற்றி
ஓம் புகழ்த்துணை நாயனாரே போற்றி
ஓம் பூசலார் நாயனாரே போற்றி
ஓம் பெருமிழலைக்குறும்பரே போற்றி
ஓம் மங்கையர்க்கரசியாரே போற்றி
ஓம் மானக்கஞ்சாறரே போற்றி
ஓம் முருக நாயனாரே போற்றி
ஓம் முனையடுவார் நாயனாரே போற்றி
ஓம் மூர்த்தியாரே போற்றி
ஓம் மூர்க்க நாயனாரே போற்றி
ஓம் மெய்ப்பொருள் நாயனாரே போற்றி
ஓம் ருத்ரபசுபதியாரே போற்றி
ஓம் வாயிலார் நாயனாரே போற்றி
ஓம் விறன்மிண்ட நாயனாரே போற்றி
ஓம் அறுபத்து மூவரே போற்றி
ஓம் அன்பரே போற்றி
ஓம் அளத்தற்கரியவரே போற்றி
ஓம் அரனடிமையானோரே போற்றி
ஓம் அவனோடிணைந்தவரே போற்றி
ஓம் அரும்சக்தி படைத்தோரே போற்றி
ஓம் அழிவை வென்றோரே போற்றி
ஓம் ஊனுடம்பைக் கருதாரே போற்றி
ஓம் ஊழ்வினையே வென்றோரே போற்றி
ஓம் எளியோரே போற்றி
ஓம் ஏற்றமளிப்போரே போற்றி
ஓம் சிவபூஜைப் பிரியரே போற்றி
ஓம் சிவாலயத்திருப்போரே போற்றி
ஓம் சிவன்பெருமைபகர்ந்தோரே போற்றி
ஓம் சிவனடியார்க்கருள்வோரே போற்றி
ஓம் சைவரே போற்றி
ஓம் சைவம் தழைப்பித்தோரே போற்றி
ஓம் ஞானியரே போற்றி
ஓம் ஞாலம் வென்றோரே போற்றி
ஓம் திருத்தொண்டரே போற்றி
ஓம் திருமுறைகள் செய்தோரே போற்றி
ஓம் நல்லோரே போற்றி
ஓம் நல்வழிப்படுத்துவோரே போற்றி
ஓம் நீறணிந்தவரே போற்றி
ஓம் நெறிகாட்டும் நாயகரே போற்றி
ஓம் பல் குலத்தோரே போற்றி
ஓம் பல்வகையில் பூசித்தோரே போற்றி
ஓம் பல்லூரில் பணிந்தோரே போற்றி
ஓம் பரனருள் பெற்றோரே போற்றி
ஓம் பசுபாசம் கடந்தோரே போற்றி
ஓம் பரமனைப் பரவியோரே போற்றி
ஓம் புண்ணியரே போற்றி
ஓம் புருஷோத்தமரே போற்றி
ஓம் புறசமயம் வென்றோரே போற்றி
ஓம் புகழ்பெருமையடைந்தோரே போற்றி
ஓம் பிறவி கடந்தோரே போற்றி
ஓம் பெரியபுராண நாயகரே போற்றி
ஓம் பேதம் கடந்தவரே போற்றி
ஓம் போற்றற்குரியோரே போற்றி
ஓம் மறைபொருள் உணர்ந்தோரே போற்றி
ஓம் மயிலையில் தேவரே போற்றி
ஓம் மாயை கடந்தோரே போற்றி
ஓம் மயங்குவோர் துணைவரே போற்றி
ஓம் மும்மலமும் வென்றோர் போற்றி
ஓம் முக்கிய நாயன்மார்களே போற்றி.