Wednesday, February 18, 2015

அமாவாசையில் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி, கர்ம சனி செய்ய வேண்டிய அற்புத பரிகாரம்

அமாவாசையில் செய்ய வேண்டிய அற்புத பரிகாரம்
ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி, கர்ம சனி மற்றும் சனி திசை அல்லது புத்தி நடப்பவர்கள், அடிக்கடி விபத்துக்களை சந்திப்பவர்கள்,மரண பயம் உள்ளோர் மற்றும் அனைத்து வித சனி சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளோரும் இந்த எளிய ஆனால் மிக சக்தி வாய்ந்த தாந்த்ரீக பரிகாரத்தை அமாவாசை அன்று செய்வதன் மூலம், நிவர்த்தி செய்து கொள்ளலாம்-எம்மிடம் வரும் பலர் செய்து கை மேல் பலன் கண்ட முறைகள் இவை.
இதை செய்ய உகந்த நேரம் அமாவாசை நாள் மாலை ஐந்து முதல் இரவு பத்து வரை
முறை : உங்கள் உடலை (உயரத்தை) கருப்பு நிற நூலால் அளந்து கொள்ளவும். ஒரு இரும்பு சட்டியில் கடுகு எண்னை ஊற்றி அதில் அந்த நூலை போட்டு ஒரு மணி நேரம் ஊர வைக்கவும். பின்பு அந்த எண்ணையை ஒரு பாட்டிலில் ஊற்றி (நூலை எறிந்து விடவும்) அந்த இரும்பு சட்டி, மற்றும் 14 மண் அகல் விளக்குகள் எடுத்து கொண்டு சனீஸ்வரர் கோவில் சென்று அதில் ஏழு விளக்குகளில் அந்த எண்ணையை ஊற்றி விளக்கேற்றவும்-பின்பு அவர் சன்னதியை ஏழு முறை சுற்றி விட்டு அதே கோவிலில் உள்ள விநாயகரை கடைசியாக பார்த்து விட்டு வெளியேறவும்.இரும்பு சட்டியை கோவில் வாசலில் பிச்சை பெறுவோருக்கு கொடுத்து விடவும்-பின்பு அரச மரம் ஒன்றை தேர்ந்தெடுத்து அதை தொடாமல் வணங்கி, அதன் வேறுக்கு சிறிது பால் கலந்த நீர் ஊற்றி அதன் கீழே மீதமுள்ள ஏழு விளக்குகளையும் ஏற்றி விட்டு, திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேரவும். நேராக வீட்டிற்கு வந்தால் மட்டுமே முழு பயன் உடனடியாக கிட்டும். இதை ஒவ்வொரு அமாவாசையும் செய்யலாம். கோவிலில் நுழைந்தது முதல் அரச மரத்திற்கு விளக்கேற்றும் வரை மனதினுள் 
"ஓம் ஷம் ஷனைச்சராய நமஹ்" 
மந்திரம் உச்சரித்து கொண்டே இருக்கவும்-மறு நாள் முதற் கொண்டு உங்கள் வாழ்வின் நிகழ்வுகளில் வரும் மாற்றங்களை உணர முடியும். செய்து பயன் பெறுங்கள்.

சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படியுங்கள்

சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படியுங்கள்
ராமபிரான் வனவாசம் சென்ற போது தண்டகாரண்யம் காட்டுக்கு அருகில் உள்ள கிருஷ்ணா நதிக்கரைக்கு சென்றார். அந்த நதிக்கரை அருகே கமாலபுரம் என்று ஓர் ஊர் இருந்தது. அந்த ஊரில் இருந்த பொய்கைக்குக் கலசரஸ் என்று பெயர். அந்த குளக்கரையில் நிறைய முனிவர்கள் ஆசிரமம் அமைத்து இறைவனை வழிபட்டார்கள்.
அவர்களில் ஒருவர் வித்வஜிஹ்மர். அவரைப் பார்க்க கௌஸ்திமதி ரிஷின்னு ஒருவர் வந்தார். வித்வஜிஹ்மர் அவரை மனம் மகிழ வரவேற்று உபசரித்தார். `இந்தச் சின்ன வயசுல நீங்க துறவியா இருக்கிறது கொஞ்சம் கூட சரியல்ல. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா?
முன்னோர்களோட சாபமும் வந்து சேரும். அதனால் தானே அகஸ்தியர் லோபமுத்திரையை உருவாக்கி மணந்து கொண்டார். அதனால் நீங்கள் என் மகள் வசுமதியை மணந்து கொள்ளுங்கள் என்று வித்வஜிஹ்மரிடம் கூறினார். `சம்சார பந்தத்துல அகப்பட்டு என்னோட வாழ்வை வீணாக்க நான் விரும்பவில்லை.
வீணாக ஏன் கவலைகளையும் துன்பங்களையும் நாமே வரவழைத்து அனுபவிக்க வேண்டும். குடும்பம் குழந்தைகள் கஷ்டப்படுகிறதை பார்த்து விரும்பாமல் தானே நானே என்னோட அப்பாவான மரீச முனிவரைவிட்டு விலகி வந்து தவம் செய்தேன். ஆனாலும் என்னோட கர்மா விடமாட்டேங்குதே' என்றார் வித்வஜிஹ்மர். `நமக்குத் தந்தை என்கிற அந்தஸ்தை ஒரு மகனால் தான் தர முடியும்!
நம்மைப் படைத்து காத்துக் கொண்டிருக்கிற மும்மூர்த்திகளும் திருமணம் செய்து இருக்கிறார்கள். சுப்ரமணியனும் விநாயகனும் ஐயப்பனும் கூட திருமணம் செய்து மனைவியோடு வீற்றிருக்கிறார்கள். உங்க பாட்டனார் பரத்வாஜ முனிவர் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் நீங்கள் உருவாகி இருக்க முடியுமா?
மேலும் என் மகள் வசுமதியும் சாதாரண பெண் கிடையாது. கவுதம முனிவரின் பேரன் நான். சதாநந்த முனிவரின் பேத்தி வசுமதி. பதிவிரதைகளான பாஞ்சாலி, சீதை, அருந்ததி, அனுசுயா போன்றவர்களுக்கு இணையானவள், என் மகள் வசுமதி.
அதனால் நீங்கள் என் மகளை மறுப்பு எதுவும் சொல்லாமல் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார். அதுக்கு `மார்க்கண்டேயர், துர்வாசர், சனத்குமாரர்கள், கண்வமகரிஷி, நாரதர், சுகர் ஆகியோர் திருமணம் செய்யாமல் வாழவில்லையாப அவங்க ஏன் கல்யாணம் செய்யாமல் வாழ்ந்தார்கள்?
அதற்கான சரியான காரணத்தை நீங்கள் எனக்குச் சொன்னால் நான் உங்கள் மகள் வசுமதியைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னார் வித்வஜிஹ்மர். கவுஸ்திமதி முனிவர் தன்னோட தவ வலிமையப் பயன்படுத்தி வைகுண்டத்துக்குப் போய் அந்த நாராயணைப் பார்த்து வித்லஜிஸ்மரின் கேள்விகளைக் கேட்டார்.
அதற்கு நாராயணன் `நாரதனும் ஒருசமயம் என்னோட மாயையினால் பல குழந்தைகளைப் பெற்றிருக்கிறான். தமயந்தின்னு ஒருத்தியோட கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கிறான். அதேபோல சனத்குமாரர்கள் வம்சத்தை விருத்தி செய்யாத காரணத்தால் பிரம்மனோட சாபத்தை பெற்றிருக்காங்க.
காத்யாயனர் காத்யாயினியையும், கணவர் சகுந்தலையையும் வளர்த்தாங்க. பெண் குழந்தைகளை வளர்ப்பதுகஷ்டம் என்று அவங்க ஒருநாளும் நினைக்கலையே! மார்க்கண்டேயரும் பூமாதேவியை வளர்த்து எனக்காகக் கொடுத்தார். துர்வாசரும் குந்திக்குக் குழந்தை பாக்கியத்துக்கான ஐந்து மந்திரங்களைத் சொன்னார்.
அவர் என்ன பாவம் என்று நினைத்தாராப மகாலட்சுமியோட கலைகள் பதினாறையும் பெண் வடிவமாக்கி இந்த முனிவர்களுக்குத் தர வேண்டும் என்று பிரம்மா நினைத்தார். லட்சுமி இதை விரும்பாத காரணத்தால் நான் தான் அதைத் தடுத்துவிட்டேன். அதனால் பிரம்மா அவர்களுக்கு, ஞானத்தைப் போதித்து முனிவர்களாக்கி விட்டார்கள்.
ஜிஹ்மர்கிட்ட வசுமதியைக் திருமணம் செய்யலாம் என்று சொல் என சம்மதம் சொல்லி அனுப்பினார். பூலோகத்துக்குத் திரும்பிய கவுஸ்திமதி, அப்படியே சொல்லி ஜிஹ்மர்கிட்ட அனுமதி வாங்கினார். வசுமதி திருமணம் சிறப்பாக நடந்தது. கவுஸ்திமதி ரிஷி, மகளைவிட்டுப் பிரியும்போது பல்வேறு புத்திமதிகளைக் கூறினார்.
சீடர்களிடம் அன்னையாய் நடக்க வேண்டும். முனி பத்தினிகளிடம் தோழியாய்ப் பழக வேண்டும் என்று நிறைய புத்திமதிகளை கூறினார். வித்வஜிஹ்மரும் வசுமதியும் நன்றாக வாழ்ந்தார்கள். அந்த வசுமதி சிவராத்திரி விரதம் இருந்து சிவனை நேருக்கு நேராப் பார்த்து இருக்கிறாள். சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி







"மகா சிவராத்திரி

"மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தசி திதியன்று திருவோணம் நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று அனுஷ்டிக்கப் பெறுகின்றது.
நித்ய சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை, சதுர்த்தசி திதிகள் ஆகியன நித்திய சிவராத்திரி எனப்படும். ஒவ்வொரு சதுர்தசியிலும் சிவனை நான்கு காலங்களிலும் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். இப்படி ஒரு வருஷத்தில் இருபத்தி நான்கு சதுர்தசியில் இரவில் பூஜை செய்து வழிபடுவதற்கு நித்திய சிவராத்திரி என்று பெயர்.
 
பட்ச சிவராத்திரி: தை மாதம் தேய்பிறை பிரதமையன்று தொடங்கித் தொடர்ந்து பதின்மூன்று நாட்கள் இரவில் சிவபூஜை செய்ய வேண்டும். பின்னர் சதுர்த்தசியில் பூக்ஷையை நிறைக்க வேண்டும். நான்கு காலத்திற்குப் பதில், பக்ஷ சிவராத்திரியில் ஒரு காலம் பூஜை செய்தால் போதுமானது என்பது கொள்கை. ரோகங்கள் விலகவும், உன்மத்த ரோக சமனம் ஏற்படவும், இது துணையாவது. இதை ரோகிகளுக்காக மற்றவர்கள் கூடச் செய்யலாம்.
 
மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும்.சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும்.
 
யோக சிவராத்திரி: திங்கட்கிழமையன்று அறுபது நாழிகையும் அமாவாசையாக இருந்தால் அந்த அமாவாசை யோகிகளுக்கு மிகவும் உயர்ந்தது. சித்தர்களுக்கு மிகவும் சிறந்தது. இது யோக சிவராத்திரி எனப்படும். யோக சிவராத்திரியில் யோகியானவன் யோக பூஜை செய்ய வேண்டும். யோக சித்தியை இது வழங்கும். யோகியர் அல்லாத மற்றவர்கள் யோக சிவராத்திரியில் பூஜித்தால் ஆத்ம ஜோதியில் சிவத்தைத் தரிசனம் காண ஏதுவாகும்.
மகா சிவராத்திரி :  மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.
 
ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியானசதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்.
 
அம்பிகைக்கு சிவன் அருவுருவில் (உத்பவம்) உபதேசம் செய்த ஆகம உபதேச புண்ணிய காலமான மகா சிவராத்திரி விரதம் கடை பிடிக்கும் போது புத்திசாலி குழந்தைகள் அமைவர். குபேரனிடம் இருப்பது போல் வற்றாத செல்வம் கிடைத்து நிலைக்கும். ஒரு வருடம் முழுவதும் ஐந்து பிரிவு சிவராத்திரி விரதம் கடைபிடித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
சிவராத்திரி விரத முறை :
சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும். 
 
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.
 
சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.
 
சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். பிறகு மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் இரவில் அபிஷேகப் பிரியரான லிங்க மூர்த்திக்கு நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம் செய்து,
த்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச;
த்ரயாயுஷ த்ரிஜன்ம பாப சம்ஹாரம்;
ஏகபில்வம் சிவார்ப்பணம்;
என்றபடி ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்களை அழிக்க வல்லது. மூன்று தளங்களைக் கொண்ட வில்வத்தைக் கொண்டு முக்கண்ணனான ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க எம்பெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
 
சிவபிரான், சிவராத்திரியன்று இரவு பதினான்கு நாழிகைக்குமேல் ஒரு நாழிகை இலிங்கத்தில் தோன்றுவதால், அன்று இரவு முழுவதும் கண்விழித்து இறைநாட்டத்துடன் இருந்து விரதம் முடித்தால் பலன் கிட்டும். மகாசிவராத்திரியன்று இலிங்கத்தை ஒரு வில்வ இலையால் பூசித்தால், கோடிக்கணக்கான மலர்களால் பூசித்ததற்குச் சமம். இங்ஙனம் விரதமிருந்துவர சிவனருள் கிட்டி, எல்லா நலனும் பெற்று இனிதே முத்தி கிட்டும்.
 
சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும். இது மனதிற்கு தைரியத்தை தரும். எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும். இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம், திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை படித்தாலும், கேட்டாலும் அதிக பலன் கிடைக்கும். "ஓம் நவசிவாய" என்ற மந்திர உச்சரிக்கவேண்டும். மகா சிவராத்திரி இரவு கோயிலில் அனைவரும் ஒன்றுகூடி "சிவாய நம" என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.
 
மகாசிவராத்திரி வழிபாட்டில் முக்கியமான ஆறு அம்சங்கள்:
  1. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும்.
  2. லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.
  3.  உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.
  4.  தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.
  5. எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.
  6. வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.
இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோயிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.
 
‌வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம்.
 
ஐந்தெழுத்து மந்திரமான ”சிவாய நம” என்ற சிவ மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.
 
சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.
 
பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
 
பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.
 
சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது.
 
முதல் சாமம்: இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா"சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
 
இரண்டாம் சாமம்: இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன்"விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.
 
மூன்றாம் சாமம்: இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்"நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
 
நான்காம் சாமம்: இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக!
 
சிவராத்திரி விரத விதிகள்: சிவராத்திரி அ‌ன்று விரதம் அனுட்டிக்கும் அடியவர்கள் அதிகாலை நீராடி, அன்று முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வேண்டும். பகலில் நித்திரை கொள்ளக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கிற பூசைகளில் கலந்து எம்பெருமானை வணங்கவேண்டும்.
 
வீ‌ட்டி‌ல் பூசை செ‌ய்வதாயின், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூசையை‌த் ஆரம்பிக்க வே‌ண்டு‌ம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூசிக்க வேண்டும். வில்வ இலைகளைப் பயன்படுத்தி பூசிப்பது பெரும் சிவபுண்ணியத்தைத் தரவல்லது.பின்னர் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.
 
கோயில்களில் பிரதட்சிணமாக (வீதி வலம்) வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூசை செய்ய முடியாதவர்கள் நான்கு சாமத்திலும் சிவபுராணம் கேட்டும், தேவாரம்,திருவாசகம் என திருமுறைகள் ஓதியபடியும், சிவாலய தரிசனம் செய்தும் விரதத்தை மேற்கொள்ளலாம்.
 
எம்பெருமான் சிவபெருமானை அபிடேகப்பிரியன் என்பர். ஆதலால் நான்கு சாமங்களிலும் எம்பெருமானுக்கு அபிடேகம் நடைபெறும். இவ் அபிடேகத்தை கண்ணால் கண்டு உள்ளத்தால் எம்பெருமானை உணர்ந்து வழிபடுவர்களுக்கு சிவானந்தப் பெருவாழ்வு அமைவது உறுதி.
 
நான்கு காலப் பூசைகளில் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடைபெறும் சிவபூசையை”லிங்கோத்பவ காலம்” என்பர்.இதனை விசுவரூப தரிசனம் என்றும் அழைப்பர். மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூசையையு‌ம், உச்சிக்காலப் பூசையையு‌ம் முடித்துக் கொள்ளவேண்டும். இப்பகல் பொழுதை சிவபுராணம் ஓதியபடியோ அன்றி சிவபுராணத்தை செவிமடுத்து பொருளுணர்ந்து கேட்டபடியோ கழிப்பது பெரும்பேறை வழங்கும். ஏனைய திருமுறைகளைப் படிந்தவாறு இப்பகல் பொழுதைக் கழிப்பதும் உத்தமமாகும்.ஈற்றில்,உபதேச‌ம் தந்த குருவை பூசை செய்து, உடைகள் மற்றும் உணவினை சிவாச்சாரியார்களுக்கு தானமாக அளித்து, விரதத்தை நிறைவு செய்யும் முகமாக சிவசிந்தையோடு சிவார்ப்பணம் செய்து உணவு உண்ண வேண்டும்.
 
சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு சாமப்பூசை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
 
சிவராத்திரி விரதத்தை அனுட்டிப்பவர்கள் எம்பெருமானுடனாய அம்மையையும் சேர்த்தே வழிபடுதல் வேண்டும்.
 
சிவராத்திரி நன்னாளின் சிறப்பு
 
எப்போதும் இப்பூமியைச் சுமந்து கொண்டிருப்பதன் காரணமாக ஆதிசேடன் தான் இழந்த பலத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, ஒரு சிவராத்திரி நன்னாளில் முதல் சாமத்தில் திருக்குடந்தையில் உள்ள நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேசுவரத்தில் நாக நாத சுவாமியையும், மூன்றாம் சாமத்தில் சேஷபுரி என அழைக்கப்படும் திருப்பாம்புரத்தில் பாம்பீசுவரரையும், நான்காம் சாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் வணங்கினான். எம்பெருமானும் மனம் குளிர்ந்து ஆதிசேடன் இழந்த வீரியத்தை வழங்கி திருவருள் பாலித்தார். இதனால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் உடலிலுள்ள எல்லா வியாதிகளும் நீங்கி சுகமாக வாழ்வர் என்றும் சர்ப்ப தோசம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
 
பிருங்கி முனிவர் சக்தியை வணங்காது சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்ததால் கோபம் கொண்ட சிவகாமி அம்மை, எம்பெருமானைவிட்டு விலகி பூலோகம் சென்று, மீண்டும் எம்பெருமானுடன் இணையவேண்டி எம்பெருமானை நோக்கித்தவம் இருந்தார்.அம்மையின் தவத்தில் மகிழ்ந்த அப்பன், அம்மையை தன்னில் ஒருபாதியாக்கி அர்த்தநாதீசுவராக காட்சியளித்த இனிய நாளும் இந்நாளாகும்.
 
கீழே கூறப்பெற்றுள்ள அதிசய நிகழ்வுகள் இப்புனித தினத்தில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன:
  1. அம்மை, அப்பனை நோக்கிக் கடுந்தவமியற்றி அப்பனின் இடப்பாகத்தில் இடம் பெற்று உமையொருபாகனானது.
  2. அருச்சுனன் தவம் செய்து பாசுபதம் எனும் ஆசுகம்(அஸ்திரம்,அம்பு) பெற்றது.
  3. கண்ணப்ப நாயனார் தன் கண்களையீந்து முத்தி பெற்றது.
  4.  பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாள்
  5. மார்க்கண்டேயருக்காக எம்பெருமான் காலதேவனை தண்டித்த நாள்.
"மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும்
சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி
மறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே"
-திருமந்திரம்
மஹா சிவராத்திரி விரதப்பலன்:
 
அம்மை வேண்டிக் கொண்டதற்கிணங்க நாம் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் அந்த கயிலை நாதன் நமக்கு இம்மையில் நமது எல்லா தோஷங்களியும் நீக்கி, பய உணர்வை அகற்றி, தீராப் பிணிகளை தீர்த்து, மனக்கவலைகளை மாற்றி சகல மங்களங்களையும் வழங்குவதுடன் நமக்கு மறு பிறப்பு இல்லாமல் சிவகணங்களுள் ஒருவராகும் வாய்ப்பையும் வழங்குகிறார். எடுத்துக்காட்டாக புராணங்களில் கூறப்பட்டுள்ள ஒரு வேடனின் வரலாறு கூறப்பட்டுள்ளது.
 
முன்னொரு காலத்தில் வாரணாசியில் சுஸ்வர என்ற பெயருள்ள ஒரு ஏழை வேடன் இருந்தான். ஒரு சிறிய குடிலில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்த அவன் காட்டில் வேட்டையாடி கிடைக்கும் பறவை விலங்கு ஆகியவற்றின் மூலம் தனது குடும்பத்துக்கு உணவளித்து வந்தான். ஒரு நாள் அவன் வேட்டை ஆடும் போது ஒரு புலி அவனை துரத்தியது. புலியிடமிருந்து தப்பிக்க அவன் ஒரு மரத்தின் மேலே ஏறிக் கொண்டான். புலியும் மரத்தின் கீழே அவன் இறங்கி வந்தால் அவனைக் கொன்று புசிக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்தது. பகல் முழுவதும் இவ்வாறு அவன் ஒன்றும் சாப்பிடாமல் மரத்தின் மேலேயே இருந்தான்.
 
அந்தியும் ஆகியது புலியும் நகர வில்லை வேடனாலும் கீழே வர முடியவில்லை. இரவிலே தூங்காமல் இருக்க மரத்தில் இருந்த இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். நடு நடுவே தன் குடுவையில் இருந்த தண்ணிரையும் கீழே ஊற்றிக் கொண்டிருந்தான். காலை புலர்ந்தது புலி ஓடி விட்டது, வேடனும் கீழிறங்கி வந்து தன் இருப்பிடன் சென்றான். அவன் அவ்வாறு அமர்ந்திருந்த மரத்தின் அடியில் ஒரு ”சிவலிங்கம்” இருந்ததாலும், அந்த மரம் வில்வ மரமாக இருந்ததாலும், அந்த இரவு சிவராத்திரியாக இருந்ததாலும் புலியின் பயத்தினாலேயே வேடன் இவ்வாறு பகலில் உணவு உண்ணாமலும் இரவிலே லிங்க மூர்த்திக்கு அபிஷேகமும் வில்வ தளங்களால் அர்ச்சனை செய்ததால் வேடனுக்கு சிவராத்திரி விரதப் பலனைக்கொடுத்து முக்தி கொடுத்தருளினார் எம்பெருமான்.
 
சிவராத்திரியுடன் தொடர்புடைய மற்றொரு ஐதீகம்: அகில உலகமும் பெருங் கடல் மூடிப் பிரளயம் ஏற்படும் ஊழிக் காலத்தில் சகல ஜீவ ராசிகளும் எம் ஐயனின் காலடியில் ஒடுங்குகின்றன. அப்போது கங்காளராய் எம் ஐயன் மீண்டும் படைப்புத் தொழிலைத் தொடங்க ஓம் என்னும் பிரணவத்தை நல் வீணையில் வாசித்துக் கொண்டு இருப்பார். இதை அப்பர் பெருமான் தம் பதிகத்தில் இவ்வாறு பாடுகின்றார்,
பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் கபேளரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை நல் வீணை வாசிக்குமே!.
அந்த பிரளய காலத்தில் எம் அம்மை பார்வதி உயிர்களுக்கு இரங்கி தவம் கிடந்து இறைவனை பூஜை செய்த இரவே சிவராத்திரி ஆகும். பின்னர் படைப்பு தொடங்கிய பிறகு இந்நாளில் இறைவனை வணங்குபவர்களுக்கு இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் எல்லா நன்மைகளையும் வழங்க வேண்டும் என்ற அம்மையின் வேண்டுகோளுக்கிணங்கி சிவ ராத்திரி நன்னாளில் அவரை வழிபடுபவர்களுக்கு இம்மையில் எல்லா சுகங்களையும் அளிப்பதுடன் வீடுப் பேற்றையும் அருளுகின்றார்.
 
தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும் விஷ்ணுவும் சண்டையிட்டனர், அவர்களது கர்வத்தை அடக்க சிவ பெருமான் பெரிய நெருப்பு பிழம்பாய் நின்று அடியும் முடியும் கண்டு பிடிக்குமாறு கூற இருவராலும் கண்டுபிடிக்க முடியாமற் போனது। இவ்வாறு எம்பெருமான் லிங்கோத்பவ மூர்த்தியாய் நின்ற நாள் திருக்கார்த்திகை ஆகும். பின் இருவரும் சிவ லிங்க ரூபமாக அவரை வணங்காத தமது தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்ட, மஹா சிவராத்திரி நன்னாளில் எம்பெருமான் லிங்க ரூபமாக தோன்றி இருவருக்கும் அருள் வழங்கின நாள் என்பதும் ஒரு ஐதீகம்.
 
திருக்கோயிலுள்ளிருக்கும் சிவலிங்கம் பரார்த்தலிங்கம் எனப் பெயர் பெறும். 
 
அது சுயம்புலிங்கம், காணலிங்கம், தைவிகலிங்கம், ஆரிடலிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்படும். அவற்றுள்,
  1. சுயம்புலிங்கம் - தானாகவே தோன்றியது.
  2. காணலிங்கம் - விநாயகர் சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே தாபிக்கப்பட்டது.
  3. தைவிகலிங்கம் - விஷ்ணு முதலிய தேவர்களாலே தாபிக்கப்பட்டது.
  4. ஆரிடலிங்கம் - இருடிகளாலே தாபிக்கப்பட்டது. அசுரர் இராக்சதர்களாலே ஸ்தாபிக்கப்பட்டது .
  5. மானுடலிங்கம் - மனுடராலே தாபிக்கப்பட்டது.
மானுடலிங்கத்திலும் உயர்ந்தது ஆரிடலிங்கம்; அதனிலும் உயர்ந்தது தைவிகலிங்கம்; அதனிலும் உயர்ந்தது காணலிங்கம்; அதனிலும் உயர்ந்தது சுயம்புலிங்கம்.
 
சிவனாருக்கு உகந்த வில்வத்தின் சிறப்பு: 
 
வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களும் உள்ளன.
 
பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
 
தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!

Tuesday, February 17, 2015

மனிதனுக்கு பத்துவிதமான பற்றுகள் இருக்கிறது. பசி வந்தால் அவை அற்றுப்போகும் என்பதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்…”

.பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்னு சொல்வாங்க, அது பத்து அல்ல..பற்று..மனிதனுக்கு பத்துவிதமான பற்றுகள் இருக்கிறது. பசி வந்தால் அவை அற்றுப்போகும் என்பதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்…”
(சமஸ்கிருதுத்துல அந்த 10 பற்றுகளையும் பட்டியலிட்டார்)
அதை உணர்த்துவதுபோல பரிணாம வளர்ச்சியோடு பெருமாள் எடுத்ததுதான் பத்து அவதாரம்…தசாவதாரம்..!
முதல் அவதாரம்…மச்ச அவதாரம்.
ஒருசெல் உயிரிதான் முதல்ல தோன்றின உயிரினம்.அது கடல்லதான் உருவானது.அதுக்கு பயலாஜிக்கலா புரோட்டோசோவான்னு சொல்லுவாங்க.
மீன்..இதுக்கு நீந்த யாரும் சொல்லித்தரவேண்டியதில்லை…இந்த அவதாரம் உணர்த்துவது..நீந்துதல்…சர்வைவல்..ஒவ்வொரு மனுஷனும் வாழ்வதற்கு தேவையான விஷயங்கள் அவனுக்குள்ளேயே இருக்குன்னு உணர்த்தறதுதான் இந்த அவதாரம்.
இரண்டாவது..கூர்ம அவதாரம்..ஆமை
சீரான மூச்சு..நிதானம்..இதெல்லாம் தான் ஆமையோட தனித்தன்மை. மூச்சு கட்டுப்பாட்டுக்கு ஆமை மிகச்சிறந்த உதாரணம்.
மூவ் பண்ணுகிற நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் கண்களை மூடியபடியே இருப்பது ஆமையின் வழக்கம்.
ஆழ்ந்து கவனித்தால் ஒன்றை புரிந்துகொள்ளலாம்…நமது உறுப்புகளில் கண்ணை மட்டும்தான் நம்மால் மூட முடியும்..
இந்த அவதாரம் நமக்கு உணர்த்துவது கண்களை மூடி இருக்கச்சொல்வது.
உள்ளே போய் வெளியே வரும் மூச்சை கவனிக்கச்சொல்வது இந்த அவதாரம்.
(இனி..அடுத்தடுத்த அவதாரம் ஜம்ப் பண்ணி போயிடுவோம்…ரொம்ப விளக்கம் இங்க வேணாம்)
மூனாவது அவதாரம்…வராக அவதாரம்…
இதுல ஆழ்ந்து கவனிச்சீங்கன்னா ஒரு விஷயம் புரியும்…அந்த பன்றி ரூபம் தன்னோட மூக்கு நுனியில உலக உருண்டைய தாங்கி பிடிச்சிருக்கற மாதிரி இருக்கும்..
இதோட அடிப்படை என்னன்னா..மூக்கு நுனியை கவனிப்பதன் மூலம் மூச்சை எளிதா கவனிக்கலாம்…எல்லா தியானத்துலயும் சொல்லித்தரும் விஷயம்தான்.
மூச்சை கவனிக்கிறது மூலமா..ஞானமடையலாம்ங்கறதுதான் இந்த அவதாரம் சொல்வது.
அடுத்தது நரசிம்ம அவதாரம்..குழந்தை உள்ளத்தோடு இருந்தால் கூப்பிட்ட உடனே வருவார் என்பதுதான்..
அடுத்தது வாமன அவதாரம்..நீ என் திருவடி தத்துவத்தை புரிந்துகொண்டால் நீ நானாகிறாய் என்பதுதான்
அடுத்த அவதாரம் பரசுராமர்..உடல் வலிமை உலகத்தை ஆளுதலை உணர்த்துவது.
அடுத்தது ராமர்..வாழ்வின் லட்சியம் ..ஞானமடைதல்
கிருஷ்ணர்…நான் இறை அனுபூதி..என்னை நீ அனுமதி
பலராமர்..விவசாயத்தை விட்டுவிடாதே என்பதை உணர்த்துவது.
இனி வரும்காலத்தில் கட்டியிருக்கும் வீடுகளை இடித்துவிட்டு விவசாயம் செய்யும் நிலை வரப்போகிறது.
பத்தாவது அவதாரம்..தசாவதாரம்..இனிதான் வரப்போவதாக சொல்லியிருக்கும் அந்த அவதாரம்..கல்கி

சிவராத்திரி விஷேசமானது ஏன்?

சிவராத்திரி விஷேசமானது ஏன்?
நமது நாட்டு விரதங்களில் இந்து சமயத்தில் சிவபெருமானை வழிபடுபவர்களால் நவராத்திரி , சிவராத்திரி என்ற இரண்டு ராத்திரிகளுமே விஷேசமாகக் கொண்டாடப் படுகிறது. முன்னது அம்பிகையைப் பற்றியது. பின்னது சிவனைப் பற்றியது. ராத்திரி காலத்தில் பூஜை செய்ய வேண்டும் என்பதை இவை மெய்ப்பிக்கின்றன.
ராத்திரி என்பது என்ன?
ராத்திரி என்பது யாதொரு வேலையும் செய்யாமல் இருள் சூழ்ந்து உறங்கும் காலமாம். பகலெல்லாம் வேலை செய்து நாம் தினந்தோறும் இரவில் உறங்குகிறோம். அப்படி உறங்கி எழுந்தால் தான் உடலுக்கு ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் ஏற்படுகிறது. தூக்கம் இல்லாவிடில் உடலும் மனமும் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை. நமது நன்மையை நாடி சர்வேஸ்வரன் நமக்குத்தந்த வரன் தூக்கமாம். ஆனால் அளவு கடந்தும் தூங்கக் கூடாது. தீர்க்க நித்திரை என்று மரணத்திற்குப் பெயர்.
சிவராத்திரி என்பது என்ன?
எதனால் தூக்கம் வருகிறது? இந்த தூக்கம் அவசியம்தானா? என்று விசாரித்த சிலர் இது ஒரு அரிய பாக்கியம் இன்றியமையாதது என்ற முடிவிற்கு வந்தனர். தூக்கத்தில் சிவன் நம்மை அடைகிறான். இதைத் தூங்குகிறான் என வேதம் மறைவிடமாகக் கூறுகிறது.
பகலெல்லாம் அலைந்து திரிந்த நமது இந்திரியங்களும் உடலும் சக்தியை இழந்து ஓய்வடைகின்றன. அச்சமயம் நமது இருதயத்தில் உள்ள ஈஸ்வரன் நம் ஜீவனை அணைத்து அருகில் அமர்த்துகின்றான். அச்சமயம் கண் காண்பதில்லை. காது கேட்பதில்லை. புத்தி ஒன்றையும் நினைப்பதில்லை. சுகமாகத் தூங்கினேன் என எழுந்த பின் கூறுகிறோம்.
அச்சமயம் நாம் இழந்த சக்தியை சிவன் நமக்கு அளித்து அனுப்புகிறார். இப்படி இம்மண்ணுலகும் விண்ணுலகும் ஒரு சமயம் வேலையை விட்டு இறைவனிடம் ஒடுங்குகிறது.. இதுவே மஹாபிரளயம் எனப்படும். நாம் தினந்தோறும் தூங்குவது தைனந்தினப்ரளயம் எனப்படும்.
நாம் பகலில் வேலை செய்து களைத்துப் போவது போல் உலகெல்லாம் வளர்ச்சி காலத்தில் வேலை செய்து களைப்படைகிறது. அந்த பிரபஞ்சத்திற்கு இழந்த சக்தியை அளிப்பதற்காக சிவன் தனக்குள் லயப்படுத்துகிறார். இதே பிரளயம் எனப்படும். புரலயம் என்பதே பிரளயம் என்றாயிற்று. பிர என்றால் உலகம். லயம் என்றால் இரண்டறக் கலத்தல். பிரளயம் என்றால் உலக ஒடுக்கம் என்பதாகும்.
பிரளயத்தில் இறைவனைத் தவிர ஒரு வஸ்துவும் காணப்படாது. மெழுகில் தங்கப் பொடிகள் உருத் தெரியாமல் மறைவது போல் உலகம் சிவனது சக்தியில் ஒளிந்திருக்கும். சிவனது சக்தியை ப்ரக்ருதி என்றும் மாயை என்றும் கூறுவார்கள். தட்டானைப்போல் பரமன் மெழுகு போன்ற ப்ரக்ருதியில் தங்கப்பொடி போன்ற ஜீவர்களை ஒடுக்குகிறார். தீயில் மெழுகை உருக்கினால் தங்கம் தனியே வருவது போல் சிருஸ்டி காலத்தில் ஜீவர்கள் கர்மாவிற்கு ஏற்றபடி உடல் எடுக்கிறார்கள்.
அப்படி உலகம் சிவனிடம் ஒடுங்கிய நாளே சிவராத்திரி ஆகும். அன்று சிவனைத் தவிர வேறு ஒரு வஸ்துவும் இல்லை. ஆனால் சிவனை விட்டு என்றும் பிரியாத சக்தி மாத்திரம் இருப்பாள். அன்னையான உமையவள் குழந்தைகளான நம் பொருட்டு சிவனை அச்சமயம் பூஜித்தாள். சிவபூஜை இல்லாவிடில் நாம் வாழ முழயாது. உலகம் ஒடுங்கிய பொழுது பார்வதி, சிவனை நாம் சிவமாக (சேமமாக) இருப்பதற்காகப் பூஜித்த தினமே சிவராத்திரி ஆகும். அது மாசி மாத தேய் பிறையாகும்.
நமக்காக தேவி சிவனைப் பூஜித்த தினத்தில் நாம் சிவனைப் பூஜித்தால் தினம் பூஜிப்பதைவிட பன்மடங்கு பயனைத் தரும். அன்று சுத்த உபவாசம் இருந்து இரவு கண் விழித்து நான்கு கால பூஜை செய்பவருக்கு முக்தி தரவேண்டும் என தேவி வேண்டினாள். சிவனும் அப்படியே வரம் தந்தார்.
விஸ்ணு அலங்காரப்ரியன் என்றும் சிவன் அபிசேகப்ரியன் என்றும் சொல்வார்கள். சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்யச் செய்ய நமது துன்பம் அகலும் நோய் நீங்கும். மனம் தெளியும். சகல நன்மைகளும் உண்டாகும். நல்ல எண்ணெய் பஞ்சகவ்யம் பஞ்சாமிருதம் நெய் பால்; தயிர் தேன் கரும்புச் சாறு இளநீர் பழரசம் சந்தனம் ஐந்து கலச தீர்த்தம் -இந்த வரிசைக் கிரமத்தில் இந்த வஸ்துக்களால் பதினொரு ருத்ர ஜபத்துடன் அபிசேகம் செய்யவேண்டும். பூஜை செய்யாதவர் பூஜை செய்யும் இடத்தில் இவைகளை அளித்து அபிசேகம் தரிசனம் செய்ய வேண்டும்.
சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும்; மூர்த்தி சிவன் அதேபோல் சீக்கிரம் கோபமும் உண்டாகும். ஆதலால் அபிசேக திரவியங்களும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை செய்பவரும் சுத்தமாக இருந்து மனம் வாக்கு உடல் மூன்றும் ஒன்றுபட்டு நிதானமாக பூஜை செய்து சிவனருள் பெறலாம்.
நான்கு கால சிவ பூஜைகள்:
சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையைக்கண்டு களிக்கலாம். அன்று பூராகவும் உபவாசமாக இருந்து வரவேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
முதல் சாமம்:- பஞ்சகவ்ய அபிசேகம் - சந்தனப்பூச்சு - வில்வம், தாமரை அலங்காரம் - அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் - ருக்வேத பாராயணம்.
இரண்டாம் சாமம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் - பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - பாயாசம் நிவேதனம் - யசுர் வேத பாராயணம்.
மூன்றாம் சாமம்:- தேன் அபிசேகம் - பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - எள் அன்னம் நிவேதனம் - சாமவேத பாராயணம்.
நான்காம் சாமம்:- கரும்புச்சாறு அபிசேகம் - நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி நீலோற்பலம் நந்தியாவர்த்தம் அலங்காரம் - அர்ச்சனை - சுத்தான்னம் நிவேதனம் - அதர்வன வேத பாராயணம்.
நீங்களும் சிவராத்திரி பூஜை செய்து பயன் பெறலாமே?

கஜேந்திர மோக்ஷ்ம்

கஜேந்திர மோக்ஷ்ம்
அனைவரும் அறிந்ததே... எங்கள் ஆலயத்தில் இதை நினைவு படுத்தும் வகையில் கஜத்தில் சர்வலோக ரக்ஷ்கனாம் எம் பெருமாள் மகோற்சவ காலத்தில் வலம் வருவதை காண்பதோடு உட் பிரகாரத்தில் அதைப் விவரிக்கும் சிற்ப ஓவியத்தை காணலாம். 
இங்கு 
யானை- உலக ஜீவாத்மாக்களையும்
முதலை- ஜீவன்களின கர்ம வினைகளையும்
தாமரை- ஜீவன் பண்ண வேண்டிய சரணாகதி
பெருமாள்-ஜீவன் சேர வேண்டிய பரமாத்மாவையும் காட்டுகிறது .

நவ(9) வாசல் கொண்ட நம் உடம்பில் உள்ள 96 தத்துவங்கள்:

நவ(9) வாசல் கொண்ட நம் உடம்பில் உள்ள 96 தத்துவங்கள்:
இறைவனின் படைப்பு துருவ வேற்றுமை ஒற்று மைகளாக, வினையும் எதிர்வினையும் கொண்ட வைகளாக, இது வரையிலும் அவிழ்க்க முடியாத புதிராகவும் உள்ளது. அவைகளில் சிலவற்றை ஞான, விஞ்ஞான, அஞ்ஞான, வேதாந்த விளக்க ங்களின் மூலம் ஆன்றோர்கள், சான்றோர்கள் விளக்கி உள்ளனர். அறிந்து கொள்வோமா !
அறிவு …………………………………..1 புத்தி
வினைகள் …………………………..2 நல்வினை, தீவினை
ஆசைகள் …………………………….3 மண், பொன், பெண்
அந்த கரணங்கள்…………………4 மனம், புத்தி, அகங்காரம், சித்தம்
பஞ்சபூதங்கள்…………………5 (பிருதிவி/பூமி/நிலம்/மண்),(அப்பு/ஜலம்/ நீர் / புனல்) , (தேயு / அக்னி / நெருப்பு / அனல்), (வாயு / கால் / கற்று / கனல்), (ஆகாயம் / வெளி / வானம் / விசும்பு)
பஞ்ச ஞானேந்திரியங்கள்….5 மெய், ,கண், மூக்கு, செவி
பஞ்ச கன்மேந்திரியங்கள்….5 (வாக்கு-வாய், பாணி-கை, 
பாதம்-கால், பாயுரு-மலவாய், உபஸ்தம்-கருவாய்)
பஞ்ச தன்மாத்திரைகள்.…….5 (சுவை-ரசம், ஒளி-ரூபம்,
ஊறு- ஸ்பரிசம், ஓசை-சப்தம், நாற்றம்-கந்தம்)
பஞ்சகோசங்கள்………………….5 (அன்னமய கோசம்,
பிராமணய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்)
மூன்று மண்டலங்கள………..3 ( அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் )
குணங்கள்…………………….……..3 ராஜசம், தாமசம், சாத்வீகம்.
மலங்கள்……………………..………3 ஆணவம், கன்மம், மாயை
பிணிகள்……………………..……….3 வாதம், பித்தம், சிலேத்துமம்.
ஏட………………………………………..3 லோக ஏடணை, அர்த்த ஏடணை, புத்திர ஏடணை.
ஆதாரங்கள்…………………..…….6 மூலாதாரம்,
சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா
அவஸ்தைகள்…………………….5 சாக்கரம்-நனவு, சொப்பனம்-கனவு, கழுத்தி-உறக்கம், துரியம்-நிஷ்டை, துரியாதீதம்-உயிர்ப்படக்கம்
தாதுக்கள்…………………………….7 இரசம், இரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மச்சை, சுக்கிலம்/சுரோனிதம்
ராகங்கள்.…………………………….8 காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம், இடம்பம், அகங்காரம்.
தசநாடிகள்……………………. …..10 இடகலை/இடபக்க நரம்பு, பிங்கலை /வலபக்க நரம்பு, சுழுமுனை/நாடு நரம்பு, சிகுவை/உள்நாக்கு நரம்பு, புருடன்/வலக்கண் நரம்பு, காந்தாரி/இடக்கண் நரம்பு, அத்தி/வலச்செவி நரம்பு, அலம்புடை/இடச்செவி நரம்பு, சங்கினி/கருவாய் நரம்பு, குகு/மலவாய் நரம்பு.
தசவாயுக்கள்……………………..10 பிராணன்/உயிர்க்காற்று, அபாணன்/ மலக்கற்று, வியானன்/தொழிற்காற்று,உதானன்/ஒலிக்காற்று, சமானன் /நிரவுக்காற்று, நாகன்/விழிக்காற்று,கூர்மன்/இமைக்காற்று, கிருகரன்/ தும்மல்காற்று,தேவதத்தன்/கொட்டாவிக்காற்று, தனஞ்செயன்/வீங்கல் காற்று.
ஆக கூடுதல் 96 தத்துவங்கள் ஆகும்.

கடன் தீர்க்கும் ருணவிமோசன மந்திரம்

கடன் தீர்க்கும் ருணவிமோசன மந்திரம்

ஓம் காம் தத்புருஷ லிங்கேஸ்வராய விஸ்வேஸ்வராய
த்ரியம்பகாய ருத்ரமூர்த்தயே ருணவிமோசனாய
மம ஜென்ம ருண ரோக விமோசனம்
குருகுரு ஓம் ஸ்ரீம் காம் சாம் ஸ்ரீபரசிவாய ஸ்வாஹா"
இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க கடன் பிரச்சனை தீரும்

தியானத்தின் நன்மை

தியானத்தின் நன்மை
நான்கு விதமான வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறுபட்ட நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் ஒலிபரப்புகின்றன. நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம்தான் இங்கே கேட்கும். மற்றவை எல்லாம் வந்து மோதும்; ஆனால் கேட்காது. அது போலவே, தேவையற்ற அலைக்கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டு விலகி எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நினைப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்ற அளவிலே மனிதத்திறமை வெளிப்படுகிறது.

கடவுளை பார்ப்பது அவ்ளோ லேசா :

கடவுளை பார்ப்பது அவ்ளோ லேசா :
"கடவுள் என்பவர் யார்? 
மனிதர்களைப் போல இருப்பாரா? 
ஒளியாய் பிரகாசிப்பரா? 
கையில் அரிவாள், கத்தி, சூலம் வைத்திருப்பாரா? அவருக்கு இரண்டு கையா, நான்கா, எட்டா, பதினாறா அதற்கு மேலா! தலைகள் எத்தனை...' இப்படி பல குழப்பம் நீண்டகாலமாக இருக்கிறது. சரி...அவரை நேரில் பார்த்து விட்டால் சந்தேகம் தீர்ந்து விடுகிறது என்றால், கண்ணில் படவே மாட்டான் என்கிறார்.
கடவுளைக் காண வேண்டும் என்ற ஆவல் ஒரு மன்னனுக்கு ஏற்பட்டது.
காட்டில் இருக்கும் முனிவர்களையெல்லாம் அரண்மனைக்கு அழைத்து வர உத்தரவு போட்டான்.
முனிவர்களும் வந்து சேர்ந்தனர்.
அவர்களிடம், ""நீங்கள் கடவுளுக்கு யாகம் செய்வதாக சொல்லிக்கொண்டு, அரண்மனையில் இருந்து ஏராளமாக நிதி பெறுகிறீர்கள்.
யாகத்தின் அவிர்பாகத்தை (பலன்) அவர் பெற்றுச் செல்வதாகச் சொல்கிறீர்கள். உங்களில் சிலர் கடவுளை நேரிலும் பார்த்ததாகச் சொல்கிறீர்கள். எனக்கும் அவரைப் பார்க்க ஆசை.
இப்போதே, என்னை காட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். யாகபலனை கடவுள் வாங்க வரும்போது, அவரை என்னிடம் அறிமுகம் செய்து வையுங்கள்,'' என்றான்.
முனிவர்கள் திகைத்தனர். ஒருமுனிவர் மட்டும், ""மன்னா! கொஞ்சம் பால் கொண்டு வரச் சொல்,'' என்றார்.
ஒரு பாத்திரத்தில் பால் வந்தது. ""இதிலுள்ள வெண்ணெயை எடுத்து தா!''.
முனிவர் இப்படி கேட்கவும் மன்னன் அவரிடம், ""அதெப்படி முடியும்! இதை தயிராக்க வேண்டும், தயிரைக் கடைந்தால் பாலுக்குள் மறைந்திருக்கும் வெண்ணெய் வெளிப்படும்,'' என்றான்.
""இதே போல் தான் கடவுளும்..."வா' என்றால் உடனே வந்துவிட அவர் நமது வேலைக்காரர் அல்ல.
முனிவர்கள் ஆன்மிகப்பயிற்சிகளின் மூலம் தங்கள் அகக்கண்களால் அவரைப் பார்க்கின்றனர். சிலர் இதில் தீவிரமாக மூழ்கி நேரில் காணும் பாக்கியம் பெறுகின்றனர்.
முயற்சி உள்ள ஒவ்வொருவனும் கடவுளைக் காண்பான்,'' என்றார்.

மஹாசிவராத்திரி

கடவுள் இருக்கிறாரா? இருக்கிறார் எனில் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? அவரை என்னால் ஏன் காணமுடியவில்லை? எப்படிக் காண முடியும்? இப்படி எல்லாம் கேள்வி எழுவது உலகியல் வாழ்க்கையில் இயல்பான ஒன்று தான்!
இதற்கான பதில்களை அற்புதமாக அருளாளர்கள் தங்கள் அழியாப் பாடல்களில் தந்துள்ளனர்.
அப்பரின் அற்புத பதில்கள்!
இவற்றிற்கெல்லாம் பதில் கொடுத்துள்ள அழியாத் தவநெறிச் செல்வர் அப்பரின் அருளுரைகளை சிவராத்திரி தினத்தன்று பார்த்துத் தெளிவோம்!
“விறகில் தீயினன், பாலில் படு நெய் போல் மறைய நின்றுளன்” என்கிறார் அப்பர். விறகிலே தீ போல பாலிலே நெய் போல மறைந்து நின்று இருக்கிறான் எம் சிவ பிரான் என்பதே கடவுள் இருக்கிறாரா, எங்கே இருக்கிறார் என்று கேட்பவருக்கான பதில்!
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும் 
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே 
ஈசன் எந்தை இணையடி நீழலே
எப்படி இருக்கிறார் எனில் மாசு இல்லாத வீணை போல, மாலை மதியம் போல, வீசுகின்ற தென்றல் போல, வீங்கு வசந்தம் போல மூசு வண்டறை தடாகம் போல அவனது நீழல் உள்ளது என்பதே எப்படி இருக்கிறார் என்பதற்கு அவர் தரும் பதில்!
நியூட்டனின் பதில்!
பிரபல விஞ்ஞானி நியூட்டன் ஒரு பெரும் ஆத்திகவாதி. அவரது நண்பர் ஒருவரோ பெரிய நாத்திகர். நியூட்டனின் கடவுள் பக்தியை அவர் ஏற்கவில்லை. ஒரு நாள் நியூட்டன் சூரிய மண்டலத்தின் மாதிரி ஒன்றை ஸ்கேல் மாடலில் அதாவது சிறிய் அளவில் சூரிய மண்டலம் இருப்பது போலவே சுற்றி வரும் கிரகங்களின் தூரம். ஓடு பாதை. அளவு ஆகியவற்றை எல்லாம் நிர்ணயித்து சுழலும்படியான ஒரு அமைப்பில் செய்து வைத்திருந்தார். அற்புதமான அந்தச் சாதனத்தில் ஒரு சிறிய கைப்பிடியைச் சுற்றினால் கிரகங்கள் தனது இயல்பில் சுழல அதனதன் ஓடு பாதையில் அது அது தனது வேகத்தில் சென்று சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும்.
நியூட்டனின் நண்பர் ஒரு நாள் உள்ளே வந்தார். இந்த அபாரமான அமைப்பைப் பார்த்து பிரமித்து நின்று விட்டார். அப்போது அந்த அறையின் ஓரத்தில் தன் மேஜையின் அருகே நாற்காலில் அமர்ந்து நியூட்டன் தீவிரமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். வந்த நண்பர் வியப்புடன் கூவினார்:” ஆஹா! பிரமாதம்! நியூட்டன்! இதை யார் செய்தது?” அவரது ஓங்கிய குரலுக்கு நியூட்டனிடமிருந்து சுவாரசியமின்றி சாந்தமான குரலில்,”ஒருவரும் இல்லை!” என்று பதில் வந்தது. தனது கேள்வியை நியூட்டன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணிய நண்பர் சற்று உரக்க,”இதை யாரேனும் செய்திருக்க வேண்டுமே! யார் செய்தது என்று நான் கேட்கிறேன்!” என்றார்.
இன்னும் அமைதியான தாழ்ந்த குரலில் நியூட்டன், “அது தான் ஒருவரும் செய்யவில்லை என்கிறேனே” என்றார்.
இப்போது நண்பருக்குக் கோபம் வந்து விட்டது. தன் நண்பர் இடக்காகப் பதில் சொல்கிறார் என்று நினைத்த அவர் நியூட்டனிடம் சென்று அவரின் தோளைக் குலுக்கி, “ யாரும் செய்யாமல் இது எப்படி உருவானது? தானே தோன்றியதா?” என்று ஆவேசமாகக் கேட்டார்.
அவரைப் பற்றி இழுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார் நியூட்டன். வானத்தைச் சுட்டிக் காட்டினார், பிறகு சொன்னார்:” இதோ மேலே பாருங்கள். லட்சக்கணக்கான நட்சத்திரங்கள், கிரகங்கள், அதன் சுழற்சிகள்! இவை எல்லாம் தானே சுற்றுகையில் இந்த வெறும் சாதனம் தன்னைத் தானே தோற்றுவித்திருக்கக் கூடாதா, என்ன!”
நியூட்டனின் பதிலால் விக்கித்து நின்று விட்டார் அவர். கோடானு கோடி நட்சத்திரங்களையும் கிரகங்களையும் இன்ன பிறவற்றையும் தோற்றுவித்தவன் யார்? அவருக்கு உறைத்தது. அன்று முதல் அவர் சிறந்த ஆத்திகரானார்.
விஞ்ஞானி நியூட்டன் சொன்ன பதிலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே “இயற்கையைப் பார்; அதைப் படைத்தவனை அறி” என்று மூசு வண்டறைப் பொய்கையைக் காட்டிக் கூறிய அருளாளர் அப்பர்,
“விறகில் தீ ஆகவும், பாலில் நெய்யாகவும் மறைய நின்றிருப்பவன் ஜோதி ஸ்வரூபமானவன் என்று கூறி அவனைப் பார்க்க – அடைய - உறவு என்னும் கோலை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைந்தால் அவன் நம் முன் வந்து நிற்பான்” என்கிறார்.
“அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை!”
தென்னாடு உடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

சிவராத்திரி உணர்த்தும் உண்மைகள் கருத்துகள்

சிவராத்திரி உணர்த்தும் உண்மைகள் கருத்துகள்
ஆணவம் ஏற்படுத்தும் அறியாமை என்கின்ற செறுக்கு உள்ளவரை உயிர்கள் இறைவனின் திருவருளைப் பெறமுடியாது என்றும் இறைவனின் திருவடி இன்பத்தில் திளைக்க முடியாது என்றும் சிவராத்திரி நமக்கு உணர்த்துகின்றது. திருமாலும் பிரமனும் ஆணவச் செறுக்கினால் தர்க்கித்து இறைவன் திருவடியையும் இறைவன் திருமுடியையும் காண முயன்று சோர்ந்தனர் என்பது இதனையே உணர்த்துகின்றது. அவர்கள் தங்கள் அறியாமையை உணர்ந்து அன்பினால் உருகி இறைவன் திருவருளை வேண்டித் தவமிருந்தபோது இறைவன் திருவருள் கிடைக்கப்பெற்றனர் என்பதும் கூறப்பட்டது.
எனவே “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே” என்று அடியார் பெருமக்கள் குறிப்பிடுவது போல அன்பினால் இறைவனை அடையலாம் என்று சிவராத்திரி உணர்த்துகின்றது. அன்றாட வாழ்வில் பணம், பதவி, படிப்பு, அழகு, அறிவு என்று பல்வேறு அறியாமையால் தர்க்கித்துத் திரியும் நாம் சிவராத்திரியன்று இதை எண்ணிப் பார்க்க வேண்டும். நம்முடைய பணம், பதவி, படிப்பு, அழகு, அறிவு என்பதெல்லாம் கருணையினால் இறைவன் அளித்தது என்றும் அதனைக் கொண்டு இறைவனிடத்திலும் இறைவன் வாழ்கின்ற பிற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டி உயிர் ஈடேற்றம் பெறுவதற்கு அவன் திருவருளை எண்ண வேண்டும் என்பதை அன்றைய தினம் எண்ணி எண்ணிப்பார்க்க வேண்டும்.
இறைவன் நமக்கு அளித்திருக்கின்ற குறுகிய வாழும் காலத்தைத் தற்காலிக உலக போகங்களை எண்ணிப்பார்த்து நம் ஆணவத்தை நீக்கி வாழ வேண்டும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். கணவன், மனைவி, மறுமகள், மாமனார், மாமியார், முதலாளி, தொழிலாளி, தலைவன், தொண்டன் போன்ற செறுக்குகளையெல்லாம் விட்டு இறைவன் திருவடிக்குச் செல்ல துடித்துக் கொண்டிருக்கும் இன்னொரு உயிர் என்ற எண்ணத்தில் அன்பு பாராட்டும் இயல்பு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி நிற்க வேண்டிய நாள் அது. இதனையே “ஆருயிர்களுக்கு எல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்” என்று வள்ளல் பெருமான் வேண்டினார்.
எனவே சிவராத்திரி என்பது வருடத்திற்கு ஒருமுறை ஆணவத்தினால் ஏற்படும் நம் அறியாமைச் செறுக்கினை எண்ணிப்பார்க்கின்ற நாளாய் அமைகின்றது. ஆணவத்தினால் நாம் செய்கின்ற அன்பில்லாச் செயல்களையும் வார்த்தைகளையும் எண்ணங்களையும் எண்ணிப்பார்த்து அவற்றைச் சரிப்படுத்துவதற்குறிய வழிவகைகளை ஆராயும் நாளாய் அமைகிறது. இறைவனை வழிபட்டு, அவன் திருவருளை வேண்டி நின்று, கண் விழிப்பதோடு மட்டுமல்லாமல் நம் உயிரினை விழிப்படையச் செய்யும் நாளாகவும் விளக்குகின்றது. இவ்வளவு சிறப்புக்களையும் உண்மைகளையும் உணர்த்தும் உயரிய சிவராத்திரியை உரிய முறையில் உள்ளவாறு உய்த்து உணர்ந்து கொண்டாடுவோமாக!

ஆறுமுகனின் இரகசியம்

ஆறுமுகனின் இரகசியம்
ஓம் ‘சரவணபவ’ எனும் ஆறு எழுத்துக்கள் கொண்ட மந்திரத்திற்கு உரியவராதலால் ஷடாக்ஷரன் என்று முருகப்பெருமானுக்கு ஒரு பெயர் உண்டு.
கோல மயிலை தன் வாகனமாகக் கொண்டதால் சிகிவாகனன் என்று முருகப்பெருமான் வணங்கப்படுகிறார். சிகி எனில் மயில் என்று பொருள்.
சூரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு அன்னை பராசக்தியிடமிருந்து அவள் அம்சமாய் ஞானவேலைப் பெற்று சூரனை வதைத்தார், முருகன். அதனால் அவரை ஞானசக்திதரன் என்று தேவர்கள் போற்றினர்.
தினைப்புனம் காத்த வள்ளியம்மையை காதலித்து கல்யாணம் செய்து கொண்ட முருகப்பெருமானின் திருவுருவம் வள்ளிகல்யாணஸுந்தரன் என்று போற்றப்படுகிறது.
பிரணவத்திற்குப் பொருள் சொல்லத்தெரியாத பிரம்மனை சிறையில் அடைத்து பிரம்மனின் கர்வத்தை அடக்கிய முருகன் பிரம்மசாஸ்தா என வழிபடப்படுகிறார்.
தேவேந்திரன் அளித்த சீதனமான ஐராவதம் எனும் வெள்ளையானையின் மீது ஆரோகணித்து அருளும் முருகன் கஜாரூடன் என வணங்கப்படுகிறார்.
ஓம் எனும் பிரணவத்திற்கு தன் தந்தையான ஈசனுக்கு விளக்கம் சொன்னதால் தகப்பன்சாமி எனப் பெயர் பெற்றார் முருகன்.
ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து உதித்த ஆறு தீப்பொறிகளும் சரவணப்பொய்கையில் உள்ள ஆறு தாமரை மலர்களில் விழுந்து, ஆறு குழந்தைகளாகி, உமையன்னையால் ஆறுமுகங்களுடன் ஓர் உருவம் பெற்றதால், ஆறுமுக சுவாமியானார்.
ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்று முருகப்பெருமானைப் போற்றுவர்.
சூரபத்மனை வதைத்து, அதற்குப் பரிசாக தேவேந்திரன் மகளான தேவயானையை மணந்து, தேவர்கள் சேனைக்கு அதிபதியானான் முருகன். அதனால் அவரை தேவசேனாதிபதி என்றும் தேவசேனா பதி என்றும் வணங்குகின்றனர்.
திருமாலின் மருமகனாய் முருகப்பெருமான் போற்றப்படுவதால் மால் மருகன் என்றும் அவரை அழைப்பர்.
விநாயகப் பெருமானின் சகோதரனாதலால் முருகப்பெருமான் விக்னேஸ்வரானுஜன் என்றும் அழைக்கப்படுகிறார்.
உமையன்னையான கௌரியின் திருவயிற்றில் பிறந்ததால் கௌரீகர்ப்பஜாதன் என்றும் முருகப்பெருமானுக்கு ஒரு திருநாமம் உண்டு.
விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என்று முருகனை வணங்குவர்.
சேவற் கொடியைக் கொண்டதால் குக்குடத்வஜன் என்று முருகப்பெருமான் போற்றப்படுகிறார்.
ஈசனின் நெற்றிக்கண்களில் தோன்றிய அக்கினியிலிருந்து உதித்ததால் அக்கினிகர்ப்பஜான் என்றும் முருகப்பெருமான் வணங்கப்படுகிறார்.
தண்டம் எனும் ஆயுதத்தை ஏந்தியருளும் முருகப்பெருமான் தண்டாயுதபாணியாய் பக்தர்கள் துயரங்களை விரட்டி அருள்புரிகிறார். 
வேதங்கள் ‘சுப்ரம்மண்யோம், சுப்ரம்மண்யோம், சுப்ரம்மண்யோம்’ என்று முருகப் பெருமானையே மும்முறை போற்றுகின்றன. அவ்வளவு ஞானம் கொண்டவன் முருகன். அதனால் அவனை ஞானபண்டிதன் என்று அழைப்பர்.
நம் மனம் குகை போன்றது. குகை எப்போதும் இருண்டிருக்கும். அந்த இருட்டில் ஜோதியாக முருகன் தோன்றுவதால் அவனுக்கு குகன் என்றும் பெயர்.
ஆறுமுகப்பெருமான் பன்னிரு கைகளும் கண்களும் கொண்டு அருள்வதால் த்வாதசநேத்ரபாஹு என்று பக்தர்களால் வணங்கப்படுகிறார்.

கடவுள் என்ன செய்வார் .................

கடவுள் என்ன செய்வார் .................
ஒரு கோயிலில் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயின. ஆலயக் காப்பாளர், என்ன கடவுள் நீ உன் நகைகளையே உன்னால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையே... நீ எப்படி உலகத்தைக் காப்பாய்? என்று புலம்பி அழுதார்.
அப்போது அங்கே வந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னா... நகைகள் உனக்குத்தான் உயர்வானவையே தவிர கடவுளுக்கு அல்ல. ஒரு பக்தன் தந்தபோது ஏற்றுக் கொண்ட தெய்வம், இன்னொருவன் எடுத்துக் கொண்டபோது விட்டுக் கொடுத்துவிட்டது. உயர்வாக அதை நினைக்கும் நீதான் காப்பாற்றியிருக்க வேண்டுமே தவிர, எதையும் பெரிதாக எண்ணாத பரம்பொருள் அல்ல...!

நோய் நீக்கும் மந்திரங்கள்:-

நோய் நீக்கும் மந்திரங்கள்:-
1.அமிர்த சஞ்சீவினி மந்திரம்:-
ஓம் நமோ பகவதி |மிருதசஞ்சீவினி |சாந்தி குரு குரு ஸ்வாஹா||
அசுரகுரு சுக்ராச்சாரியார் இம்மந்திரத்தை உபயோகித்தே இறந்தவர்களைக்கூட மீண்டும் உயிர் பெறச்செய்தார்.வியக்கத்தக்க வகையிலும்,உடனடியான பலன்களையும் தரும் இம்மந்திரத்தை உபயோகித்து பலனடையுங்கள் .நமக்காக ஜெபிப்பதானால் மேற்கண்ட மந்திரத்தை அப்படியே ஜெபிக்கலாம் .பிறருக்காக ஜெபிப்பதானால் சாந்தி என்ற வார்த்தைக்கு முன்னதாக சம்பந்தப்பட்டவரின் பெயரை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
உதாரணமாக:- முருகன் என்பவருக்காக ஜெபிப்பதானால்
ஓம் நமோ பகவதி |மிருதசஞ்சீவினி |முருகன் சாந்தி குரு குரு ஸ்வாஹா||
என ஜெபிக்க வேண்டும்.
2.தன்வந்திரி மந்திரம்:-
ஓம் |நமோ பகவதே வாசுதேவாய|தன்வந்திரியே |அமிர்தகலச ஹஸ்தாய |
சர்வ ஆமய நசனாய|த்ரைலோக்ய நாதாய |ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா||
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து ஒரு பேரொளி தோன்றி தேவ ரூபம் கொண்டு நான்குகரங்களும் அவற்றில் முறையே சங்கு,சக்கரம்,அட்டைபூச்சி,அமிர்தகலசம் இவற்றுடன் தோன்றியவர்தான் ஸ்ரீ தன்வந்திரி பகவான்.ஆயுர்வேதம் அவரால் தோன்றியது.கீழ்க்காணும் மந்திரத்தை ஜெபித்து வந்தாலும் வியாதிகள் நீங்கும்.வெண்ணையில் மந்திரித்து உண்ணலாம்,மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை இடது கையில் வைத்து இம்மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாய் நீங்கும்.

அன்னையின் ஈமச் சடங்கு பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்த பட்டினத்தடிகள் .............

அன்னையின் ஈமச் சடங்கு பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்த பட்டினத்தடிகள் .............
பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை...
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

தமிழருவி மணியன்

"இடது கைக்குத் தெரியாமல், துயருற்றவனைத் தேடிச் சென்று எவனொருவன் வலது கையால் தானம் அளிக்கிறானோ அந்த ஈரமுள்ள மனிதனே என் படைப்பில் எல்லாவற்றிலும் வலிமை வாய்ந்தவன்''
தமிழருவி மணியன்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய ஆண்டவன் பூமியைப் படைத்தபோது, அது நிலையாக நிற்காமல் கொஞ்சம் அதிர்ந்து அசைந்தது. அப்போது உயிர்க்குலம் அனைத்தும் அச்சத்தில் ஆழ்ந்தன. தான் படைத்த பூமி அசைவதைப் பார்த்து இறைவன் அதன்மேல் பிரம்மாண்டமான மலைகளைப் பொருத்தினான். அதன் பின், பூமி அசைவற்றும் அதிர்வற்றும் நிலையாக நின்றது.
மலைகளின் வலிமையைக் கண்டு வானவர்களின் விழிகள் வியப்பால் விரிந்தன. ""மலைகள்தான் உன்னுடைய படைப்பில் மிக்க வலிமை வாய்ந்தவையா?''என்று அவர்கள் அடிபணிந்து கேட்டனர். ""இல்லை! அந்த மலைகளை உடைத்துத் தகர்க்கும் கடினமான இரும்பை நான் படைத்திருக்கிறேன். பாறையைவிட என் படைப்பில் இரும்பு அதிக வலிமையானது'' என்றான் இறைவன்.
""இரும்பை விடவும் வலிமையானது உன் படைப்பில் வேறொன்றும் இல்லையா?'' என்று அவர்கள் மீண்டும் கேட்டதும், ""இருக்கிறது. இரும்பை உருக்கும் நெருப்பும் என் படைப்பே!'' என்றான் ஏகநாயகன். ""நெருப்பினும் வன்மையானது உன் படைப்பில் உண்டோ?'' என்று விடாமல் அவர்கள் வினா எழுப்ப, ""நெருப்பை அணைக்கும் நீரைப் படைத்திருக்கிறேன்'' என்று புன்னகைத்தார் அந்தப் பேரருளாளன்.
""நீரைவிட ஆற்றல் மிக்கது அகிலத்தில் இல்லையா?'
என்று வானவர்கள் வினவ, ""அந்த நீரைக் கிளர்ந்தெழச் செய்யும் காற்று இருக்கிறதே!'' என்று வாய்விட்டுச் சிரித்தான் இறைவன்.
""அப்படியானால் உன் படைப்பில் எல்லாம் வல்லது காற்றுத்தானா?'' என்று ஆர்வத்துடன் அவர்கள் கேள்விக்கணை தொடுத்ததும் மௌனத்தில் ஆழ்ந்த ஆண்டவன், சிறிது நேர இடைவெளிக்குப்பின், ""இடது கைக்குத் தெரியாமல், துயருற்றவனைத் தேடிச் சென்று எவனொருவன் வலது கையால் தானம் அளிக்கிறானோ அந்த ஈரமுள்ள மனிதனே என் படைப்பில் எல்லாவற்றிலும் வலிமை வாய்ந்தவன்'' என்று சொல்லி அமைதியானான்.

பிருகு முனிவரின் சோதனை :

பிருகு முனிவரின் சோதனை :
பிருகு முனிவர் சோதனையின் முதல் பகுதியாக பிரம்ம லோகத்துக்கு முதலில் சென்றார்!! அதுவும் எப்படி? பிரம்மா மனைவி சரஸ்வதியுடன் தனித்திருக்கும் நேரமாகப் பார்த்து உள்ளே போனார்!! பெரும் தபஸ்வியான அவரைத் தடுத்து நிறுத்தும் துணிச்சல் அங்கு யாருக்கும் இல்லை!!!
பிரம்மா ரஜோ குணத்துக்கு அதிபதி!! வேகம், கோபம் போன்றவை ரஜோ குணத்துடன் இணைந்தவை!! மனைவியுடன் இருந்த பிரம்மா திடீரென உள்ளே நுழைந்த முனிவரைப் பார்த்துக் கடும் கோபமடைந்தார்!! முனிவரைக் கடுமையான வார்த்தைகளால் ஏசினார்!! உடனே கோபமடைந்த பிருகு முனிவர் '' தபஸ்வியான என்னைக் கடும் வார்த்தைகளால் திட்டிய உனக்கு பூலோகத்தில் ஆலய வழிபாடே இல்லாமல் போகட்டும் !!'' என்று சாபமிட்டார்!! இந்தக் காரணத்தால்தான் பிரம்மாவுக்கு என்று கோவில்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது!! (சில ஸ்தல புராணங்கள் காரணமாக ஓரிரு கோவில்கள் உள்ளன!)
அடுத்து கைலாயம் !! கயிலையில் சிவபெருமான் சக்தியுடன் தனித்திருந்த நேரம் முனிவர் திடீரென உள்ளே நுழைந்தார்!! சிவபெருமான் தமோ குணத்தின் அதிபதி!! அது புறக்கணிப்பு, அழிவு ஆகியவற்றுடன் இணைந்தது!! (இதன் பொருள் இதுவல்ல!! இது பற்றி பின் வரும் பதிவுகளில் விளக்கமாக வரும்!). முனிவர் உள்ளே நுழைந்ததைக் கண்ட சிவபெருமான் எரிச்சலாகி அவரைக் கண்டுகொள்ளாதது போல இருந்தார்!! அதுமட்டுமின்றி தேவியிடம் இந்த முட்டாள் முனிவனைப் பார் எந்த நேரத்தில் அனுமதியின்றி வருவது என்று கூட இவனுக்குத் தெரியவில்லை என்று சொல்லிச் சிரித்தார்!! கோபமான முனிவர் '' தபஸ்வியான என்னை வந்தது கூடத் தெரியாதது போலக் காட்டிக் கொண்டு தேவியுடன் சிரித்துப் பேசிய சிவனே!! என்னை விட சக்தியுடன் பேசுவதே முக்கியம் என்று எண்ணிய உனக்கு பூமியில் வழிபாடுகள் உன் உருவத்துக்கு அன்றி உன் லிங்கத்துக்கே இருக்கட்டும் !!'' என்று சாபமிட்டார்!! இதனால்தான் பூமியில் சிவபெருமான் லிங்க வடிவிலேயே வணங்கப்படுகிறார்!!
அடுத்து வைகுந்தம்!! அதே போல பிருகு முனிவர் திருமாலும் லட்சுமியும் தனித்திருந்த நேரத்தில் உள்ளே நுழைந்தார்!! அவர் நுழைந்ததைக் கண்ட திருமால் இதர இடங்களில் நடந்ததை உணர்ந்து முனிவர் என்னதான் செய்கிறார் என்று பார்ப்போமே என்று எண்ணி இரு கண்களையும் மூடினாற்போல் பாவனை செய்தார்!! திருமால் தான் வந்ததைக் கவனித்து விட்டு உறங்குவது போல பாவனை செய்தது கண்ட பிருகு கடும் கோபமடைந்தார்!! நேராக வந்தவர் விஷ்ணுவின் இடது மார்பில் தமது வலது காலால் எட்டி உதைத்தார்!! திருமால் சத்வ குணம் கொண்டவர்!! சத்வ குணம் பொறுமை, நிதானம் போன்றவற்றோடு தொடர்புடையது!! திருமால் கண்விழித்தார்!! முனிவரைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தவர் '' என்ன பிருகு கால் வலிக்கிறதா ?" என்று கேட்டு முனிவரின் காலைப் பிடித்து விடுவது போலப் பிடித்து அந்தக் காலில் இருந்த ஞானக் கண்ணையும் பிடுங்கி விட்டார்!! தாம் எட்டி உதைத்த போதும் கோபமடைந்து தன்னை அழிக்காத சத்வ குணமுடைய திருமாலே யஞ ஆகுதிகளை முழுதும் பெறத் தக்கவர் என்று பிருகு முனிவர் முடிவு செய்து பூலோகம் திரும்பி அதனை சக முனிவர்களிடம் உரைத்தார்!!