Thursday, June 30, 2016

செல்வம் நிலைத்து தரித்தரம் மறைய:-

செல்வம் நிலைத்து தரித்தரம் மறைய:-
1.வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
2.ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.(வாசல் படி நரசிம மூர்த்திக்கு சொந்தம் ).
3.உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.
4.வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது/சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது,பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.
5.உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
6.பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது
7.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
8.அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
9.செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
10.செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
11.நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.🔜

தெய்வ சக்திகளை வீட்டினுள் அழைக்கின்ற சக்தி

தர்ப்பை புல்லும், பச்சை கற்பூரமும்
1) வீட்டுக்கு வெளியே வீட்டோடு நான்கு பக்கமும் இரண்டு தர்ப்பை புல்லை எடுத்து அதில் பச்சை கற்பூரத்தை தடவி நான்கு பக்கத்துக்கும் போட வேண்டும்
வீட்டுக்கு வெளியே போட வாய்ப்பு இல்லையென்றால் வீட்டிற்குள் போடலாம்
2) தர்ப்பை புல்லை பச்சை கற்பூரம் தடவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அதை தூபம் போட வேண்டும். அப்போது புகை கொஞ்சமாக வரும், அந்த புகையை வீடு முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும்
தர்ப்பை புல்லுக்கும், பச்சை கற்பூரத்துக்கும் தெய்வ சக்திகளை வீட்டினுள் அழைக்கின்ற சக்தி உண்டு.

Monday, June 27, 2016

4 அடிப்படை நியதிகளுடன் ஒன்றைப் பிறருக்குக் கொடுக்கும் போது மட்டுமே அது தானம் ஆகிறது.

தானம் செய்ய வேண்டும்:
யே கே சாஸ்மச்ச்ரேயாக்ம்ஸோ ப்ராஹ்மணா: I தேஷாம்
த்வயாஅஅஸனேன ப்ரச்வஸிதவ்யம் II 11.5 II
பொருள்: நம்மை விட உயர்ந்தவர்களோ தூயவர்களோ வரும்போது எழுந்து, அவர்கள் அமர இருக்கை அளித்து, அவர்களின் களைப்பைப் போக்கி உபசரிக்க வேண்டும்.
ச்ரத்தயா தேயம் I அச்ரத்தயாஅதேயம் I ச்ரியா தேயம் I ஹ்ரியா தேயம் I
பியா தேயம் I ஸம்விதா தேயம் II 11.6 II
பொருள்: நம்பிக்கை மிக்க ஈடுபாட்டுடன் தானம் செய்ய வேண்டும்; ஏனோதானோ என்று தானம் செய்யக் கூடாது. வருமானத்திற்கு ஏற்ப தியானம் செய்ய வேண்டும். பணிவுடனும் மரியாதையுடனும் தகுந்த அறிவுடனும் தியானம் செய்ய வேண்டும்.
தானம் பற்றிய சிறந்ததொரு விளக்கத்தை இங்கு நாம் காண்கிறோம். இந்த மந்திரம் கூறுகின்ற 4 அடிப்படை நியதிகளுடன் ஒன்றைப் பிறருக்குக் கொடுக்கும் போது மட்டுமே அது தானம் ஆகிறது.
i ஏனோதானோ என்று கொடுக்கக் கூடாது. ஈடுபாட்டுடன் கொடுக்க வேண்டும். அந்த ஈடுபாட்டின் பின்னணியில் ‘இது உண்மையிலேயே மகோன்னதமான சேவை, உண்மையிலேயே நற்பணியில் ஈடுபடுபவனுக்கு மனிதன், மனிதன் ஏன், இறைவனே உதவுவார்’ என்ற ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும்.
ii வருமானத்தில் இயன்ற அளவு ஒரு பகுதியைக் கட்டாயம் தானம் செய்ய வேண்டும். அதே வேளையில் வருமானத்தை மீறி தானம் செய்து விட்டு, தான் பிறரிடம் யாசிக்கும் நிலையை உண்டாக்கக் கூடாது.
iii ‘ஐந்து காசுகளைக் கையில் எடுத்துக் கொண்டு உயரமான இடத்தில் நின்று கொண்டு, “பிச்சைக்காரா, இதோ “ என்று கூறாதீர்கள். அவன் இருந்தால்தானே அவனுக்குத் தானம் செய்து, அதன் மூலம் உங்களுக்கு நீங்களே உதவ முடிந்தது என்று அவனிடம் நன்றியுடன் இருங்கள். பெற்றுக் கொள்பவன் அல்ல, கொடுப்பவனே பேறு பெற்றவன். உங்கள் தானத் திறத்தையும் இரக்கத்தையும் இந்த உலகத்தில் செயல்படுத்தி, அதன் மூலம் நீங்கள் தூய்மையும், நிறைநிலையும் அடைவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததற்காக நன்றி உடையவர்களாக இருங்கள்.’ – விவேகானந்தர் ஞான தீபம்.
iv தானம் செய்யும் போது இரண்டு விஷயங்களை அறிந்திருக்க வேண்டும். ‘நம்மை எதிர்பார்த்து சிலர் வாழ்கிறார்கள், நாம் ஒருவருக்கு நன்மை செய்ய முடியும் என்று எண்ணுவது பலவீனம். இதுவே நம்முடைய பற்றுக்கள் அனைத்துக்கும் பிறப்பிடம். இந்தப் பற்றின் மூலமே நமது துன்பங்கள் எல்லாம் வருகின்றன. இந்தப் பிரபஞ்சத்தில் ஒருவர் கூட நம்மை எதிர்பார்த்து வாழவில்லை என்பதை மனத்திற்கு எடுத்துக் கூற வேண்டும். ஒரு பிச்சைக்காரன் கூட நம் கருணையை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. நம் உதவியை எதிர்பார்த்து ஓர் உயிர் கூட வாழவில்லை. அனைவருக்கும் இயற்கையே உதவி செய்கிறது. நம்மைப் போல் லட்சக்கணக்கான மனிதர்கள் இல்லாவிட்டாலும் இயற்கை உதவிக் கொண்டுதான் இருக்கும். உங்களுக்காகவும் எனக்காகவும் இயற்கையின் போக்கு நிற்காது. பிறருக்கு உதவுவது என்பது நம்மை நாம் பண்படுத்திக் கொள்வதற்காக நமக்குத் தரப்படுகின்ற மிகப் பெரும் பேறு என்பது ஒன்று.
இரண்டாவது: ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்பார்கள். நாம் ஒன்றை ஒருவருக்குக் கொடுக்குமுன் அவருக்குத் தேவையிருக்கிறதா, அந்த தானத்தால் அவர் பயன் பெறுவாரா என்பவற்றை அறிந்த பின்னரே ஒன்றைக் கொடுக்க வேண்டும்.

எட்டுவிதமான பைரவர்கள் - வாகனங்கள்:

எட்டுவிதமான பைரவர்கள் - வாகனங்கள்:
அசிதாங்க பைரவர் - அன்ன வாகனம்
குரு பைரவர் - காளைமாடு
சண்ட பைரவர் - மயில்வாகனம்
குரோத பைரவர் - கழுகு வாகனம்
உன்மத்த பைரவர் - குதிரை வாகனம்
கபால பைரவர் - யானை வாகனம்
பீஷண பைரவர் - சிம்ம வாகனம்
சம்ஹார பைரவர் - நாய் வாகனம்

Sunday, June 26, 2016

பெண்கள் ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா ?

 : பெண்கள் ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா ?
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.
வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.
பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய் விட்டது.
இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.
அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.
இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.
ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்கு கூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.
* ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது.
மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன.
திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப் படுகிறது.
* ஊஞ்சல் ஆடுவதால் மனச் சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.
நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத் தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.
* கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
* தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது.
மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.
இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதய நோய் கட்டுப்படும்.
* ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
* சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது.
சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.
கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
* பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.
வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள்,
ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை.
சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.
* இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப் பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.
இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.
வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.
முக்கிய குறிப்பு:-
இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும்,குழந்தைகளுக்கும்,வயதானவர்களுக்கும் பொருந்தும்.
திருமந்திரம் பாடல்
-------------------------------
தூங்கிக் கண்டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார்நிலை சொல்வ தெவ்வாறே.
விளக்கம்
---------------
தூங்காமல் தூங்கும் தியான நிலையில்தான் ஞானிகள் தம்மை அறிந்துகொள்கின்றனர். தம்மை அறிந்துகொண்ட ஞானிகள் சிவலோகத்தையே தமக்குள் தரிசிக்கின்றனர். இப்படித் தூங்கியதால்தான் ஞானிகளுக்குச் சிவயோகம் சித்தித்தது. சிவனோடு ஒன்றியிருக்கும் சிவபோகமும் கிடைத்தது. இவர்கள் யோக நிஷ்டையில் தூங்காமல் தூங்கிக்கொண்டிருப்பதால் அவர்களது நிலையைக் கூறுவதெப்படி என்று திருமூலர் கேட்கின்றார்.

சிவபெருமானை அடைவதற்கான முதல்படி

சிவபெருமானை அடைவதற்கான முதல்படி
நான் யார் என்பதை உணர்வதே…!!!
இமயமலையின்..ரிஷிகளும், முனிகளும் இந்த கேள்விக்கு விடை தெரியவே தவம் மேற் கொண்டனர்..தெரியாதவர்கள் உன்னுள் சென்று உன்னை ஆராய்ந்து பார் என்பதோடு
நிறுத்திவிட்டனர்..இந்த ஆராய்ச்சிக்கு பதில் என்ன? உன்னை ஆன்மா என்று உணர்ந்து கொள் என்று சொன்னவர்களும் உண்டு..சிலர் ஆன்மா இதயத்தில் உண்டு என்று சொல்பவர்கள் உண்டு..சிலர் முதுகு தண்டு வடத்தில் உண்டு என்று சொல்கின்றனர்.. சிலர் மூக்கின் நுனியை உற்று நோக்கி சிந்தியுங்கள்..இப்படி பலவிதமான கருத்துக்கள் உலகில் நிலவுகின்றன..ஆனால், படைத்தவர்தானே உண்மையை சொல்ல முடியும்..
படைத்தவர் என்றால் ஆன்மாவை படைத்தவர் என்று நினைத்து விடாதீர்கள்.. ஆன்மாவை யாரும் படைக்கமுடியாது..அதை அழிக்கவும் முடியாது அனாதியானது..ஒரு வெள்ளை காகிதத்தில் ஒரு ஊசியின் நுனியில் மெல்ல குத்திவிட்டு வரும் நுண்ணிய புள்ளியைப்போல ஆயிரம் மடங்கு சிறிய புள்ளியே ஆன்மா..இதை உணரத்தான் முடியும்..அந்த நுண்ணிய புள்ளி பிரகாசமான நட்சத்திரம் போன்றது..இந்த புள்ளிதான் நீங்களும்..நானும்..
பஞ்ச தத்துவங்கள் எனும் இந்த உடலில் 6 மாத பிண்டத்தில் ஆத்மா பிரவேசிக்கின்றது தாயின் கர்ப்பத்தில்..ஐந்து தத்துவங்களில் ஆகாய தத்துவதில் ஆத்மா அமர்கின்றது..உடம்பில் ஆகாய தத்துவம் எதுவென்று கேட்க்கின்றிர்களா சரிதான்? நீரிற்கு ரத்தமும், மண்ணிற்கு தோலும்,உள்ளே காற்று சென்று வரும் வழிகளும்,உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைக்கும் வெப்பமாகிய நெருப்பும் இருக்கின்றது.. ஆனால், இந்த ஆகாய தத்துவம் எங்கே இருக்கின்றது தெரியுமா.. நெற்றியின் இரு புருவ மத்தியும், மூளை பகுதியின் இடைப்பட்ட பகுதியே ஆகாய தத்துவம்..இங்கேதான் ஆன்மா பிரவேசிக்கின்றது..இங்கிருந்தே ஆன்மா முழு உடலையும் இயக்குகின்றது.. இதுவே ஆன்மாவின் தலைமை செயலகம்..
இந்த நுண்ணிய பிரகாசமான ஆன்மாவில் நம்முடைய கர்மத்தின் பதிவுகள் பதிவாகின்றன அதற்காக இந்த ஆன்மாவிற்க்குள் மூன்று கருவிகள் இயற்கையாகவே பொருந்தி இருக்கின்றன.. ஆன்மா எவ்வளவு நுண்ணியது என்பதை பார்த்தோம்..அதைவிட லட்சம் மடங்கு இந்த கருவிகள் நுண்ணியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..மூன்று கருவியில் முதல் கருவி மனம்..இரண்டாம் கருவி புத்தி, மூன்றாம் கருவி சுபாவம் எனப்படும் சமஸ்கார பதிவு.. இந்த கருவிகள் எப்படி செயல்படுகின்றது என்று பார்ப்போம்..
முதல் கருவி எண்ணங்களை உற்பத்தி செய்யும் எண்ணக் கிடங்கு.. எண்ணங்களை காட்சிகளாக உருவாக்கி கண் முன்னே கொண்டு வரும் கலை படைப்பாளி.. அதனால் தான் மனக்கண் என்று சொல்லப்படுகின்றது..இந்த மனதின் காமெரா எது தெரியுமா..முகத்தில் தெரியும் கண்கள்.. மனதை செல்பி காமெரா என்று வைத்துக் கொண்டால்.. வெளிப்புற காமெரா கண்கள்.. உதாரணமாக ஒருவர் அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சியை பார்த்துவிட்டு வந்து இன்னொருவருக்கு வர்ணிக்கின்றார்.. கேட்பவர் அதை அப்படியே மனக்கண்களால் காட்சிகளாக அந்த இடத்திற்கு செல்லாமலே உருவகப் படுத்துகின்றார்..இப்படி காட்சிகளை உருவகப்படுத்துவது மனதின் வேலை.. உதாரணமாக, ஒருவர் லீவு நாளில் கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவெடுக்கின்றார்..அவர் கோவிலுக்கு செல்லும்பொழுது இன்னொரு பக்கம் ஒரு பாதை பிரிந்து செல்கின்றது..அங்கே பட்டிமன்ற விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது..
இப்பொழுது அவரது மனம் பட்டிமன்றத்திற்கு
போகலாமா என ஆலோசிக்கின்றது.. இப்பொழுது அவரது மனதில் கோவிலினுடைய காட்சியும்.. பட்டி மன்றத்தினுடைய காட்சியும் வந்து போகின்றது பார்த்தீர்களா இப்படித்தான் ஒரு தீய விஷயத்தை பார்க்கும் மனிதனும் தவறான வழிக்கு செல்வதில் முடிவெடுக்கின்றான், முதலில் பார்த்தது வெளிப்புற கண்கள்.. அடுத்து எண்ணங்களாக மாற்றியது மனம்.. இப்படி வரும் எண்ணங்களை தேர்ந்தெடுக்கும் அடுத்த கருவி புத்தி..இந்த புத்தியின் வேலை தீர்மானிப்பது..அதாவது கிளி ஜோசியத்தில் கிளி ஜோஸியக்காரனின் சமிக்கையை புரிந்து சீட்டு எடுக்குமே அந்த மாதிரி..மனதில் வரும் எண்ணங்களில் நல்லதோ அல்லது தீயதோ அதை தீர்மானிப்பது புத்தியின் வேலை.. அதனால்தான் உலகத்தில் கூட சிந்தித்தையெல்லாம் பேசிவிடாதே என்று சொல்கின்றனர்..
கோவிலுக்கு செல்லலாமா.. பட்டிமன்றத்திற்கு செல்லலாமா..என்று முடிவெடுக்க முடியாமல் திணறியவருக்கு கோவிலுக்கே செல்லலாம் என்று ஆறுதல் படுத்தி ஒரு எண்ணத்தை தேர்ந்தெடுப்பது.. புத்தி என்னும் இரண்டாவது கருவி..புத்திசாலி,
புத்தியற்றவர் என்ற இரண்டு பெயர்களும் நாம் மனதில் வரும் தேர்ந்தெடுக்கும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.. எனவே, பெரியவர்கள் நல்லதையே சிந்திக்கவேண்டும்.. மனதில் நல்லதையே எண்ணவேண்டும் என்று சொன்னார்கள்.. ஏனென்றால்..மனம் நல்லதை சிந்தித்தால் புத்தி நல்லதைத்தானே எடுத்தாக வேண்டும்.. இப்படித்தான் புத்தி செயல் படுகின்றது..
இனி மூன்றாவது கருவி..சுபாவம்.. ஒருவரை பார்த்தால் ரொம்ப நல்ல சுபாவம்.தீய சுபாவம் என்று சொல்கின்றோமே அந்த சுபாவம்தான் மூன்றாம் கருவி..புத்தி சொன்னபடி கோவிலுக்கு சென்ற அந்த மனிதர்.. அங்குள்ள சூழ்நிலைகள் மிகவும் அவருக்கு பிடித்து போனதால் அவர் அடிக்கடி கோவிலுக்கு செல்ல ஆரம்பிக்கின்றார் இதுவே அவருக்கு சுபாவம் என்னும் பழக்கம் ஆகின்றது..என்ன வேலை இருந்தாலும் சாயங்காலம் 6 மணிக்கு
கோவிலுக்கு போகாமல் இருக்கமாட்டேன் என்று ஒருவர் சொன்னால் அதை அவர் திரும்ப..திரும்ப..பழக்கப்படுத்திக்கொண்டார்.
.இந்த நேரத்தில் எனக்கு டீ சாப்பிடேலான தலை வலிக்கும்..மேலும் புகைக்கு,மதுவிற்கு மற்ற தீய பழக்கங்களுக்கும் அடிமை ஆவது இப்படித்தான் மனதில் பிறர் மீது குரோதமான எண்ணங்களை வளர்ப்பவன்,பிறர் பொருளுக்கு ஆசைபடுபவன், காமத்தின் இச்சைகளை கொண்டவன், அகங்காரத்தின் வசப்பட்டவன் இப்படி இன்று இருக்கும் குற்றவாளிகள் அனைவரும் ஆன்மாவில் ஆரம்பத்திலேயே வரும் எண்ணங்களை கட்டுப்படுத்தாதவர்களே ஆவார்கள்..
எனவே, இந்த உடல் என்ற காருக்கு ஆன்மா டிரைவர்.. பிரேக் என்பது மனம், புத்தி என்பது கியர், சுபாவம் என்பது ஸ்டீரியங்.. எனவே, மனதில் வேண்டாத எண்ணங்களை கொண்டுவந்தால் புத்தி என்ற கியர் அடிக்கடி மாறும்..அந்த பழக்கம் விபத்துக்கு கொண்டு செல்லும் ஸ்டீரியங்காக மாறிவிடும்..எனவே காரை ஓட்டிச்செல்லும் ட்ரைவர் கண்களின் மூலம் தீய காட்சிகளை பார்க்கும் பொழுதே பிரேக் போட்டு விடுதல் நலம்..இல்லாவிட்டால் வாழ்க்கை பாதையில் விபத்தை சந்திக்க வேண்டும், உடல் என்ற காரை மாற்ற வேண்டியது வரும்..
இதனாலேயே கோவிலுக்கு செல்லும் ஒருவர் முதல் படியில் சூடம் ஏற்றி தான் ஒரு ஆத்மா என்று உணர்ந்து கோவிலுக்குள் செல்கின்றார் எனவே இறைவன் சிவபெருமான் தரும் முதல் படிப்பும் நீங்கள் ஒரு அழிவற்ற நெற்றியின் இரு புருவ மத்தியில் வசிக்கும் ஜோதியான கண்ணுக்கு புலனாகாத ஆன்மா என்பதே ஆகும்..எனவே, தன்னையும் ஆன்மா என உணர்வோம்.. பிறரையும் ஆன்மா என பார்ப்போம்.. அப்பொழுதுதான் மனதில் தெய்வீககுணமான கருணை தோன்றும்.. வாழ்த்துக்கள்..

மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்கள் என்ன ஆனார்கள்?

மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்கள் என்ன ஆனார்கள்?
மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்கள் தங்கள் ராஜ்யத்திற்கு திரும்பினார்கள். பின் சில ஆண்டு காலங்கள் (கிட்டத்தட்ட 35 ஆண்டுகள்) தங்கள் ராஜ்யத்தை ஆண்ட பிறகு, தங்கள் பிறப்பிற்கான நோக்கத்தை பூர்த்தி செய்ததால், இவ்வுலகை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றனர்.
மகாபாரதத்தின் மாசாலா பர்வாவும், மகாப்ரஸ்தானிக்கா பர்வாவும் இதனை பற்றி விரிவாக கூறுகிறது. அதிலிருந்து சில முக்கிய நிகழ்வுகள் கீழ் வருமாறு:
காந்தாரியின் சாபத்தை ஏற்ற கிருஷ்ணர்
மகாபாரத போர் முடிந்தவுடன், தன் மகன்கள் இறந்த சோகத்தால், யாதவர்களும் இதேப்போன்ற சாவை சந்திப்பார்கள் என காந்தாரி ஸ்ரீ கிருஷ்ணரை சபித்தாள். இந்த சாபத்தை ஸ்ரீ கிருஷ்ணரும் ஏற்றுக் கொண்டார்.
குறும்பு செய்த கிருஷ்ணரின் மகன்கள்
35 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ கிருஷ்ணரின் மகன்கள் சில ரிஷிகளிடம் குறும்பு செய்து விளையாடியதால் சாபத்தை பெற்றனர். கர்ப்பிணி பெண்ணை போல் வேடமணிந்து கொண்ட சம்பா பிற யாதவர்களுடன் சேர்ந்து கொண்டு அங்கிருந்த சில ரிஷிகளிடம் சென்று, தன் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கூறும்படி கேட்டனர். அதில் கோபமடைந்த ஒரு ரிஷி, அவள் ஒரு இரும்பு துண்டை பெற்றெடுப்பாள் என்றும், அது அவனின் வம்சத்தையே அழித்து விடும் என்றும் சாபமளித்தார்.
பிரபாசாவிற்கு புனித பயணம்
தீய சக்திகளும், பாவ நடவடிக்கைகளும் துவாரகையில் அதிகரித்தது. மற்றவர்களை பிரபாசாவிற்கு புனித பயணம் மேற்கொள்ள ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார்.
ஒருவருக்கொருவர் கொன்று இறந்த யாதவர்கள்
பிரபாசாவில் யாதவர்கள் மது அருந்தி போதையில் மதி மயங்கினார்கள். அவர்களுக்குள் மூண்ட சண்டையில் யாதவர்கள் ஒருவருக்கொருவர் கொன்று இறந்தனர். ஸ்ரீ கிருஷ்ணர், தரூகா, வப்ரூ மற்றும் பலராமன் மட்டுமே உயிருடன் இருந்தனர். ஆனால் பின்னர் வப்ரூவும், பலராமனும் கூட இந்த உலகை விட்டு பிரிந்தனர்.
அவதாரத்தை முடித்த அர்ஜுனன்
அர்ஜுனனிடம் தகவலை கூறி உதவி கேட்க தரூகாவை அனுப்பி வைத்தார் ஸ்ரீ கிருஷ்ணர். இந்த சமயத்தில், ஒரு வேடன் செலுத்திய அம்பு ஸ்ரீ கிருஷ்ணரின் பாதத்தில் தவறுதலாக பாய்ந்தது. இதனால் அவர் காயமடைந்தார். வேடனை தேற்றிய ஸ்ரீ கிருஷ்ணர் விஷ்ணு பகவானின் ஓவியத்தோடு ஒன்றிப்போனார். அதோடு இந்த அவதாரத்தை முடித்துக் கொண்டு உலகத்தை விட்டும் பிரிந்து சென்றார்.
கிருஷ்ணரின் மனைவிகளை காக்க முடியாமல் தோற்ற அர்ஜுனன்
அதன் பின் அங்கே வந்து சேர்ந்தான் அர்ஜுனன். ஸ்ரீ கிருஷ்ணரின் விதவை ராணிகளை காக்க முயற்சி செய்தான். ஆனால் காட்டுமிராண்டிகளை எதிர்த்து போட்ட சண்டையில் தோல்வி அடைந்தான். பாண்டவர்களின் வாழ்க்கைக்கான நோக்கம் முடிந்து விட்டது என வேதவியாசர் அர்ஜுனனுக்கு அறிவுறுத்தினார்.
இமயமலை பயணத்தை மேற்கொண்ட பாண்டவர்கள்
பரிக்ஷித்திற்கு யுதிஷ்டர் முடிசூட்டிய பின்பு 5 பாண்டவர்களும் திரௌபதியுடன் இமயமலை நோக்கி தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். மலையின் மீது செல்லும் போது ஒரு நாய் அவர்களை பின்பற்றி சென்றது.
கீழே விழுந்த பாண்டவர்கள் மற்றும் த்ரௌபதி
மலையை ஏறும் வழியில் திரௌபதி, சகாதேவன், நகுலன், அர்ஜுனன் மற்றும் பீமன், அதே வரிசையில் ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்து இறந்தனர்.
யுதிஷ்டரை வரவேற்ற இந்திரன்
யுதிஷ்டர் மட்டுமே உயிருடன் இருந்தார். அவரை வரவேற்க சொர்க்கத்திற்கு தன் ரதத்தில் வந்து சேர்ந்தான் இந்திரன். அந்த நாயை அப்படியே விட்டு விட்டு, அந்த ரதத்தில் ஏறி சொர்க்கத்திற்கு செல்லுமாறு யுதிஷ்டரிடம் இந்திரன் கூறினார்.
சோதனையில் வென்ற யுதிஷ்டர்
அந்த நாய் தனக்கு நண்பனாகி விட்டதால், தன்னுடன் நாய் வராத வரை தான் சொர்க்கத்திற்குள் நுழைய மாட்டேன் என மறுத்தார் யுதிஷ்டர். உடனே அந்த நாய் எமனாக உரு மாறியது. தன் சோதனையில் தேர்ச்சி பெற்று விட்டதாக யுதிஷ்டரிடம் எமன் கூறினார். அதன் பின் யுதிஷ்டர் சொர்க்கத்திற்குள் நுழைந்தார்.
பாற்கடலுக்குள் மூழ்கிய துவாரகை
இப்படி பல விதமான நிகழ்வுகளுக்கு பிறகு ஸ்ரீ கிருஷ்ணரும் பாண்டவர்களும் இந்த உலகை விட்டு சென்றனர். துவாரகை நகரம் பாற்கடலுக்குள் மூழ்கியது. மெதுவாக தற்போதுள்ள கலியுகமும் தொடங்கியது.

பாவங்களின் 42 வகை

(பாவங்களின் 42 வகை)
வள்ளலார் சிலவற்றைப் பட்டியலிட்டுக் கூறுகிறார்.
அவை வருமாறு:
******************************
மனுமுறை கண்ட வாசகம்
******************************
1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.
2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.
4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.
6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.
7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.
8. தருமம் பாராது தண்டிப்பது.
9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.
10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.
11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.
12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
13. ஆசை காட்டி மோசம் செய்வது.
14. போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.
15. வேலை வாங்கிக்கொண்டு குறைப்பது.
16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.
17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.
18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.
19. நட்டாற்றில் கை நழுவுவது.
20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.
21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.
22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.
23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.
24. கருவைக் கலைப்பது.
25. குருவை வணங்கக் கூசி நிற்பது.
26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.
27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.
28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.
30. ஊன் சுவை (மாமிசம்) உண்டு உடல் வளர்ப்பது.
31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.
33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.
34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.
35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.
36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.
37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.
38. சிவனடியாரைச் சீறி வைவது.
39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.
41. தந்தை தாய் மொழியைக் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.
42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் கீதையை உபதேசித்தார்?

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் கீதையை உபதேசித்தார்?
அர்ஜுனனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் கூறிய விளக்கங்கள் கீதை என்ற புனித நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது. பகவான் அந்த கீதையை உபதேசித்தது பற்றியே ஒரு சந்தேகத்தை எழுப்பினான், அர்ஜுனன். அர்ஜுனனின் சந்தேகம் என்ன தெரியுமா? ஸ்ரீ கிருஷ்ணர், மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக கீதையை அருளியிருக்கிறார். நுட்பமான அரிய பல உண்மைகளை எடுத்துச் சொல்ல கிருஷ்ணர் நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார்? பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். ஒரு வேளை, அவர் எதிர்முகாமில் இருப்பதால் அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம்.
ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? மூத்தவர், தரும நீதிகளை உணர்ந்தவர். அவரை ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார் ? அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச் சிறந்த பக்திமானும்கூட பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர். இப்படி நல்லவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டமுள்ளவனும், உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்துவிடுபவனும், ஆத்திரக்காரனுமான என்னைப் போய் கீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக கிருஷ்ணர் கருதியிருக்கிறாரே, இது எவ்வகையில் நியாயம்? அர்ஜுனனின் இந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் கண்ணபிரான் கூறினார்.
அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை. நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு. கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை. தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான்.
ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை. பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.
அர்ஜுனா ! நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு. இதோ பார், உன்னைவிட வயதான, அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய் என்னிடம். களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது – தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய் அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்தபோதும், களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய். இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு. இப்போது புரிகிறதா அர்ஜுனா, நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல; தகுதிச் சிறப்புதான் காரணம். அர்ஜுனன் அப்போதும்கூட அகந்தை எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான்.

Saturday, June 25, 2016

அனுமன் செய்த தியாகம்!

அனுமன் செய்த தியாகம்! தெரிந்த புராணம்... தெரியாத கதை!
இறைவனிடம் செலுத்தும் பக்தியின் பரிமாணத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 'கடவுள் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலையில் எங்கோ வியாபித்திருக்கிறார். அவர் என்னைக் காத்து ரக்ஷிக்கிறார். அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்’ என்று கருதி, அவரைச் சரணடைந்து பக்தி செலுத்துவது முதல் வகை.
'கடவுள், உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளிலும் ஒவ்வொரு அணுவிலும் வியாபித்திருக்கிறார்; உயிர்களிடம் காட்டும் அன்பின் மூலம் இறைவனுக்குச் சேவை செய்யலாம்’ என்று கருதி, கடவுளை வழிபடுவது இரண்டாவது வகை. 'கடவுள் என்னுள்ளேயே இருக்கிறார். அவரை வேறெங்கும் தேடத் தேவையில்லை. என்னுள்ளே இருந்து என்னை இயக்கும் இறைவனே என்னை வழிநடத்துகிறான்’ என்று கருதி, தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை.
அனுமனின் பக்தி, இந்த மூன்றாவது வகையைச் சேரும். ராமாயண காவியத்தில் ராமனுக்கு அடுத்தபடியாகப் பேசப்படுபவன் அனுமன். நம் தேசத்தில் பல வகையான ராமாயணங்கள், பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுக் காலம் காலமாகப் பேசப்பட்டு வருகின்றன. சம்ஸ்கிருத மொழியில் வால்மீகி எழுதிய மூல ராமாயணம், இந்தியில் துளசிதாசர் எழுதிய ராமசரிதமானஸ், தமிழில் கம்பர் எழுதிய கம்பராமாயணம், தெலுங்கில் பக்த போத்தன்னா எழுதிய போத்தன்னா ராமாயணம் ஆகியவை மட்டுமின்றி, அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம், ஹனுமத் ராமாயணம் எனப் பல்வேறு ராமாயண காவியங்கள் உலகெங்கும் பன்னெடுங்காலமாகப் போற்றிப் பூஜிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் 'ஹனுமத் ராமாயணம்’ என்பதை ஹனுமானே அருளியதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஹனுமத் ராமாயணம் தோன்றிய காவிய நிகழ்ச்சி ஒன்றை நினைவுகூர்வோம்.
ஸ்ரீராமனின் பட்டாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர், ஒருநாள் இமயமலைச் சாரலில் ஒரு சிகரத்தின் மீது ஏறி நடந்துகொண்டிருந்தார் வால்மீகி. சிகரத்தின் சரிவுகளில் இருந்த பாறைகளின் மீதும், கற்களின் மீதும் கல்வெட்டுக்களாகச் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றைப் படிக்க ஆரம்பித்தார் வால்மீகி. அவருக்கு மெய்சிலிர்த்தது. அந்த வாசகங்கள் எல்லாம் ஸ்ரீராமனின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரிப்பதாக அமைந்திருந்தன. அவை, தான் எழுதிய ராமாயண வரிகளைவிட, கவிதை நயமும் கருத்து நயமும் மிக்கவையாக இருப்பதை உணர்ந்து பிரமித்தார் வால்மீகி. இந்தக் கல்வெட்டுகளில் ஸ்ரீராமனின் கதையை யார் உருவாக்கியிருப்பார்கள் என்று எண்ணியபடியே, இமயத்தின் சிகரத்தை அவர் அடைந்தபோது, அங்கே மற்றோர் ஆச்சரியம் காத்திருந்தது.
அங்கே, அனுமன் யோகநிஷ்டையில் இருந்தபடி ஸ்ரீராம நாமத்தை ஜெபித்துக்கொண்டிருந்தார். அவரது யோக நிஷ்டையைக் கலைக்க விரும்பாத வால்மீகி மஹரிஷி, தானும் ராம நாமம் ஜெபிக்க ஆரம்பித்தார். அந்த நாம ஜெபத்தைக் கேட்ட அனுமன் நிஷ்டையிலிருந்து விழித்தெழுந்து, வால்மீகியை வணங்கி நின்றார். அவரிடம், ராம காவியம் கல்வெட்டுக்களாக அமைந்த வரலாற்றைப் பற்றிக் கேட்டார் மஹரிஷி.
அதற்கு அனுமன் மிகுந்த விநயத்துடன், ''ஸ்ரீராமனின் கல்யாண குணங்களையும் அவரது பெருமைகளையும் இங்கே காணும் கற்களில் நான்தான் எனது நகத்தால் செதுக்கி வைத்தேன். யுகம் யுகமாக ஸ்ரீராமனின் கதை பேசப்பட வேண்டும் என்பதற்காக இந்தக் காரியத்தைச் செய்தேன். ஸ்ரீராமனை ரிஷ்யமுக பர்வதத்தில் நான் சந்தித்தது முதல், பட்டாபிஷேகம் வரை எனக்குத் தெரிந்த ராம கதையை உருவாக்கினேன். ஆனாலும், தங்களின் ராமாயணத்துக்கு இது ஈடாகாது!'' என்றார்.
அப்போது வால்மீகி மஹரிஷியின் கண்களில் நீர் கசிந்ததை அனுமன் கவனித்தார். அதற்கான காரணத்தை மஹரிஷியிடம் பணிவோடு கேட்டார். மேலும், தான் கல்லில் செதுக்கிய ராமாயண காவிய வரிகளில் தவறேதும் இருந்தால், எடுத்துச் சொல்லும்படியும் வேண்டினார். வால்மீகியின் கண்களில் மேலும் நீர் பெருகியது. 'எத்தகைய சிறப்பான காரியத்தைச் செய்துவிட்டு, எவ்வளவு தன்னடக்கத்துடன் அனுமன் இருக்கிறார்’ என்பதை எண்ணிப் பெருமிதம் அடைந்தார்.
''ஹனுமான்! நீ ஸ்ரீராமனின் சிரேஷ்டமான பக்தன். உன்னால் கல்லில் பொறிக்கப்பட்ட ராமாயணத்தில் தவறு இருக்க முடியுமா? நீ எழுதிய காவிய வரிகளில் காணும் பக்திப் பரவசம் என்னை நெகிழ வைத்துவிட்டது. இது, என் ஆனந்தக் கண்ணீர்தான். நான் எழுதிய ராமாயணம் இதற்கு ஈடு இணையாகாது. உன்னுடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும்போது, என் ராமாயணம் காலப் போக்கில் மறைந்துவிடும்'' என்றார்.
அதைக் கேட்ட மாத்திரத்தில், அனுமனின் கண்களில் தாரை தாரையாக நீர் சுரந்தது. உணர்ச்சிவசப்பட்ட அனுமன், பாறைகளில் தான் செதுக்கியிருந்த ராமாயண காவிய வரிகளை எல்லாம் தனது வாலால் துப்புரவாக அழித்துவிட்டார். பின்னர் வால்மீகியை வணங்கி, ''தாங்கள் எழுதிய ஸ்ரீராம காவியமே மிகச் சிறப்பானது! காலத்தால் அழியாதது! நான் செதுக்கியது வெறுமே என் உணர்ச்சிகளின் பிரதிபலிப்புதான். தாங்கள் உருவாக்கியதுதான் ஸ்ரீராமனே பாராட்டிய காவியம். அதற்கு ஈடு இணை எதுவும் இருக்காது'' என்று அமைதியுடன் கூறினார்.
அனுமனின் பக்தியைப் பற்றி வால்மீகி ஏற்கெனவே தெரிந்துகொண்டிருந்தார். அவரது தியாகத்தை இப்போது புரிந்துகொண்டார். அனுமனை மனமார வாழ்த்தினார். ''ஹனுமான்! நீ எழுதிய ராமாயண எழுத்துக்களை அழித்து விட்டாய். ஆனால், அந்தக் கருத்துக்கள் என் மனதில் ஆழப் பதிந்துவிட்டன. எனது ராம காவியத்தில் நீ செதுக்கிய ராம கதையும் இடம் பெறும்'' என்று கூறி, வாழ்த்திச் சென்றார்.
அதன்படி, வால்மீகி ராமாயணத்தின் ஒரு பகுதியாக அமைந்தது ஹனுமத் ராமாயணம். அனுமன் கண்ட ராமனை இந்தக் காவிய வரிகளில் இன்றும் நாம் தரிசிக்கிறோம். அனுமன் வாயுபுத்திரன். சிவபெருமானின் அம்ஸாவதாரம். சூரியனைக் குருவாகக் கொண்டு நான்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றவர். எளிமையே உருவானவர். அடக்கமானவர். அவரது திறமையும் வலிமையும் அவருக்கே தெரியாது. ராமாயண காவியத்தில் எங்கேயும் எப்போதும் கோபப்படாதவர், அனுமன்தான். இலங்கையை எரித்ததுகூட கோபத்தினால் அல்ல; ராவணனுக்கு புத்தி கற்பிக்கவேதான்.
சீதாபிராட்டியால் சிரஞ்ஜீவி என்று ஆசிர்வதிக்கப்பட்ட அனுமன், இன்றைக்கும் சிரஞ்ஜீவியாக நம்மிடையேதான் உலவிக் கொண்டிருக்கிறார். அனுமன் இருப்பது, 60 அடி உயர சிலையிலோ, அல்லது அற்புதமாகக் கட்டப்பட்ட ஆலயத்திலோ மட்டுமல்ல; ஸ்ரீராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் இருக்கிறார்.
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்
- என்று அனுமனைப் பற்றிய ஸ்லோகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள்’ என்பது இதன் பொருள்.
கடைசி வரியில் உள்ள 'ராக்ஷஸாந்தகம்’ என்பது, 'அவர் உன் உள்ளத்தில் தேங்கி நிற்கும் ஆணவம், அஹங்காரம், கோபம், த்வேஷம் போன்ற ராக்ஷஸ குணங்களை அழிப்பவர்’ என்பதைக் குறிக்கும்.
அனுமனை உபாஸித்து அருள் பெற, 'ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம’ என்று ராம நாமத்தின் பெருமையைச் சொன்னாலே போதும்; அனுமன் அந்த பக்தர்களுக்கும் சேவகனாகி அருள்புரிவார்.
அஞ்சனை மைந்தனாம் அனுமனை வழிபடுவதால் நமது உள்ளத்தில் நேர்மை, தூய்மை, தியாகம், பக்தி, எளிமை, அடக்கம் போன்ற உயர்ந்த குணங்கள் உருவாகி, நம்மை உயர்த்துகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன

கல்வி முடிந்து வெளியேறுகின்ற மாணவர்களுக்கு, பிரியும் வேளையில் ஆச்சாரியார் அளிக்கும் செய்தி

கல்வி முடிந்து வெளியேறுகின்ற மாணவர்களுக்கு, பிரியும் வேளையில் ஆச்சாரியார் அளிக்கும் செய்தி போல் அமைகிறது இந்தப் பகுதி. குருகுல வாசம் முடிந்த பின் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான 15 கடமைகள் இதில் கூறப்படுகின்றன.
வேதமனூச்யாசார்யோ அந்தேவாஸினமனுசாஸ்தி I ஸத்யம் வத I
தர்மம் சர I ஸ்வாத்யாயான்மா ப்ரமதக : I ஆசார்யாய ப்ரியம்
தனமாஹ்ருத்ய ப்ரஜாதந்தும் மா வ்யவச்சேத்ஸி: II 11.1 II
பொருள்: வேதங்களைக் கற்பித்த பிறகு ஆச்சாரியார் மாணவர்களுக்கு சில அறநெறிகளைப் போதிக்கிறார்:
உண்மை பேசுங்கள். தர்ம வழியில் செல்லுங்கள். கல்வியைக் கைவிடாதீர்கள். ஆச்சாரியனுக்கு விருப்பமான செல்வத்தைக் கொடுத்து அவரை மன நிறைவு பெறச் செய்யுங்கள்; சந்ததிச் சங்கிலியை வெட்டாதீர்கள்.
(இந்த ஸ்லோகத்திலிருந்து அந்தக் காலக் கல்வி முறை பற்றி சற்று சிந்தித்து அறியலாம்! ஆசார்யனிடம் கல்வி கற்க பல மாணவர்கள் குருகுலத்துக்கு வருகிறார்கள்! இங்கு பிரச்சன உபநிஷதத்தில் அதே போல நான்கு மகான்கள் இன்னொரு முனிவரிடம் தமது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வருகிறார்கள்! அவர்களைப் பரீட்சித்து சிக்ஷை அளிக்க எண்ணிய ஆசாரியார் அவர்களை ஓராண்டு குருகுலப் பணியில் ஈடுபட வைக்கிறார்; அவர்கள் ஈடுபாட்டைக் கண்டு முடிவெடுத்த பின் மட்டுமே சிக்ஷை அளிக்கிறார்! ஆனால் அவர்கள் சிக்ஷை பெற வருகையில் ஆசார்யாருக்கு கொண்டு வந்த பீஸ் என்ன தெரியுமா? நான்கு பேரும் சமித்துக் கட்டுகளை மட்டுமே கொணர்ந்தனர்! சமித்து யாகங்களுக்கு மிகவும் தேவைப்படுவது; எந்த குருவும் அந்தக் காலத்தில் சிக்ஷை அளிக்க பீஸ் கேட்டதில்லை; சிக்ஷை முடிந்த பின்னால் தான் குரு தட்சணை கொடுக்க வேண்டும்! அதுவும் கூட இப்போது நாம் இந்த கோரசுக்கு இத்தனை லட்சம் ரூபாய்கள் ஆரம்பத்திலேயே பீஸ் கட்டுகிறோமல்லவா அது போலவெல்லாம் கிடையாது. சிஷ்யனின் குடும்ப நிலையை அனுசரித்து என்ன இயலுமோ அதை கொடுத்தால் போதும்! ஏழை மாணவன் ஒரு தேங்காயை குருதட்சிணை ஆக அளித்தாலும் குருவுக்கு சம்மதமே! அதே நேரம் பணக்காரன் ஒருவனின் மகன் அவன் சக்திக்கு அளித்தால் மட்டுமே குருவின் விருப்பம் பூர்த்தியாகும்! அப்போதுதான் குருகுலத்தை நடத்த இயலும்! நன்றாக யோசித்தால் குருகுலம் என்பது அந்தக் காலத்தில் மாணவர்களுக்கு தங்குமிடம்,உணவு, உடை, நல்ல கல்வி, ஞானம், வேத அறிவு இப்படிப் பலவற்றை இலவசமாகவே கல்வி முடியும் வரை கொடுத்து வந்தன! என்ன அந்தக் கால அரசர்கள் பலரும் குருகுலங்களுக்கு செல்வத்தை வாரி வழங்கினர்; அன்று உண்மைக் கல்வி வென்றது! )
ஸத்யான்ன ப்ரமதிதவ்யம் I தர்மான்ன ப்ரமதிதிவ்யம் I குசலான்ன
ப்ரமதிதிவ்யம் I பூத்யை ந ப்ரமதிதிவ்யம் I ஸ்வாத்யாய ப்ரவசனாப்யாம் ந
ப்ரமதிதிவ்யம் I தேவபித்ரு கார்யாப்யாம் ந ப்ரமதிதிவ்யம் II 11.2 II
பொருள்: உண்மையிலிருந்து விலகாதீர்கள். தர்மத்திலிருந்து விலகாதீர்கள். நன்மை தருபவற்றிலிருந்து விலகாதீர்கள். நற்செயல்களிலிருந்து விலகாதீர்கள். கற்பதிலிருந்தும் கற்றுக் கொடுப்பதிலிருந்தும் விலகாதீர்கள். தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகாதீர்கள்.

Thursday, June 23, 2016

மிக.எளிய நடையில் இனிக்கும் தமிழில் கனகதாரா ஸ்தோத்திரம்

மிக.எளிய நடையில்
இனிக்கும் தமிழில்
கனகதாரா ஸ்தோத்திரம்🌼
🌼செல்வ வள மந்திரங்கள் - கனகதாரா ஸ்தோத்திரம்
🌼ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பிறந்த வரலாறு:-
இளம் வயதில் துறவு பூண்ட ஆதிசங்கரர். தமது துறவு நெறிக்கேற்ப நாள்தோறும் இறைவழிபாடு முடிந்து பிச்சை ஏற்கப் புறப்படுவார். மற்றவர் இட்டதை உண்டு தம் இறைப்பணியைத் தொடருவார்.அம்முறைப்படி ஒரு நாள் ஸ்ரீசங்கரர் சோமதேவர் என்பவருடைய இல்லத்திற்குச் சென்று "பவதி பிஷாந்தேஹி" என மும்முறை உச்சரித்தார். சோமதேவர் அப்போது இல்லத்தில் இல்லை. அவருடைய துணைவியார் தருவசீலை ஆங்கிருந்தார். பிச்சைக்கு வியப்பு மூண்டது. பாலசங்கரரைப் பார்த்த வுடனே, பரவேஸ்வரனே பிச்சைக்கு வந்துவிட்டாரே என்று அதிசயித்தார். ஆனால் அவரிடத்தில் பிச்சை இடுவதற்கான பொருள் ஏதும் இல்லை.
🌼கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்த சோம தேவர் வறுமையிலும் தேர்ச்சி அடைந்திருந்தார். அவரும் சங்கரரைப் போலவே பிச்சை கேட்கச் சென்றிருந்தார். வீட்டில் ஒன்றும் இல்லை. எனவே, மிகுந்த வருத்தத்துடன் அம்மையார் சங்கரரைப் பார்த்து, "நான் கொடிய பாவம் செய்தவள். பகவானே பிச்சைக்கு வந்திருக்கும் போது, கொடுப்பதற்கு ஒன்று மில்லையே என ஏங்குகிறேன். என்னை மன்னிக்க வேண்டும்" என இறைஞ்சினார். ஆனால் சங்கரரோ, "அன்னையே! அடியேனுக்குக் கொடுக்க ஏதும் இல்லை எனக் கலங்க வேண்டாம். அன்னமிடவழி இல்லை என்றால் பரவாயில்லை. அன்னத்திற்குத் துணையாக இருக்கும் உண்ணக்கூடிய பொருள் எதுவானாலும், எவ்வளவு சிறிதளவேனும் அன்போடு தாருங்கள்" என வேண்டினார். உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்த தர்வசீலை அம்மையாருக்கு ஒன்றும் கிடைக்காமல் ஒரு பழைய பாத்திரத்தில் நெடுநாட்களுக்கு முன்பு செய்த நெல்லிக்காய் ஊருகாய் ஒன்று மீதமிருந்தது. அந்த நெல்லிக்காயை மிகுந்த மனத்தயக்கமுடன் மகான் சங்கரரின் பிச்சைப் பாத்திரத்தில் அம்மையார் இட்டார்.
🌼இதனால் மனம் மகிழ்ந்த ஆதிசங்கரர், " அன்னையே! அன்புடன் தாங்கள் எனக்களித்த இந்த நெல்லிக்காயைவிடச் சிறந்த பொருள் இவ்வுலகில் எதுவும் கிடையாது. இது என் தாயாருக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். அதிதிக்கு அளித்த இந்த உணவால் உங்களைப் பிடித்திருந்த வறுமை இன்றோடு அழிந்துவிட்டது. இனிமேல் உங்கள் கணவர் பிச்சைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை" எனக்கூறிவிட்டு, செல்வத்துக்கு அதிதேவதையான ஸ்ரீமஹாலட்சுமி தேவியாரை மனதால் நினைத்து தியானம் செய்து இந்த "கனகதாரா" ஸ்தோத்திரத்தைப் பாடி ஸ்ரீலட்சுமி தேவியாரை வழிப்பட்டார்.
🌼உடனே தேவி, சங்கரர் முன் எழுந்தருளி, வறுமையில் வாடிய குசேலரும் சுசிலையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் குபேரசம்பந்தைப் பெற்றனர். வறுமையில் வாடியவர்கள் பெற்ற செல்வத்தால் நியமங்களை, ஆசார அநுஷ்டானங்களை மறந்து சுக பசி அமர்த்தாமல் தவிக்கவிட்டனர். எனவே, அப்பாவ வினையின் பயனாக, இந்த யுகத்தில் அவர்கள் இங்கே வறுமைப்பிடியில் சிக்கித்தவிக் கின்றனர் என்ற உண்மையை ஸ்ரீ சங்கரரிடம் ஸ்ரீமஹாலட்சுமி தேவி புலப்படுத்தினார். இருப்பினும் வறுமையிலும் திட மனதுடன் ஆதிசங்கரருக்கு நெல்லிக்காயைப் பிச்சையாக இட்ட காரணத்தினால், ஸ்ரீலட்சுமி தேவி மனமுருகி அந்த இல்லத்தின் மீது தங்கமயமான நெல்லிக்காய்களை மழைபோலப் பொழிந்தார். அது மட்டுமில்லாமல், இந்தக் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் தன் நல்லருள் கிடைக்கும் என உருதி மொழிந்தார்.
🌼எனவே, நாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால். நம் வாழ்வு வறுமையில்லாமல் வளமான வசதிகளுடனும். எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக இருக்கும் என்பது உறுதி.
🌼பொன்மொழி பொழியச் செய்த அந்த கனகதாரா ஸ்தோத்திரங்களை ஒவ்வொன்றாக விளக்கவுரையுடன் பின்வருமாறு காண்போம்.
🌼ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்:-
அங்கம் ஹரே:புனகபூஷன
மாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகலாபரணம்
தமாலம்
அங்கீக்ரு தாகில விபூதி
ரபாங்கலீலா
மாங்கல்ய தாஸ்து மம
மங்கல தேவதாயா: 1
🌼மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, பரந்தாமனின் அழகிய மார்பை உள்ளம் மகிழ மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் சகல மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.
🌼முக்தா முஹீர்விதததீ
வதனே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி
கதாகதானி
மாலா த்ருசோர் மது கரீவ
மஹோத்பலே யா
ஸாமே ச்ரியம் திசது
ஸாகர ஸம்பவாயா: 2
ஸ்ரீ லட்சுமி தேவியின் கண்களைப் பார்க்கும் போது நீலோத்பல மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளே நினைவிற்கு வருகின்றன. பெரிய நீலோத்பல மலர் போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை நோக்கி தேவியினுடைய கண்கள் ஆசையோடு செல்வதும், வெட்கத்துடன் திரும்புவதுமாக இருக்கின்றன. பாற்கடலில் தோன்றிய அன்னை ஸ்ரீலட்சுமிதேவி ஸ்ரீமஹாவிஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருக்கும் அருட்கண்கள் என்னையும்பார்க்கட்டும். எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.
🌼ஆமீலிதாட்ச மதிகம்ய
முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷ
மனங்கதந்த்ரம்
ஆகேகர ஸ்தித கனீனிக
பக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேன்மம
பூஜங்க சயாங்கனாயா 3
ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போது யோக நித்திரையில் இருந்துவரும் ஸ்ரீமஹாமிஷ்ணுவின் மீது விழுகின்ற ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை என்மீது பட்டு எனக்கு அளவில்லாமல் செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணைபுரியட்டும்.
🌼பாஹ் வந்தரே மது ஜித: ச்ரித
கெளஸ்துபே யா
ஹாராவலீவஹரி நீலமயி
விபாதி
காமப்ரதா பகவதோபி
கடாட்ச மாலா
கல்யாண மாவஹதுமே
கமலாலயாயா: 4
மது என்றழைக்கப்படும் அரக்கனை ஜெயித்ததில் அடையாளமாக நீலநிற மணிமாலையுடன் காட்சி கொடுக்கும் பகவானுடைய மார்பில் இனைந்து கிடக்கும் போது ஸ்ரீ மஹாலட்சுமியின் கண்கள் பகவான் மார்பில் கிடக்கும் நீலநிறக் கற்கள் போன்று பிரகாசிக்கின்றன. அந்த அருட்பார்வை எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.
🌼காலாம்புதாலி லலிதோரஸி
கைடபாரே:
தாராதரே ஸ்புரதியா
தடிதங்கனேவ
மாதுஸ்ஸமஸ்த ஜகதாம்
மஹனீய மூர்த்தி
பத்ராணி மேதிசது
பார்கவநந்தனாயா: 5
மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த பகவானின் மார்பில் இணைந்த தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன. ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை அளிப்பதாக.
🌼ப்ராப்தம் பதம் ப்ரதமத:
கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதினி
மன் மதேன
மய்யாபதேத்ததிஹமந்தர மீட்சணார் தம்
மந்தாலஸம் சமகராலய கன்யகாயா: 6
ஸ்ரீ பெருமாளிடத்தில் மன்மதனின் ஆதிக்கம் உண்டாகக் காரணமாக இருந்த கண்கள் எதுவோ அந்த தேவியின் கண்கள் எனக்கு செல்வத்தை வழங்கட்டும்.
🌼விச்வாம ரேந்த்ர பதவீ
ப்ரமதான தட்சம்
ஆனந்த ஹேதுரதிகம்
முரவித்விஷோ அபி
ஈஷன் நிஷீ தது மயிக்ஷண
மீக்ஷணார்த்தம்
இந்தீவரோதர ஸஹோதர
மிந்திராயா 7
அரக்கர்கள் பலரை அழித்த மஹாவிஷ்ணுவின் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் ஆற்றல் கொண்ட மஹாலட்சுமியின் திருக்கண்கள் எனக்கு செல்வத்தை அள்ளி வழங்கட்டும்.
🌼இஷ்டா விசிஷ்ட மதயோபி
யயா தயார்த்ர
திருஷ்ட்யாத்ரி விஷ்டப
பதம் ஸ லபம் லபந்தே
திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர
திப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட
மம புஷ்கர விஷ்டராயா 8
எல்லாவித யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும் அடையக்கூடிய சொர்க்க பதவியை அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால் மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை எனது வேண்டுதலை நடத்தி வைக்கப்படும்.
🌼தத்யாத் தயானுபவனோ
த்ரவிணாம் புதாராம்
அஸ்மிந்ந கிஞ்சன விஹங்க
சிசெள விஷன்ணே
துஷ்கர்ம தர்மமபனீய
சிராயதூரம்
நாராயண ப்ரணயனீ
நயனாம் புவாஹ: 9
எவ்வாறு கார் மேகமானது காற்றினால் திரண்டு மழையாகப் பொழிகிறதோ, அது போன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பிரியத்திற்குரிய ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை பட்டவுடன் என்னைப் பிடித்திருந்த வறுமை ஒழிந்து செல்வந்தனானேன்.
🌼கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி
சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலய
மேலிஷீ ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரி புவனைக
குரோஸ்தருண்யை! 10
திரிகாலம் என்று சொல்லப்படுபவைகளான சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றில் முதலும் முடிவுமான சிருஷ்டி காலங்களிலும், சம்ஹார காலங்களிலும் வாணியாகவும், லட்சுமியாகவும், ஈஸ்வரியாகவும் தோன்றுகிற ஸ்ரீமஹாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.
🌼ஸ்ருத்யை நமோஸ்து
சுபகர்ம பலப்ரஸீத்யை
ரத்யை நமோஸ்துரமணீய
குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து
சதபத்ர நிகேதெனாயை
புஷ்ட்யை நமோஸ்து
புருஷோத்தம வல்லபாயை 11
நல்ல ஒப்பற்ற பேரழகுள்ளவளும், அருட்குணம் கொண்டவளும், மகாசக்தியுள்ளவளும், பகவானின் பிரியத்தையுடையவளும், எல்லாவித சுபகர்மங்களுக்கும் பயனளிக்கிற கருணைக் கடலுமாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவி எனக்கு அருள வேண்டும்.
🌼நமோஸ்து நாலீக நிபானனாயை
நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை: 12
பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிக்கொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே எனக்கு அருள்புரிய வேண்டும்.
🌼நமோஸ்து ஹேமாமபுஜ பீடிகாயை
நமோஸ்து பூ மண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதி தயாபராயை
நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை: 13
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு தன் கருணை வெள்ளத்தைப் பொழிந்தும், பரந்த இவ்வுலகமாகிய பூமிக்கு நாயகியாக விளங்கும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.
🌼நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தனாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதர வல்லபாயை 14
சிவந்த தாமரைப் பூவில் வசிப்பவளும் சகல வுயிர்களின் நன்மை தீமைகளையும் கவனித்தபடி இருப்பவளுமான ஸ்ரீமந்நாராயணனின் பிரியத்திற்குரிய நாயகியே! உன்னை வணங்குகிறேன்.
🌼நமோஸ்து காந்த்யை கவலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை
நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை: 15
சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.
🌼ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய
நந்தனானி
ஸாம்ராஜ்யதான
விபவானி ஸரோருஹாணி
த்வத் வந்தனானி துரிதா
ஹரணோத்யதானி
மாமேவ மாதரனிசம்
கலயந்து மான்யே 16
எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.
🌼யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்
ஸந்தனோதி வசனாங்க மானஸை
த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே: 17
தனது கடைக்கண் பார்வையால் கருணையை தன்னை வழிபடும் பக்தர்கள் மீது பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.
🌼ஸரஸிஜ நிலயே ஸரோஜ
ஹஸ்தே
தவல தராம்சுக
கந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே
மனோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி
ப்ரஸீத மஹ்யம் 18
சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.
🌼திக்தஸ்திபி கனக கும்ப
முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாகினி விமலசாரு
ஜலாம்னு தாங்கீம
ப்ராதர் நமாமி ஜகதாம்
ஜனனீம் அக்ஷே
லோகாதி நாதக்ரு ஹிணீம்
அம்ருதாப்தி புத்ரீம் 19
பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்ததற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் மகளானவளும், உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாமிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.
🌼கமலே கமலாட்ச வல்லபேத்வம்
கருணாபூர தரங்கிதைரபாங்கை
அவலோகய மாமநிஞ் சனானாம்
ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா 20
எப்போதும் கருணைவெள்ளம் ததும்பி ஓடும் உனது கடைக் கண்களால், வறியவர்களில் முதல் நிலையிலிருக்கிற உனது பக்தன் பிழைக்கும் வழியைக் காட்டியருள வேண்டும்.
🌼ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரன்வஹம்
த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்
குணாதிகா குரிதர பாக்ய பாகினோ
பவந்தி தே புவி புத பாவிதாசயா 21
மூவலகங்களுக்கும் தாயாகவும், வேதங்களின் உருவ மாகவும், கருணைவெள்ளம் கொண்டவளும் ஆகத் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியை மேற்கூறிய 'கனகதாரா ஸ்தோத்திரத்தினால்', நாள்தோறும் 108 முறை போற்றி செய்து வழிபடுவோர் மிகச் சிறந்த குணம்பெற்றவர்களாகவும், குறையாத செல்வம் உள்ள செல்வந்தர்களாகவும், உலக வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அடைத்து பூரண நலத்துடன் வாழ்ந்து விளங்குவார்கள்.

Wednesday, June 22, 2016

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின் பெருமை என்ன...?
குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம்
குலதெய்வம் ஆகும்.
குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.
மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும்
பெற்று தரும்.
குலதெய்வம் பெரும்பாலும் சிறு
தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று
அலட்சியப் படுத்தக்கூடாது.
அதன் சக்தியை அளவிடமுடியாது...
எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று
தான் உயிரை எடுக்கமுடியும்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்
தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள்
ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை
கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.
எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்*
என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.
இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி
பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?
நம் முன்னோர்கள்...
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி
வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.
இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய
ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.
அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...
இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில்
சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய்
நிற்கிறோம்.
இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை
கட்டியிருக்கலாம்...
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!
நாம் அங்கே போய் நின்று...
அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை
தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.
இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்!...
விஞ்ஞான முறையில் யோசித்தால்...
ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு
செய்வது ஆணே...
ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23
க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.
இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும்
அறிவோம்.
இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத்
தந்தையின் குரோமோ சோமே முடிவு
செய்கிறது.
தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.
தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள்
உள்ளன.
ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண்
குழந்தையும்...
இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது.
என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.
ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும்
தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி
வருவதில்லை.
ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம்
மீண்டும் வழி வழியாக வளர்கிறது...
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும்,
முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன்,
கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன்
எனத்தொடர்ந்து...
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு...
தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.
இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...
பெண் குழந்தைகளை
குல விளக்காக காத்தனர்...
பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட
வாய்ப்பு இல்லை...
ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே
பலவீனமான ஒன்று.
மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y
க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று
கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக்
கொண்டிருக்கிறதாம்.
எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...
அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள்
மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள்
தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த
உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல
தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன்
படைத்திருக்கிறான்.
பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை
வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில்
உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.
பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின்
குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...
அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை
வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும்
இல்லாமல் வாழ வழிவகுக்கும்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு
வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின்
குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை
மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற
வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...
குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின்
அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை
என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம்,
யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன்
தருமா என்பது சந்தேகம்தான்.
எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி
(குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.
அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள்.

வாசி என்றால்என்ன???

வாசி என்றால்என்ன???
வா-என்றால் காற்று
சி-என்றால் நெருப்பு.
சுவாசத்தையும் அதனூடே உள்ள நெருப்பையும் இணைத்து வாசிக்கும் யுக்தியின் பயிற்சியே வாசி எனப்படுவதாகும்.
இந்த சுவாசக்காற்றைக் கொண்டு முறையாகவாசிக்கும் பொழுது தச வாயுக்களை சீரமைத்து உடம்பிலுள்ள மனம் ,உடல் சம்மந்தமான தீராத நோய்களை தீர்க்கவல்ல மாமருந்தாகும்.
வாசி இருப்பிடம்
எல்லோரும் அறிவார் நவ வாசல், அறியாதார் திருவாசல் என்ற பத்தாவது வாசலின் இருப்பிடமான உச்சிக்கு கீழே உண்ணாக்குக்கு மேலே உள்ள ஊசிமுனைஅளவேயுள்ள இடுக்கமான ll வழியாக ‘செல்லும் சுவாசத்தின் பெயரே வாசியாகும்.. இந்த சுவாசத்தின் [டெக்னிக்-யுக்தியை] கொண்டு ஒன்பது வாசலின் உபாதைகளை அடைக்கவல்ல யோகமாகும்.
வெளிசுவாசம் – உள்சுவாசம்
இரவு வந்தவுடன் படுக்கைக்கு செல்லும் போது மல்லாக்க படுத்துக்கொண்டு கை கால்களை சாதாரணமாக நீட்டிக்கொண்டு சுவாசத்தை கவனியுங்கள்.அப்
போதுவெளிசுவாசம் மாற்றப்பட்டுஉள்சுவாசம் வாசிப்பதை உற்று கவனியுங்கள்.
காலையிலிருந்து இரவு வரை உழைத்த களைப்பினால் சோர்ந்து, பார்க்கும் சக்தியை கண்களும், சிந்திக்கும் சக்தியை மனமும், உழைக்கும் சக்தியை உடலும் இழந்து உறங்கிவிடும்தருவாயில். ஆனவம்,கன்மம்,மா
யை,பசி,தாகம்,விருப்பு,வெருப்புகள் பற்றற்ற நிலையில்உள்சுவாசமான [வாசி ] மட்டுமே இயங்கி விடிந்தால் வெளிசுவாசத்திற்கு சக்தியை அளிக்கவல்லதாகிறது.
மாமருந்து
சுவாசத்தை கணக்கறிந்து மேலேற்றிமூலவரை வலம் வந்தபின் சுவாசம் ஒடுங்குகின்ற சுழுமுனையில் ஓங்காரப்பிரணவத்தை உள்ளடக்கி சுவாசத்தை இறக்கும் தருவாயில் முதுகு தண்டின்நடுனாடி வழியாக ஓடி பத்தாவதுவாசலின் உச்சியில் கனல் ஆவியில்உற்பத்தியாகும் அமிர்த நீராகிய மாமருந்தே சகலத்தையும் குணமாக்கும் சஞ்சீவினியாகும்.
மாங்காய்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்கு தேங்காய்பால் ஏதுக்கடி குதம்பாய
------------------[குதம்பை சித்தர்]
உயிராதார காற்று
பத்துக்காற்றுகளில் முதல் முக்கியமான ஆதாரக்காற்று உயிர்க்காற்றாகும். தாயின் கருவில் ஜீவன் வளரும் போது பிராணன் என்ற உயிர்க்காற்று தன்னை முதலில் ஐக்கியப்படுத்திக் கொள்கிறது. உடல் வாழ்வதற்கு ஆதாரமானதால் உயிர்க்காற்றிற்கு பிராணன் என்று பெயர். உடலுக்கு ஆதாரமான அந்தக் காற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தி உடலையும், ஆன்மாவையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி பிராணனைக் கட்டுப்படுத்தும் பிராணயாமம் கூறுகின்றது.
இந்த பிராணயாமக் கலையே வாசிகலை என்றும், மூச்சுக்கலை என்றும் வாசுகிகலை என்று ரிஷிகள் சொல்கிறார்கள். வாசியாகிய, பிராணனாகிய உயிர்காற்றை சரியாக பயன்படுத்ததாதல் தான் மனிதனுக்கு மரணம் நிகழ்கின்றது என்றும், சரியாக பயன்படுத்துபவனும், அதைப்பற்றி தெளிவாக அறிந்து கொண்டு செயல்படுத்துபவனும் என்றும் அழியாத தேகத்துடன் பாபபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்டு ஜீவமுக்தனாக வாழ்வான். அப்படிப்பட்ட ஜீவமுக்தனின் புருவநடுவில் இறைவனாகிய தாண்டவராயன் நடராசர் எப்போதும் ஆனந்த திருநடனம் புரிவார் என்கிறார்கள்
ரிஷிகள்.
பிராணயாமம் என்ற உயிர்காற்றை பயிற்சிக்கு உட்படுத்தும் கலைக்கு சித்தர்கள் சரகலை என்று பெயர் சூட்டியுள்ளனர். உலகில் எந்த கலையை படித்தாலும் உடல்வாழ்வதற்கு அவசியமான உயிர்கலையும், ஜீவகலையுமான பிராணயாமத்தை சரிவர அறிந்து கொள்பவர்கள் மட்டுமே சிறந்த கலையை கற்றவர்களாக, அவர்கள் எப்போதும் இறைவனை காணும் நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் குருவிற்கும் குருவாக விளங்குபவர்கள் என்கிறார்கள்.

விபூதி பிறந்த கதை-

விபூதி பிறந்த கதை-
சைவர்கள் பெருஞ்செல்வமாக போற்றும் திருநீறு பிறந்த வரலாற்றினை சில நூல்கள் விளக்குகின்றன.. அதனை சிறிது கண்ணுறுவோம்
ஒருசமயம் யுகங்கள் முடிந்து புதிதாய் படைப்பு தொழில் தொடங்கும் வேளையில் சிவபெருமான் உமாதேவிக்கு தமது அக்னி கோலத்தின் பெருமைகளை விளக்கியதுடன் அது பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருந்தும் தனித்தன்மையுடன் விளங்குவதையும் மற்ற நான்கு பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகியவற்றில் மறைந்து நின்று செயல்படுவதையும் விளக்கி கூறினார்.
மகா அக்னியாக விளங்கும் தாமே வானத்தில் இடி மின்னலாகவும் பூமிக்குள் எரிமலை குழம்பாகவும், கடலுக்குள் வடவாமுகாக்னியாகவும் இருப்பதை விளக்கினார், பின் அந்த அக்னிவடிவமாக இரண்டு முகங்களுடன் ஏழு கைகளும் ஏழு நாக்குகளும், மூன்று கால்களும், தலையில் நான்கு கொம்புகளுடன் காட்சியளித்தார். அந்த பேருருவை கண்டு பயந்த உமாதேவி அவரை வணங்கி தமக்கு காப்பாக இருக்கும் ஒரு பொருளை அருளுக என்றாள்.
செம்பொன் மேனியில் வெண்ணிறமாய் பூத்திருந்த வெண்பொடியை வழித்து ,இதனை காப்பாக கொண்டு இவ்வுலகினை வழி நடத்துவாய் என்றார். அதனால் அதற்க்கு சிவவீர்யம் எனப்பட்டது, தேவி அதனை நெற்றியிலும் உடலிலும் காப்பாக அணிந்ததால் திருநீற்று காப்பு எனப்பட்டது.உடலெங்கும் பூசியதால் சிவ கவசம் எனப்பட்டது.
எஞ்சிய விபூதியை அவர் ரிஷப தேவரிடம் தர அவர் அதனை உட்கொண்டார், அதனால் அவர்க்கு அளப்பரிய சக்தியை கொடுத்தது, இதனை அவர் மூலம் கோ உலகத்தில் உள்ள ஐந்து பசுக்களான சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமனை,நந்தை ஆகிய பசுக்களிடம் சேர்த்து பின்னர் பூலோக பசுக்களிடம் வந்து சேர்ந்தது. அதனாலேயே நாம் கோ ஜலம், கோ சாணம் ஆகியவற்றினை கலந்து உருண்டைகளாக பிடித்து நெருப்பிலிட்டு தயாரிக்கிறோம்.
திருநீற்றினை வாங்கி இட்டுக்கொள்வதுடன் சிறிது வாயிலும் போட்டுக்கொண்டால் அநேக வியாதிகளை தீர்க்கும். முறையாக மந்திரிக்கப்பட்ட விபூதி வாதத்தினால் உண்டாகும் எண்பத்தொரு வியாதிகளையும் பித்தத்தால் உண்டாகும் அறுபத்து நான்கு வியாதிகளையும், கபத்தினால் உண்டாகும் இருநூற்று பதினைந்து வியாதிகளையும் தீர்க்கும்.
பின் குறிப்பு - இவையெல்லாம் கடையில் விற்கும் காகிதசாம்பல் விபூதியில் கிடைக்காது, பசுஞ்சாண விபூதி வாங்கி அதனை இறைவனுக்கு அபிஷேகம் செய்வித்து எடுத்து பத்திரப்படுத்தி பஞ்சாட்சர மந்திரமான சிவாயநம ,நமசிவாய என சொல்லி உபயோகிப்பீர் நலம் பெறுவீர்.
ஜீவ பஸ்ப விபூதி
தயாரிக்கும் முறை ..!
தெய்வ ஆகர்ஷண சக்திக்காக அருளிச் செய்த ஜீவ பஸ்ப விபூதி தயாரிக்கும் முறை.
1. சுத்தமான பசுஞ் சாண விபூதி - 1.1/2 கிலோ
2. படிகார பஸ்பம் - 10 கிராம்
3. கல் நார் பஸ்பம் - 10 கிராம் - Rs.18/-
4. குங்கிலிய பஸ்பம் - 10 கிராம் - Rs. 26/-
5. நண்டுக்கல் பஸ்பம் - 10 கிராம் - Rs.35/-
6. ஆமை ஓடு பஸ்பம் - 10 கிராம் - Rs. 46/-
7. பவள பஸ்பம் - 10 கிராம் - Rs.95/-
8. சங்கு பஸ்பம் - 10 கிராம் - Rs. 28/-
9. சிலா சத்து பஸ்பம் - 10 கிராம் - Rs.16/-
10. சிருங்கி பஸ்பம் - 10 கிராம் - Rs.63/-
11. முத்துச் சிப்பி பஸ்பம் - 10 கிராம் - Rs 20/-
12. நத்தை ஓடு பஸ்பம் - 10 கிராம் - Rs.35/-
இவைகள் அனைத்தையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நன்றாக கலந்து ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது காந்தம் பிடிக்காத எவர்சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கவும் . இது சுமார் ஒரு வருட உபயோகத்திற்கு வரும்.
இது பசும்சாணத்தோடு பல ஜீவராசிகளின் உயிர் பஸ்பங்களை முறைப்படி அளவோடு கலந்து தயாரிக்கப்படுவதால் இதற்கு ஜீவ பஸ்ப விபூதி என்று பெயர். இதனை நீரில் குழைத்து இடும்போது ஒருவித கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே மிகப்பெரிய சக்தி
யாகும்.
இதனை தாம்பளத்தில் பரப்பி எந்த காரியம் சாதிக்க வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதில் உயிர் உள்ள ஜீவ பஸ்பங்கள் சேர்ததிருப்பதால் மிளகுப் பிரமாணம் எடுத்து சாப்பிட உடலில் இருக்கும் நோய் தீரும். மந்திரங்கள் ஜபித்து இடும்போது தொழில் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் தீரும்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதனை பயன்படுதத
வேண்டும்.
எல்லாம் சரி ... கோ சாலைகளில் பசுஞ்சாண விபூதி வாங்கி விடலாம் . அனால் இந்த பஸ்பம் எல்லாம் எங்கே தேடுவது என்ன விலை இருக்குமோ என நினைக்கலாம் !
அனால் இந்த பஸ்பம் எல்லாம் ஒரே இடத்தில மிக சுலபமாக கிடைக்கிறது . விலையும் குறைவு தான். எல்லா பஸ்பங்களும் சேர்த்து 400 ரூபாய் தான் வருகிறது.
அருகில் உள்ள சித்த மருந்து கடையில் கிடைக்கிறது.
சித்த பார்முலா படி இந்த பஸ்பங்களை தயாரிப்பவர்கள்: உங்கள் ஊரில் உள்ள சித்த மருந்து விற்பனையாளர்களிடம் கேளுங்கள்

நல்ல மனைவியை தேர்வு செய்வது எப்படி ?

நல்ல மனைவியை தேர்வு செய்வது எப்படி ?
மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிதானத்தையும் எச்சரிக்கையையும் இந்துமதம் வலியுறுத்துகிறது.
அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே’என்பதே இந்துக்களின் எச்சரிக்கைப் பழமொழி.
இளம் பருவத்தின் ரத்தத்துடிப்பு வெறும் உணர்ச்சிகளையே அடித்தளமாகக் கொண்டது.
அந்தப் பருவத்தில் காதலும் தோன்றும்; காமமும் தோன்றும்.
ஒரு பெண்ணிடம் புனிதமான காதல் தோன்றிவிட்டால், உடல் இச்சை உடனடியாக எழாது.
அவளைப் பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; பேச வேண்டும், பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை வளரும்.அவளைக் காணாத நேரமெல்லாம் கவலைப்படும்.
கனவு காணும்.கற்பனை செய்யும்.
மிகவும் சிறு பருவத்தில் மட்டுமே அத்தகைய புனிதக் காதல் தோன்றும்.
அது நிறைவேறி, வாழ்க்கை வெற்றிகரமாக நடப்பதும் உண்டு; நிறைவேறாமல் தலையணையைக் கண்ணீரால் நனைப்பதும் உண்டு. நிறைவேறிய பிறகு கூட்டுறவில் தோல்வி ஏற்படுவதும் உண்டு.
ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும்போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்தக் காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே!
உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறிவிடுகிறான்.
எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்குப் பிடிக்கிறது.
அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான்.
பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவனுக்கு வந்து சேருகிறாள்.
பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனுடைய பார்வை லயித்து விட்டால், அந்தச் சரீரத்துள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறியமுடியாமல் போகிறது.
ஆனால் ஆத்மாவின் ராகம் கண்களை மட்டும் கவனிக்கிறது.
அந்தக் கருநீலக் கண்கள் அவனைப் பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத்தன்மை வெளியாகிறது.
அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.
புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள் உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள்.
எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞன், எத்தகைய பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு.
கார்யேஷஷ தாசி
கரணேஷஷ மந்திரி
ரூபேஷஷ லட்சுமி
க்ஷமவா தரித்ரி
போத்யேஷஷ மாதா
சயனேஸு வேஸ்யா
சமதர்ம யுக்தா
குலதர்ம பத்தினி
சேவை செய்வதில் தாசியைப் போலவும்,
யோசனை சொல்லுவதில் மந்திரியைப் போலவும்,
அழகில் லட்சுமியைப் போலவும்,
மன்னிப்பதில் பூமாதேவியைப் போலவும்,
அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும்,
மஞ்சத்தில் கணிகையைப் போலவும்
நடந்துகொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்த சுலோகம்.
`கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்ற பழமொழிக்கேற்பக் கணவனுக்கு என்னென்ன நேரங்களில் என்னென்ன தேவை என்பதை வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே கண்டு கொண்டு, அந்தக் கடமைகளைச் செய்வதில் அவள் அடிமைபோல் இயங்க வேண்டும்.
(வட மொழியில் `தாசி’ என்றால் அடிமை.)
அவள் கல்வியறிவுள்ளவளாய், இக்கட்டான நேரங்களில் நல்ல யோசனை சொல்பவளாய், ஒரு மந்திரியைப் போல இயங்க வேண்டும்.
`பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள்’ என்கிறார் களே, அந்த மகாலட்சுமியைப் போன்ற திருத்தமான அழகு இருக்க வேண்டும்.
அழகு என்றால், முடியை ஆறு அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, பின்னால் வருவோருக்கு முக்கால் முதுகு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரிக அழகல்ல.
காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, `மகாலட்சுமி போன்ற அழகு’ என்றார்கள்.
அவள் பார்க்கும்போது கூட நேருக்கு நேர் பார்க்கமாட்டாள்.
“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.”
என்றான் வள்ளுவன்.
`ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும்’ என்பதும் அவனே.
எந்த ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீரென்று அதிர்ச்சியைத் தருமென்றால், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள், அந்த அதிர்ச்சிக்குப் பலியாகி விடுவதில்லை.
இடிதாங்கிக் கருவி, இடியை இழுத்துக் கிணற்றுக்குள் விட்டு விடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவர்கள் விரட்டி விடுகிறார்கள்.
ரூபத்தில் மகாலட்சுமி, என்று சொல்லுகிற சுலோகம், அப்படிப்பட்ட ரூபத்திலுள்ள இதயத்தையும் மகாலட்சுமியின் இதயமாகவே காட்டுகிறது.
பொறுத்தருள்வதில் அவள் பூமாதேவியைப் போல் இருக்க வேண்டும்.
கணவனது சினத்தைத் தணிக்கும் கருவியாக இருக்க வேண்டும்.
அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.
நல்ல குலப்பெண்களால் அது முடியும்.
அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில், அவள் தாய்போல் இருக்கவேண்டும்.
`தாயோடு அறுசுவைபோம்’ என்பது, நம் முன்னோர் மொழி.
பள்ளியறையில் அவள் கணிகையைப் போலவே நடந்து கொள்ளவேண்டும்.
கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்தும் உள்ளவளாய் இருக்கவேண்டும்.
மீண்டும் மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு எழவேண்டும்
அப்படிப்பட்ட ஒரு பெண்ணைத் தன் பத்தினியாக ஏற்றுக் கொண்டவன், பெரும்பாலும் கெட்டுப் போவதும் இல்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை.
நல்ல பெண்ணை மணந்தவன், முட்டாளாய் இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்பொழுதும் பிரகாசமாயிருக்கிறது.
தவறான பெண்ணை அடைந்தவன், அறிஞனானாலும்
முட்டாளாகி விடுகிறான்; அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது.
எல்லாம் சரி.
அத்தகைய நல்ல பெண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?
அதற்குப் பாண்டிய நாட்டு இந்துக்களிடையே ஒரு பழமொழி உண்டு.
`தாயைப் பார்த்துப் பெண்ணெடு
தரத்தைப் பார்த்து வரவிடு
நிலத்தைப் பார்த்துப் பயிரிடு
நேரம் பார்த்து முடிவெடு’
என்பார்கள்.
“தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளைப் படிக்கட்டில் பார்க்க வேண்டாம்” என்பார் கள்.
“தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை” என்பார்கள்.
தாயின் குணங்கள் பெண்ணுக்கும், தந்தையின் குணங்கள் பிள்ளைக்கும் படிவதாக ஐதீகம்.
அப்படிப் படியாமலும் போவதுண்டு; அது விதிவிலக்கு.
ஆகவே, தாயைப் பற்றித் தெரிந்து கொண்டால், பெண்ணைப் பார்க்க வேண்டியதில்லை.
இளைஞனின் துடிதுடிப்பு தாயைப்பற்றிக் கேள்வி கேட்பதில்லை. பெண்ணின் வாளிப்பான அங்கங் களே அவன் நினைவை மயக்குகின்றன.
அதனால்தான் `பெற்றோர் பார்த்து மகனுக்குப் பெண் தேட வேண்டும்’ என்கிறார்கள்.
பெற்றவர்கள் பெண் பார்க்கும்போது, பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்த பிறகுதான், பேசி
முடிக்கிறார்கள்.அத்தகைய திருமணங்கள் நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், நூற்றுக்குத் தொண்ணூறு வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.
ஆத்திரத்தில் காதல்
அவசரத்தில் கல்யாணம்
என்று முடிந்த திருமணங்கள், நூற்றுக்குத் தொண்ணூறு தோல்வியே அடைந்திருக்கின்றன.
ஆகவே, ஆயுள்காலக் குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண்களைத் தேடும் பொறுப்பைப் பெற்றோர்களிடம் விட்டுவிட வேண்டும்.
காவியத்துக்குச் சுவையான காதல் வாழ்க்கை, பல பேருக்கு நேர்மாறான பலனையே தந்திருக்கின்றது. (விதி விலக்குகளை இதில் நான் சேர்க்கவில்லை.)
குடிப்பிறப்புப் பார்த்துத்தான் பெண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் அமைதி இழந்து, அவமானம் சுமந்து, அழுது நொந்து சாக வேண்டியிருக்கும்.
`குடிப்பிறப்பு’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; பெண் பிறந்த குடும்பத்தையே குறிப்பது.
எந்த ஜாதியிலும் நல்ல பெண்கள் தோன்றுகிறார்கள்; கெட்ட பெண்களும் இருக்கிறார்கள். என்னை கேட்டல் ஜாதி இரண்டொழிய (ஆண்,பெண்) வேறொன்றுமில்லை
நல்ல பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜாதி மதம் பார்ப்பது பயனற்றது.
குடிப்பிறப்புத்தான் இன்றியமையாதது.
இலங்கையில் சீதையைக் கண்டு திரும்பிய அனுமன்,
ராமனிடம் இப்படிச் சொல்கிறான்:
“விற்பெரும் தடந்தோள் வீர
வீங்குநீர் இலங்கை வெற்பின்
நற்பெரும் தவத்த ளாய
நங்கையைக் கண்டே னில்லை;
இற்பிறப் பென்ப தொன்றும்
இரும்பொறை என்ப தொன்றும்
கற்பெனும் பெயர தொன்றும்
களிநடம் புரியக் கண்டேன்!”
“ஆரிய புத்ரா! நான் இலங்கையில் சீதை என்னும் நங்கையைக் காணவில்லை.
குடிப்பிறப்பு என்ற ஒன்றையும், சிறந்த பொறுமை எனும்
ஒன்றையும், கற்பு எனும் ஒன்றையும் கண்டேன்” என்கிறான்.
“நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்”
என்றான் வள்ளுவன்.
“நடத்தையின் குற்றம் குலத்தின் குற்றமே” என்பது வள்ளுவன் வாதம்.
ஆகவே, ஒரு பெண்ணின் குடிப்பிறப்பைக் கூர்ந்து அறிதல் இன்றியமையாதது.
நற்குடிப் பிறப்பை அறிந்துகொண்டுவிட்டால், பிறகு பெண்ணின் உருவத்தை மட்டும் பார்த்தால் போதும். மற்ற குணங்கள் தாய் வழியே
வந்திருக்கும்.பொறுப்பற்ற இளைஞன், குடும்பப் பொறுப்பை மேற்கொண்ட பிறகு, அந்த ரதம் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரதம் என்பதை அறிந்தால், இதில் எச்சரிக்கையாக இருப்பான்.
நல்ல துணை கிடைக்காமல், பைத்தியக்காரரைப் போல் உலவும் துர்ப்பாக்கியசாலிகளின் கண்ணீரில் இருந்து, பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் பாடத்தை இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
“பத்தாவுக் கேற்ற பதிவிரதை யாமானால்
எத்தாலும் கூடி வாழலாம் சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாயின்
கூறா மற் சந்நியாசம் கொள்!”
“சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப்
போல்வடிவு
கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே
- தொண்டா
செருப்படிதான் உந்தன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்!”
என்றாள் தமிழ் மூதாட்டி.
“கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையை
எடுத்(து)
அப்புறம் தன்னில் அசையாமல் முன்வந்(து)
அயல்வளைவில் ஒப்புடன் சென்று துயில்நீத்துப்
பின்வந்(து)
உறங்குவாளை எப்படி நான் நம்புவேன், இறைவா
கச்சி ஏகம்பனே!”
என்று புலம்பினார் பட்டினத்தார்.
சித்தர்கள், ரிஷிகள், சந்நியாசிகள் பலர் மனைவியால் விரக்தியுற்று அப்படி ஆனவர்கள் என்பதால்
தான் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது
என்கிறார்கள்.
“இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.”
இதுவும் மூத்தோர் மொழி.
“இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள்; அவள் அன்பில்லாளாக, அடக்கமில்லாளாக பணமில்லாளாக, பத்தினித்தன்மை இல்லாளாக இருந்துவிட்டால், உன் வீடு புலி கிடந்த குகைபோல் ஆகிவிடும்” என்பது முன்னோர் எச்சரிக்கை!
இந்துப்புராணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள், நல்ல மனைவியின் இலக்கணங்களை அறிவார்கள்.
இன்றைய இளைஞனுக்கும் மத ஈடுபாடு
ஏற்பட்டுவிட்டால், அவன் கண்ணை மனது வென்று, நல்ல பெண்ணை நோக்கிக் கொண்டு போகும்.