குளிர்ச்சி தரும் கிரகங்கள்
சுக்கிரன், சந்திரன் (அப்பு கிரகம் - நீர்)
உலகில் ஒவ்வொரு ஆண்டும் மாறுபட்ட சீதோஷ்ண நிலை நிலவுவது இயல்பான ஒன்று. இதற்கு வானவியல், சோதிடவியல் சாஸ்திரங்கள் அறுபது ஆண்டுக்கு ஒருமுறை ஒரே மாதிரியான சூழ்நிலை நிலவும் என கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டிற்கும் செழிப்பு என்பது அந்த ஆண்டில் பெய்யும் மழையே முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக மழை, மழையின்மை இரண்டுமே மனித இயல்பு வாழ்க்கையை பாதித்து விடக்கூடியவை.
பருவ நிலை என்பது பிரதி ஆண்டும் இயற்கையின் சுழற்சியால் ஏற்படும் இயல்பு. இதில் சூரியன் பங்கு இன்றியமையாதது. 12 மாதங்கள் கொண்ட ஆண்டில் ஐப்பசி (துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம்) மாதம் கடும் மழை நிலவுவதற்கு காரணம் சூரியனின் தென் துருவ பிரவேசம் என்பது குறிப்பிடத்தக்கது.கடலில் படர்ந்திருக்கும் உறைபனி தளர்வதும் மற்றொரு காரணம் எனலாம். இருப்பினும் மழையின் அளவை நிர்ணயிப்பதில் சுக்கிரன், சந்திரன் இரண்டு கிரகங்களும் பங்கு வகிக்கின்றன. மற்ற கிரகங்களின் பங்கு ஓரளவு இருந்தாலும் இந்த இரு கிரகங்களே மழைக்கு முக்கிய காரணமாகின்றன.பூமிக்கு குளிர்ச்சியைத் தரும் இந்த கிரகங்களில் பெருமழைக்கு காரணம் சுக்கிரன். "துலாத்தில் (சுக்கிரன்) வெள்ளி உலாத்த பெருமழை" என்பது பழமொழி. சூரியனுடன் சேர்ந்தால் நல்ல மழை பெய்யும். பொதுவாக புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை (கன்னி, துலாம், விரிட்சிபம்) மாத சுக்கிர சஞ்சாரம் (துருவப் பிரதேசம்) மழை பெய்யும். கிரகங்களின் பங்கு மழைக்கு பெரிது என்றாலும், இவற்றிற்கு பலத்தைக் கொடுப்பது நட்சத்திரங்கள் என்பது பேருண்மை. சில நட்சத்திர பாதங்களில் சந்திரன் (பூமியின் துணைக்கோள்) சஞ்சரிக்கும் போது பலத்த மழை பெய்யும். "பரணி மழை தரணி எல்லாம் பெய்யும்", "கார்த்திகைக்கு பின் மழையில்லை கர்ணனுக்குப் பின் கொடையில்லை", "கார்த்திகை குமுறினால் கடுமழைக்கு பஞ்சம்", "கார்த்திகையில் இடித்துப் பெய்தால் ஆறு கார்த்திகை அறும் மழை" என்பன பழமொழி. கார்த்திகை மாதத்தில் சந்திரனின் கார்த்திகை நட்சத்திர சஞ்சாரம் இடி இடித்து மழை பெய்வது நல்லதல்ல. இது தவிர அந்த ஆண்டின் கிரக சூழற்சிக்கேற்ப சந்திரனின் கடல் ராசி சஞ்சாரம், சுபகுபராசி சஞ்சாரமும் மழை பெய்யும். சுக்கிரன், சந்திரன் கடல் ராசியில் சஞ்சரிக்கும் போது குருவின் பார்வை பட்டால் பலத்த மழை உண்டு. பூமிக்கு குளிர்ச்சியை தருவதில் சுக்கிரன், சந்திரன், பெரும் பங்கு வகிக்கின்றன.

No comments:
Post a Comment