Friday, September 16, 2011

அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன?

** அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன?

பகல் 11- 12 மணி வரையுள்ள நேரத்தை அபிஜித் முகூர்த்தம் என்பர். "அபிஜித்' என்றால் "வெற்றியைத் தருவது' என்று பொருள். அபிஜித் நட்சத்திரம் என்று இதனை 28வது நட்சத்திரமாக சேர்த்துக் கொள்பவர்களும் உண்டு. பொதுவாக, எல்லா நாட்களிலும் சூரிய உதய காலம், அபிஜித் வேளை, அஸ்தமான காலம் ஆகிய மூன்று வேளைகளும் தோஷமற்றவை. இந்த மூன்று வேளைகளிலும் திதி, நட்சத்திரம், கிழமை தோஷங்கள் கிடையாது. சுப நிகழ்ச்சிகளைச் செய்யலாம். உதய காலத்திற்கும், அஸ்தமன காலத்திற்கும் கோதூளி லக்னம் என்று பெயர். கோதூளி என்றால் பசு மாட்டின் கால்நடையிலிருந்து கிளம்பும் புழுதி. அதாவது காலையில் பசு மாட்டை மேய்க்க ஓட்டிச் செல்வார்கள். மாலையில் வீட்டுக்கு திரும்ப ஓட்டி வருவார்கள். இது சமயத்தில் கிளம்பும் புழுதி எங்கும் பரவுவதால் எல்லா தோஷங்களும் நீங்குவதாக சாஸ்திரம் கூறுகிறது.

2 comments:

  1. சூரியோதியம்&அஸ்தமணம் இந்த இரண்டு நேரமும் தோஷம் இல்லாதவை.சூரியோதயதிலிருந்து எத்தனை மணிநேரம் மற்றும் அஸ்தமனத்தில் இருந்து எத்தனை மணிநேரம் என்பதை கூறவும்

    ReplyDelete

  2. chinna thambiJanuary 25, 2015 at 10:36 AM
    சூரியோதியம்&அஸ்தமணம் இந்த இரண்டு நேரமும் தோஷம் இல்லாதவை.சூரியோதயதிலிருந்து எத்தனை மணிநேரம் மற்றும் அஸ்தமனத்தில் இருந்து எத்தனை மணிநேரம் தோஷம் இல்லை என்பதை கூறவும்

    ReplyDelete