மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமரும், கிருஷ்ணரும் முக்கியமான அவதாரங்கள்.
இதில் கிருஷ்ணரோடு மட்டும் தீபாவளியைத் தொடர்புபடுத்தி புராணக்கதை கூறுவர்.
இந்நாள் ராமரின் வாழ்க்கையோடும் தொடர்பு கொண்டதாகும். ராவணவதம் முடித்து
விட்டு, ராமர் மீண்டும் அயோத்திக்கும் திரும்பி பட்டம் கட்டிக் கொண்ட நாளே
தீபாவளி. ராமன் சத்தியம் மற்றும் வீரத்தின் வடிவம். இதனை வால்மீகி, "ராமம்
சத்தியம் பராக்கிரமம்' என்று போற்றுகிறார். அந்த சத்தியத்தை உள்ளத்தில்
ஏற்பதன் அடையாளமாக, வீடுகளில் ஒளி விளக்குகளை வீட்டில் ஏற்றி மக்கள்
கொண்டாடுகின்றனர்.
No comments:
Post a Comment