கஷ்யப முனிவரின் புத்திரர்களாக சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர்
பிறந்தனர். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப்
பெற்றனர். தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்டான்.
பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு
வர வேண்டும் எனக் கேட்டார்.
சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ""ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும்,'' எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. ஆனால், இறைவன் எல்லாம் அறிந்தவன். பார்வதியின் தொடர்பின்றி, தன் நெற்றிக்கண்ணில் இருந்தே ஒரு பிள்ளையை உருவாக்கினார் சிவன். அவனே முருகன்.
"முருகன்' என்றால் "அழகன்'. கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.
அவன் அவதரித்ததே சூரனை சம்ஹாரம் செய்து தேவர்களைக் காக்கத்தான். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார்.
சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான்.
""ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு,'' என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான்.
அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது.
""முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும்,'' என்றான்.
முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான். அந்த மரத்தை சக்திவேலால் இரண்டாகப் பிளந்த முருகன், ஒன்றை மயிலாகவும், ஒன்றை சேவலாகவும் மாற்றி தன் வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஏற்றார்.
வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், ""வேல் வேல் வெற்றி வேல்'' என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது.
கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.
கஷ்யப முனிவரின் புத்திரனான சூரபத்மன் என்னும் அசுரன், விண்ணுலக தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். இறைவன், தன் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு நெருப்புப்பொறிகளை உருவாக்கினார். அவை கங்கையில் தவழ்ந்து குழந்தைகளாக மாறின. ஆறுகுழந்தைகளும் இணைந்து "கந்தன்' என்னும் மாபெரும் சக்தியாக வடிவெடுத்தது.
அன்னை பராசக்தி, தன் சக்தியை ஒன்று திரட்டி அடக்கிய வேல் ஒன்றை மகன் கந்தனிடம் வழங்கினாள். சக்திவேலை ஏந்திய கந்தன் அழகில் மன்மதனையும் மிஞ்சியதால் "முருகன்' எனப்பட்டான். "முருகன்' என்றால் "அழகன்'. அவன் சூரனுடன் போருக்குப் புறப்பட்டான்.
""சிறுவா! பால் மணம் மாறாத பாலகனான நீயா என்னுடன் போருக்கு வந்தாய்! போய் விடப்பா!'' என்று ஆணவத்துடன் கருணையை குழைத்துப் பேசுவது போல சூரபத்மன் சிரித்தான். ஆனால், முருகனின் தாக்குதலில் நிலைகுலைந்து போனான். முருகன் வேலாயுதத்தை ஏவிவிட்டார். அக்னிமழையைப் பொழிந்தபடி வேல், சூரனை அழிக்கப் பாய்ந்தது. பயந்து போன சூரபத்மன், ஒரு கடலின் நடுவே பெரிய மாமரமாக உருவெடுத்து நின்றான். அம்மரத்தை முருகனின் வேல் இரண்டு கூறாக பிளந்தது. அதன் ஒருபாதியை சேவலாகவும், மறுபாதியை மயிலாகவும்மாற்றி அருள்புரிந்தார். முருகன். நீலமயிலை வாகனமாக்கிக் கொண்டார். சேவலை கொடியாக ஆக்கிக் கொண்டார்.
அதிகாலை விடியல் வேளையில் சேவல் "கொக்கரக்கோ' என்று சொல்லி முருகப்பெருமானுக்கு நன்றி தெரிவிக்கும்." கொக்கு அறு கோ' என்பதைத் தான் சேவல் "கொக்கரக்கோ' என்று கூவி அழைக்கிறது. கொக்கு என்றால் "மாமரம்',
கொக்கரக்கோ என்பதற்கு "மாமரத்தை இருகூறாக்கிய மன்னவனே' என்பது பொருளாகும். சேவலைக் காலையில் தரிசித்தால் முருகனின் அருள் கிடைக்கும்.

No comments:
Post a Comment