கோயில்களில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழா பிரம்மோற்ஸவம். இதனை படைப்புக் கடவுளான பிரம்மா பூலோகத்திற்கு நேரில் வந்து நடத்துவதாக ஐதீகம். கோயிலுக்கு வந்து வழிபட முடியாதவர்கள் கூட பிரம்மோற்ஸவ வீதியுலாவின் போது இறைவனைத் தரிசிக்கும் பேறு பெறுகின்றனர். பிரம்மோற்ஸவத்தை 9 நாட்களாவது நடத்த வேண்டும் என்பது விதி. விழா நடக்கும் நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஆறாகப் பிரிப்பர். 12நாள் திருவிழா நடந்தால் பைத்ருகம், 9நாள்- சவுக்கியம், 7நாள்- ஸ்ரீகரம், 5நாள்- பார்த்திவம், 3நாள்- சாத்விகம், ஒருநாள் மட்டும் நடத்துவதற்கு சைவம். திருவிழாவின் முதல்நாள், கோயில் கொடிமரத்தில் கொடியேற்ற வேண்டும். திருவிழாவை முறையாக நடத்தாவிட்டால், அரசுக்கும், மக்களுக்கும் தீங்கு நேரும் என ஞானோத்திர ஆகமம் கூறுகிறது...
No comments:
Post a Comment