வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்
அகங்காரம் - செருக்கு
- அக்கிரமம் - முறைகேடு
- அசலம் - உறுப்பு
- அசூயை - பொறாமை
- அதிபர் - தலைவர்
- அதிருப்தி - மனக்குறை
- அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
- அத்தியாவசியம் --இன்றியமையாதது
- அநாவசியம் -வேண்டாதது
- அநேகம் - பல
- அந்தரங்கம்- மறைபொருள்
- அபகரி -பறி, கைப்பற்று
- அபாயம் -இடர்
- அபிப்ராயம் -கருத்து
- அபிஷேகம் -திருமுழுக்கு
- அபூர்வம் -புதுமை
- அமிசம் -கூறுபாடு
- அயோக்கியன் -நேர்மையற்றவன்
- அர்த்தநாரி -உமைபாகன்
- அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
- அர்த்தம் -பொருள்
- அர்த்த ஜாமம் - நள்ளிரவு
- அர்ப்பணம் -படையல்
- அலங்காரம் -ஒப்பனை
- அலட்சியம் - புறக்கணிப்பு
- அவசரமாக - உடனடியாக, விரைவாக
- அவஸ்தை - நிலை, தொல்லை
- அற்பமான - கீழான, சிறிய
- அற்புதம் - புதுமை
- அனுபவம் - பட்டறிவு
- அனுமதி - இசைவு
- ஆச்சரியம் - வியப்பு
- ஆக்ஞை - ஆணை, கட்டளை
- ஆட்சேபணை - தடை, மறுப்பு
- ஆதி - முதல்
- ஆபத்து - இடர்
- ஆமோதித்தல் - வழிமொழிதல்
- ஆயுதம் - கருவி
- ஆரம்பம் -தொடக்கம்
- ஆராதனை -வழிபாடு
- ஆரோக்கியம் - உடல்நலம்
- ஆலோசனை - அறிவுரை
- ஆனந்தம் - மகிழ்ச்சி
- இஷ்டம் - விருப்பம்
- இங்கிதம் - இனிமை
- ஈன ஜன்மம் - இழிந்த பிறப்பு
- ஈனஸ்வரம் - மெலிந்த ஓசை
- உக்கிரமான - கடுமையான
- உபசாரம் - முகமன் கூறல்
- உபயோகம் - பயன்
- உதாசீனம் - பொருட்படுத்தாமை
- உத்தரவாதம் - பிணை, பொறுப்பு
- உத்தரவு - கட்டளை
- உல்லாசம் - களிப்பு
- உற்சாகம் - ஊக்கம்
- ஐதீகம் - சடங்கு, நம்பிக்கை
- கர்ப்பக்கிருகம் - கருவறை
- கர்மம் - செயல்
- கலாச்சாரம் - பண்பாடு
- கலாரசனை - கலைச்சுவை
- கல்யாணம் - மணவினை, திருமணம்
- கஷ்டம் - தொல்லை, துன்பம்
- கீதம் - பாட்டு, இசை
- கீர்த்தி - புகழ்
- கீர்த்தனை- பாமாலை, பாடல்
- கோஷம் - ஒலி
- சகலம் - எல்லாம், அனைத்தும்
- சகஜம் - வழக்கம்
- சகி - தோழி
- சகோதரி - உடன் பிறந்தவள்
- சங்கடம் - இக்கட்டு, தொல்லை
- சங்கதி - செய்தி
- சங்கோஜம் - கூச்சம்
- சதம் - நூறு
- சதா - எப்பொழுதும்
- சதி- சூழ்ச்சி
- சத்தம் - ஓசை, ஒலி
- சந்தானம் - மகப்பேறு
- சந்தேகம் - ஐயம்
- சந்தோஷம் - மகிழ்ச்சி
- சபதம் - சூளுரை
- சம்சாரம் - குடும்பம், மனைவி
- சம்பந்தம் - தொடர்பு
- சம்பவம் - நிகழ்ச்சி
- சம்பாதி - ஈட்டு, பொருளீட்டு
- சம்பிரதாயம் - மரபு
- சம்மதி - ஒப்புக்கொள்
- சரணாகதி - அடைக்கலம்
- சரித்திரம் - வரலாறு
- சரீரம் - உடல்
- சருமம் -தோல்
- சர்வம் - எல்லாம்
- சாதாரணம் - எளிமை, பொதுமை
- சாதித்தல் - நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்
- சாதம் - சோறு
- சாந்தம் - அமைதி
- சாகசம் - துணிவு, பாசாங்கு
- சாராமிசம் - பொருட்சுருக்கம்
- சாயந்திரம் - மாலை வேளை, அந்திப் பொழுது
- சாவகாசம் - விரைவின்மை
- சாஸ்திரம் - நூல்
- சாசுவதம் - நிலை
- சிகிச்சை - மருத்துவம்
- சித்தாந்தம் - கொள்கை, முடிவு
- சித்திரம் - ஓவியம்
- சிநேகிதம் - நட்பு
- சிம்மாசனம் - அரியணை
- சிரத்தை - அக்கறை, கருத்துடைமை
- சிரமம் - தொல்லை
- சின்னம் - அடையாளம்
- சீக்கிரமாக - விரைவாக
- சுதந்திரம் - தன்னுரிமை, விடுதலை
- சுத்தமான - தூய்மையான
- சுபாவம் - இயல்பு
- சுலபம் - எளிது
- சுவாரஸ்யமான - சுவையான
- சேவை - பணி
- சேனாதிபதி - படைத்தலைவன்
- சௌகர்யம் - வசதி, நுகர்நலம்
- சௌக்கியம் - நலம்
- தசம் - பத்து
- தத்துவம் - உண்மை
- தம்பதியர் - கணவன் மனைவி, இணையர்
- தரிசனம் - காட்சி
- தர்க்கம் - வழக்கு
- தர்க்க வாதம் - வழக்காடல்
- தாபம் - வேட்கை
- திகில் - அதிர்ச்சி
- திருப்தி - நிறைவு
- தினசரி - நாள்தோறும்
- தினம் - நாள்
- தீர்க்கதரிசி _ ஆவதறிவார்
- துரதிருஷ்டம் - பேறின்மை
- துரிதம் - விரைவு
- துரோகம் - வஞ்சனை
- துவம்சம் - அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
- தேகம் - உடல்
- தேசம் - நாடு
- தைரியம் - துணிவு
- நட்சத்திரம் - விண்மீன், நாள்மீன்
- நமஸ்காரம் - வணக்கம்
- நர்த்தனம் - ஆடல், நடனம்,கூத்து
- நவீனம் - புதுமை
- நவீன பாணி - புது முறை
- நாசம் - அழிவு, வீண்
- நாசூக்கு - நயம்
- நாயகன் - தலைவன்
- நாயகி - தலைவி
- நிஜம் - உண்மை, உள்ளது
- நிசபதமான - ஒலியற்ற, அமைதியான
- நிச்சயம் - உறுதி
- நிச்சயதார்த்தம் - மண உறுதி
- நிதானம் - பதறாமை
- நித்திய பூஜை - நாள் வழிபாடு
- நிரூபி - மெய்ப்பி, நிறுவு
- நிருவாகம் - மேலாண்மை
- நிதி - பொருள்,செல்வம், பணம்
- நீதி - அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை
- பகிரங்கம் - வெளிப்படை
- பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து
- பரவசம் - மெய்மறத்தல்
- பராக்கிரமம் - வீரம்
- பராமரி - காப்பாற்று , பேணு
- பரிகாசம் - இகழ்ச்சிச் சிரிப்பு
- பரிசோதனை - ஆய்வு
- பரிட்சை - தேர்வு
- பலவந்தமாக - வற்புறுத்தி
- பலவீனம் - மெலிவு, வலிமையின்மை
- பலாத்காரம் - வன்முறை
- பாணம் - அம்பு
- பாதம் - அடி
- பாரம் - சுமை
- பால்யம் - இளமை
- பிம்பம் - நிழலுரு
- பிரகாசம் - ஒளி, பேரொளி
- பிரகாரம் - சுற்று
- (அதன்)பிரகாரம் - (அதன்)படி
- பிரசங்கம் - சொற்பொழிவு
- பிரசுரம் - வெளியீடு
- பிரச்சினை - சிக்கல்
- பிரதிநிதி - சார்பாளர்
- பிரதிபலித்தல் - எதிரியக்கம்
- பிரதிபிம்பன் - எதிருரு
- பிரத்தியோகம் - தனி
- பிரபலம் - புகழ்
- பிரமாதமான - பெரிய
- பிரமிப்பு - திகைப்பு
- பிரயோகி - கையாளு
- பிரயோசனம் - பயன்
- பிரவாகம் - பெருக்கு
- பிரவேசம் - நுழைவு, புகுதல், வருதல்
- பிரார்த்தனை - தொழுகை,
- பிரியம் - விருப்பம்
- பிரேமை - அன்பு
- பீடிகை - முன்னுரை
- புண்ணியம் - நல்வினை
- புத்தி - அறிவு
- புத்திரன் - புதல்வன்
- புனிதமான - தூய
- புஷ்பம் - மலர், பூ
- புஜபலம் - தோள்வன்மை
- பூஜை - வழிபாடு
- பூர்த்தி - நிறைவு
- பூஷணம் - அணிகலம்-
- போதனை - கற்பித்தல்
- மகான் - பெரியவர்
- மகாயுத்தம் -பெரும்போர்
- மத்தியஸ்தர் - உடன்படுத்துபவர்
- மத்தியானம் - நண்பகல்
- மந்திரி - அமைச்சர்
- மனசு - உள்ளம்
- மனிதாபிமானம் - மக்கட்பற்று
- மானசீகம் - கற்பனை
- மல்யுத்தம் - மற்போர்
- யந்திரம் - பொறி
- யூகம் - உய்த்துணர்தல்
- யூகி - உய்த்துணர்
- யோக்யதை - தகுதி
- ரதம் - தேர்
- ரத சாரதி- தேரோட்டி
- ராணி - அரசி
- ராத்திரி - இரவு
- ராச்சியம் - நாடு,மாநிலம்
- ராஜா - மன்னன்
- ரசம் - சாறு, சுவை
- லட்சம் - நூறாயிரம்
- லட்சணம் - அழகு
- லட்சியம் - குறிக்கோள்
- வதம் - அழித்தல்
- வதனம் - முகம்
- வம்சம் - கால்வழி
- வஸ்திரம் - துணி, ஆடை
- வாஞ்சை - பற்று
- வாயு - காற்று
- விக்கிரகம் - வழிபாட்டுருவம்
- விசாரம் - கவலை
- விசாலமான - அகன்ற
- விசித்திரம் - வேடிக்கை
- விஷேசம் - சிறப்பு
- விஞ்ஞானம் - அறிவியல்
- விஷயம் - செய்தி
- விதானம் - மேற்கட்டி
- விநாடி - நொடி
- வித்தியாசம் - வேறுபாடு
- விபூதி - திருநீறு , பெருமை
- விமோசனம் - விடுபடுதல்
- வியாதி - நோய்
- விரதம் - நோன்பு
- விவாகம் - திருமணம்
- விவாதி -வழக்காடு
- வேகம் - விரைவு
- வேதம் - மறை
- வேதவிற்பனன்ர் - மறைவல்லார்
- வேதியர் - மறையவர்
- ஜனநாயகம் - குடியாட்சி
- ஜனம் - மக்கள்
- ஜனனம் - பிறப்பு
- ஜாதகம்- பிறப்புக் குறிப்பு
- ஜாலம் - வேடிக்கை
- ஜூரம் - காய்ச்சல்
- ஜோதி - ஒளி
- ஜோடி - இணை
- ஜோடித்தல் - அழகு செய்தல்
- ஸந்ததி - கால்வழி
- ஸமத்துவம் - ஒரு நிகர்
- ஸமரசம் - வேறுபாடின்மை
- ஸமீபம் - அண்மை
- ஸம்ஹாரம் - அழிவு
- ஸோபை - பொலிவு
- ஸௌந்தர்யம் - பேரழகு
- ஸ்தாபனம் _ நிறுவனம்
- ஸ்தானம் - இடம்
No comments:
Post a Comment