தமிழ் புத்தாண்டு நாளில் உணவில் அறுசுவையும் சேர்த்துக் கொள்வர். இந்த நடைமுறை காலம் காலமாக நம் மண்ணில் பின்பற்றப்படுகிறது. இனிப்புக்காக அதிரசம், காரத்திற்காக கார வடை, புளிப்புக்காக மாங்காய் பச்சடி, உவர்ப்புக்காக முறுக்கு வத்தல், துவர்ப்புக்காக வாழைப்பூ மசியல், கசப்புக்காக வேப்பம்பூப் பச்சடி ஆகிய உணவுகள் மதிய உணவில் இடம்பெறும். நாள் என்றால், பகலும் இரவும் சேர்ந்திருப்பது போல, வாழ்வில் இன்ப துன்பம் என்று இருவித அனுபவமும் உண்டு. இனிப்பை மட்டும் சாப்பிட்டால் ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படும். அதற்கு மாற்றாக காரம் சேர்க்கிறார்கள். இன்ப, துன்பத்தை ரசித்து அனுபவிக்க வேண்டும் என்பதைக் குறிக்கவே, அறுசுவையையும் உணவில் இடம்பெறச் செய்தனர்.
No comments:
Post a Comment