Thursday, August 22, 2013

எட்டு பேர் சாட்சி

மனிதனுக்கு ஆறறிவைக் கொடுத்திருக்கிறார் ஆண்டவன். எது நல்லது எது கெட்டது என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என்பதற்காகப் பகுத்தறிவைக் கொடுத்திருக் கிறார். இருந்தாலும், நம் மனம் தீயவழியில் ஈடுபட்டுத் துன்பப்படுகிறது. வினைப் பயனால் புண்ணிய, பாவங்கள் நம்மைப் பற்றுகின்றன. இதனால், பிறவிச்சங்கிலி நம்மைத் தொடர்கிறது.  நாம் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் சாட்சியாக எட்டுபேரை கடவுள் நியமித்துஇருப்பதாக மகாபாரதம் கூறுகிறது. இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் அஷ்டதிக் பாலகர்களே அவர்கள். எட்டுத்திசைகளிலும் இருந்து நம்மை கண்காணிக்கும் பணியைச் செய்து கொண்டுஇருக்கின்றனர்.

No comments:

Post a Comment