பஞ்சபூதச் சேர்கையாலாகியது. சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய இம்மூன்றையும் சேர்த்து எண்வகைப் பொருள்களையும் இறைவன் இடமாகக் கொண்டு இயக்குவதனால் அஷ்டமூர்த்தி என்ற பெயர் சிவபெருமானுக்குச் சொல்லப்படுகிறது.
தெற்கு நோக்கி இருக்கும் தெய்வங்கள்....
1, நடராசர், 2, தட்சிணாமூர்த்தி, 3, பைரவர்.
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின் வடிவச் சிறப்பு.
கல்லால மரத்தடியில் யோக ஆசனத்தில் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் உபதேசிக்கும் முறையில் வீற்றிருக்கிறார். அவருடைய ஒரு திருவடி முயலகனை மிதித்து கொண்டிருக்கிறது. மற்றொன்று வீராசனமாக வீற்றிருக்கிறது. நான்கு கைகளில் வலப்பக்கம் ஒருவகை சின்முத்திரை தாங்கியும் ஒருகை உருத்திராக்க மணிவடம் தாங்கியும் உள்ளது. இடப்புறம் உள்ள ஒரு கையில் அமுதகலசமும் மற்றொன்றில் வேதச்சுவடியும் உள்ளன. இவரை யோக தக்ஷிணாமூர்த்தி என்பர்.
வீணா தக்ஷிணாமூர்த்தி.
தும்புரு நாரதருக்கு வீணையின் இலக்கணத்தை உணர்த்திய திருமேனி வீணாதர தக்ஷிணாமூர்த்தி எனப்படும்.
சின்முத்திரை.
சித் + முத்திரை. ஞானத்தைக் காட்டும் அடையாளம். சுட்டு விரலால் பெருவிரலின் அடியைச் சேர்த்து மற்ற 3 விரல்களையும் வேறாக ஒதுக்கிக் காட்டும் முத்திரை. பெருவிரல் இறைவனையும் சுட்டுவிரல் ஆணவமலத்தையும், மோதிரவிரல் கன்மத்தையும், சுண்டுவிரல் மாயையும் குறிக்கும். ஆன்மா மும்மலங்களையும் நீக்கி இறைவனை அடைந்து இன்புறுவதே இம்முத்திரையின் பொருளாகும்.
தக்ஷிணாமூர்த்தியின் அருகில் உள்ள மஹரிஷிகளின் பெயர்கள்.
சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர்.
“நவபேதம்” என்பதன் பொருள்.
சிவபெருமான் ஒன்பது வகையாக விளங்குகிறார். சிவம்,சக்தி,நாதம்,விந்து என்னும் அருவம் நாங்கும்; மஹேஸ்வரன்,உருத்திரன்,திருமால்,பிரம்மன் என உருவம் நான்கும்; சதாசிவன் என்னும் அருவுருவம் ஒன்றும் ஆகிய இவை நவபேதம் எனப்படும்.
கால பைரவரின் சிறப்பு.
காலனின் பயத்தை போக்குபவர். எமவானின் பயத்திலிருந்து நம்மைக் காப்பவர் காலபைரவர் ஆவார். இவர் பரமேஸ்வரரின் அம்சமாவார். மொத்தம் பைரவர்கள் 64.பேர் உள்ளதாக சிவாகமங்கள் கூறுகிறது.
இறைவன் நடனமாடுவதன் தத்துவம்.
மாயாமலத்தை ஒட்டி கன்ம மலத்தைச் சுட்டு ஆணவ மலத்தை அதன் வலி கெடுமாறு அழுத்தி ஆன்மாக்களை அருளாலே மேலே தூக்கி ஆனந்தக் கடலில் மூழ்கியிருக்கச் செய்வதே இறைவன் ஆடும் தாண்டவத்தின் நடனத்தின் கருத்தாகும்.
இறைவனின் நடனங்களும் உரிய தலங்களும்.
1, ஆனந்த நடனம் – தில்லை,
பேரூர். 2, அஜபா நடனம் – திருவாரூர்.
3, சுந்தர நடனம் – திருவாலவாய் {மதுரை}
4, ஊர்த்துவ நடனம் – திருவாலங்காடு, அவினாசி.
5, பிரம நடனம் – த்ருமுருகன் பூண்டி.

No comments:
Post a Comment