Wednesday, October 23, 2013

நாயை காட்டிலும் இழிவானவர்கள்






நாயை காட்டிலும் இழிவானவர்கள்

விவேக சிந்தாமணி 15

...
வெம்புவாள் விழுவாள் பொய்யே மேல்விழுந் தழுவாள் பொய்யே
தம்பலம் தின்பாள் பொய்யே சாகிறேன் என்பாள் பொய்யே
அம்பினும் கொடிய கண்ணாள் ஆயிரம் சிந்தையாளை
நம்பின பேர்கள் எல்லாம் நாயினும் கடையா வாரே.

###

அம்பைக் காட்டிலும் கொடுமையான விழிகளை உடைய தாசிப்பெண் ஒரு ஆணிடத்தில் தெய்வீகக் காதல் கொண்டிருப்பதைப் போல மனம் கரைந்து விம்முவாள். அது வெளிவேஷம்

அன்புப் பெருக்கால் தள்ளாடுவதைப் போல கீழே விழுவாள், அதுவும் வெளிவேஷமே,

உம்மை பிரிந்து என்னால் வாழ இயலாது என்று சரீரத்தின் மீது விழுந்து கதறிடுவாள், அதுவும் வெளி வேஷமே

அன்பின் அதி உச்சத்தில் தான் இருப்பதைக் காட்ட , அந்த ஆண் உண்ட எச்சிலாகிய தாம்புலத்தினை உன்பாள் இதுவும் வெளி வேஷமே.

மனத்தை ஒரே ஆடவன் பால் நிலைக்க செய்ய முடியாமல் ஆயிரம் வகை எண்ணம் உடையவளான அவளை நம்பியவர்களெல்லாம் நாயை காட்டிலும் இழிவானவர்கள்

நாயை காட்டிலும் இழிவானவர்கள் வேசியை நம்புவவர்கள்

வெம்புதல் -விம்முதல்
தம்பலம் - வெற்றிலை பாக்கு

No comments:

Post a Comment