Friday, October 11, 2013



எந்தந்த இடங்களிலெல்லாம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்?
தங்கம், தீபம், கண்ணாடி, புஷ்பம், பழம், தேங்காய், மஞ்சள், கும்பஜலம் ஆகிய மங்கலப் பொருட்களில் திருமகள் குடியிருப்பாள். பசுவிடமும், அதன் பஞ்சகவ்யத்திலும் அலைமகள் குடியிருப்பாள் என்கிறது சாஸ்திரம்.

எல்லாப் பொருட்களிலும் தென்படும் 'கலைஅவளது இருப்பிடம். உடலில் தென்படும் அழகு... அதாவது, லாவண்யம் அவள் வசிக்கும் இடம். நம் மனம், எந்தப் பொருளை லக்ஷ்மிகரமாகப் பார்க்கிறதோ அதிலும் திருமகள் தோன்றுவாள். மங்கலகரமான பொருட்களிலும் செயல்களிலும் அவள் குடிகொண்டிருப்பாள். கலையை இழந்த பொருட்களில் அலைமகள் தென்படமாட்டாள். தன லட்சுமி, தான்ய லட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, மோட்ச லட்சுமி - இப்படி எப்பொருளிலும் உட் பொருளாக மிளிர்பவள், ஸ்ரீலட்சுமிதேவி.

 

No comments:

Post a Comment