Monday, October 21, 2013

பிரம்மசரியம்...

 




பிரம்மசரியம்...
------------------
ஆன்மீக உணர்வு என்றால் என்ன?

“மேதா நாடி” என்று ஒரு நாடி இருக்கிறது. அது உயர்ந்த, ஆழ்ந்த ஆன்மீக உணர்வுகளை ஒருவரிடம் தோற்றுவிக்கிறது....

“நான் யார்?” என்ற கேள்வியில் தொடங்கி, நானே ஆன்மா – எல்லாம் ஆன்மாக்காள் – எனவே எல்லாமே ஒன்று” – என்ற மெய்ஞான நிலையை நாம் பெறுவதற்கு இந்த மேதா நாடி நமக்கு உதவுகிறது.

“ மேதா “ என்ற சொல் மூளையின் தனிப்பட்ட ஒரு பேராற்றலைக் குறிக்கும். இந்த ஆற்றலால் சூட்சுமமான உயர்ந்த ஆன்மீக உண்மைகளை அறிந்துகொள்ளும் திறமை { INTUITION } வெளிப்படுகிறது.

ஒருவன் பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் பிரம்மசரியத்தை ஒரு தவமாகவே மேற்கொள்வானேயானால். அதன் விளைவாக ஆன்மீக ஆற்றல் அவனுள் மலர்ந்தெழுகிறது. இதை நாளடைவில் அவன் அனுபவத்தில் தெளிவாக உணர்கிறான். உணரமுடியும் இது உறுதி.

மனிதர்களாகப் பிறந்த எல்லோரிடமும் இந்த தெய்வீக மயமான ஞானம் சூட்சுமமாக இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் அது உறங்கிய நிலையில் இருக்கும். இதைப் பற்றி இங்கே கொஞ்சம் குறிப்பிடுகிறேன்.

எதையும் ஆராய்ந்து, பரிசோதித்துப் பார்ப்பது மக்களின் இயல்பு. ஆனால் இவற்றைக் கடந்து திடீரென்று நமக்குள் தோன்றி வெளிப்படும் சூட்சும அறிவு {உணர்வுத்திறன்} ஒன்று. இது அவ்வப்போது நாம் சற்றும் எதிர்பாராத வகையில் மின்னல் போன்று தோன்றி வெளிப்படும். இதை முதலில் தட்டியெழுப்ப வேண்டும். பிறகு இதனை நிரந்தரமாக்கி தமது இயல்பாகவே ஆக்கிக்கொள்ள வேண்டும். இதுதான் ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடும் சாதகர்கள் எல்லோருடைய முதல் இலட்சியமாகும்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும் ஸ்வாமி விவேகானந்தரும் இதைப் பற்றி மிகவும் விளக்கமாகவே சொல்லியிருக்கிறார்கள்.

இது ஒரு தத்துவம். இந்த தத்துவம் வெறும் ஒரு கொள்கை {Theory} அல்ல. ஆன்மீக ஆராய்ச்சி சாலையில் பரிசோதனையில் பரிசோதிக்கப்பட்டு - அனுபவித்து உணர்ந்து – நிருபிக்கப்பட்ட உண்மை ஆகும்.

பிரம்மசரியம் மூளையைப் போற்றி வளர்க்கிறது. அதன் வலிமையை வளம்படுத்தி உயிர்த்துடிப்புடன் பிரகாசிக்கும்படி செய்கிறது.

பிரம்மசரியம் பேணாதவர்கள் தியானம் பழகும்போது மூளை விரைவில் சூடெறிவிடுவதை நாம் பார்க்கலாம்.

மூளை திடமாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தால்தான், தியானம் தொடர்ந்து இயல்பாக நடைபெறுவதற்கு வசதியாக இருக்கும்.

மணிக்கணக்காகத் தியானம் செய்வதால் உள்ளுக்குள் ஏற்படும் விரைப்பை, உட்புயளைப் பிரம்மசரியம் பேணாதவர்கள் மூளையில் தாங்கிக்கொள்ள முடியாது.

சுருக்கமாகச் சொன்னால். உயர்நிலை ஆன்மீக சாதனைக்கு – மிகவும் உயர்ந்த ஆன்மீக வாழ்க்கைக்கு – பிரம்மசரியம் முற்றிலும் இன்றிமையாதது.

முதன் முதலில் ஆன்ம சாதனையில் நுழைய விரும்புபவர்களுக்கு இதைப் பற்றியெல்லாம் ஆரம்பத்திலேயே வெளிப்படையாகச் சொல்லும் வழக்கமில்லை. அப்படிக் கூறினால் அவர்கள் ஆன்மீக சாதனையில் உற்சாகம் குன்றிப் போவார்கள். ஆன்மீக வாழ்க்கைக்கு பயந்து ஒதுங்கிவிடுவார்கள். என்றாலும் உண்மை உண்மைதான். அதாவது மனம், வாக்கு, காயம் மூன்றிலும் விடாப்பிடியான தன்னடக்கம் – தூய்மை கண்டிப்பாக தேவை. அது இல்லாமல் உயர்ந்த வகையைச் சேர்ந்த தெய்வீக வாழ்க்கை ஒருவருக்கு இயல்பானதாக அமைவதிலை.

இருந்தாலும் மக்களுடைய ஆர்வத்தைக் குலைத்துவிடக் கூடாது என்பதற்காக சில விஷயங்களை நாங்கள் வற்புறுத்தவில்லை. பிரம்மசரியம் பேணுவதில் உள்ள நுணுக்கங்கள் அப்படிப்பட்ட சில விஷயங்களாகும். அவற்றை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திச் சொல்லாமல் எளிய முறையில் விளக்குவதுதான் மரபாக இருந்து வருகிறது.

சேதன உணர்வின் { Consciousness } உயர்நிலை மையங்களைக் கிளர்ந்தெழச் செயவது ஆன்மீக சாதனையின் முதல் படியாகும்.

உயர்நிலை மையங்களில் ஏதாவது ஒன்றின் மீது மனதைக் குவித்துத் தியானம் பழக வேண்டும். இந்தப் பயிற்சிக்கு ஆரம்பமாக ஆன்மீக {உணர்வு} மையத்தை விழிப்படையச் செய்ய வேண்டும். ஆனால் இப்படி விழிப்படையச் செய்வதற்கு முன்னால் கீழ்மட்ட {உணர்ச்சி} மையங்களை ஒடுக்கியாக வேண்டும். தாழ்ந்த உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும் கீழ்மட்ட மையங்கள் எல்லாம் ஒன்றுகூடி இயக்கும்போது மேல் மையங்களில் {தெய்வீக உணர்வுகளில்} நாட்டம் செல்லாது. ஏனென்றால் நமது மனதின் ஆற்றல்கள் கீழ்மைய இயக்கங்களிலேயே செலவழிந்து போயிருக்கும். எஞ்சி இருக்கும் ஆற்றல் உயர்தர ஆன்மீக மையங்கள் செயல்படுவதற்கு போதாமல் போய்விடும். அந்த அளவுக்கு நமது மொத்த மனதின் ஆற்றல் குறைந்து போயிருக்கும். எனவே கீழ்மட்ட மையங்கள் {தாழ்ந்த உணர்ச்சிகள்} இயக்குவதை ஆன்மீக சாதகர்கள் ஒடுக்க வேண்டும்.

அப்படிச் செய்யாவிட்டால் உயர்ந்த ஆன்மீக உயர்வு மட்டத்தில் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள முடியாமல் நாம் தவிக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் யார் என்ன சொன்னாலும் சரி – யார் என்ன நினைத்தாலும் சரி – கீழ்மட்ட உணர்வு மையங்களை அடக்கி ஒடுக்கத்தான் வேண்டும். இது தவிர்க்க முடியாதது. இதைவிட்டால் பிரம்மசரியத்துக்கு வேறு ஒரு வழியும் கிடையாது.

எனவே கீழ்மட்ட்த்திலுள்ள தாழ்ந்த உணர்ச்சி மையங்களைச் செயல்படாமல் ஒடுக்கி வையுங்கள். அப்படிச் செய்யாவிட்டால் மேள்தள ஆன்மீக உணர்வு மையங்கள் ஒழுங்காகச் செயல் புரிய இயலாது. தரை மட்ட்த் தளத்தில் எல்லச் குழாய்களும் திறந்திருக்கும்போது கட்டிட்த்தின் மேல் தளங்களுக்குத் தண்ணீர் பாயுமா? இது அது போன்றதுதான்.

கடும் பிரம்மசரியம் நோற்காத ஏதோ ஒரு சிலருக்கு தெய்வீக அனுபவங்கள் அல்லது தெய்வீகக் காட்சிகள் ஆங்காங்கே சில மினுக்கொளிகளாக அவ்வப்போது கிடைத்திருக்கலாம். எனினும் அவர்கள் உயர்ந்த ஆன்மீக உணர்வு மையங்களில் தொடர்ந்து நீடித்து நிற்பார்கள் என்று சொல்ல முடியாது. உயர்நிலை மெய்ஞானம் அடைவதில் அவர்கள் வெற்றி கண்டிருக்க முடியாது என்றும் நாம் திட்ட வட்டமாக சொல்ல முடியும்.

ஆகவே ஆன்மீகத்தில் எப்படிப்பட்ட உயர்ந்த நிலையை அடைய விருப்பினாலும் – மெய்ஞானத்தின் எந்தத் தளத்தை எட்டிப் பிடிக்க வேண்டுமானாலும் எந்த வகையிலும் எல்லா வகையிலும் புலனடக்கம் பழகித்தான் ஆகவேண்டும்.

இதைவிட்டால் வேறு வழியுமில்லை.

ஆன்மீக துறையில் இந்தத் கருத்து வெட்டவெளிச்சமாகத் தோன்றும் ஒரு கசப்பான உண்மை. ஆனால் நீண்ட நெடிய அனுபவம் கற்றுத் தந்த ஒரு பெரிய உண்மை இது.!

முழுமையான ஒரு பிரம்மசரியனுக்கு வாக்கு பலிதம், எதிலும் வெற்றி, சீக்கிரம் மந்திரம் சித்தியாகுதல், உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், தெய்வ சான்னித்தியம் போன்ற அதிசயத்தக்க பல சக்திகள் இயல்பாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை...
 
 
 

No comments:

Post a Comment