Friday, October 11, 2013

பித்ருக்களின் அனுக்ரஹம் & பித்ரு சாபம் :


பித்ருக்களின் அனுக்ரஹம் & பித்ரு சாபம் :
ஏதமும் பன்பாடும் புஸ்தகத்தின் ஒரு பகுதியானச்ராத்தம்அத்யாயத்திலிருந்து ஒரு பக்கம்)
1)
பித்ருக்களின் அனுக்ரஹம் :
நமது பித்ருக்கள் இருந்தார்கள். செத்து விட்டார்கள், இப்பொழுது இல்லை என்று முடித்து விடாமல் அவர்கள் இப்போதும் இருக்கின்றனர் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்...பிக்கை நமக்கு வர வேண்டும். அவர்கள் தெய்வாம்சம் உடையவர்களாக இருப்பதால் நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். தேவர்களைப் போலவே அவர்கள் நமக்கு அனுக்ரஹம் செய்வார்கள்.

அவர்கள் எப்போதும் இனிமையானவர்கள். க்ரூரமானவர்கள் அல்ல. தனது கோத்ரத்தில் வந்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். பித்ருக்கள் திருப்தி அடைவதன் பயனாக ச்ராத்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்சவிருத்தி, ஆரோக்யம், ஞானம், இம்மை&மறுமையில் மேன்மை கிடைக்கின்றன.

2)
பித்ரு சாபம்:
நாம் கடமையிலிருந்து தவறக்கூடாது. வாத்தியாரை குறை சொல்லுவதும், சாக்குபோக்குகளை தேடி கண்டுபிடிப்பதும் இப்போது அதிகமாகி வருகின்றது. இதை கைவிட வேண்டும். யாரிடம்தான் குறையில்லை? ச்ராத்தத்தை எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும். ச்ராத்தத்தை செய்யாதவன் நன்றி கெட்டவன். இதில் சந்தேகமே வேண்டாம். குதர்க்க வாதம் கூடாது.

ச்ராத்தம் செய்யாமல் விட்டவர்கள் எவ்வாறு பாதிக்கப் படலாம் என்று விபரமாக இங்கு எடுத்துக்கூற அபிப்ராயமில்லை. சுருக்கமாக பித்ருசாபத்திற்கு அப்பேர்பட்டவர்கள் ஆளாகலாம் என்பதை மட்டுமாவது ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் நல்லது.

பித்ருக்கள் சாபமிடுவார்களா என்று நினைக்கவேண்டாம். பித்ருக்கள் கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே நமக்கு தோஷம் ஏற்படும்.

பெற்ற சீரையும் செல்வத்தையும் இழந்து துன்புறவும் நேரலாம்.

வம்சவிருத்தி பாதிக்கலாம்.

No comments:

Post a Comment