Friday, October 11, 2013

மகாலட்சுமி எங்கே இருப்பாள்?


மகாலட்சுமி எங்கே இருப்பாள்?

 

தேவர்கள் மகாலட்சுமியைக் குறித்து ஜெபம் மற்றும் ஹோமம் செய்தபோது அக்னியில் பிரசன்னமானாள். அப்போது தாயே எங்கு தினமும் வசிப்பீர்கள் என்று கேட்டதற்கு...

1. அதிகாலையில் எழுந்து இறைவன் நாமத்தை உச்சரித்தபடி வணங்குகிற வீட்டிலும்.

2. வீட்டை சுத்தமாக வைத்திருந்து தீபம் ஏற்றும் இடத்திலும்.

3. கணவன் - மனைவியர் ஒற்றுமையாக இருக்கிற வீட்டிலும்.

4. ஆசாரம், தர்மங்களை கடைப்பிடித்துப் பெற்றோருக்கு ஒழுங்காக மரியாதையோடு பணிவிடை செய்யப்படும் வீட்டிலும்.

5. தானியங்களை சிதறாது பயன்படுத்தும் வீட்டிலும்.

தினமும் பசுவை வணங்கும் வீட்டிலும், குபேரனுடன் சேர்ந்தே வாசம் செய்வேன் என்று லட்சுமிதேவி கூறியதாக பிரம்ம வைவர்த்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. சிறந்த ஆற்றல், துணிவு, தெய்வ பக்தி புலனடக்கம், தர்மசிந்தனை, தூய்மை, உழைப்பு, விருந்தோம்பல், பொது சேவை, மனப்பான்மை, சுறுசுறுப்பு, கற்பு நெறி நிறைந்த வீட்டிலும் குரு, குலத்தவர், பெற்றோர்களை மதிப்போர் வீட்டிலும் நிரந்தரமாக வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன.

 

 

No comments:

Post a Comment