Wednesday, November 27, 2013

புத்தர் கடவுளா...?

புத்தர் கடவுளா...?

இஸ்லாமியர்களுக்கு அல்லா ஒருவரே கடவுள் கிறிஸ்தவர்களுக்கு கர்த்தர் மட்டுமே கடவுள் புத்த மதத்தினருக்கு புத்தர் மட்டும் தான் கடவுள் உங்கள் இந்துமதத்தில் மட்டும் பல கடவுள்கள் இருப்பது ஏன்?

புத்த மதத்தில் கடவுள் இருப்பதாக நீங்கள் சொல்லி தான் கேள்வி படுகிறேன். புத்தர் தமது உபதேசங்கள் எதிலிலும் கடவுளை பற்றி பேசவே இல்லை கடவுள் உண்டா? இல்லையா? என்று அவரிடம் சீடர்கள் கேட்டபோது புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார் சடங்குகளை எதிர்த்து உருவான புத்த மதத்தில் சடங்குகள் நிறைந்த பிறகு புத்தரை கடவுளாக வழிபடுகிறார்கள் அதற்கு புத்தர் பொறுப்பல்ல...

அதே போலவே இந்து மதத்தில் பல கடவுள்கள் இருப்பதாக சொல்வது அறியாமை என்று தான் நான் சொல்வேன் காரணம் ஒரு நாமமும் ஓர் ஊரும் இல்லானுக்கு ஆயிரம் திருநாமம் சொல்லி தெள்ளேணம் கொட்டாமோ என்பது இந்து சமைய ஆன்றோர் வாக்கு அதாவது ஒரே கடவுளை பல பெயரில் அழைப்பது தான் இந்து தர்மத்தின் ஆதாரமாகும்

இது எப்படி என்றால் ஒரு மனிதன் பெற்றோரை ஏற்கும் போது மகனாக மாறுகிறான் மனைவியை ஏற்கும் போது கணவனாக மாறுகிறான் பிள்ளைகளை ஏற்கும் போது தகப்பனாக மாறுகிறான். மகன், தகப்பன் கணவன் என்று பல கோணங்களில் அவன் பார்க்க பட்டாலும் அவன் என்னமோ மனிதன் தான் அது போல் தான் சிவன் விஷ்ணு பிரம்மா என்று பல பெயர்களில் கடவுள் அழைக்க பட்டாலும் அவர் ஒருவர் தான் அதனால் தான் வேதங்கள் இறைவனை ஏகம் சத் என்று அழைக்கின்றன.

No comments:

Post a Comment