தென்னிந்திய பிராமணர் குடும்பங்களிலே பேசப்படும் தமிழை பிராமணத் தமிழ் என சொல்லி சிலர் ஒதுக்கி வைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதுவே சரியான தமிழ் ஆகும். பேச்சு வழக்கில் சிதைவடைந்த நிலையானாலும் அதன் அடிச்சொல் மிகச் சரியான தமிழ் சொல்லே.
தமிழ் வளர்ச்சிக்குப் பிராமணர்கள் ஆற்றிய சேவை மறக்கடிக்கப் படுகிறது. ஒரு உ. வே. சாமிநாதையர் இருக்கவில்லை என்றால் இன்றைக்கு சங்கத் தமிழ் நூல்கள் கிடைக்காமலே போயிருக்கும். 19ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ் செய்யுள் வடிவிலே தான் இருந்தது. அதனை வசன நடையாக முதலில் பிரபலப் படுத்தியவர் யாழ்ப்பாணம் ஸ்ரீ ஆறுமுக நாவலர். அதன் பின் நாவல்கள், கட்டுரைகள் என எண்ணிறந்த ஆக்கங்களை செய்தவர்களில் மிகப் பெரும்பாலானோர் பிராமணர்களே.
பிராமணர்கள் "ஆத்துக்கு போறேன்" என்பார்கள். இங்கே "அகத்துக்கு" என்பது தான் பேச்சு வழக்கில் ஆத்துக்கு என திரிபடைந்தது. வீடு என்பது தமிழில் வீடு பேற்றையே குறிக்கும். எனவே வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்வது அமங்கலமாக கருதப் பட்டது. ...
தோசை வார்ப்பது, இட்லி வார்ப்பது என்று தான் பிராமணர் இல்லங்களில் சொல்வார்கள். சுடுதல் என்றால் நேரடியாக நெருப்பில் சுடுவதை குறிக்கும். சோளன், கிழங்கு என்பவற்றை நெருப்பில் சுட்டு உண்ணலாம். தோசையை எப்படி சுடுவது? தோசைக் கல்லிலும், இட்லி தட்டிலும் மாவை வார்த்து செய்யப்படுவதே தோசை, இட்லி ஆகும்.
உணவை வேக வைப்பது என்றே சொல்வார்கள். அவி என்றால் யாகங்களிலே வரும் அவிபாகம் என்பதைக் குறிக்கும்.
அதே போல உறவு முறைகளிலும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறவுப் பெயர் உண்டு.
அம்மாவின் சகோதரன் - அம்மான்
அம்மான் மகன் - அம்மாஞ்சி
அம்மான் மகள் - அம்மங்கா
தந்தை சகோதரி - அத்தை
அத்தை மகன் - அத்தான்
அத்தை மகள் - அத்தங்கா
இப்படி பல நல்ல தமிழ் சொற்கள், பிராமணத் தமிழ் என்று சொல்லி ஒதுக்கப் படுகின்றன, வழக்கொழிந்து போகின்றன

No comments:
Post a Comment