Friday, November 1, 2013

மத மாற்றம் என்பது வெறும் கடவுளை மட்டும் மாற்றிக் கொள்ளும் விசயமல்ல. அது ஒரு தேசிய மாற்றம்.

மத மாற்றம் என்பது வெறும் கடவுளை மட்டும் மாற்றிக் கொள்ளும் விசயமல்ல. அது ஒரு தேசிய மாற்றம்.

மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?
”மத மாற்றம் என்பது வெறும் கடவுளை மட்டும் மாற்றிக் கொள்ளும் விசயமல்ல. அது ஒரு தேசிய மாற்றம். இந்து மதத்திலிருக்கும் போது ‘வணக்கம்‘ சொன்னவர், முசுலீமாக மாறும்போது ‘அஸ்ஸலாமு அலைக்கும்‘ என்கிறார்.
...
கிறித்தவர் ‘தோத்திரம்‘ அல்லது ‘குட்மார்னிங்‘ என்கிறார். வேட்டி மாறி பேண்ட்டோ, லுங்கியோ நிரந்தர உடையாக மாறுகிறது. பெண்கள் பூச்செடி, பொட்டு வைத்து, கோலமிட்டு, குத்துவிளக்கு ஏற்றுவது நின்று போகிறது. தேங்காய் உடைத்து, குத்துவிளக்கு கற்பூரம் ஏற்றி பாரதப் பண்பாட்டின்படி ஆரம்பிக்கப்படும் காரியங்கள் ரிப்பன் வெட்டி ஆரம்பிக்கப்படுகிறது. பிறந்த நாட்களுக்குக் கோவிலுக்குப் போகும் பழக்கம் மாறி கேக் வெட்டும் பழக்கம் வருகிறது.

‘ஒருவனுக்கு ஒருத்தி‘ என்ற பண்பாடு மாறி பலதாரமணம், விவாகரத்து செய்வதுமான கலாச்சாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பாரதத்தில் உள்ள புனித ஸ்தலங்கள் மறந்து விதேசங்களிலுள்ள மெக்கா, மெதினா, வாடிகன், கான்ஸ்டாண்டிநோபிள், ஜெருசலேம் – புனித நகரங்களாகக் கருதப்படுகின்றன. முன்னோர்கள், தாத்தா, பாட்டிகளை முட்டாள்கள், அறிவிலிகள் என்று கருதும் எண்ணம் வளர்கிறது. சித்திரை முதல் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாடியது போய் ஜனவரி 1 கொண்டாடப்படுகிறது.

மொத்தத்தில் ஆன்மீக நாட்டம் நொடிந்து லோகாயதவாதம் பெருகி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற எண்ணற்ற குற்றங்கள் பெருகி வளர்கின்றன. மதமாற்றத்தில் ஏற்படும் தேசிய மாற்றங்களுக்கு இவை ஒரு சில உதாரணங்களே.”

- இந்து முன்னணி வெளியிட்டிருந்த ‘மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்?’ என்ற வெளியீட்டில் இருந்து ....

எனவே நண்பர்களே நம்முடைய பாரதத்தின் பண்டிகைகளை பழைமை மாறாமல் கண்ணியத்துடன் கொண்டாடுவோம்... நம் வீட்டு குழந்தைகளுக்கு அதுவும் முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு நாம் பண்டிகைகளின் பெருமைகளை சிறு வயதில் இருந்தே புரியும்படி உணர்த்துவோம்......

நம் குழந்தைகளுக்கு ஹிந்து மதத்தின் பெருமைகளை சரியான முறையில் உபதேசித்தால் எந்த "நாயும்" மதம் மாற்றம் மட்டும் அல்ல,ஹிந்து மதத்தின் ஒற்றுமையும் பலப்படும்....

அனைவருக்கும் இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள் ... ஜெய் ஸ்ரீ ராம் ...

No comments:

Post a Comment