இதயத்தில் இடம் கொடுங்கள்
தாய்மையைப் பற்றி சாய்பாபா சொல்வதைக் கேளுங்கள்.
உங்களால் உங்கள் தாயார் கண்ணீர் வடிக்கக் கூடாது. அப்படி அவள் கண்ணீர் வடிப்பாளானால், அது உங்களுக்கு நல்லதல்ல. அதன்காரணமாக நீங்கள் எதிர்காலத்தில் பலவிதமான கேடுகளை சந்திக்க கூடும். தாய் உடலை கொடுத்தாள். தந்தை உணவைக்
கொடுத்தார். ஆசிரியர் அறிவைக் கொடுத்தார். எனவே, உங்கள் வாழ்க்கையில் இந்த மூவரையும் என்றும் மறக்காதீர்கள். உங்கள் இதயத்தை இருகூறாக வகுத்துக்கொண்டு, ஒரு புறத்தில் தந்தையையும், மற்றொரு புறத்தில் தாயையும் இருத்திக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு எந்தக் கஷ்டம் வந்தாலும், தாயை நோக்கி வன்சொல் எதுவும் கூறிவிடாதீர்கள்.
உங்களைப் பெற்றவர்களை நண்பர்களைப் போல் கருதுங்கள். உங்களால் அவர்களுக்கு உணவளிக்க முடியாமல் போனால், பிச்சையெடுத்தாவது அவர்களுக்கு உணவளிக்க நீங்கள் தயங்காதீர்கள். அவர்களது எல்லா தேவைகளையும் நிறைவு செய்யுங்கள். அவ்வாறு செய்தால், உங்கள் வாழ்க்கை தன்னிறைவு உள்ளதாக இருக்கும்.

No comments:
Post a Comment