செம்பில் என்ன இருக்கு?
முதியவர்கள், நோயாளிகள், நிறைமாத
கர்ப்பிணிகள் கோயிலுக்கு வரமுடியாமல் இருப்பார்கள். இவர்களுக்கும்
கடவுளின் அருள்
கிடைக்க வேண்டும்
என்பதற்காகவே கோயிலில் உற்சவர் சிலையை வைத்தார்கள்.
விழாக்காலத்தில் இந்த சிலைகளே வீதி உலா
வரும். இவை
செப்பு விக்ரகமாக
தாமிரத்தில் செய்யப்பட்டிருக்கும். இதற்கான
காரணத்தை வாரியார்
சொல்கிறார்.
மின்சாரத்தால் தான் வீட்டிலுள்ள எல்லாக் கருவிகளும் இயங்குகின்றன. அதற்குத் தேவையான மின்சாரத்தை ஒயர் மூலம் கம்பி வழியாக வீட்டுக்கு கொண்டு வருகிறோம். ஒயருக்குள் செம்புக் கம்பி இருக்கும். அதுபோல, மந்திர சக்தியால் உயிரூட்டப்பட்ட உற்சவமூர்த்தியில் இருந்து, நாமும் ஆற்றலை (சக்தி) பெற வேண்டும் என்பதற்காக செம்பில் வடிவமைத்தனர். இந்த சிலைகளுக்கு அபிஷேகம் செய்த பால் போன்ற பொருட்களை சாப்பிட்டாலும் நமக்கு சக்தி கிடைக்கும். ஒற்றைச் சிலைக்கே இவ்வளவு சக்தி என்றால், கோயில்களுக்குள் சென்றால், எத்தனையோ செம்புச்சிலைகளைக் காணும் பாக்கியம் நமக்குண்டு. அவற்றை வணங்கும் போது அபார ஆற்றல் பிறக்கும். அதனால் தான் தினமும் கோயிலுக்குப் போய், நல்ல மனதுடன், களங்கமற்ற பக்தி செலுத்தும் போது, அவர்களின் திறமை அதிகமாகி, எல்லாத்துறையிலும் மிளிர்கிறார்கள்.

No comments:
Post a Comment