Thursday, February 6, 2014

சிவாச்சாரியார்களின் பல்வேறு பட்டப் பெயர்கள்

சிவாச்சாரியார்களின் பல்வேறு பட்டப் பெயர்கள்

திருக்கோயில்களில் இறைவனைத் தொட்டுப் பூசிக்கும் உரிமை பெற்றவர்கள் ஆதியில் “திருமேனி தீண்டுவார்” என்று அழைக்கப்பட்டனர...். சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களை முப்போதும் திருமேனி தீண்டுவார் என்று சிறப்பித்துள்ளர். கேரளாவில் இறைவனைத் தொட்டு அர்ச்சனை புரிபவர்கள் “திருமேனிகள்” என்று இப்போதும் நடைமுறையில் அழைக்கப்பகின்றனர். தமிழ்நாட்டில் இவர்கள் அர்ச்சகர், சிவாச்சார்யார், பட்டர் என்று பலவாறு பட்டப்பெயரிட்டு அழைக்கபடுகின்றனர். கல்வெட்டுகளில் சிவப்பிராமணர், மகேஸ்வரர், பட்டுடையார் என்ற பெயர்களில் குறிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் சில பட்டப் பெயர்களின் விளக்கத்தைக் காணலாம்.

அர்ச்சகர்கள்

சிவவழிபாடு செய்வதை அர்ச்சனை என்று அழைப்பர். அம்பிகை சிவபெருமானை வழிபட நினைத்து அவரை வேண்டுவதை ஆகமத்தின் இயல்பினால் “உனை அர்ச்சனை புரிய பொங்குகின்றதென் ஆசை” என்று பெரிய புராணத்தில் கூறிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. அர்ச்சனை என்பது சிவ வழிபாட்டைக் குறிக்கும் சொல்லாக இருப்பதை இதன்மூலம் அறிகிறோம்.

சிவவழிபாட்டை சிவபெருமான் வாய்லாக அர்ச்சனை பாட்டேயாகும். என்று சுந்தரர் வரலாற்றில் சேக்கிழார் கூறுகின்றார். ஆதலின் சிவ்வழிபாட்டைச் செய்யும் அந்தனர்கள் அர்ச்சகர் எனப்பட்டனர். இந்நாளிலும் ஆலயப் பணிபுரிபவர்களை அர்ச்சகர் என்ற பொதுச் சொல்லால் அழைக்கின்றோம். இவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் அர்ச்சனா போகம் என்றழைக்கப்படுகிறது. இவர்கள் கூட்டமைப்பு ஆலய அர்ச்சகர் சங்கம் என்று பெயர் பெற்றுள்ளது.

மாகேஸ்வரர்கள்.

அர்ச்சகர்களில் மாகேஸ்வரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். சிவபெருமான் உருவம் அற்ற நிலையில் இருந்து அருவுருவ நிலையான லிங்க வடிவாகத் தோன்றி அருள்பாலித்ததுடன் உருவம் தாங்கியும் அருள்பாலிக்கிறான். அவ்வுருவங்கள் மாகேஸ்வர வடிவங்கள் எனப்படுகின்றன. அவ்வடிவங்களில் மனதை பதித்து வழிபடுபவர்கள் மாகேஸ்வரர் எனப்பட்டனர். ஆலயங்களில் மூலவராக லிங்கத்தைத் தவிர உருவமாக அருள்பாலிக்கும் வடிவங்களை பூசித்த அர்ச்சகர்கள் மாகேஸ்வரர்கள் எனப்பட்டனர் என்று சிலர் கூறுகின்றனர். அவர்களுக்குத் தலைமை தாங்கிக் கண்காணித்தவர்கள் மாகேஸ்வரக் கண்காணிகள் எனப்பட்டனர்.

கோயில்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளை இவர்கள் பரிபாளித்து வந்ததுடன் அனைத்து வழிபாடுகளையும் நடத்தி வந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இக்கல் வெட்டுகளின் முடிவில் இது பன்மாகேஸ்வர ரக்ஷை என்று இவர்கள் பெயரால் அந்த தர்மத்திற்குக் காப்பும் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் ஆலயங்களில் நிலையாகத் தங்கிருந்ததுடன், அருகிலுள்ள கோயில்களில் விழாக்கள் நடக்கும் வேளைகளில் அங்கு சென்று தொண்டாற்றினர்.

திருக்கோயிகள் கல்வெட்டுகளில் மாகேஸ்வரர்களைப் பற்றிய குறிப்புகள் நிறையவே உள்ளன.
பட்டர்.

தென்மாவட்டங்களில் அர்ச்சகர்களை பட்டர் என்று அழைக்கின்றனர். வைணவ ஆலயங்களில் அர்ச்சகர்கள் நம்மை பட்டர் அல்லது பட்டாச்சாரியார்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். பட்டர் என்பது பட்டறிவு உடையவர் {அனுபவ ஞானம் உடையவன்} என்பதை குறிக்கிறது. சிவபெருமானை ஆலநீழல் பட்டனே என்று தேவாரம் அழைக்கிறது. அதையொட்டி இவர்கள் பட்டர்கள் எனப் பெயர் பெற்றனர். மதுரை மீனாக்ஷியம்மன் முதலான ஆலயங்களில் பூசித்து வரும் அர்ச்சகர்கர் பட்டர் என்று அழைத்துக்கொள்கின்றனர். இவர்களைத் தலையில் தலைப்பாகை நீண்ட அங்கவஸ்த்திரம் ஆகியவற்றை அணிந்து பூசிக்கும் வழக்கம் இருந்த்து. இந்நாளில் முக்கியமான திருவிழாக்களில் மட்டும் இவற்றை அணிகின்றனர்.

திருவண்ணமலை ஆலயத்திலும் அண்ணாமலையாரைப் பூசிப்பவர்கள் பட்டால் சரிகை வைத்து தைத்த கிரீடங்களை அணிந்து கொண்டு பூசிக்கும் பழக்கம் இருந்த்து என்பர். இந்நாளில் ரிஷப வாகனக் காட்சியன்றும் சில விழாக்களில் மட்டும் கிரீடம் உருத்திராங்க கண்டிகை அணிந்து வாகன பீடத்தில் அமர்ந்து ஆச்சாரியார்கள் பவனி வருகின்றனர்.

சிவ்வேதியர் – சிவமரையோர்

இச்சொல் இப்போது வழக்கில் இல்லை. பெரியபுராணத்தில் சேக்கிழார் ஆலயத்துள் அர்ச்சனை புரிந்துவந்த முருகனாயனாரை மானமறையோர் குலமரபின் வந்தார் என்று போற்றுகின்றார். திருநீலநக்கரைப் போற்றும் வேளையில் மங்கல மறையவர் என்றும் திருமறையோர் என்றும் குறிக்கின்றார். ஆலய அர்ச்சகர்களைச் சிவமறையோர் என்று கொள்ளும் வழக்கம் இலக்கியங்களில் மட்டும் ஆங்காங்கு உள்ளது.

சிவப்பிராமணர்கள்.

சிவநெறி வந்த அர்ச்சகர்கள் பல இடங்களில் சிவப்பிராமணர் என்று தம்மைக் குறித்துக் கொண்டனர். கல்வெட்டுக்களில் இச்சொல் அதிகம் பயிலப்பட்டுள்ளது. வேதவழி வந்த பிராமணர்கள் சுமார்த்த {சுருதி,வேதம் அதன் வழிவந்தவர்கள்} பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆகமநெறி வந்த அந்தணர்கள் தம்மைச் சிவப்பிராமணர்கள் என்று அழைத்துக் கொண்டனர். இவர்களே ஆலயத்தை நிர்வாகம் செய்து வருகின்றனர். ஆலயத்திற்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகள் ஏற்றுக்கொண்டு முறையாக நட்த்துவோம் என்று உறுதி கூறும் கல்வெட்டுகளில் இக்கோயில் சிவப்பிராமணரோம் என்று குறித்துள்ளதைக் காணலாம்.

நம்பியார்கள்.

நம்பி என்ற சொல்லுக்கு அழகன் என்பது பொருள். ஆகம அறிவு நிறையப் பெற்று சிவயோக சாதனையால் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அர்ச்சகர்கள் நம்பிமார் என்று அழைக்கப்பட்டனர். திருவாரூர் முதலிய ஸ்தலங்களில் உள்ள சிவாலய அர்ச்சகர்கள் நம்பிமார் என்று அழைக்கப்படுகின்றனர். திருமுறைகளைக் கண்டெடுத்துத் தொகுத்தளித்த நம்பியாண்டார் நம்பிகள் ஆலயத்தில் பணிபுரிந்துவந்த நம்பிமார் வம்சத்தவர். நம்பிமார் என்பது நம்பியார் என்று மருவி விட்டது.

நாயகர்.

நாயகன் என்பதற்குத் தலைவன் என்ற பொருள், சிவபெருமானைப் போற்றிக் குறிப்பிடும் வகையில் பள்ளியறை நாயகர், பிரதோஷ நாயகர் என வழங்குகின்றனர். சோமாஸ்கந்த மூர்த்திக்கு இமையவர் நாயகன். {தேவர்களால் துதிக்கப்படுபவர்} என்பது பெயர். திருவிடைமருதூரிலுள்ள சோமாஸ்கந்தர் ஏகநாயகர் என்று அழைக்கப்படுகிறார். திருமுறைகள் அவரை ஆதிநாயகன், பூதநாயகன், வேதநாயகன் என்று பலவாறான பெயர்களால் அழைக்கின்றது. இதையொட்டி உற்சவரான சோமாஸ்கந்தரைப் பூசிப்பவர்கள் நாயகர் எனப்பட்டனர். காஞ்சிபுரத்தில் சோமாஸ்கந்தரைப் பூசித்து வந்தவர்களுக்கு நாயகர் பட்டம் வழங்குகிறது. இதற்கு வேறு காரணம் ஒன்றும் கூறப்படுகிறது. இவர்களின் முன்னோர்கள் அரசியலில் ஈடுபட்டு சாளுவ திம்மப்ப நாயகன் என்பவர் பட்ட்த்துக்கு வர துணை நின்றனர். அவன் பட்டத்துக்கு வந்ததும். இவர்களுக்கு சாளுவ நாயக்கன் என்ற பட்டத்தைப் பெய்ருடன் சேர்த்து கொள்ளும்படி அனுமதியளித்து அரசியல் செல்வாக்கையும் அளித்தான். அதுமுதல் இவர்கள் சாளுவ நாயக்கர் என்ற பட்டத்தைத் தரித்து வருவதாகக் கூறுகின்றனர். இதுபோன்று தீக்ஷிதர், நயினார் முதலான பல்வேறு பட்டப்பெயர்களை சிவாலய அர்ச்சகர்கள் சூடியுள்ளனர். இந்தப்பெயர் ஆய்வு பல்வேறு வரலாறுகளைத் தெரிவிப்பதாக அமைகிறது.

No comments:

Post a Comment