Thursday, February 6, 2014

முக்திக்கு நாலு வழி!, அவை....

முக்திக்கு நாலு வழி!, அவை....

பிறவா பேரின்ப நிலையான முக்தி அடைதலே சித்த நிலை எனப் படுகிறது.இந்த முக்தி நிலையினை அடைய நான்கு வழிகள் இருப்பதாக சித்தர்கள் கூறியிருக்கின்றனர். அவை முறையே “சரியை”, “கிரியை”, “யோகம்”, “ஞானம்” என்கின்றனர். இந்த நான்கு முறைகளைப் பற்றியும் அதனால் கிடைக்கப் பெறும் முக்தி நிலை பற்றியும் சிவவாக்கியர் தனது சிவவாக்கியம் நூலில் பின் வருமாறு கூறுகிறார்.

"தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம்பெறும்...
தெளிந்த நற் கிரியைபூசை சேரலாம் சாமீபமே
தெளிந்த நல் யோகம் தன்னில் சேரலாகும் சாரூபம்
தெளிந்த ஞானம் நான்கிலும் சேரலாம் சாயுச்யமே"

- சிவவாக்கியர் -

"சேருவார்கள் ஞானம்என்று செப்புவர் தெளிவுளோர்
சேருவார்கள் நாலுபாதச் செம்மைஎன்ற தில்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்
சேருமாறு கண்டுநாலும் செய்தொழில் திடப்படே"

- சிவவாக்கியர் -

சரியை

நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய் வழிபடுவதுடன், கோவில்களுக்கு சென்று இறைவனைப் பணிந்து அங்கே மலர் கொய்து மாலை தொடுத்தல் போன்ற ஆலயத் தொண்டுகளை செய்வதன் மூலம் கிடைக்கப் பெறுவதாகும்.இதுவே சரியை வழி எனப்படுகிறது. இத்தகைய நெறி தவறாத வாழ்வின் மூலம் கிடைக்கப் பெறும் முக்தி நிலை சாலோக முக்தி எனப்படும்.

கிரியை

சிவச்சின்னங்களை அணிந்து சிவனடியாராக இறைச் சேவை செய்வது ஒன்றையே வாழ்வின் நோக்கமாய் கொண்டு வாழ்வதே கிரியை வழியாகும்.இந்த வகையில் கிடைக்கும் முக்தி நிலை சாமீப முக்தி எனப் படும்.

யோகம்

தகுதியான குருவை பணிந்து யோக முறைகளை கற்று, தொடர் பயிற்சியின் மூலம் உடல்,மனம் ஆகியவற்றை தூய்மையாக்கி இறைவனை வழிபாடு செய்து முக்தி பெறுவதே யோக வழியாகும். இத்தகைய முக்தி நிலை சாரூப முக்தி எனப் படும்.

ஞானம்

நான் என்கிற அகந்தையை அழித்து தானே பிரம்மமாய் உணர்வது ஞான வழியாகும். இந்த வகையில் பெறும் முக்தி நிலை சாயுச்ய முக்தி எனப்படும்

1 comment:

  1. நான் யார்? நான் எதற்காக பிறந்தேன்? நான் என்ன செய்ய வேண்டும்? என்னை இங்கு அனுப்பியது யார்? என்னை ஆட்டிப்படைக்கும் சக்தி எது? அது எங்கிருந்து என்னை இயக்குகிறது? 

    என்னுடைய இறப்பு யாரால் தீர்மானிக்கப்படுகிறது? எனக்கு அடுத்த பிறவி உண்டா அல்லது இல்லையா? முக்திக்கு என்ன வழி? என உங்களைப் பற்றிய உங்களது கேள்விகளுக்கு எல்லாம்
    விடை கிடைக்க இருக்கிறது.


    வாருங்கள்... இந்த நாள் உங்களுக்கானது. இது உங்களுக்கான அழைப்பு மட்டும் அல்ல... உங்களது பிரச்சனைக்களுக்கான விடுப்பு.


    தன்னுள்ளே தன்னை கண்டு உணரும் மெஞ்ஞான பயிற்சி மாநாடு.


    நாள் ‍‍- 13‍‍-04-2014
    நேரம் - காலை சரியாக 9.50 மணி முதல் மாலை 5.00 மணி வரை
    இடம் - பாலமந்திர் ஜெர்மன் ஹால், எண்.17, பிரகாசம் சாலை, தியாகராய நகர், சென்னை-17.
    முன்பதிவு செய்ய : சென்னை : 7373735260 பிறமாவட்டம் : 7373735270


    https://www.facebook.com/Siddhargalaalayam.org

    ReplyDelete