Saturday, February 8, 2014



இராமாயணம் காட்டும் ஒன்பது வகையான பக்தி








I. பிரகலாதன் இராமாயணத்தை உதாரணமாகக் கொண்டு தன் தந்தையிடம் சொல்லும் ஒன்பது வகையான பக்தி.

1. சிராவணம் - அனுமனைப் போல பகவானுடைய கதையைக் கேட்பது....
2. கீர்த்தனம் - வால்மீகியைப் போல பகவானுடைய பெருமையைப் பேசுவது.
3. ஸ்ம்ரணம் - சீதையைப் போல அவனையே நினைத்திருப்பது.
4. பாதசேவனம் - பரதனைப் போல அவன் காலில் விழுந்து வணங்குவது.
5. வந்தனம் - வீபீஷணனைப் போல அவரை வணங்குவது.
6. அர்ச்சனம் - சபரியைப் போல அவருக்கு மலர்களும், கனிகளும் கொடுப்பது.
7. தாஸ்யம் - லட்சுமணனைப் போல அவருக்குப் பணிவிடைகள் செய்வது.
8. ஸக்யம் - சுக்ரீவனைப் போல அவருடன் நட்பு கொள்வது.
9. ஆத்ம நிவேதனம் - ஜடாயுவைப் போல, அவருக்காகத் தன்னுயிரையே கொடுப்பது.

II. அத்யாதம இராமாயணத்தில் ராமர் சபரிக்கு எடுத்துச் சொல்வதாக உள்ள ஒன்பது வகையான பக்தி.

1. சத்சங்கம்.
2. என் கதைகளைக் கீர்த்தனம் செய்தல்.
3. என் குணங்களைப் பற்றிப் பேசுதல்.
4. கீதை, உபநிடதங்களில் சொல்லியவற்றைப் பற்றிச் சிந்தித்தல்.
5. குருவைப் பகவானாக நினைத்து வணங்குதல்.
6. நல்லொழுக்கம், புலனொழுக்கம், பகவானைப் பூஜை செய்தல்.
7. என் நாமங்களைச் சொல்லுதல்.
8. என் பக்தர்களை என்னை விட அதிகமாக மதித்தல், எல்லா உயிரினங்களையும் நானாகப் பார்த்தல்.
9. தத்துவ விசாரம் செய்தல்.

III. துளசிதாசர் அவருடைய இராமாயணத்தில் ராமர் சபரிக்குச் சொல்வதாக இருக்கும் ஒன்பது வகையான பக்தி.

1. சத்சங்கம்.
2. என் கதைகளைக் கேட்க ஆசை.
3. குருசேவை.
4. என் குணங்களைக் கீர்த்தனம் செய்தல்.
5. என் நாமத்தைச் சொல்லுதல்.
6. புலனடக்கம்.
7. எல்லா உயிரினங்களையும் நானாகப் பார்த்தல்.
8. கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைதல், கனவில் கூடப் பிறர் குற்றங்களைக் காணாதிருத்தல்.
9. சுகம், துக்கம் இரண்டையும் சமமாகப் பாவித்தல்.

இத்தனையையும் சொல்லிவிட்டு இராமர், “இந்த ஒன்பது பக்திகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றினாலும் போதும், அவன் எனக்கு விருப்பமானவனே” என்று சொல்கிறார்.

No comments:

Post a Comment