தசரதருக்கு புத்திரகாமேஷ்டி யாகத்தின் பயனாக விஷ்ணுவே மகனாகப் பிறந்தார்.
குலகுரு வசிஷ்டர் குழந்தைக்கு "ராமன்' எனப் பெயரிட்டார். ராமன் என்றால் "எப்போதும்
மகிழ்ச்சியுடன் இருப்பவன்' என்று பொருள். "நாளை உனக்குப் பட்டாபிஷேகம்' என்று
தசரதர் சொன்ன போதும் ராமனின் முகம், மலர்ந்த தாமரை போல் தான் இருந்தது, "பதினான்கு
ஆண்டுகள் காட்டுச் செல்ல வேண்டும். இது தந்தையின் ஆணை' என்று கைகேயி சொன்ன போதும்,
தாமரை மலர் போன்றே இருந்தது. அவரது முகம் என்றைக்குமே தாமரை போல மலர்ந்திருக்கும்
என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
No comments:
Post a Comment