கருணை,செல்வம்,வெற்றி,
யாரோ தனது வீட்டு வாசலுக்கு வந்திருப்பதை பார்த்த அந்த பெண், வெளியே வந்து பார்த்தாள். நீண்ட வெள்ளை தாடியுடன் மூன்று பேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் யாரென்று தெரியவில்லை. பார்த்தால் மிகப் பெரிய யோகிகளை போல் காணப்பட்டனர்.
விருந்தோம்பலில் சிறந்து விளங்கும் குடும்பம் அது என்பதால், ‘நீங்கள் மூவரும் பசியோடிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். உள்ளே வாருங்கள். சாப்பிட்டுவிட்டு சற்று இளைப்பாறிவிட்டு செல்லலாம்’ என்றாள் அந்தப் பெண். யோகிகளில் ஒருவர், ‘எங்களில் யாராவது ஒருவர் தான் வருவோம்.
என் பெயர் செல்வம், அவர் பெயர் கருணை. அதோ அவர் பெயர் வெற்றி. உங்கள் கணவரிடம் பேசி எங்களில் யாரை அழைப்பது என்று முடிவு செய்துவிட்டு வாருங்கள்’ என்றார். இதை தன் கணவரிடம் அந்தப் பெண் சொன்னதும் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். ‘அப்படி என்றால் நாம் செல்வத்தை அழைப்போம்.
ஏனெனில் நமக்கு இப்போதைக்கு அது தான் தேவை’ என்றான் கணவன். மனைவியோ, ‘இல்லைங்க!. வெற்றியை அழைப்போம். தொட்டதெல்லாம் துலங்கினால் செல்வம் தானே வந்துவிடும்’ என்றாள். இதை கேட்டுக்கொண்டிருந்த அவர்களின் சுட்டிப் பெண் குழந்தை, “இல்லை! இல்லை! நாம் கருணையை அழைப்போம்.
நம் இல்லமெங்கும் கருணை நிரம்பி வழியும். அது பார்க்க சந்தோஷமாக இருக்கும்’ என்றாள் தங்கள் குழந்தையின் வேண்டுகோளை நிறைவேற்ற அந்த பெற்றோர் விரும்பினர். வெளியே மரத்தடிக்கு சென்று, ‘உங்களில் கருணையை மட்டும் அழைக்கிறோம்’ என்றாள் அந்த பெண்.
‘நன்றி அம்மா!’ என்று கூறி கருணை எழுந்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தது. கருணையின் பின்னே செல்வமும், வெற்றியும் சேர்ந்து நடந்து வந்தார்கள். அந்த பெண், ‘நான் கருணையை மட்டும் தானே அழைத்தேன். நீங்களும் ஏன் வருகிறீர்கள்?’ என்று வினவினாள்.
அப்போது மூவரும், ‘நீங்கள் வெற்றியையோ, செல்வத்தையோ அழைத்திருந்தால் மற்ற இருவரும் வந்திருக்க மாட்டோம். ஆனால் கருணையை அழைத்துவிட்டீர்கள். கருணை இருக்குமிடத்தில் இது இரண்டும் இருந்தே ஆகவேண்டும் என்பது இறைவனின் ஆணை!’ என்றனர்

No comments:
Post a Comment