Monday, October 13, 2014

வழிபாடு.

வழிபாடு.
ஒரு சமயம் ஞானி ஒருவர் தன்னை மறந்து வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். நல்ல இரவு நேரம் அது. அப்போது தவளை ஒன்று கொர கொர என்று கத்தத் தொடங்கியது. தவளையின் வரட்டு சத்தம் அவருக்கு நாராசமாக இருந்தது.
இது என்ன தலை வேதனை? நிம்மதியாக பிராத்தனை செய்ய முடியவில்லையே? என்று நினைத்தபடி, சன்னல் பக்கம் பார்த்த அவர் "நான் பிராத்தனை செய்கிறேன். யாரும் கத்தாதீர்கள்" என்றார். ஆத்மஞானியின் குரலுக்கு அனைத்து உயிர்களும் கட்டுப்பட்டன. எங்கிருந்து எந்த ஓசையும் எழவில்லை. இலைகள் கூட அசையவில்லை. எங்கும் பேரமைதி நிலவியது.
ஆனால் ஏனோ தெரியவில்லை, அவரால் பிராத்தனையில் ஒன்றவே முடியவில்லை. எதோ ஒரு அமைதியின்மையை அவர் மனம் உணர்ந்தது. எங்கோ ஒரு குறை இருப்பது போல் அவர் மனதுக்குப்பட்டது.
என்ன இது? ஏன் என் மனத்தால் பிராத்தனையில் ஒன்றவே முடியவில்லை. எங்கே தவறு ஏற்பட்டது?
என்று மனம் உருக அவர் வேண்டியபோது அவர் மனத்துள் ஒரு குரல் கேட்டது. "உன் பிராத்தனையைக் கேட்பது போலவே இறைவன் தவளையின் சத்தத்தையும் கேட்க விரும்புகிறார் போலும்" என்று.
ஞானி சன்னல் பக்கம் பார்த்து "பாடு..!" என்றார் மானசீகமாக தவளையை நோக்கி. மறுகணம் கரகரவென்று அந்தத் தவளை காத்த அதை அடுத்து எல்லாத் தவளைகளும் அதனுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தன. எந்த ஓசை முன்பு அவருக்கு கர்ண கடூரமாக ஒலித்ததோ அது இப்போது அமைதியான அந்த இரவுக்கு பொலிவு சேர்ப்பதை உணர்ந்தார் அவர்.
இயற்கையோடு ஒன்றுவதே வழிபாடு. அனைத்து உயிர்களும் இறைவன் படைப்புக்களே. நமது குரல் நமக்கு இனிமை என்றால் தவளையின் குரல் அதற்கு சங்கீதம்

No comments:

Post a Comment