Wednesday, October 8, 2014

கிரகணத்தின் போது என்னென்ன செய்ய கூடாது?



கிரகணத்தின் போது என்னென்ன செய்ய கூடாது?

 கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ள கூடாது. கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

கிரகண நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும்?

செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

.

கிரகண காலத்தில் பட்டம் கட்டிக் கொள்ள வேண்டும். பட்டம் கட்டிக் கொள்வதென்றால், பனைஓலையில், மஞ்சள் நூலை கட்டி, கிரகணத்துக்கான ஸ்துதியை எழுதி கட்டிக் கொள்ள  வேண்டும். பின்னர் கிரகணம் முடிந்ததும், ஸ்நானம் செய்ததும் பட்டத்தை நீர்நிலைகளில் விட்டு விட வேண்டும்.

கிரகணம் முடிந்ததும் செய்ய வேண்டியவைகள் என்ன?

கிரகண விமோசன காலத்தில் அதாவது கிரகணம் முழுதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். (கிரகண நேரத்தில் 3 முறை ஸ்நானம் செய்வது நல்லது). ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். இன்று சிராத்தம் செய்ய இருப்பவர்கள், நாளை காலை சூரிய உதயத்திற்கு பிறகு செய்து கொள்ளலாம். கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள வேண்டும். .

கவனிக்க வேண்டியவைகள்

சந்திர கிரகணம், ரேவதி நட்சத்திரத்தில் நடப்பதால் ரேவதி, உத்திரட்டாதி, ஆயில்யம், கேட்டை, அஸ்வினி, பூசம் மற்றும் அனுஷ நட்சத்திரக்காரர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்வது நல்லது. (சாந்தி பரிகாரம்- கேதுவுக்கு ஏற்ற 'கொள்' தானியத்தை ஸ்நானம் செய்து விட்டு ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்ய வேண்டும்).

சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளை கொடுக்கும்.

No comments:

Post a Comment