Monday, January 12, 2015

கடை வீடுகளில் திருஷ்டி கழிக்க செய்ய வேண்டியவை


கடை வீடுகளில் திருஷ்டி கழிக்க செய்ய வேண்டியவை

வீடுகளில் திருஷ்டி கழிக்க செய்ய வேண்டிய சில வழிமுறைகள்:-
வீட்டின் தலைவாசல் படியின் இருபுறங்களிலும் 2 மண் அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இதை சந்தி வேளையில் கடைப்பிடிக்க வேண்டும்.
அடுத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதை குங்குமத்தில் தடவி வாசல் படியின் இரண்டு பக்கங்களிலும் வைக்க வேண்டும். மாதந்தோறும் வீட்டை சுற்றி திருஷ்டி கழிக்க வேண்டும். வீட்டின் முகப்பில் காய்ந்த மிளகாய் 5 அல்லது 7, எலுமிச்சம் பழம், படிகாரம், உத்திர சங்கு இவற்றை ஒரு கம்பளி கயிற்றால் வரிசையாக கட்டி தொங்கவிட வேண்டும்.
இது ஓர் அற்புதமான திருஷ்டி பாதுகாப்பு மற்றும் நிவர்த்தி பரிகார அமைப்பாகும். மாதந்தோறும் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறையாவது கணபதி ஹோமம், சுப்ரமணியர் ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் செய்து கொள்ள வேண்டும்.
இது வீட்டிற்கு சுபமங்கள சக்திகளை அளிப்பதோடு தீவினை எதிர் மறைசக்திகளை பஸ்மம் செய்கிறது. வீடு, கடைகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்றவற்றின் வாசல் படிகளில் திருஷ்டி பரிகார பொருள்களான எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாய், உத்திரங்கு, படிகார கல், கரித்துண்டுகள் இவற்றை முறையே ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் வரிசையாக கட்டி தொங்கவிட வேண்டும். இது மிக சிறந்த திருஷ்டி தடுப்பாக செயல்படும்

No comments:

Post a Comment