வீரபத்திரர் :-
அனல் போன்ற கோபம் கொண்டவர் ஸ்ரீ வீரபத்ரர், எனவே அவரை அங்காரனின் (செவ்வாய்) அம்சமாக கொண்டு அவரது வழிபாட்டுக்கு உகந்ததினமாக செவ்வாய் கிழமையை சொல்கிறார்கள்.
வீரபத்திரரை வழிபடுவதால் பேய்பிடித்தல், பில்லி, சூனியம் எனும் மனநோய்கள் போன்ற கண்காணாத் தொல்லைகள், மற்றும் மனதில் தோன்றும் இனம் புரியாத அச்சம் போன்றவையும் விலகுகிறது. நமக்கு தன்னம்பிக்கையும், தைரியமும், உண்டாகிடும், வாழ்வு சிறக்க வழிவகுக்கும். பவுர்ணமி, செவ்வாய் கிழமை, ஞாயிற்று கிழமை, குறிப்பாக கார்த்திகை மாத ஞாயிற்று கிழமை, சித்ரா பவு-ர்ணமியும் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை.
தேய்பிறை அஷ்டமி தினங்களும் பைரவவழிபாடு போன்று வீரபத்திரர் வழிபாடும் சில ஆலயங்களில் காணப்படுகிறது. பவுர்ணமி வழிபாட்டில் பால், தயிர், போன்ற வெண்மைநிற அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து வெள்ளை நிற வஸ்திரம் (சில இடங்களில் கரையில்லா வெள்ளைவேட்டி சாற்றுவர்) வெள்ளைநிற மலர் மாலைகள் அணிவித்து, வெண்நிறம் கொண்டதயிர்சாதம், பாலன்னம் பால்பாயஸம், வெண்கற்கண்டு, பொங்கல் போன்ற நிவேதனங்கள் செய்து வெள்ளை மலர்களால் அர்ச்சிப்பது சிறப்பு என்பர்.
அஞ்சாமல் அதிரடி போர் புரிய வெற்றிசின்னமாக போர்வீரர்கள் தும்பைபூ மாலை அணிவது பழந்தமிழர் வழக்கம். வீரபத்திரபெருமானும் தும்பைபூ மாலை அணிந்து தட்சனின் யாகத்தை அழிக்க சென்றார் என்று தாராசுரம், ஐராவதேவதேஸ்வர் ஆலயதிலுள்ள வீரபத்ரப் பரணி அல்லது தக்கயாகப் பரணி எனும் இலக்கியம் எழுதிய ஒட்டகூத்தர் உரைக்கிறார்.
எனவே வீரபத்ரருக்கு தும்பைபூ மாலை விசேஷம், தும்பைபூ அர்ச்சனையும் விசேஷம். வெள்ளைநிற வஸ்திரம் வைராக்கியத்தின் அடையாளம். போருக்கு வெண்நிற ஆடை அனிந்து சென்றார் என்பதாலும் வீரபத்திரருக்கு வெண்மைநிற வஸ்திரம் விசேஷம். அதிலும் வண்ணநிற கறைகள் இல்லாதது அதிவிசேஷம்.
வடைமாலை, சந்தனகாப்பு, வெண்ணெய்காப்பு, வெற்றிலைமாலை சாற்றுதல், வெற்றிலை படல் சாற்றுதல் முதலியனவும் உன்னதமானவை. போருக்கு செல்லும் வீரர்க்கு அவரது உறவினர்கள் மங்கலப்பொருளான வெற்றிலைப்பாக்கு கொடுத்து வாழ்த்தி வழி அனுப்புவது நமது பண்டைய வழக்கமாகும்.
வீரபத்திரர் வெற்றிக்குரியகடவுளாகப் போற்றபடுவதாலும், பெயரிலேயே வெற்றியைகொண்டிருப்பதாலும் வீரபத்திரருக்கு வெற்றிலைமாலை சாற்றப்படுகிறது. சுவாமியை சுற்றி அதற்கென உள்ள மர பிரபையில் வெற்றிலைகளை அழகுபட அலங்கரித்து கட்டுவது வெற்றிலைபடல் எனப்படும். இதுவிரிவான வழிபாடாகும்.
அதாவது 12,800 வெற்றிலைகளை சாற்றுவது உத்தமம் என்றும் அதில்பாதியாக 6,400 சாற்றுவது மத்யமம் எனவும் இதைப்பற்றி அறிந்தபெரியோர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment