Monday, January 26, 2015

சிவபூஜை செய்ய நினைப்பவர்களுக்கு

சிவபூஜை செய்ய நினைப்பவர்களுக்கு
=================================
கடைகளீல் சிவலிங்கம் வாங்கி பூஜிப்பது இதன் ஆரம்ப கட்டம். முறையாக தீக்ஷை பெற்று இந்த பூஜையின் பொருளறிந்து செய்வது நற்பலனை மிகுதியாக தர வல்லது.
ஆதீனங்களில் முறையாக தீக்ஷை பெற்ற சிவ்வாச்சாரியார்களிடம் தீக்ஷை பெற்று சிவ பூஜை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
சிவ பூஜை இரண்டு வகை.
ஆன்மார்த்தம் பரார்த்தம்
பரார்த்தம் கோவில்களில் செய்ய படுவது.ஆகமங்கள் இதற்கான விதிகளை சொல்லும்.ஆன்மார்த்த பூஜை இல்லத்தில் சிவ தீக்ஷை எடுத்த சிவனடியார்களால் அவரவர் குரு நாதரின் உபதேசப்படி செய்ய படுவது. இதற்கு இரண்டு விதமான முறைகள். ஒன்று க்ஷணிக லிங்கம் வைத்து செய்வது. மஞ்சள், விபூதி, இலைகள் இவட்ரால் / இவற்றை லிங்கமாக கற்பிதம் செய்து அன்றே பூஜை முடிந்ததும் விசர்ஜனம் செய்வது.இன்னொன்று பாண லிங்கம் பூஜை. இதற்கு நியமங்கள் வேறு.அபிஷேகம் உண்டு.ஐந்து ஆவரணங்கள் உண்டு.
இவ்விரண்டுக்குமே பொதுவானது முதல் ஆவரணம். அதன் விளக்க படம் இணைக்கப்பட்டுள்ளது.
இதில் சூரியனுக்கும் முக்கியத்துவம் அளிக்க படும். சிவ சூரியன் என்று பெயர்.அதற்கும் தனியாக ஒரு எட்டிதழ் சக்கிரம் உண்டு.
உங்கள் பார்வைக்கு இடப்புறம் மேற்கு.அங்கே ஆறு மூர்த்திகள். இவர்களை மேலை துவார குரு நாதர்கள் என்பர். வடக்கில் 9 குருனாதர்கள்.அவர்களில் மஹா விஷ்ணுவும் ஒருவர்.இவர்கள் அனுகிரஹித்தாலே சிவ பூஜை செய்ய இயலும்.

No comments:

Post a Comment