முட்டை சைவ உணவா , அசைவ உணவா?
முட்டை அசைவமே.
முட்டையினை பெறுதல் கோழிக்கும் நாம் செய்யும் ஜீவ இம்சை என்று முதலில் நாம் அறிய வேண்டும் . ஒரு தாய் தன் சேயினை காப்பது போல தான் முட்டையினை கோழி அடைகாக்கிறது.
முற்று பெற்ற மனித தாயின் கருவினை கலைப்பது போல தான் முட்டையினை உட்கொளுதல் என்று அறிய வேண்டும்..மேலும் முட்டை கோழியின் உடலில் இருந்து வெளி வந்தவுடனே அதற்குள் உயிர் புகுந்துள்ளது என்று அறிய வேண்டும். அதனால் முட்டையினை உண்பதும் உயிர் கொலையே.
மணமுறை கண்ட வாசகத்தில் வள்ளல் பெருமான் செய்ய கூடாத கொடிய பாவங்களாக கூறும் ஒன்று :
“பட்சியை கூண்டில் அடைத்து வைத்தல்”.
இன்று முட்டை இடுவதற்காக சிறு கூண்டில் கோழியை அடைத்து வைத்து துன்புறுத்துகிறார்கள் . இதன் மூலம் பெரும் முட்டையை உட்கொள்ளுதல் பாவமே.
கோழியை அடைத்து வைத்து செய்யும் இம்சைகளும் முட்டையின் மூலம் உண்பவர்களுகே சென்று சேர்க்கிறது என்றும் அறிக.
முட்டையினை சாப்பிடுவதும் கோழியை உண்பதற்கு சமம். தான். அதனால் முட்டை அசைவமே.
முட்டை உண்பதும் ஜீவ காருண்யத்திற்கு விரோதமானது தான்
No comments:
Post a Comment