தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்!
தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்!
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1500; தேதி 20 டிசம்பர், 2014.
இந்தியாவின் இரண்டு பழைய மொழிகள் தமிழும் சம்ஸ்கிருதமும் ஆகும். இந்த இரண்டு மொழிகளும் சிவனிடமிருந்து தோன்றியவை என்றும் ஒன்றுக்கு பாணிணியையும் மற்றொன்றுக்குக்கு அகத்தியனையும் இலக்கணம் எழுத சிவ பெருமானே பணித்தான் என்றும் ஆன்றோர் கூறுவர். இதை எல்லாம் பிற்காலக் கதைகள் என்று சொல்லுவோரும் கூட வியந்து போற்றக்கூடிய சில மொழியியல் அம்சங்கள் இரு மொழிக்கும் பொதுவாக அமைந்துள்ளன.
எனது நாற்பது ஆண்டுக்கால மொழி ஆய்வில் கண்ட சில உண்மைகளைப் பகிர்ந்து கொள்கிறேன். சுமேரியாவில் ‘’ஊர்’’ என்ற ஒரு இடம் உள்ளது. இது தமிழில் வரும் ‘’ஊர்’’ என்பதைப் போலவே இருப்பதாக எண்ணி தமிழர்கள் மகிழ்வர். இது புரம், புரி என்பதன் திரிபு என்றும் வட இந்தியா முழுதும் ஜெய்ப்பூர், உதய்பூர், நாக்பூர் என்று பல ‘’ஊர்’’கள் காஷ்மீர் வரை பரவிக் கிடப்பதால் இது சம்ஸ்கிருதமே என்றும் சொல்லி வேறு சிலர் மகிழ்வர். உண்மையில் ஒரு மொழி எப்படி இரு வகையாகப் பிரியும் என்பதற்கு இது சரியான எடுத்துக் காட்டு. அதாவது இச் சொல்லுக்கான மூலம் ஒன்றே. அது தமிழில் ஊர் என்றும் சம்ஸ்கிருதத்தில் புரம் என்றும் கவடு விட்டுப் பிரிந்தது.
இன்னொரு எடுத்துக் காட்டு மூலம் இதை விளக்குகிறேன். ஆங்கிலத்தில் எண் 1 என்பதற்கு ‘’ஒன்’’ என்பர். இது தமிழ் ‘’ஒன்று’’க்கு நெருக்கமானது. ஆனால் சம்ஸ்கிருதத்திலோ ‘’ஏகம்’’ என்பர். ஆங்கிலத்தில் எண் 8 என்பதற்கு ‘’எயிட்’’ என்பர். இது தமிழ் ‘’எட்டு’’ என்பதற்கு நெருக்கமானது. சிறிது ஆழமாகப் போய்ப் பார்த்தால் ‘ஒன்’ என்பது ‘யுன்’, ‘ஐன்’ என்று மாறி ‘ஒன்’ என்றாயிற்று என்பர். இதே போல ‘எட்டு’ என்பது ‘ஆக்டோ’, ‘அஷ்ட’ என்பதாக மாறி ‘’எயிட்/அயி’’ட் ஆயிற்று என்பர். ஆக ஒரு மூலச் சொல் இப்படி இருவகையாகப் பிரியமுடியும் என்று தெரிகிறது.
சில சொற்கள் தமிழில் இருந்து வந்ததோ என்றும் சில சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்ததோ என்றும் எண்ண வைக்கும். தமிழில் இருந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் எப்படி உருவாயிற்று என்று பார்த்தால் கூட, வரலாறு, புவியியல், பிறமொழிப் படையெடுப்பாளர் ஆகியவற்றால் எல்லாம் எப்படி மொழிகள் உருவாகின்றன என்பது விளங்கும்
ரிக் வேதத்தில் தமிழ் சொற்கள்
மீன், நீர், மயில் (மயூர) போன்ற தமிழ் சொற்கள் ரிக் வேதத்தில் இருப்பதாகவும், தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் காலம், உலகம், மனம், காமம் முதலிய சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதாகவும் அறிஞர்கள் சொல்லுவர். இதை எதிர்ப்போர் இவை எங்கள் மொழியில் இருந்து அங்கே சென்றவை என்று வாதிடுவர். உண்மையில் சில சொற்கள் காலத்தையும் மீறி உரு மாறாமல் இருந்ததால் இவைகளை இப்போது எந்த மொழியில் புழங்குகிறதோ அந்த மொழிச் சொல் என்று நாம் வாதாடுகிறோம். ஆனால் இவை இரு மொழிக்கும் பொதுவான சொற்கள் என்பதை அறிந்தால் இரு மொழிக்கு இடையில் உள்ள பிரிவினைக் கோடு மறைந்து போகும்.
பெரிய ஆதாரம்
இவைகளை எல்லாம் விட பெரிய ஆதாரம் இரு மொழி இலக்கியங்களில் உள்ளன. தமிழுக்கு மிக நெருக்கமான மொழி சம்ஸ்கிருதம்! இதே போல சம்ஸ்கிருதத்துக்கு நெருக்கமான மொழி தமிழ். இரு மொழிகளிலும் உள்ள பழைய கவிதை நூல்களை எடுத்துக் கொண்டு கடைசி பக்கத்தில் உள்ள பாடல் முதற்குறிப்பு அகராதிக்குப் போங்கள். ஒவ்வொரு மொழியிலும் உயிர் எழுத்தில் எத்தனை பாடல்கள் துவங்குகின்றன என்று பாருங்கள். அற்புதமான ஒற்றுமை இருப்பதைக் காண்பீர்கள்.
‘’ஔ’’ என்ற எழுத்தில் இரு மொழிகளிலும் பாடலே துவங்காது. அல்லது அபூர்வமாக இருக்கும். யாரும் பழைய காலப் புலவர்களிடம் போய் நீ இந்த எழுத்தில் துவங்கும் பாடல்கள் இவ்வளவுதான் பாட வேண்டும் என்று சொன்னதும் இல்லை. அப்படி இலக்கண விதிகள் எதுவும் இல்லவும் இல்லை. ஆயினும் இரு மொழிகளும் ஒரே பாணியைப் பின்பற்றுவதைக் காணலாம்.
இரு மொழிகளிலும் உயிர் எழுத்துக்களில் துவங்கும் பாடல்கள் ‘மூன்றில் ஒரு பகுதி’ அல்லது ‘நான்கில் ஒரு பகுதி’ இருக்கும். இவ்விரு மொழிகளை மட்டுமே எளிதில் ஒப்பிடும் மாதிரியில் இரு மொழி அரிச்சுவடியும் கிட்டத்தட்ட ஒன்றாகவும் இருக்கிறது. இரு மொழி மக்களின் சிந்தனை, செயல்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியனவும் ஒரே மாதிரி உள்ளன. வெகு சில விஷயங்களே மாறுபடும். அத்தகைய மாற்றங்களை உலகில் எல்லா இடங்களிலும் காண முடிகிறது.
கீதையும் குறளும்
பகவத் கீதையில் அ-97, ஆ-17, இ-21, ஈ-1, உ-9, ஊ-2, க்ரு-1, ஏ-21, ஓ-2 வில் துவங்கும் ஸ்லோகங்கள் =171
மொத்தம் ஸ்லோகங்கள் 700
ஆக நாலில் ஒரு பகுதி உயிர் எழுத்தில் துவங்குபவை
திருக்குறளில் அ-157, ஆ-23, இ-114, ஈ-8, உ-81, ஊ-21, எ-45, ஏ-9, ஐ-4, ஒ-40, ஓ-6 ஔ-0 -வில் துவங்கும் பாடல்கள் = 508
மொத்தம் உள்ள குறள்கள் 1330
ஆக மூன்றில் ஒரு பகுதி அல்லது நான்கில் ஒரு பகுதி இருப்பதோடு ஔ – வில் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல.
குறில் ஒலிகளில் ( அ, இ, உ, ஒ) அதிகப் பாடல்களும் நெடில் ஒலி எழுத்துக்களில் குறைவான (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ) பாடல்களும் இருப்பதையும் காணலாம். இவை எல்லாம் இரு மொழியிலும் இயற்கையாகவே அமைந்துள்ள விஷயங்கள் —- யாரும் போய் கட்டளை இட்டுச் செய்தது அல்ல. மேலும் கவிதை என்பது உள்ளத்தில் எழுந்து பீறிட்டு எழும் உணர்வுகள். அதற்கு யாரும் தடைகளோ விதிகளோ போட முடியாது. ஆக கவிதைகள் கூட இரு மொழிகளும் ஒரே மூலத்தில் பிறந்து ஏறத் தாழ ஒரே விதிகளைப் பின்பற்றுவதைக் காட்டுகின்றன.
மொழிகளுக்குள் சொற்களை இணைப்பதற்கான சந்தி விதிகள் இருக்கின்றன. இவை உலகில் தற்போதைய மொழிகளில் காணப்படாத புதுமை. ஆனால் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் மட்டும் உண்டு.
டூத் + பவுடர் என்ற இரு சொற்களை ஆங்கிலத்தில் அப்படியே இணைத்து டூத் பவுடர் என்று எழுதலாம். ஆனால் தமிழில் பல்+ பொடி= பற்பொடி என்று மாறுவதைக் காணலாம். இது போல சந்தி விதிகளை இன்றும் பயன்படுத்துவது தமிழும் சம்ஸ்கிருதமும் மட்டுமே.
கட்டுரையின் இரண்டாவது பகுதியில் மேலும் பல விஷயங்களைத் தருகிறேன்.
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1408; தேதி 13 நவம்பர், 2014.
இந்தியர்களாகப் பிறந்தவர்கள் உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலிகள். தமிழ், சம்ஸ்கிருதம் என்னும் இரண்டு அரிய, பெரிய, பழைய மொழிகள் அவர்கள் நாட்டுக்குளேயே புழங்கி வருகின்றன வீட்டுக்குளேயே பவழங்கி வருகின்றன -. உலகிலுள்ள எல்லா மொழிகளையும் இந்த இரண்டு மொழிகளுக்குள் அடக்கிவிடலாம். இதைவிடப் பெரிய சிறப்பு இவ்விரு மொழிகளும் கடவுளால் படைக்கப்பட்டன. இவ்விரு மொழிகளையும் சிவ பெருமான் கொடுத்ததாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புலவர்கள் பாடி வருகின்றனர்.
பாரதியின் தமிழ்ப் பற்றை சந்தேகிப்பார் எவரேனும் உளரோ? அவரே ஆதி சிவன் இந்த தெய்வீகத் தமிழ் மொழியை உருவாக்கியதையும் அதற்கு அகத்தியன் என்று ஒரு பிராமணன் இலக்கணம் செய்து கொடுத்ததையும் சம்ஸ்கிருத (ஆரியம்) மொழிக்குச் சமமாக தமிழ் மொழி, வாழ்ந்ததையும் பாடுகிறார்:-
தமிழ்த் தாய் – என்னும் பாடலில் பாரதியார் பாடுகிறார்:
ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்துகொடுத்தான்
ஆன்ற மொழிகளுக்குள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் — (பாரதியார் பாடல்)
சிவபெருமான் தனது உடுக்கையை வாசிக்கும்போது அதன் ஒரு புறத்திலிருந்து தமிழும் மறு புறத்திலிருந்து சம்ஸ்கிருதமும் வந்ததாக ஆன்றோர்கள் கூறுவர். பாணினி என்னும் உலக மகா அறிஞன், உலகின் முதலாவது இலக்கண வித்தகன் சிவபெருமானுடைய ‘’டமருகம்’’ என்னும் உடுக்கை ஒலியில் இருந்து எழுந்த 14 ஒலிகளைக் கேட்டு சம்ஸ்கிருத இலக்கணம் செய்தார். இதை மஹேஸ்வர சூத்ரம் என்று கூறுவர்.
இதே போல அகத்தியர் என்பார் தமிழுக்கு இலக்கணம் செய்தார். ஆக இவ்விரு மொழிகளும் பாணினி, அகத்தியர் என்போருக்கு முன்னதாகவே வழங்கின. ஆனால் காலத்துக்கு காலம் இலக்கணம் மாறுபடும் என்பதால் அவ்வப்போது வரும் பெரியோர் இத்தகைய பணியை ஏற்பர். தமிழில் தொல்காப்பியருக்கு முன்னரும் இலக்கண வித்தகர்கள் இருந்தனர். பின்னரும் பலர் வந்து நூல்களை யாத்தனர். இது போலவே பாணினிக்கு முன்னரும் இலக்கண அறிஞர்கள் இருந்தனர்.
வட கோடு (இமய மலை) உயர்ந்து, தென் நாடு தாழவே, பூபாரத்தை சமனப் படுத்த அகத்தியனை தென் திசைக்குச் செல்லுமாறு சிவ பெருமான் கட்டளையிட்டதை முன்னரே உலகின் முதல் மக்கட்தொகைப் பெருக்கப் பிரச்சனை என்ற கட்டுரை வாயிலாகத் தந்துள்ளேன்.
காளிதாசன் வழங்கும் முதல் சான்று
காளிதாசன் என்னும் கவிஞன் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் கவிஞன். இவனைப் போல நாடகம், காவியம், கவிதைகள் எனும் முத்துறையிலும் சிறப்புற விளங்கியவர் உலகில் மிக மிகக் குறைவு. அவனது ரகு வம்ச காவியத்தில் (6-61, 6-62) ராவணன் – பாண்டியன் – அகத்தியன் ஆகிய மூவரையும் இணைத்துப் பாடியதில் இருந்து நமக்கு அரிய செய்திகள் கிடைக்கின்றன. அவன் அகத்தியன் பற்றியும் பாண்டியன் பற்றியும் பாடியது வட இந்தியாவரை அகத்தியன் – தமிழ் உறவு தெரிந்திருந்ததைக் காட்டுகிறது. ராவணன் — பாண்டியர் சமாதான உடன்படிக்கை பற்றி நான் முன்னரே எழுதிவிட்டேன்.
புறநானூறு முதலிய சங்க கால நூல்களில் பொதிய மலையையும் இமய மலையையும் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடுவர். பொதியில் குன்று என்பது அகத்தியர் ஆசிரமம் இருந்த இடம். ஆதாலால் இப்படிச் சிறப்பு எய்தியது.
மாணிக்கவாசகர் தரும் சான்று
ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோர் நுற்றுக் கணக்கான இடங்களில் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் ஏத்தித் துதிபாடிவிட்டனர். ஓரிரு எடுத்துக் காட்டுகளைத் தருவன்:–
தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானே என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுவது சிவனையே என்பது அவருக்குப் பின்னோர் வந்த பாடலில் மேலும் உறுதிப்படுத்தப்படும்.
முத்தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய் (அப்பர்)
தமிழ் சொல்லும் வடசொலுந் தாணிழற்சேர (தேவாரம்)
மந்திபோல திரிந்து ஆரியத்தோடு செந்தமிழ்ப் பயன் தெரிகிலா
அந்த்தகர்க்கு எளியேன் இலேன் – சம்பந்தர் தேவாரம்
(இந்தப்பாடலில் தமிழ் சம்ஸ்கிதரும் ஆகிய இரண்டின் பெருமையையும் அறியாதோரை குரங்கு, குருடர் — என்பார் சம்பந்தர்)
தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் ஒப்பிட்டு எது பெரிது என்றே சொல்ல முடியாது. ஏனெனில் சம்ஸ்கிருதத்தில் வேதம் இருக்கிறது. தமிழிலோ திருக்குறள் இருக்கிறது என்று பெருமைப்படுவார் வண்ணக்கன் சாத்தனார்:-
ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனின் இனிது
சீரியது ஒன்றைச் செப்பல் அரிதால் – ஆரியம்
வேதம் உடைத்து; தமிழ் திருவள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து.
கம்பர் தரும் சான்று
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும்
வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் — (கம்ப ராமாயணம்)
தமிழ் மொழியை நெற்றிக் கண் கொண்ட சுடர்க் கடவுள் சிவ பெருமான் தான் தந்தான் என்பதை கம்பன் பட்டவர்த்தனமாகப் பாடிவிட்டான்.
அகத்தியன் பற்றிக் கம்பர் கூறியவை:
‘’தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தான்’’ (சலதி = கடல்)
‘’நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’
பரஞ்சோதி முனிவர் தரும் சான்று
வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்
கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்
–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்
சிவஞான முனிவர் கருத்து
இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவரியல் வார்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசை பரப்பு
இருமொழியுமான்றவரே தழீஇயனா ரென்றாலி
இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதோ
தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டு மொழிகளுக்கும் சிவனே கர்த்தா. இரண்டும் கண்ணின் இரு விழிகள். இவ்விரு மொழிகளும் சமம் என்பதில் என்ன சந்தேகம்? என்பார் காஞ்சிப் புராணம் எழுதிய சிவஞான முனிவர்.
தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு கண்கள் எனப் பாவித்து இரு மொழி கற்போம் !!
எனது முந்தைய கட்டுரைகளையும் காண்க:
தமிழுக்கு எத்தனை பெயர்கள்? (ஜூன் 9, 2014)
புத்தர் செய்த தவறு: சுவாமி விவேகாநந்தர் ( 28 மார்ச் 2014)
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
தமிழ் ஒரு கடல்
Ravana-Pandya Peace Treaty: Kalidasa solves a Tamil Puzzle (24th June 2014)
Population Explosion: Oldest Reference is in Hindu Scriptures (posted on 2nd February 2013)
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1376; தேதி அக்டோபர் 29, 2014.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் – – பாரதியார்
தமிழ் மொழிக்கும் சுமேரிய, மெசபொடோமிய மொழிகளுக்கும் தொடர்பு உண்டு, தமிழ் மொழிக்கும் ஜப்பானிய, கொரிய மொழிகளுக்கும் தொடர்பு உண்டு, தமிழ் மொழிக்கும் துருக்கிய, பின்லாந்திய மொழிகளுக்கும் தொடர்பு உண்டு — என்று 40 ஆண்டுக் காலமாகப் படித்துப் படித்து அலுத்துப் போய்விட்டது. சாத்தூர் சேகரன் என்ற தமிழ் மொழி ஆர்வலர் லண்டனுக்கு வந்தபோது – 1990 ஆம் ஆண்டு என்று நினைவு — அவரை BBC பி.பி.சி. “தமிழோசை” சார்பாக பேட்டி கண்டு பி.பி.சி.யில் ஒலிபரப்பினேன். அவர் எனக்கு சில புத்தகங்களை அன்பளிப்பாக அளித்தார். அதில் ஒன்று, செர்போ–க்ரோட் –( யூகோஸ்லாவியா என்று அப்போது இருந்த இடம்; இப்போது செர்பியா, குரோவேசியா Serbia and Croatia என்பன ) — மொழிகளுடன் தமிழுக்கு இருந்த “நெருங்கிய” தொடர்புகள் பற்றிய புத்தகம்!!
பேட்டி கண்டபோது அவரை உரிய மரியாதைகளுடன் நடத்திவிட்டு, பின்னர் தனிப்பட்ட முறையில் பேசுகையில் அவரது அணுகுமுறையில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டினேன். அவர் கணக்குப்படி உலகில் உள்ள எல்லா மொழிகளும் தமிழில் இருந்து உருவானவை. அவர் அப்போதே 140 நூல்கள் எழுதி இருப்பதாகக் கூறினார். ஆங்கில—தமிழ் மொழி நெருக்கம் பற்றியும் பேசினார். உண்மை என்ன?
அப்போது லண்டனில் உள்ள சேனல் 4 Channel Four டெலிவிஷன் ஒலிபரப்பிய புதிய மொழியியல் கொள்கை பற்றி அவரிடம் கூறினேன். அதாவது மக்கள் எல்லோரும் ஒரே மொழி பேசிக்கொண்டிருந்தனர் – அவர்கள் சுவர்க்கத்தை எட்டிப் பிடிக்க கோபுரம் கட்ட முயன்றபோது— கடவுள் நீங்கள் எல்லோரும் பல மொழிகள் பேசி பிரிந்து செல்க —- என்று சபித்துவிட்டதாக பைபிளில் ஒரு கதை உண்டு. அது உண்மைதான்; உலகில் உள்ள மொழிகள் எல்லாம் ஒரே மூலத்தில் இருந்து வந்தவைதான் என்று ஒரு இஸ்ரேலிய மற்றும் ஒரு ரஷிய அறிஞர் கூறியது பற்றிய டாகுமெண்டரி (செய்திப்படம்) அது. இதை திரு. சாத்தூர் சேகரனிடம் சொல்லி அவர் இந்தக் கோணத்தில் இருந்தும் பார்க்கவேண்டும் என்றேன்.
அவரது பேட்டி ஒலிபரப்பைப் பாராட்டி பல நேயர்கள் எழுதியது உண்மை என்ற போதிலும் பலருக்கும் மொழி இயல் தெரியாது. மொழி வளர்ச்சிக் கும், எழுத்து வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாடு கூடத் தெரியாது. திருவள்ளுவர் இன்று உயிருடன் வந்தால் அவருக்குத் தமிழ் ஓரளவு புரியும்- ஆனால் தமிழ் எழுத்து அவருக்கு விளங்காது. ஏனெனில் எழுத்து உருமாறிப் போனது. நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் வகுப்பு நடத்துகையில் என்னை அறியாமல் “னை,, ணை, லை” – போன்ற எழுத்துக்களுக்கு பழைய எழுத்து முறையைப் போர்டில் (கரும் பலகை) எழுதுகையில் பயன்படுத்துவேன். உடனே சார், இது என்ன எழுத்து? என்று சிலர் என்னை இடை மறிப்பர். பெரியார் சொன்ன எழுத்து சீர்திருத்தத்துக்கு முன் நாம் (old orthography) அத்தகைய கொம்புள்ள/ துதிக்கை போடும் எழுத்துகளை — லை, னை — முதலியவற்றைப் பயபடுத்தினோம். ஆகவே மொழியும் எழுத்தும் காலப்போக்கில் மாறும் என்று அறிய வேண்டும்.
தமிழ் ஒரு அதிசய மொழி. இதில் இரண்டு எழுத்துக்கள் சேரும் போது என்ன மாற்றம் அடைகின்றன என்பனவற்றைக் கண்டு இது போல மற்ற மொழிகளில் உண்டா? என்றும் காண வேண்டும். இதை சந்தி இலக்கணம் என்பர். வடமொழியில் இது உண்டு. ஆகவே தமிழை வேற்று மொழிகளுடன் ஒப்பிட்டு — “இது அதுவே, அது இதுவே” — என்று முழங்கும் முன்னர் பல விஷயங்களைக் கருத்திற் கொள்ள வேண்டும். எந்த இரண்டு மொழிகளிலும் மேம்போக்கான சில ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவை போதா. உண்மையில் வேற்றுமை உருபுகள், மொழிக்குள் உள்ள சந்தி இலக்கணம் ஆகியவற்றையும் ஒப்பிட வேண்டும்.
வேதங்களுக்கு காலம் நிர்ணையிக்க மாக்ஸ் முல்லர் கையாண்ட “குத்து மதிப்பான” முறை ஓரளவுக்கு உண்மை. ஆனால் இதையே தமிழ் மொழிக்கும் கையாண்டால் பல தமிழ் நூல்களின் காலம் கேள்விக் குறி ஆகிவிடும். அவர் சொன்னார்: “ஒரு மொழி 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிடத்தக்க மாற்றம் அடைகிறது”. அப்படியானால் தொல்காப்பிய நடைக்கும் சங்க இலக்கிய நடைக்கும் பெரும் வேறுபாடு இருக்க வேண்டும் (.உண்மையில் அப்படி இல்லை. இதைப் பற்றி மூன்று தமிழ் சங்கங்கள் உண்மையா? என்ற கட்டுரையில் எழுதி விட்டேன்). அதே போல சங்க இலக்கியத்துக்கும் சிலப்பதிகாரத்துக்கும் ஒற்றுமை இருக்க வேண்டும். அப்படி இல்லை. அதிக அளவு வேறுபாடு இருக்கிறது. இளங்கோ காலமும் செங்குட்டுவன் காலமும் ஒன்று என்று வாதிப்போருக்கு இதை நான் சொல்கிறேன்.
சுருங்கச் சொல்லின் மாக்ஸ்முல்லர் சொன்ன முறையை உலகில் வேறு எந்த மொழிக்கும் பயன்படுத்தவில்லை. இருந்த போதிலும் ரிக்வேதத்துக்கு அவர் நிர்ணயித்த காலம் கி.மு1200 என்று அப்போது ஏற்றுக் கொண்டனர். இப்போது அது தவறு என்பதற்கு வேறு சில சான்றுகள் கிடைத்துவிட்டன.
ஒரு உண்மையை யாரும் மறுக்க முடியாது — உலகில் மாறாத பொருள் எதுவுமே இல்லை. மாற்றம் என்பது இயற்கை நியதி (Change is inevitable).— நான் வகுப்பு எடுக்கும் போது, “ஒரு மொழி 200 மைல்களுக்கு ஒரு முறை மாறும், ஒரு மொழி 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும்” — என்று குத்துமதிப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று மாணவர்களிடம் சொல்லுவேன் ( நியூ கினி என்னும் தீவு இதற்கு விதி விலக்கு. அந்தத் தீவில் மட்டும் 700 மொழிகள் உள்ளன!! ) இதற்குக் கோவைத் தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ் முதலியவற்றை எடுத்துக் காட்டாகவும், எங்கள் நாட்டில் வேல்ஸ் ஆங்கிலம், ஸ்காட்டிஷ் ஆங்கிலம், இங்கிலாந்து ஆங்கிலம் முதலியவற்றை எடுத்துக் காட்டாகவும் தருவேன். உச்சரிப்பு மட்டுமின்றி சொல் வழக்குகள் முதலியனவும் வேறுபடும். எட்டாம் நூற்றாண்டில் எழுந்த ஆங்கில நூலின் எழுத்தும் , பொருளும் யாருக்கும் புரிவதில்லை!!
கீழ்கண்ட தமிழ் அமைப்பைக் காணுங்கள். இது போன்ற ஒற்றுமை தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் (சந்தி இலக்கணம்) ஓரளவு உண்டு. சம்ஸ்கிருதத்துடன் தொடர்புடைய ஐரோப்பிய மொழிகளில் உண்டு. தமிழைப் போலவே வேறு மொழிகளில் இருந்தால் அதை நன்கு ஆராய்தல் அவசியம்! அப்போதுதான் நாம் அவ்விரு மொழிகளும் “நெருக்கமானவை” என்று மேலும் ஆராய வேண்டும். இது ஒரு அம்சம் மட்டும்தான். இதுபோல வேறு பல அம்சங்களும் உண்டு. கட்டுரையின் நீளத்தைக் கருதி ஒரே வரியில் சொல்லிவிடுகிறேன்: உறவு முறை, எண்கள், நான், நீ போன்ற சொற்கள், வீடு வாசல் தொடர்பான சொற்கள் –முதலிய சுமார் 100 சொற்களில் – ஒற்றுமை இருக்க வேண்டும்.
விதி 1 (Rule 1 M-V-B/P)
ம – வ — ப – ஆகியன — பல மொழிகளில் இடம் மாறும். இது இயற்கையான மொழிப் பாகுபாடு. தமிழ் மொழிக்குள்ளேயே இதைக் காணலாம்
ம = வ= ப
முழுங்கு—விழுங்கு ( ம=வ )
முழி = விழி
மேளா- விழா
மாரி—வாரி
மல்லிப்புத்தூர் – வில்லிப்புத்தூர்
மண்டோதரி – வண்டோதரி
மயக்கு – வயக்கு
மானம்—வானம்
மிஞ்சு = விஞ்சு
மணிக்கிராமம் = வணிகக் கிராமம்
ர – ல – ட இடம் மாறும்.
இது பற்றி பாணினி சூத்திரம் கூட உண்டு. இந்த ஒலி மாற்றம் வேறு பல நாடுகளிலும் காணப்படுகின்றன என்பதை பலர் அறியார்.
( எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஐரிஷ்காரர்கள் வசித்தனர். அந்த வீட்டுச் சின்னப் பையன் என் மனைவியிடம் “க்லிஸ்ப், க்லிஸ்ப் தா” (klisp) என்று மழலை மொழியில் கேட்பான். உருளைக்கிழங்கு வறுவல் “க்ரிஸ்ப்” Crisp என்று சொல்லப்படும். நான் உடனே அட, மழலை வாயில் கூட ர என்னும் எழுத்து ல ஆக மாறுகிறதே என்று வியப்பேன்.))
ண் — ட் – இடம் மாறும். மேலே ல – ட – ர மாற்றத்தைக் கண்டோம். அப்படியானால் ண என்பது ட ஆக மாறி ல ஆகவும் மாற வாய்ப்பு இருக்கிறது.
இதை அறியாத பழைய மொழியியல் “அறிஞர்கள்” ட , ண போன்ற நாமடி ஒலிகள் இந்திய சம்ஸ்கிருதத்தில் மட்டுமே உண்டு என்றும் இதை அவர்கள் சிந்துவெளி திராவிடர்கள் இடமிருந்து கற்றதாகவும் எழுதி வைத்தனர். இதன் அடிப்படையே தவறு. அப்படியே அவர்கள் சொல்வதை நாம் ஏற்றாலும், இந்தியாவில் இருந்து போன இந்துக்கள் அங்கே போனவுடன் அந்த நாட்டு மக்கள் பேச்சுக்கேற்ப ஒலியை மாற்றிக் கொண்டனர் என்றும் வாதிட முடியும்.
இதை எழுதும்போது ஒரு சுவையான சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் கொஞ்சம் காலத்துக்கு லண்டன் தமிழ் சங்கத்தின் மானேஜராகவும் பகுதி நேர வேலை செய்தேன். ஆண்டுதோறும் ஒரு நாள் தமிழ் பள்ளி ஆண்டு விழா நடத்துவோம். அப்போது திருக்குறள் போட்டி நடத்துவோம். எல்லா குழந்தைகளும் ஆங்கிலத்தில் குறளை எழுதி மனப்பாடம் செய்து கொண்டு வருவர்.
அகர முடல எலுட்டு எள்ளாம் ஆடி பகவன் முடட்ரே உலகு —
என்று பத்து குறளையும் ஒப்பித்தவுடன் விண்ணதிர கை தட்டிப் பரிசு கொடுப்போம். இது போல இலங்கையர்கள் அரங்கேற்றம் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் வாலிபர்களும் வாலிபிகளும் பாடும் பாட்டும் பேசும் பேச்சும் அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும். அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி அதை ஒப்பிப்பர். தமிழ் அறிவு மிகவும் சொற்பம் (எங்கள் வீட்டிலும் இதே கதைதான்!! நான் தமிழில் சொல்லச் சொல்ல அவர்கள் ஆங்கிலத்திலேயே விடை கொடுப்பர்) ஆக மொழி என்பது வாழும் இடத்திற்கேற்ப மாறும் என்று புரிந்துகொண்டால் “நாமடி” (ண, ட) ஒலிகள் பற்றிய சித்தாந்தம் நகைப்புரியதாகிவிடும். தமிழ் மொழிக்குள்ளேயே இந்த மாற்றங்களைக் காணும் போது நான் சொல்வது இன்னும் உறுதியாகிறது.
ண் = ட்
கண்+செவி = கட் செவி
மண் =கலம் = மட்கலம்
ள் = ட்
கள்+குடி = கட் குடியன்
தாள்+ தலை= தாடலை
வாள் + போர் = வாட் போர்
ல் = ற்
பல் + பொடி = பற்பொடி
கல் கண்டு = கற்கண்டு (கண்டு = கேன் டி)
ன் என்பது ர் ஆக மாறும்
ன் = ர்
அவன்+கள் = அவர்கள்
அவள்+ கள் = அவர்கள்
மனிதன் +கள் = மனிதர்கள்
விதி 5 Rule 5 L — N
ழ் = ன்
வாழ் + நாள் = வானாள்
பால் + நினைந்து = பானினைந்தூட்டும்
விதி 6 Rule 6 L+D=da
ழ்+த = ட
திகடச் சக்கரம் = திகழ் + தச + சக்கரம்
விதி 7 (Y — J)
ய = ச/ஜ
பங்கஜம் = பங்கயம்
தயரதன் –தசரதன்
இந்த ஜ – ச – ய- மொழி மத்திய கிழக்கு மேலை நாட்டு மொழிகளிலும் உண்டு.
யேசு – ஜீசஸ்
யூத – ஜூடா
விதி 8 Rule 8 sion = tion (S–T)
ச =ட
விஷம் = விடம்
ஆங்கிலத்திலும் ட என்பது ஷ ஆக மாறுவதைக் காணலாம்.
எடுகேஷன் = எடுகேடியன் (ஷன் = டியன்)
ஒரு உதாரணம் மற்றும் கொடுத்தேன். இது போல நூற்றுக் கணக்கான சொற்கள் உண்டு.
விதி 9 Rule 9 ( J=S)
ராஜேந்திர சோழன் = ராசேந்திர
ஜெயலலிதா = செய லலிதா
ஷேக்ஸ்பியர் = செகப்பிரியன் !!!
ஜூலியஸ் சீஸர் = சூலியசு சீசர்
ஸ்டாலின் = சுடாலின்
(தமிழ் மொழியில் மெய் எழுத்து, மொழிமுதல் எழுத்தாக வராது. சம்ஸ்கிருதத்தில் மட்டுமே இது உண்டு!!)
ஒரு மொழியில் சில எழுத்துக்கள் இல்லாத போது வேறு ஒன்றைப் போட்டு நிரப்புவர். பாரசீகர்களும் கிரேக்கர்களும் ‘’எஸ்’’ என்று சொல்ல முடியாததால் சிந்து நதி தீர மக்களை ‘’ஹி’’ந்து என்று அழைத்தனர். கிரேக்க, சீன யாத்ரீகர்கள், ஆங்கிலேய, பிரெஞ்சு ஆட்சியாளர்கள் முதலியோர் இந்திய மன்னர்கள் பெயர்களையும் ஊர்ப் பெயர்களையும் கடித்துக் குதறி விட்டார்கள் என்பதை நாம் அறிவோம். ஆகவே யாராவது தமிழுக்கும் – இதற்கும் தொடர்பு இருக்கிறது, தமிழுக்கும் – அதற்கும் தொடர்பு இருக்கிறது கதைத்தால் கொஞ்சம் சிந்தித்து முடிவுக்கு வாருங்கள். சொல்பவருக்கு எந்த அளவுக்கு வரலாறு தெரியும், மொழியறிவு உண்டு என்பதையும் பின்னணியில் பாருங்கள்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு (குறள் 423)
வாழ்க தமிழ்! வளர்க சம்ஸ்கிருதம்!!
(இவ்விரு மொழிகளும் ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை என்பதை இன்னும் ஒரு கட்டுரையில் கூறுவேன்)
contact swami_48@yahoo.com
இரண்டாயிரம் ஆண்டுப் பழமையுடைய சங்க நூல்களில் இந்துமதக் கருத்துக்களை ஆங்காங்கே காணமுடிகிறது. எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறு நூற்றில் 500 பாடல்கள் உள்ளன. மருதத் துறை பற்றி ஓரம் போகியாரும் நெய்தல் துறை பற்றி அம்மூவனாரும் குறிஞ்சித் துறை பற்றி கபிலரும் பாலைத் துறை பற்றி ஓதல் ஆந்தையாரும் முல்லைத் துறை பற்றி பேயனாரும் பாடியுள்ளனர். இதில் ஓரம்போகியார் பாடிய 100 பாடல்களில் முதல் பத்துப் பாடல்களை வேட்கைப் பத்து என்று கூறுவர். ஒவ்வொரு பாடலிலும் உள்ள வரிகள் வேதங்களிலும் ஏனைய இந்து மத நூல்களிலும் உள்ள கருத்துக்கள் ஆகும்.
இமயம் முதல் குமரி வரை பாரதப் பண்பாடு ஒன்றே என்பதற்கு இதுவும் ஒரு சான்று. தமிழ்ப் பண்பாடு என்பது இமயம் முதல் குமரி வரை பாரதம் முழுதும் நிலவிய ஒரே பண்பாடுதான்.
கீழ்கண்ட வடமொழி வாழ்த்துப் பாடல்களில் வரும் கருத்துகள் அழகிய, குறுகிய தமிழ் சொற்றொடர்களில் மந்திரம் போலவே ஓரம்போகியாரால் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் வடமொழி வாழ்த்துப் பாடல்கள்:
சுருக்கமான பொருள்: ஆட்சி செய்வோர் மக்களை நல்ல முறையில் ஆளட்டும்; பசுக்கள் பிராமணர்கள் உள்பட உலகிலுள்ள எல்லோரும் சுகமாக இருக்கட்டும்
2.காலே வர்ஷது பர்ஜன்ய: ப்ருதுவி சஸ்ய சாலினீ
தேசோயம் க்ஷோப ரஹிதோ ப்ராஹ்மண சந்து நிர்பயா:
பொருள்: காலத்தில் மழை பெய்யட்டும், வயல்கள் நெற்பயிர்களுடன் குலுங்கட்டும், நாடு முழுதும் வளம் பெருகட்டும், பிராமணர்கள் பயமின்றி வாழட்டும்.
3.அபுத்ரா: புத்ரிண சந்து புத்ரிண சந்து பௌத்ரிண:
அதனா: சதனா: சந்து ஜீவந்து சரதாம் சதம்
பொருள்: குழந்தைகள் இல்லாதோருக்கு குழந்தைகள் பிறக்கட்டும், பிள்ளைகள் எடுத்தோர் பேரப் பிள்ளைகள் பெறட்டும், செல்வமில்லாதோருக்கு செல்வம் கொழிக்கட்டும், நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க.
பாடல் 62ல் இவர் இந்திர விழா பற்றியும் குறிப்பிடுகிறார். ஆதன் அவினி என்ற சேர மன்னனை வாழ்த்திய பாடல்களில் இந்தக் கருத்துகள் வருகின்றன. வாழ்த்தும் முறையும் வேத கோஷங்களில் வரும் முறையில் உள்ளது. ஒவ்வொரு பாடலிலும் மூன்றாம் வரி ஒரே மாதிரியாக இருக்கும் (எனவேட் டோளே யாயே யாமே). ஓரம்போகியார் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் உண்டு.
திருஞான சம்பந்தர் தேவாரப் பாடலில் இதே பொருளைப் பாடி இருப்பதும் படித்து இன்புறத்தக்கது:
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே.
தொல்காப்பிய செய்யுள் 109ல் வாழ்த்தப்பட வேண்டிய விஷயங்கள் எவை எவை என்றும் தொல்காப்பியர் கூறுகிறார். இதற்கு உரையாசிரியர்கள் எழுதிய கருத்துக்கள் பாரதம் முழுதும் நிலவிய கருத்துகளே. எல்லா கல்வெட்டுகளும் ஸ்வஸ்தி என்ற மங்களச் சொல்லுடன் துவங்கும். பல கல்வெட்டுகளில் இதை ஸ்வஸ்திகா அடையாளம் மூலமும் குறிப்பிட்டனர்.
வேதங்களை ஏற்றுப் போற்றும் தமிழ் இலக்கியங்கள் என்ற அருமையானதொரு நூலை திரு.கே.சி. லட்சுமிநாராயணன் எழுதி இருக்கிறார். அதில் நான் மேலெ ஒப்பிட்டுக் கூறிய கருத்துகள் இல்லை. பார்ப்பார் ஓதுக என்ற ஒரு வரியை மட்டும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். அனைவரும் படிக்க வேண்டுய நூல் அது.
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1382; தேதி நவம்பர் 1, 2014.
உலகின் மிகப்பழைய நூல் ரிக்வேதம். வியாசர் என்பவர் இதைத் தொகுத்தார். 5200 ஆண்டுகளுக்கு முன் வேதங்கள் அளவுகடந்து பெருகிவிட்டன. யார் எதைப் படிப்பது? எப்படி மனனம் செய்வது? கடல் போலப் பரந்துவிட்டதே? என்று கவலைப்பட்ட வியாசர் வேதத் துதிப்பாடல்களை நான்காகப் பிரித்து நாலு சிஷ்யர்களைக் கூப்பீட்டு நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகளை மட்டும் பரப்புங்கள் என்றார். ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் மிகப் பழையது ரிக் வேதம் என்று உலகமே ஒப்புக் கொண்டுவிட்டது. அதில் பத்து மண்டலங்கள் உள்ளன. ஒன்று, பத்து ஆகிய மண்டலம் தவிர ஏனையவை ஒவ்வொரு ரிஷியின் குடும்பத்தினர் பாடிய பாடல்களாகும்.
ஆறாவது மண்டலம் பாரத்வாஜ ரிஷியின் மண்டலம் ஆகும். இதில் 27-ஆவது துதியில் ஹரியூபிய என்னும் ஒரு சொல் வருகிறது. வழக்கம் போல வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இங்கேயும் உளறிக்கொட்டி கிளறி மூடியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் எழுதியதாலும், அப்போது பிரிட்டிஷ்காரகள் நம் நாட்டை ஆண்டதாலும் நம் ஊர் மக்குகள், அசடுகள் அவர்கள் சொன்னதை எல்லாம் வேதத்துக்கு மேலான வேதம் என்று நம்பிவிட்டன!!
நல்ல வேளை! இந்துக்கள் செய்த பாக்கியம்! அத்தனை வெள்ளைத் தோல் “அறிஞர்”களும் ஆளுக்கு ஒன்றைத் தத்துப் பித்து என்று எழுதிவிட்டனர். எல்லோரும் ஒரே கருத்தை எழுதி இருந்தால் இவ்வளவு நேரம் இந்துமதத்தையே “த்வம்சம்” செது அழித்திருப்பர். ஆளாளுக்கு ஒவ்வொரு வகையில் உளறியதால் நம் மதம் பிழைத்தது. அவர்கள் சொன்ன ஒரு கருத்து ஹரியூபிய என்பது ஹரப்பா என்பதாகும்.
கிழக்கு பஞ்சாபில் ராவி நதிக்கரையில் ஹரப்பா நகரம் இருக்கிறது. இப்போது இது பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கிறது. இதுவும் மொஹஞ்சதாரோ என்னும் நகரமும் சிந்து சமவெளி நாகரீகத்தின் மிகப்பெரிய இரண்டு நகரங்கள் ஆகும். உலகம் வியக்கும் செங்கற் கட்டிடங்களையும் அருமையான திட்டமிடப்பட்ட நகர அமைப்பையும் உடையன இவ்விரு ஊர்களும்.
நகரமா? நதியா?
ரிக்வேத சூக்தத்தில் வரும் ஹரியூபிய என்ற சொல்லை நதி என்றும் ஊர்ப்பெயர் என்றும் சொல்லுவர் சிலர். இன்னொருவர் “ஐரோப்பா” என்பதே ஹரியூப்பியவில் இருந்து என்றும் சொல்லி இருக்கிறார். உளறுவதற்கு வெள்ளைக்காரகள் மட்டும்தான் உரிமை வாங்கி இருக்கிறார்களா? நாங்கள் உளறக்கூடாதா? என்று இப்போது “பிளாக்:குகள் எழுதுவோரிடயே ஒரு போட்டி!! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன்; பிளாக் எழுதுபவன் எல்லாம் அறிஞன் என்று ஆகிவிட்டது. நிற்க.
லுட்விக் என்பவர் இதை யாவ்யாவதி நதியின் மேல் உள்ள நகரம் என்று சொல்வதாக வேதங்களுக்கு இண்டெக்ஸ் தயாரித்த கீத், மக் டொனல் எழுதி வைத்துள்ளனர்.
ஹில்பிராண்ட் என்பவர் குரும் நதியின் உபநதி இது என்று கூறுகிறார்.
வேதத்துக்கு பாஷ்யம் எழுதிய சாயனர் இதை நதி என்பார்.
இந்தத் துதியை மொழி பெயர்த்த கிரிப்பித் என்பவர், அபயவர்த்தின் சாயமான என்ற மன்னன் விரிச்சிவன் என்பவர்களைத் தோற்கடித்த இடம் என்கிறார். ‘’ஹரியூப’’ என்றால் பொன் மயமான யூப தூண்கள் என்று பொருள். ஆகவே ஹரி யூப என்பது வேத கால நகரம் என்ற பொருள் தொனிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்திலேயே யூப நெடுந்தூண் என்று சம்ஸ்கிருதச் சொல் பயன் படுத்தப்படுகிறது. அந்த அளவுக்கு தமிழ் மன்னர்கள் யாக யக்ஞங்களை செய்து புகழடைந்தனர்.
போர்னியோ தீவில் (இந்தோநேசியா) மனிதர்கள் காலடி படாத காடு என்று நினைத்த அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மன் என்பவனின் யூப நெடுந்தூன் கல்வெட்டுடன் கிடைத்ததை காஞ்சிப் பெரியவர் 1932 சென்னைச் சொற்பொழிவுகளில் குறிப்பீட்டுள்ளார். ஆகவே யூபம் என்பது சிந்து சமவெளி நாகரீக ஹரியூப்பியவில் மட்டும் இன்றி 2000 ஆண்டுகளாக ஆசியா முழுதும் பரவிவிட்டது தெரிகிறது.
யூப ஸ்தம்பம் என்பது வேதத்தில் ஆகுதியாக்கப்படும் யாகப் பசு கட்டப்படும் இடம் அல்லது வேதச் சடங்கின் வெற்றியின் நினைவாக எழுப்பபடும் தூண் ஆகும். சங்க இலக்கியத்தில் குறைந்தது நான்கு இடங்களில் ரிக்வேதத்தில் பயன்படுத்தப்பட்ட அதே யூப என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும், கரிகால் பெருவளத்தானும், பெருநற்கிள்ளியும் யாகங்கள் செய்து புகழ் அடைந்ததை சங்க இலக்கியப் பாடல்கள் விதந்து ஓதும். யூப என்ற சம்ஸ்கிருத சொல் வழங்கும் நான்கு பாடல்கள்:—
புறநானூறு- 15, 224
மதுரைக்காஞ்சி – வரி 27
பதிற்றுப்பத்து – 67–10
Samudra Gupta’s gold coin with Yupa post near the Horse.
ஆக, ஹரியூப்பிய என்பது ஹரப்பாதான் என்று நம்புவோர் பொன் மயமான ஹரி+யூப நெடுந்தூண் நடப்பட்ட நகரம்தான் அது என்பதை ஒப்புக் கொண்டதாக அர்த்தம். அங்கே நடந்த யுத்தமும் ஒரு மன்னன் மற்றொரு மன்னனைத் தாக்கும் சாதாரணப் போராக இருந்திருக்கலாம். இனப் போர், ஆரிய -திராவிடப் போர் என்று பொருள் கொள்ளத் தேவை இல்லை. உலகிலேயே நீண்ட காலம் போரிட்ட — தங்களுக்குள்ளேயே போரிட்ட —- சேர, சோழ பாண்டியர்களுக்கு உள்ளேயே போரிட்ட — 1500 ஆண்டுகளுக்கு இடைவிடாமல் போரிட்ட – இனம் தமிழ் இனம் ஒன்றுதான். அவர்கள் பேசிய மொழி தமிழ்— அவர்கள் வழிபட்ட தெய்வங்கள் இந்துக் கடவுளர்- அவர்கள் பின்பற்றிய பண்பாடு பாரதப் பண்பாடு – அப்படி இருந்தும் முஸ்லீம்களும், வெள்ளைக்காரர்களும் வரும் வரை போரிட்டது தமிழ் இனம் — ஆகவே ரிக் வேத கால போர்களை இனப் பூசல்கள் என்று வருணிப்பது மடமை!!
Ujjain coin with Yupa post
என்னுடைய முந்தைய சிந்துவெளிக் கட்டுரைகள்:
சிந்து சமவெளியில் பேய் முத்திரை
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012
‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
பதி – வதி – மதி: சிந்து சமவெளியில் உண்டா? 20-10-2014
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை
(15/10/12)‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014
1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14
சிந்து சமவெளி – பிராமணர் தொடர்பு (Post No 1033, Date 10-5-14)
Sri Lanka stamp on Arumuga Navalar, great Tamil scholar.
மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்!! – பகுதி 2
கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1293 தேதி: 17 செப்டம்பர் 2014
மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது ஐந்தாவது கட்டுரை.
கட்டுரையின் முதல் பகுதியில் மனுநீதிச் சோழன், குமணன் முதலிய 16 விஷயங்களைக் கண்டோம். இது இரண்டாம் பகுதி.
17.யானை மூலம் குழந்தைக் கொலை
அத்தியாயம் 35:– சந்தமுகசிவனை அரசனின் மனைவி அலங்கரித்து “இவனை யானையிடம் கொண்டு செல். அரசன், சிறையில் இருப்பதால் யானை இடறி இவன் தலை நசுங்கட்டும். எதிரிகளிடம் சிக்குவதைவிட அதுவே மேல்” — என்று சொல்லி வேலைக்காரியுடன் அனுப்புகிறாள். யானையின் காலடியில் குழந்தையை வைத்தவுடன் அது அவனைக் கொல்லாமல் கண்ணீர் வடிக்கிறது. திடீரெனக் கோபம் கொண்டு அரண்மனைக் கதவுகளை உடைத்து அரசனை முதுகிலேற்றிக் கொண்டு சென்று அக்கரைக்குக் கப்பலில் தப்பித்துச் செல்ல உதவுகிறது.
இது போன்ற நிகழ்ச்சிகளை அப்பர் கதையிலும் காண்கிறாம். மஹேந்திர பல்லவ மன்னனின் யானை, அப்பர் பெருமானைக் கொல்ல மறுத்து விடுகிறது. மூர்த்தி நாயனாரையும் கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னனையும் யானையே மன்னனாகத் தேர்ந்தெடுக்கிறது.
சங்க இலக்கியத்திலும் இதை ஒட்டிய ஒரு காட்சி உண்டு.
புறநானூறு பாடல் 46 (கோவூர்க்கிழார் பாடியது)
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், தனது எதிரியான மலையமான் குழந்தைகளை யானையின் காலடியில் வைத்து நசுக்குங்கள் என்று உத்தரவிடுகிறான். இதைக் கேட்டு பதறிப்போய் கோவூர்கிழார் என்னும் புலவர் ஓடோடி வருகிறார்.
“மன்னா, என்ன காரியம் செய்கிறாய்? ஒரு புறாவுக்காக தன்னுயிரையே கொடுத்த சிபிச் சக்ரவர்த்தியின் மரபில் வந்தவன் நீ. இவர்களோ பால் மணம் மாறாப் பச்சிளங் குழந்தைகள். பூதாகார கருப்பு உருவம் உடைய யானையைக் கண்டு மகிழக்கூடிய வயது. புது முகங்களைக் கண்டால் மருளுவர். உடனே இந்த இழி செயலை நிறுத்து” — என்கிறார். மன்னனும் புலவனின் நல்லுரைக்குச் செவி சாய்க்கிறான். இதோ அப்பாடல்:—
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை!
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி,
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்;
களிறு கண்டு அழூ உம் அழா அல் மறந்த
புன் தலைச் சிறார்; மன்று மருண்டு நோக்கி
விருந்தின் புன்கணோ உடையர்;
கேட்டனை ஆயின், நீ வேட்டது செய்மே! (புறப் பாடல் 46)
Sri Lanka stamp with Lord Ganesh
18.நாகர் பட்டியல்
சங்கத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட நாகர் பட்டியல் உள்ளது: இருபது நாகர் குலப் பெயர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள்: மருதன் இளநாகன், நன்னாகன், வெண்ணாகன், நாலை கிழவன் நாகன், நல்லியக்கோடன், நீலநாகன் (சிறுபாணாற்றுப்படை)
மகாவம்ச இலங்கை மன்னர் பட்டியலில் வரும் நாகர் பெயர்கள்:—
நாகதாச, சிசுநாக (இந்திய மன்னர்):
கல்லாட நாகன், சோரநாகன், மஹாநாகன், இளநாகன், மஹல்லநாகன், குஜ்ஜநாகன், குஞ்சநாகன், ஸ்ரீநாகன்
நாகர் என்பவர் பற்றி மஹாபாரத காலம் முதல் கேட்டு வருகிறோம்.
(( நாகர்கள், மஹாபாரத சண்டைக்குப் பின்னர், தென் அமெரிக்காவில் குடியேறி, காண்டவ வனத் தலைவன் மய தானவன் என்பவனின் தலைமையில் புதிய மாயா நாகரீகம் ஸ்தாபித்ததை எனது பழைய கட்டுரையில் காண்க))
19.கஜபாகு
இலங்கை வரலாறு தமிழர்களுக்குச் செய்த பெரிய உதவி கஜபாகு பற்றிய குறிப்பாகும். சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் நடத்திய கண்ணகி சிலைத் திறப்பு விழாவுக்கு பல நாட்டு மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதை ஏற்று வந்தவர்களில் ஒருவன் “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்” — என்று மொழிகிறது சிலம்பு. இதன் மூலம் சேரன் செங்குட்டுவன் காலம் இரண்டாம் நூற்றாண்டே என்பது உறுதி ஆயிற்று.
கஜபாகு ஆட்சி மகாவம்ச 35 ஆம் அத்தியாயத்தில் உளது
Sri Lanka Stamp on New Year
2500 ஆண்டுக்கு முன் தமிழர்—சிங்களவர் உறவு!
20.மதுரைப் பாண்டியன்
மகாவம்சத்தில் மிகவும் சுவையான விஷயம் பாண்டிய நாட்டு இளவரசிகள் இலங்கைக்கு வந்ததாகும்; இந்தியாவின் வங்காளப் பகுதியில் இருந்து வந்த விஜயன், குவென்னா என்ற ஒரு யக்ஷிணியைக் கல்யாணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தை ( ஒரு மகன், ஒரு மகள்) ஆகிறான். ஆனால் உயர்குலத்து (க்ஷத்ரிய) மங்கை ஒருவளை ராணியாகப் பெறும்வரை மன்னன் ஆக முடிசூட்ட மாட்டேன் என்கிறான். உடனே மந்திரிமார்கள், ஒரு தூதர் குழுவை அமைத்து, முத்துக்களையும் விலை உயர்ந்த நகைகளையும் கொடுத்து பாண்டிய மன்னனிடம் பெண் கேட்க அனுப்புகின்றனர்.
தூதர்களும் கப்பல் மூலம் சென்று மதுரை மாநகரை அடைகின்றனர். (இது கி.மு ஆறாம் நூற்றாண்டு என்பதால் முதல் தமிழ் சங்கம் கொலு வீற்றிருந்த தென் மதுரையாக இருக்கலாம் என்பது என் கருத்து. இப்போதைய மதுரை அல்ல)
மதுரையில் பாண்டிய மன்னனும் மந்திரிகளைக் கலந்தாலோசித்து தன் பெண்ண அனுப்ப முடிவு செய்கிறான். உடனே மதுரை நகர தெருக்களில் தண்டோரா போடுகிறார்கள்:
“இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்…… மதுரை மாமன்னனின் மகள் — இளவரசியை — விஜனுக்கு மணம் முடிக்கப் போகிறோம். அங்குள்ள மந்திரிமார்களுக்கும் பெரிய அரசாங்க அதிகாரிகளுக்கும் பெண்கள் தேவை. இதுவரை நூறு பெண்கள் வந்து இருக்கிறார்கள். இன்னும் யார் யார் இலங்கைத் தீவுக்குப் போக விருப்பமோ அவர்கள் அனைவரும் இரண்டு மாற்று உடைகளுடன் வீட்டு வாசலில் நின்றால் மன்னரின் ஆட்கள் அழைத்துச் செல்வர். பெண்களை அனுப்புவோருக்கு மாமன்னன் நஷ்ட ஈடும் வங்குவார். தகுதிக்கு ஏற்ப இலங்கை செல்லும் பெண்களுக்கு யானை, குதிரை, தேர் வாகன வசதிகளும் அனுப்பப்படும்” — இந்த அறிவிப்பு வெளியானதும் ஏராளமான தமிழ்ப் பெண்கள் முன்வந்தனர். அவர்கள் கொண்டுவந்த இரண்டு உடைகளுடன் மன்னனும் ஆடை அணிகலன்களை வழங்கி கப்பலில் ஏற்றி விடுகிறான்.
Sri Lanka Stamp on Ananda Coomaswamy, great art historian
கைத்தொழில் கலைஞர்களும் பதினெண்குடி மக்களின் ஆயிரம் குடும்பங்களும் செல்வதற்கு ஏற்பாடாயிற்று. விஜயனுக்கு முன்கூட்டியே செய்தியும் அனுப்பப்பட்டது. இவர்கள் இலங்கையில் மகாதிட்டு என்னும் இடத்தில் கரை இறங்கினர்.
((ஆதாரம்: மகாவம்சம் அத்தியாயம் 7))
பின்னர் பழைய மனைவி குவென்னாவை, விஜயன் கெஞ்சிக் கூத்தாடி பணம் கொடுத்து வழியனுப்பியதையும், அவளை யக்ஷர்களில் ஒருவனே, ஒரே குத்தில் கொன்றதையும் மஹாவம்சப் படுகொலைகள் கட்டுரையில் தந்துவிட்டேன்.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு மஹாவம்ச வரி “18 குடிகள்”. தமிழ்நாட்டில் அகஸ்தியர் குடியேறியபோது வடக்கில் இருந்து 18 குடிகளை அழைத்துவந்தார் என்பது நச்சினார்க்கினியர் உரைதரும் விஷயம்!!
மஹாவம்சத்தை எல்லா தமிழர்களும் படிக்கவேண்டும். இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் இன்னும் சில சுவையான விஷயங்களைத் தருவேன்.
கட்டுரைக்கு உதவிய நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சமுதாயம் பப்ளிகேஷன்ஸ் பிரவேட் லிமிட்டெட், சென்னை-17, இரண்டாம் பதிப்பு 1986, விலை ரூ 25.
கட்டுரை மன்னன் – லண்டன் சுவாமிநாதன்
ஆய்வுக் கட்டுரை எண்:–1267; தேதி 5 செப்டம்பர் 2014
தமிழில் பழமறையைப் பாடுவோம் — பாரதி
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே — பாரதி
உலகின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். துருக்கியில் (Bogazkoy Inscription) கிடைத்த களிமண் கல்வெட்டு கி.மு. 1400 ஆண்டிலேயே ரிக்வேதக் கடவுளரைக் குறிப்பிடு வதால் யாரும் அதற்குக் கீழ் இதைக் கொண்டுவர முடியாது. இதற்கும் முன்பாகவே இந்தியாவில் சரஸ்வதி நதி தீரத்திலும் கங்கை நதிக் கரையிலும் வேத முழக்கம் கேட்டிருக்கும்.
ரிக்வேதம் மிகப் பழைய நூல் என்பதால் அதன் பொருள் பலருக்கும் விளங்குவதில்லை. அதை வாய் மொழியாகவே கற்பிக்க வேண்டும் என்பதாலும் யாரும் உரை எழுத முன்வரவில்லை. வேதம் அழிந்து விடுமோ என்று பயந்த வியாசர் அதை கி.மு 3150 வாக்கிலேயே நான்காகப் பிரித்து நமக்குக் கொடுத்தார். அப்படியானால் அதற்கு முன் எவ்வளவு காலத்துக்கு எண்ணற்ற வேதங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பே மேலிடும். இப்போது நம்மிடம் உள்ள வேதம் நூற்றில் ஒருபகுதியே!
ரிக் வேதச் சொற்களுக்குப் பொருள் காண முயன்ற யாஸ்கர் போன்றோர் கி.மு.800 –வாக்கிலேயே திணறத் துவங்கிவிட்டனர். அதற்கு நீண்ட நெடுங் காலத்துக்குப் பின்வந்த சாயனர் என்னும் அறிஞர் வேதத்துக்கு முதல் முதலில் உரை எழுதினார். அவர் நமக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்தவர். வெளிநாட்டு “அறிஞர்கள்”, காசியிலுள்ள சில பண்டிதர்களைக் கொண்டு அரைகுறை ஆங்கிலத்தில் அவர்கள் மூலம் கேட்ட அர்த்தத்தை வைத்து ‘கன்னா பின்னா’ என்று வேதத்துக்குப் பொருள் எழுதினர். இவர்கள் வேதத்தைப் படித்த மூல காரணம் இந்து மதத்தை அழிக்கவேண்டும், இந்தியாவை அழிக்கவேண்டும், அதற்காக இவர்களை வந்தேறு குடியேறிகள் என்று காட்ட வேண்டும் என்பதாகும். நாமும் அப்போது வெள்ளைக்கார ஆட்சியில் இருந்ததால் ஆங்கிலம் படித்த நம்மூர் அறிஞர்கள் பதவி, பட்டம் ஆகிய இரண்டையும் கருத்திற்கொண்டு அவர்களுக்கு ‘’ஆமாம்சாமி’’ போட்டனர்.
இப்போது புதுப் புது தடயங்கள் கிடைப்பதாலும், கம்ப்யூட்டர் முதலிய கருவிகளைப் பயன்படுத்தி ஆராய்வதாலும், துவாரகை முதலிய இடங்களில் கடலுக்கடியில் மூழ்கிய நகரம் கண்டுபிடிக்கப்பட்டதாலும், சரஸ்வதி நதிதீர புகைப்படம் ‘நாஸா’ (National Aeronautical and Space Administration) என்னும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் மூலம் கிடைத்ததாலும். டாடா அணுசக்தி நிறுவன ஆய்வாளர்கள் பூமிக்கடியில் மறைந்துபோன சரஸ்வதி நதி நீரை எடுத்து ஆராய்ந்து அதன் பல்லாயிரம் ஆண்டுப் பழமையை வெளியிட்டதாலும் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர்கள் எழுதிய வாதங்கள் தவிடுபொடியாகிவிட்டன.
ரிக்வேதம் மிகவும் ரகசியமான, அற்புதமான நூல். இதில் ரகசியம் இருப்பதால் சங்க காலத் தமிழர்கள் வேதங்களுக்கு ரகசியம் (மறை) என்று பெயரிட்டனர். தமிழனின் அபார அறிவுக்கு இதுவும் ஒரு உதாரணம். ரிக் வேதம் அதர்வண வேதம் பற்றி முப்பதுக்கும் மேலான கட்டுரைகளை எழுதி அதன் ரகசியங்களை வெளியிட்டு வருகிறேன். இன்று இந்திரன் பற்றி இரண்டு ரகசியங்களை ஆராய்வோம்.
வேதத்தில் பறக்கும் தட்டா (Flying Saucers)?
முதல் ரகசியம்:
இந்திரன் பறக்கும் மலைகளின் சிறகுகளை வெட்டினான். அதற்குப் பின்னர் மலைகள் பறப்பதை நிறுத்திவிட்டன என்று நமது புராணங்கள் கூறும். இது என்ன? பறக்கும் (Unidentified Flying Oobject= UFO) தட்டுகளின் “ஆண்டெண்ணாக்களை” இந்திரன் வெட்டி வீழ்த்தினானா? அல்லது ஆதிகாலத்தில் பூமியைத் தாக்கிய பெரிய நுண்கிரகங்கள் (Asteroids) , விண்கற்கள் (Meteorites) பற்றிய குறிப்பா? என்று ஆராய வேண்டும். இப்போதும் நாள்தோறும் கோடிக் கணக்கான விண்கற்கள் பூமியைத் தாக்குகின்றன. ஆனால் காற்று மண்டலத்தில் நுழையும் போது அவை கருகிச் சாம்பல் ஆகிவிடுகின்றன. பல கோடி ஆண்டுகளுக்கு முன் தாக்கிய ஒரு நுண்கிரகம் பூமியில் உள்ள டைனோசர் (Dinosaurs) எனும் ராட்சத மிருகங்களை அழித்தன. ஒருவேளை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியைத் தாக்கிய நுண்கிரக விஷயங்களைத் தான் நமது சமய நூல்கள் இப்படிக் கூறுகின்றனவா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். இன்று நான் அதைப் பற்றி எழுதவில்லை.
இரண்டாவது ரகசியம்
இந்திரன் பற்றிய இரண்டாவது ரகசியம் அவன் ஏழு நதிகளை விடுவித்ததாகும். இதை ரிக் வேத துதிகள் மறை பொருளில் பேசும். அஹி என்ற பயங்கர பூதம் (ட்ராகன் Dragon) மற்றும் வலன் என்ற அரக்கன் “பிடித்துவைத்த” ஏழு நதிகளின் தண்ணீரை இந்திரன் விடுவித்தான் என்று வேதத்தில் பல இடங்களில் மந்திரங்கள் வருகின்றன.
வெள்ளைக் காரனிடம் புத்தியை அடகு வைக்காத, எவரும் சுய புத்தி உடைய எவரும், ஏன் “நதிகள்”, “பிடித்துவைத்த தண்ணீர்”, “விடுவித்தல்”– என்ற சொற்கள் வேதத்தில் வருகின்றன என்று சிந்திப்பர். இதை வைத்து ரிஷி முனிவர்கள் வேறு விஷயங்களை மறை பொருளில் சொல்ல வந்தனர் என்று நாம் கொண்டாலும் உவமை என்பதே அந்தக் காலத்தில் இது போன்ற எஞ்சினீயரிங் வேலைகள் நடந்ததைக் காட்டும்.
தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் ஒரு விதி உண்டு. உவமையாகக் கூறப்படும் விஷயம் உவமேயத்தைவிட சிறப்புடையதாக இருத்தல் வேண்டுமென்பது அந்த விதி. ஆக இந்த —-‘’நதி’’, ‘’பிடித்துவைத்தல்’’, ‘’விடுவித்தல்’’ —– என்பதை உவமையில் வரும் சொற்கள் என்று எவரேனும் வாதிட்டாலும் அவை மகத்தான செயல்களாக இருந்த தனால்தான் உவமையாகக் கையாளப்படுகிறது என்பது புலப்படும்.
எல்லா மந்திரங்களையும் கொடுக்க இடமின்மையால் இதோ ஒரு சில மந்திரங்கள்:
வெள்ளங்களோ பலப் பல; அஹியால் பிடிக்கப்பட்டன. ஏ வீரனே! நீ அவைகளைப் பெருகச் செய்தாய், விடுவித்தாய் -– RV. 2-11-2
அஹி என்பது பனிக்கட்டி ஆறுகளாக இருக்கலாம் என்பது சிலர் கருத்து. கிரகணம் முழுவதும் அறிந்து முன் கூட்டி கணக்கிட்டு நமக்கு அறிவித்தப் பஞ்சாங்கப் பிராமணர்கள். இதெல்லாம் வயற்காட்டில் உழும் பாமரனுக்குப் புரியாது என்பதால் ராஹு என்னும் பாம்புத் தலை அரக்கன் (ட்ராகன் ) சந்திரனை விழுங்குகிறது என்று சொன்னது போல இது!
யார் அரக்க பூதம் அஹியைக் கொன்று ஏழு நதிகளை விடுவித்தாரோ, வலனுடைய குகையில் இருந்து பசுக்களை (ஒளியை) விடுவித்தாரோ RV. 2-12-3
பசு என்ற சொல்லுக்கு ஒளி என்ற பொருளும் வேதத்தில் பயன்படுத்த ப்படுவதாக அறிஞர்கள் செப்புவர். பஞ்சாப் என்றால் ஐந்து நதிகள் என்று பொருள். இது ஒரு காலத்தில் ஏழு நதிகள் (சப்த சிந்து) பாய்ந்த பெரிய பூமியாக இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வர்ஜில் (Virgil) கூட சப்த சிந்து என்ற சொல்லை அவர் காவியத்தில் கையாள்கிறார்.
ஏ, இந்திரனே? ஏழு நதிகளின் பிணைப்பை நீ தகர்த்து எறிந்தாய். அப்போது பூமி அதிர்ந்தது. நதிகள் கரை புரண்டு ஓடின. மலைச் சிகரங்களைப் பிளந்து கொண்டு தண்ணிர் பெருக்கெடுத்தது. ஒரு தாய் தன் குழந்தையை நோக்கி ஓடுவது போல அவை உன்னை நோக்கி ஓடிவந்தன. தடை பட்ட நதிகளை நீ விடுவித்தாய்! – RV. 4-19-3/5
தாய்-குழந்தை உவமை படித்துப் படித்து ரசிக்கவேண்டிய அற்புதமான வேத கால உவமை!! ரிக் வேதத்தில் ஒரே கவிதையில் 27 உவமைகள் இருப்பது பற்றி நான் எழுதிய கட்டுரையயும் காண்க.
ஆங்கிலத்தில் இரண்டாவது உலக மஹாயுத்த காலத்தில் ஒரு அணையைத் தகர்க்கச் சென்ற படைகள் பற்றி ‘’தி டேம் பஸ்டர்ஸ்’’ என்று ஒரு திரைப்படம் வந்தது. அது போல இந்திரன் மலைப் பாறைகளைத் தகர்த்து தண்ணீரைக் கொண்டுவந்தான் என்றே எண்ண வேண்டியுள்ளது.
ரிக் வேதத்தில் புரியாத விஷயங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. வேதத்தை மொழி பெயர்த்த கிரிப்பித் (Griffith) போன்றோர் பக்கத்துக்குப் பக்கம் இதன் பொருள் விளங்கவில்லை என்று அடிக்குறிப்பு சேர்த்துள்ளனர். ரிக் வேதத்தில் இந்திரன் பற்றி எழுதப்பட்டதை அவர்கள் மனம்போன போக்கில் வியாக்கியானம் செய்துள்ளனர். அவர்கள் தெளிவு படுத்தாத விஷயங்கள்:
1,இந்திரன் ஒரு ஆளா? பல நபர்கள் இந்திரன் என்ற பெயரில் இருந்தனரா?
2.இந்திரன் என்பது பிரதமர், ஜனாதிபதி, போப், சங்கராச்சார்யார் என்பது போல ஒரு பட்டமா, Title டைட்டிலா?
3.இந்திரன் என்பவன் அரசனா? கடவுளா?
4.இந்திரன், மனிதர்கள் போல நூறு ஆண்டு ஆயுள் உடையவனா அல்லது ஆயிரம் ஆண்டு, பல நூற்றாண்டு வாழ்ந்தவானா?
5.இந்திரன் என்பது மழை, வானவில், இடி, தண்ணீர் போன்றவற்றின் அதிதேவதையான கடவுளா?
இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை காணாமல், சில இடங்களில் அவனை மனிதன் போலவும், சில இடங்களில் அவனை இயற்கைச் சக்திகளின் அதி தேவதை போலவும் மனம் போன போக்கில் மொழி பெயர்த்துவிட்டனர். இதில் ஜெர்மானிய, பிரெஞ்சு, ஆங்கில “அறிஞர்கள்” இடையே பயங்கர கருத்து வேறுபாடு வேறு!!
உண்மையில் இந்திரன் என்பது கடவுளையும் அரசனையும் குறிக்கும். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் அரசனுக்கும் தெய்வத்துக்கும் ஒரே சொல்லே பயன்படுத்தப்படுகிறது. தொல்காப்பியரும் தமிழர் கடவுளான இந்திரனை வேந்தன் என்றே குறிப்பிடுவார். மற்ற ஒரு தமிழர் கடவுளான வருணனை மட்டும் வருண என்ற சம்ஸ்கிருதப் பெயரிலேயே குறிப்பிடுவார்.
உலகின் முதல் சிவில் எஞ்சினீயர்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே பிளாக்கில் எழுதிய Great Engineers of Ancient India ஆராய்ச்சிக் கட்டுரையில் பகீரதன் மகத்தான திட்டங்கள் தீட்டி கங்கை நதியைத் திசை திருப்பிவிட்டதை எழுதி இருந்தேன். அவன் மிகப்பெரிய எஞ்சினீயர். அவன் பல ஆண்டுகள் திட்டம் தீட்டி வெற்றி பெற்றதை, அவன் ‘’ஒற்றைக்காலில் பல்லாயிரம் ஆண்டுகள் நின்று தவம் செய்து’’ கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்தான் என்று புராணங்கள் சங்கேத பாஷையில் பகரும். அதே கட்டுரையில் பாரத நாட்டின் முதல் அக்ரிகல்சுரல் (Agricultural) எஞ்சினீயர் பலராமன் என்பதையும், விந்திய மலை மூலமாக தென் இந்தியாவுக்கு முதலில் ரோடு போட்டவர் அகத்தியர் என்றும் தென் கிழக்காசியாவுக்கு முதல் கடற்படை கொண்டு சென்றவர் அகத்தியர் என்றும் எழுதினேன். இதைத் தான் புராணங்கள் சங்கேத மொழியில், ‘விந்திய மலை கர்வ பங்கம்’, ‘அகத்தியர் கடலைக் குடித்தார்’ என்றெல்லாம் எழுதின என்பதையும் விளக்கினேன்.
கடந்த பல ஆண்டுகளாக நான் நடத்திய இன்னும் ஒரு ஆராய்ச்சியில் புலப்பட்ட விசயம் பகீரதனுக்கு மாபெரும் சிவில் எஞ்சீயரிங் புராஜெக்டை (Civil Engineering Project) மனதில் தோற்றுவித்தவனே இந்திரன் என்பதாகும். ரிக்வேதத்தில் ஆயிரத்துக்குக் அதிகமான இடங்களில் இந்திரன் பெயர் வருகிறது. இன்று நேபாளம் முதல் இலங்கையின் தென் கோடி கண்டி வரை எல்லோரும் இந்திரனின் பெயரையும் அவன் மனைவி இந்திராணி (சசி) பெயரையும் சூட்டி வருகிறோம். தென் கிழக்கு ஆசிய நாடுகள் முழுதும் சங்க காலத் தமிழர் கொண்டாடிய இந்திர விழாவை இன்றும் Water Festival வாட்டர் fபெஸ்டிவல் (நீர் விழா) என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். நேபாளத்திலும் இது நடைபெறுகிறது. ஆக உலகின் மிகப் பழைய கடவுள் இன்று வரை நம் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டான். தமிழ் நாட்டில் உள்ள 38,000 கோவில்களிலும் நடக்கும் யாக யஞங்களில் இந்திரன் பெயர் வருகிறது. பிராமணர்களாகிய நாங்கள் தினமும் இந்திரன் பெயரில் ஒரு நாளைக்கு மூன்று முறை சந்தியாவந்தனம் செய்கிறோம்.
Indra in Indus Valley tablet (Indra is called Chakra/wheel in Hindu and Buddhist scriptures)
உலக மகா யுலிஸிஸ், ஜில்காமேஷ், ராம்சஸ் முதலிய கிரேக்க, சுமேரிய, எகிப்திய ‘ஹீரோ’-க்கள் எல்லாம் ‘ஜீரோ’—க்களாக (Hero to Zero) மாறி மியூசியங்களுக்குள் ஒளிந்து கொண்டுவிட்டனர். இந்திரன் மட்டும் சரஸ்வதி, கங்கை நதி தீரத்தில் கொடிகட்டிப் பறந்த மாதிரியே இன்றும் கொடிகட்டிப் பறக்கிறான். எங்கெங்கெலாம் இந்துக் கோவில்கள் உள்ளனவோ, எங்கெங்கெல்லாம் பிராமணர்களின் வேத மந்திரங்கள் ஒலிக்கின்றனவோ அங்கெங்கெல்லாம் இந்திரன் புகழ் பாடப்படுகிறது.
வாழ்க தொல்காப்பியன்! வளர்க அவன் பாடிய இந்திரன், வருணன்!!
ஒரு விஷயத்துக்கு எதிர்வினையாற்றும்போது, அல்லது எதிர்க்கும்போது அதன் மீது வெறுப்பையும் கசப்பையும் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதென்பது ஓர் முதிர்ச்சியான நிலை. தன் வாழ்நாள் முழுக்க நாராயண குரு கற்பித்தது அதைத்தான். நான் அந்த மரபைச் சேர்ந்தவனாக என்னை உணர்வதனாலேயே பல விஷயங்களில் எனக்கு தெளிவு கிடைத்தது.
ஆனால் பொதுவாக அரசியல் களங்களில் அது நிகழ்வதில்லை. வெறுப்பு மிக எளிதாக மக்களை இணைக்கிறது. எளிதாக அதை பரப்ப முடிகிறது. ஆகவே அது மிக முக்கியமான அரசியல் ஆயுதம். அதைத்தான் ஃபாஸிஸம் என்கிறோம்.
இவ்வாறு வெறுப்பை உருவாக்கும்போது நாம் எதிரீடுகளை உருவாக்குகிறோம். நம்முடையது முழுக்க முழுக்க சரி என்றும் எதிர் தரப்பு முழுக்க முழுக்க தவறு என்றும் நம்ப ஆரம்பிக்கிறோம். எதிர் தரப்பை குறுக்கி சுருக்கி எளிமையான ஒரு கருத்தாக ஆக்கிக் கொண்டு அதற்கேற்ப நம்மையும் ஓர் எளிய தரப்பாக ஆக்கிக் கொள்கிறோம். இதை தவிர்ப்பதற்கு இன்றியமையாத விவாதங்கள் எதுவுமே நிகழாமல் ஆகின்றன. எதிர் தரப்புடன் விவாதத்துக்கே இடமில்லாத நிலையை ஒரு கட்டத்தில் நாம் அடைகிறோம்.
தமிழில் மொழி சார்ந்த விவாதங்களில் இந்த நிலை உருவானது ஒரு துரதிருஷ்ட வசமான வரலாற்றுத் திருப்பம். நேற்று நான் பெர்க்கிலி பல்கலையில் பேரா ஜார்ஜ் எல் ட்டை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். தமிழை ஆய்வுசெய்வதற்கு சம்ஸ்கிருதம் இன்றி இயலாது என்ற தன் தரப்பை மிக வலுவாக அவர் சொன்னார். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழாய்வாளன் தமிழின் பெரும்பகுதியை இழந்துவிடுகிறான். தமிழும் சம்ஸ்கிருதமும் நெடுங்காலம் ஒன்றை ஒன்று உண்டு வளர்ந்தவை. தமிழறிர்கஞளுக்கு இருக்கும் சம்ஸ்கிருத வெறுப்பு தமிழாய்வுகளை எப்படி முடக்கியிருக்கிறதோ அதேபோல இன்றைய சம்ஸ்கிருத அறிஞர்களுக்கு பிற மொழிகளைப்பற்றி ஏதும் தெரியாது என்பதும் பெரிய தேக்க நிலையை உருவாக்கி விட்டிருக்கிறது என்றார்.
அந்த நிலை எப்படி மாறியது? பிறரைப்போல நான் அதற்கு உடனே ஒரு சதிக்கோட்பாடைச் சொல்ல மாட்டேன். அதற்கு ஒரு வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் சம்ஸ்கிருதமும் தமிழும் சீரான முறையில் உரையாடி வளர்ந்தன என்பதைக் காண்கிறோம். அப்போது தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடையே முரண்பாடும் இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் திராவிட சிசு தமிழ்ஞான சம்பந்தன் என்றுமே தமிழுக்கு அரணாக சம்ஸ்கிருதத்தை பார்ப்பவராகவே இருந்திருக்கிறார்.
ஆனால் பதிமூன்றாம் நூற்றாண்டின் தமிழகம் மீது மாலிக் காபூரின் படையெடுப்பு நிகழ்ந்தது. பேரரசுகள் சிதறின. அதன்பின் நூறுவருடம் உதிரி தளகர்த்தர்களின் அராஜக ஆட்சி. குமார கம்பணன் மதுரையை கைப்பற்றி மதுரை ஆலயத்தை திருப்பிக் கட்டி மீண்டும் ஒரு தொடக்கத்தை உருவாக்கினான். அதன்பின் மதுரை தஞ்சை செஞ்சியில் நாயக்கர் ஆட்சி. இக்காலகட்டத்தில் தென்னகத்தில் உள்ள எல்லா பேராலயங்களும் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டன. ஏராளமான ஏரிகள் வெட்டப்பட்டன. சந்தைகள் அமைந்தன.சாலைகள் நீண்டன. இன்றைய தமிழகம் உருவாகி வந்தது. ஆனால் இவர்கள் பெரும்பாலும் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களின் மொழி தெலுங்கு. அவர்கள் போற்றி வளர்த்தது சம்ஸ்கிருதத்தை. தமிழை நம்பி வாழ்ந்த கவிராயர் குலங்கள் மெல்ல மெல்ல அன்னியப்பட்டன. பேரிலக்கியங்கள் உருவாகாமலாயின. தமிழின் வளர்ச்சி தேங்கியது.
இதை ஒட்டி ஒரு வகை சம்ஸ்கிருத மேலாதிக்கம் உருவாகியது. பதினெட்டாம் நூற்றாண்டு ஆனபோது தமிழ் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தது. சம்ஸ்கிருதம் பேணப்பட்டு அரசின், மதத்தின் மொழியாக விளங்கியது. தமிழை பழிக்கவும் சமஸ்கிருதத்தை போற்றவும் கூடிய மனநிலைகள் ஓங்கி இருந்தன. மேலும் நாயக்கர் காலமும் சரி , அதன் பின் வந்த ஆங்கில ஆட்சியும் சரி பிராமணர்களை பெரிதும் போற்றி வளர்த்தவை. பிராமணர்களில் ஆதிக்கவாதிகள் தங்கள் மொழியாக சம்ஸ்கிருதத்தை எண்ணினார்கள். தமிழை புறக்கணிக்கவும் எள்ளி நகையாடவும் அவர்களில் பலர் முயன்றார்கள்.
இந்த இழிநிலையில் இருந்து தமிழ் மீண்டது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான். அதற்கு சைவ மடங்கள் முன்னோடி பங்களிப்பாற்றின. கிட்டத்தட்ட வழக்கொழிந்துபோன தமிழிலக்கியக் கல்வியை அவைதான் விடாப்பிடியாகப் பேணி வளர்த்தன. நூல்களை தக்கவைத்தன. அங்கிருந்து மீண்டும் தமிழ் முளைத்து எழுந்தது.
இக்காலகட்டத்தில் தமிழின் தனித்தன்மை, தொன்மை, இலக்கிய வளம் ஆகியவற்றை விவாதித்து நிறுவ வேண்டியிருந்தது. தமிழ் சம்ஸ்கிருதத்தைச் சாராமல் இயங்கக்கூடியது, அது சம்ஸ்கிருதத்தின் அடிமை அல்ல என்பதை பேசிப்பேசி நிலைநாட்ட வேண்டியிருந்தது. அந்த விவாதம் நூறாண்டு நீடித்தது. அதன் சம்ஸ்கிருத தரப்பாக இங்கே பேசியவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள். ஆகவேதான் பிராமண மொழி என்ற அடையாளம் தமிழ்நாட்டில் சம்ஸ்கிருதம் மேல் விழுந்தது.
இருநூறு வருட இடைவெளி என்பது எந்தப் பண்பாட்டுக்கும் மிகப்பெரிய சோதனைதான். தமிழ் வளர்ச்சியில் உருவான அந்த இடைவெளியால் தமிழ்நூல்கள் பல மறைந்தன. தமிழின் செவ்வியல் மரபு அறுபட்டது. தமிழ் மொழியில் அறிவுத்தள விவாதங்கள் நிகழாது போனமையால் மெல்லமெல்ல தமிழின் சொல்வளம் மறக்கப்பட்டு சம்ஸ்கிருதக் கலப்பு மிகுந்தது. அதன் விளைவே மணிப்பிரவாளம் போன்ற கலவை மொழி.
இந்த வீழ்ச்சியில் இருந்து தமிழை மீட்டது தமிழிய இயக்கம்தான். தமிழிய இயக்கம் என்று நாம் இன்று சொல்வது பலதளங்களில் நிகழ்ந்த ஒரு ஒட்டுமொத்த அறிவியக்கத்தைத்தான். கடந்த இருநூறு வருடங்களில் தமிழ்நாட்டில் நடந்த ஆகப்பெரிய அறிவியக்கம் என்பது தமிழிய இயக்கமே. தமிழின் தொல்நூல்களை பதிப்பித்தல் , அவற்றை ஆராய்ந்து தமிழின் தொல்மரபை நிலைநாட்டல், தமிழின் தனித்துவத்தை மறுபடியும் கண்டடைந்து நிலைநாட்டுதல் ஆகியவை ஒரு தளத்தில் நிகழ்ந்தன. இந்த இயக்கத்தை நாம் தனித்தமிழ் இயக்கம் என்று சொல்கிறோம்.
இரண்டாவதாக தமிழின் தொன்மையான இசைமரபை மீட்டுருவாக்கம் செய்தல் முக்கியமான கவனம் பெற்றது. அதை தமிழிசை இயக்கம் என்று சொல்கிறோம். மூன்றாவதாக தமிழை முறைப்படி கற்பதற்கான கல்விமுறைகளை உருவாக்குதல். அதை தமிழ்க்கல்வி இயக்கம் என்கிறோம். இம்மூன்றும் இணைந்ததே தமிழிய இயக்கம்.
இந்த தமிழிய இயக்கத்தில் பிராமணர்களின் பங்கை எவரும் மறுத்துவிட முடியாது. உ.வே.சாமிநாதய்யர் இல்லையேல் தமிழ் நூல்கள் அழிந்திருக்கும். அவரது மாணவர்களான அனந்தராம அய்யர், கி.வா.ஜகன்னாதன் போன்றவர்களின் பங்களிப்பும் சாதாரணமானதல்ல. பரிதிமாற்கலைஞர், பி.டி.ஸ்ரீனிவாசாச்சாரியார் போன்றவர்கள் இவ்வியக்கத்தில் பெரும் பணியாற்றியவர்கள்.
தமிழிய இயக்கம் தமிழை மீட்டமைக்கும் வேகத்தில் சம்ஸ்கிருதத்துக்கு எதிரானதாக ஆனது. நடைமுறையில் அதில் பிராமண எதிர்ப்பும் கலந்து கொண்டது. அதற்கான சமூகக் காரணங்கள் அன்று இருந்தன.
பிராமணர்கள் வெள்ளைய அரசில் எல்லா முக்கிய பதவிகளையும் வகித்த காலம் அது. ஒரு அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் எந்த குழுவும் செய்வதைப்போல அவர்கள் அந்த அதிகாரத்தை பிறர் எய்த அனுமதிக்கவில்லை. இதற்கு எதிராக முதல் கசப்பும் எதிர்ப்பும் கேரளத்தில் , இன்னும் சொல்லப்போனால் நாயர் சாதியில்தான், உருவாகியது. காரணம் கிறித்தவ இயக்கத்தின் கல்விப்பணியை பயன்படுத்திக்கொண்டு கல்விகற்று வந்த நாயர்கள் அரச பதவிகளை நாடி பிராமணர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தார்கள்.
ஆரம்பகாலத்தில் இவ்வாறு பிராமணர்களால் வாய்ப்பு பறிக்கப்பட்டவர்கள் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். பின்னர் பிரிட்டிஷார் இந்தியர்களுக்கு தேர்தலில் வென்று வட்டார அரசுகளை அமைக்கும் வாய்ப்பை வழங்கியபோது அந்த அமைப்பு ஜஸ்டிஸ் கட்சி என்ற கட்சியாக ஆகியது. இந்த அமைப்புக்கும் தமிழிய இயக்கத்துக்கும் கொள்கை அளவில் எந்தத்தொடர்பும் இல்லை. ஆனால் இதன் ஆதரவாளர்களாக தமிழியக்கத்தினர் பலர் இருந்தார்கள்.
இக்காலத்தில் கால்டுவெல் முன்வைத்த திராவிடமொழிகொள்கை பெரிதாகப் பேசப்பட்டது. தென்னக மொழிகளை ஆராய்ந்த பிஷப் கால்டுவெல் அவற்றுக்கு ஒரு பொது இலக்கண அமைப்பு இருப்பதை உணர்ந்தார். தென்னகத்தைக் குறிக்க நம் சிற்ப- தாந்த்ரீக மரபில் பயன்படுத்தப்பட்ட திராவிட என்ற சொல்லை அவற்றைக் குறிக்க பயன்படுத்தினார். திராவிட என்பது ஒரு இனமாக இருக்கலாம் என்ற ஊகத்தை அவர் முன்வைத்தார். அந்த ஊகத்தை உடனடியாக ஒரு கோட்பாடாக ஆக்கிக் கொண்டு திராவிட இயக்கம் உருவானது.
இவ்வாறு திராவிட இயக்கம் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது பிராமண வெறுப்பே. இந்திய மக்களை திராவிடர் ஆரியர் எனப்பிரித்து திராவிடர் என்போர் தென்னகத்து பிராமணரல்லாதோர் என வகுத்து அவர்கள் தனி இனம் தனி நாடு என்று வாதிட ஆரம்பித்தார்கள். இக்காலகட்டத்தில் திராவிட இனம் என்பதை வரையறை செய்வதற்கான அறிவார்ந்த முயற்சி ஏதும் எடுக்கப்படவில்லை. ஊகங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டு உடனடியாக அவை கோட்பாடுகளாக ஏற்கப்பட்டன.
சுதந்திரத்துக்குப் பின்னர் மொழிவழி மாநிலங்கள் அமைந்தபோது திராவிட இயக்கங்கள் திராவிடக்கருத்தியலை கைவிட்டன. அதற்கும் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. திராவிட என்பது தமிழர்களை மட்டுமே குறிக்கும் சொல்லாக மருவியது. ஏனென்றால் திராவிடக்கருத்தாக்கம் கர்நாடகம் ஆந்திரா கேரளத்தில் எந்த சலனத்தையும் உருவாக்கவில்லை.
அக்காலத்தில் இந்தியாவெங்கும் உருவாகி வலுவடைந்த பிராமணமைய வாதம் தன்னை சம்ஸ்கிருதத்துடன் அடையாளப்படுத்திக் கொண்டது. இந்தியாவின் பண்பாடென்பது பிராமணப் பண்பாடாக முன்வைக்கப்பட்டது. அது சம்ஸ்கிருதத்தால் மட்டுமே அமைந்தது என வாதிடப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியால் புதுப்பணபலம் பெற்ற பிராமண சாதியின் ஒரு ஆதிக்க தந்திரம் அது.
அதற்கு எதிராக பிராமணரல்லாத சாதியினர் உருவாக்கிய பல கோட்பாடுகளை உருவாக்கினர். உதாரணமாக வேதங்களின் காலத்தை பிராமணர்கள் பல்லாயிரம் வருடங்களுக்குப் பின்னால் கொண்டு சென்றபோது தமிழிய இயக்கத்தினர் கடல்மூழ்கிய குமரிநில நீட்சியை ஒரு பெரும் கண்டமாக உருவகித்து அதுவே பிரம்மசமாஜத்தினர் சொல்லிய லெமூரியா என வாதிட்டு ஆதாரமேதும் இல்லாமலேயே அதை நம்பவும் ஆரம்பித்தார்கள்.
இவ்வாறு நம் சூழலில் புழங்கும் கருத்துக்கள் பெரும்பாலும் ஆதிக்க நோக்குடன் மிகைப்படுத்தப்பட்டவை. அதற்கு எதிரான கருத்து அதற்கேற்ப மிகைப்படுத்தப்பட்டது. இன்று ஒரு அறிவார்ந்த ஆய்வாளர் நடுநிலையான ஆய்வுகளை செய்யவேண்டியிருக்கிறது. அப்படிச் செய்தால் ஒரு அபாயம் உள்ளது. கருத்துநிலைபாட்டின் இரு தரப்புமே அவருக்கு எதிரிகள் ஆகிவிடுவார்கள். ஒன்று அவர் தமிழியராக இருக்க வேண்டும். அல்லது அவர் பிராமணியராக இருக்க வேண்டும். இரண்டுமே துறை வெற்றிகளை அளிக்கக் கூடியவை. நடுநிலையாளருக்கு இன்று தமிழ்ச் சூழலில் ஆளிருப்பதில்லை. ஆகவே மிகக் குறைவாகவே நடுநிலைக் குரல்கள் ஒலிக்கின்றன.
திராவிட இயக்கம் பிரபல அரசியலியக்கமாக ஆகியது. முதலில் பிராமணரல்லாத உயரசாதியினரின் குரலாக ஆரம்பித்தது பின்னர் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான அரசியலியக்கமாக ஆகியது. இந்த பரிணாமத்தில் அது தமிழிய இயக்கம் உருவாக்கிய மனநிலைகளையும் கோஷங்களையும் பெரிது படுத்தி வெகுஜன நம்பிக்கைகளாக ஆக்கியது. தமிழிய இயக்கம் ஓர் அறிவார்ந்த இயக்கம். அதில் ஆய்வும் உண்டு, வெறுப்பின் அம்சமும் உண்டு. திராவிட இயக்கம் அதில் வெறுப்பை மட்டுமே எடுத்துக்கொண்டது.
பொருட்படுத்தும்படியான தமிழாய்வுகள் எதையுமே திராவிட இயக்கம் உருவாக்கவில்லை. தமிழின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க எந்த பங்களிப்பையும் அது ஆற்றவும் இல்லை. இது வரலாறு. ஏனெனில் அது பரப்பு இயக்கம், அறிவியக்கம் அல்ல. இன்று திராவிட இயக்கம் தன் சாதனைகளாகச் சொல்லிக் கொள்வதெல்லாமே தமிழிய இயக்கத்தின் பங்களிப்புகளையே. அவர்களில் பெரும்பாலானவர்கள் திராவிட இயக்க ஆதரவாளர்கள்கூட அல்ல.
இவ்வாறு ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் அந்தக்கால கட்டாயங்களினால் உருவான கருத்துக்கள் பின்னர் வெகுஜனப்படுத்தப்பட்டு எளிய கோஷங்களாக மாறி நம் சூழலில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றை எதிரொலிப்பவர்கள் அவற்றை நிறுவப்பட்ட உண்மைகளாகவே எண்ணுகிறார்கள். மத நம்பிக்கை போல ஆவேசமாக முன்வைக்கிறார்கள். ஆராயவோ விவாதிக்கவோ அவர்கள் தயாராக இருப்பதில்லை. எதிர் தரப்பை எதிரிகளாகவே நினைக்கிறார்கள். கருத்துக்கள் சார்ந்து முன்வைப்பதெல்லாமே மிகையுணர்சிக்களைத்தான். ஆகவே ஒரு விவாதமே சாத்தியமில்லாமல் போகிறது.
இந்துமதம் சார்ந்து, இந்திய சிந்தனை மரபு சார்ந்து, சாதியமைப்பின் உருவாக்கம் சார்ந்து, இந்திய தேசிய உருவகம் சார்ந்து, ஆரிய திராவிட இனப்பிரிவினை சார்ந்து இன்று தமிழ்ச் சூழலில் இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் எந்தவித ஆய்வு முறைமையும் இல்லாமல் அவசர நோக்கில் ஒரு சமூகத்தேவையின் பொருட்டு வடிவமைக்கப்பட்டவை. அவை கடந்த அரைநூற்றாண்டுக்கால சமூக அறிவியல்களின் கருவிகளால் மீள மீள மறுபரிசீலனை செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை இவர்கள் சற்றும் அறிய மாட்டார்கள். அறியும் மனநிலையே இல்லாமல் மதநம்பிக்கை போல பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அக்கருவிகளை பயன்படுத்தி ஆராய்பவர்களை தமிழ்த்துரோகிகள் என்று நம்பத்தான் அவர்களின் மதச்சார்பு, இனச்சார்பு மனம் பயின்றிருக்கிறது.
சம்ஸ்கிருதம் சார்ந்து நம் சூழலில் உள்ள நம்பிக்கைகளும் இவ்வகைப்பட்டவையே. அந்த வெறுப்பாலும் புறக்கணிப்பாலும் தமிழின் அறிவு வளர்ச்சியே தேங்கிக் கிடக்கிறது. தமிழின் மாபெரும் இலக்கிய வளத்தை இந்தியச் சூழலில் பொருத்தி ஆராயும் ஆராய்ச்சிகளே நிகழ்வதில்லை. ஆகவே இங்குள்ள இலக்கியங்களில் பெரும் பகுதி அபத்தமான வாசிப்புக்கும் விளக்கத்துக்கும் உள்ளாகிறது. குறள் ஆனாலும் சரி, கம்பராமாயணம் ஆனாலும் சரி. பிற மொழிகளுடன் எந்த வகையான விவாதங்களும் நிகழ்வதில்லை. நமக்குள்ளே பழங்கதை பேசும் மூடக்கும்பலாக தமிழறிஞர்கள் உருவம் பெற்றிருக்கிறார்கள்.
தமிழில் சம்ஸ்கிருதம் குறித்து நிலவும் மூடநம்பிக்கைகள் பல.
அது வடமொழி. அது உண்மை அல்ல. அந்த மொழியின் முதல் வடிவம் வடக்கே எங்காவது உருவாகியிருக்கலாம். ஆனால் அதன் வளர்ச்சி என்பது இந்திய நிலப்பகுதியில் உள்ள பலநூறு மொழிகளை தழுவியது. சம்ஸ்கிருதக் கல்வியும் சரி சம்ஸ்கிருத பங்களிப்பும் சரி தென்னகத்திலேயே ஒப்பு நோக்க அதிகம்.
அது பிராமண மொழி. அதுவும் உண்மை அல்ல . மரபான சம்ஸ்கிருத நூல்களிலேயே பிராமணர் எழுதிய நூல்கள் குறைவு. வியாசனொ வான்மீகியோ உபநிடத ஆசிரியர்களோ காளிதாசனோ பாரவியோ எவருமே பிராமணர்கள் அல்ல.
அது இந்து மதத்தின் மொழி. இது அபத்தமானது. அது இந்திய மதங்கள் அனைத்துக்கும் பொதுவான அறிவார்ந்த மொழி. சமணர்கள்தான் அதை இந்தியா முழுக்கக் கொண்டு சென்றவர்கள். அதற்கு லிபி [வரிவடிவம்] உருவாக்கியவர்கள். அது பிற்கால பௌத்தத்தின் மொழியும் கூட
அதை இப்போது பிராமணர்களே ஆதரிக்கிறார்கள். தமிழகம் தவிர பிற பகுதிகளில் இது உண்மை அல்ல. உதாரணமாக கேரளத்தில் சிரியன் கிறித்தவர்களும் ஈழவர்களும்தான் பெரும் சம்ஸ்கிருத அறிஞர்கள்.
சம்ஸ்கிருதம் செத்த மொழி. இது ஓர் அபத்தமான கூற்று. இன்றைய சம்ஸ்கிருதம் என்றுமே பேச்சு மொழி அல்ல. உரையாடலுக்கான மொழியே அல்ல அது.
இந்த நம்பிக்கைகள் நம் தமிழியர்களால் உருவாக்கப்பட்டு இன்று திராவிட வழிவந்தவர்களால் மதம்போல நம்பப்படுகின்றன. ஆனால் மறு தரப்பிலும் அதேபோல அபத்தமான நம்பிக்கைகள் உள்ளன
சம்ஸ்கிருதம் தேவமொழி. அதில் இறைவழிபாட்டு மந்திரங்களும் நூல்களும் மட்டுமே உள்ளன. இது பொய். சம்ஸ்கிருதத்தில் ஏராளமான இறை மறுப்பு நூல்கள் உள்ளன. வேதங்களிலேயே பொருள்முதல்வாதம் பேசும் பாடல்கள் ஏராளமாக உள்ளன. வேத மறுப்பு மட்டுமல்ல வேத வெறுப்பும் சம்ஸ்கிருத நூல்களில் பேசப்படுகின்றன. சம்ஸ்கிருதம் அறிவார்ந்த விவாதங்களுக்கான மொழி. ஆகவே விவாதத்தின் எல்லா தரப்பும் அதில் பேசப்படுகிறது
சம்ஸ்கிருதம் பிராமணர்களுக்கு முன்னுரிமை உள்ள மொழி. அது பிராமணர்களின் நம்பிக்கை. உண்மை அல்ல. சம்ஸ்கிருத நூல்களில் பிராமண மேன்மை பேசும் நூல்கள் பூர்வ மீமாம்சை என்ற வேத மைய தரிசனத்தின் தரப்பைச் சேர்ந்தவை மட்டுமே. அதை எதிர்க்கும் பல நூறு தரப்புகள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. பகவத்கீதை கூட பூர்வமீமாம்சத்தை நிராகரிப்பதே
இந்த நம்பிக்கைகளை கைவிட்டுவிட்டு அறிவார்ந்த தர்க்கங்களுடன் சம்ஸ்கிருதத்தை அணுகக்கூடிய ஆராயக்கூடிய ஒரு தலைமுறை இனியாவது உருவாகி வரவேண்டும். அதன்பின்னர் மட்டுமே தமிழாய்வு அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும். அப்போது பல ஆச்சரியமளிக்கும் உண்மைகள் வெளிவரும் என நான் நினைக்கிறேன். அதில் முக்கியமானது, தமிழ் சம்ஸ்கிருதத்துக்கு எந்த அளவுக்குக் கடன்பட்டதோ அதை விட சமஸ்க்ருதம் தமிழுக்குக் கடன்பட்டது.
பரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வளர்ந்து மலர்ந்துள்ளது எனத் திட்டவட்டமாக கூறலாம். குறிப்பாக சொல்லப்போனால் பரத முனவர் நாட்டிய சாஸ்திரம் இயற்றுவதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் நாட்டியம் சிறந்த கலையாகப் பரிணமித்திருந்தது எனப் பரதரின் நாட்டிய சாஸ்திரத்திலிருந்தே அறிகிறோம். தென்னாட்டவர்கள் தமது நாட்டியத்தில் லலிதமாகவும், இனிமையாகவும், அங்க அபிநயங்களை பயன்படுத்துகிறார்கள். அவர்களது நாட்டியத்தில் நிருத்தமும் (அபிநயமில்லாது ஆடல் புரிவது), கீதமும் அதிகம் காணப்படும். இன்பச் சுவையும், சிருங்காரமும் அவர்களது ஆடலில் அதிகம் காணப்படுகிறது என்று
தக்ஷிணாத்யாஸ் தாவத்
பஹு நிருத்தகீத வாத்யா: கைசிகீ பிராயா:
சதுர மதுர லலித அங்காபி நயாஸ்ச
என்று பரதமுனிவர் கூறுகிறார். இன்று பரத நாட்டியத்தில் நிருத்தம் அதிகம் இடம் பெறுவதைக் காண்கிறோம். மேலும் தென்னாட்டினர் அரங்கில் ஆட நுழையும் போது வலப்புறத்திலிருந்து வருவதை மரபாகக் கொண்டுள்ளனர் என்கிறார் பரதர். அவர்களது சொற்களில் "ன" காரம் அதிகம் பயன்படுத்தப்படும் என்றும் கூறுகிறார். இதிலிருந்து பரதர் நாட்டிய சாஸ்திரம் இயற்றுவதற்கு முன்னரே தமிழ்நாட்டில் நாட்டியம் தனித்த மரபு கொண்டு வளர்ந்திருந்தது என்று விளங்குகிறது.
மார்க்கி - தேசி
பரதரின் நாட்டிய சாஸ்திரம் ஓர் ஈடிணையற்ற நாட்டிய இலக்கண நூலாக மலர்ந்தது. அது தோன்றிய பின்னர் அந்நூலில் உள்ள கருத்துக்களும் மரபுகளும் ஆடல் பாணிகளும் தமிழ் நாட்டியத்தைப் பெரிதும் வளம் படுத்தின. பரதர் மரபை மார்க்கி என்றும் அந்தந்தப் பகுதிகளிலே மலர்ந்த ஆடல்களைத் தேசி என்று அழைக்கும் மரபு வளர்ந்தது. ஆதலின் தமிழ் நாட்டியத்தை, தேசி நாட்டியம் என்றும் கூறுவர்.
தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரத்தில் நாட்டியத்தைப் பற்றிய அரிய செய்திகள் அரங்கேற்றக் காதையிலும் பிற இடங்களிலும் குறிக்கப்பட்டுள்ளன. அரசன் வீற்றிருந்த நாட்டிய அரங்கில் ஆடிய மாதவி முதலில் தேசி நாட்டியத்தை ஆடி பிறகு மார்க்கி நாட்டியத்தை ஆடினாள் என்று காண்கிறோம். எந்த மொழி பேசும் பகுதியில் நாட்டியம் ஆடுகிறார்களோ அப்பகுதி மக்கள் புரிந்து கொள்ளும் மொழியையும், நாட்டியத்தையும் முதலில் ஆடி பிறகு அனைத்திந்திய நாட்டியத்தை ஆடினர் என்பது இதனால் புலனாகிறது. நாட்டிய ஆசானுக்கும், ஆடுவோர்க்கும், இசை வாத்தியம் வாசிப்போருக்கும், தமிழ் மொழியும் மரபும் தெரிந்திருக்க வேண்டும் அத்துடன் சம்ஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்று சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம்.
தமிழில் நாட்டிய நூல்கள்
தமிழ்நாட்டில் எராளமான நாட்டிய நூல்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டன. தொல்காப்பியக் காலத்துக்கு முன்பிருந்தே தமிழில் நாட்டிய நூல்கள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உண்டு. நாட்டியத்தைக் குறிக்கும் சயந்த நூல், குணநூல், பரதசேனாபதியம், பஞ்சமரபு, செயிற்றியம், முதலிய நூல்கள் தமிழிலிருந்தன. சோழர் காலத்தில் எழுதப்பட்ட பல நூல்கள் மறைந்து போயின.
கி.பி. 13ம் நூற்றாண்டில் "சங்கீத ரத்னாகரம்" என்ற நூல் சம்ஸ்கிருத மொழியில் சாரங்க தேவரால் இயற்றப் பட்டது. நந்திகேஸ்வரரால் இயற்றப்பட்ட "அபிநய தர்ப்பணம்" என்ற நூலும் தமிழ்மொழியில் 300 ஆண்டுகளுக்கு முன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
அபிநய தர்பணம் என்னும் நூலை வீரராகவய்யன் என்பவர் தமிழ்ப்படுத்தியுள்ளார். சங்கீத ரத்னாகரத்தின் மொழிபெயர்ப்புகள் பல தமிழில் இருந்துள்ளன எனத் தெரிகிறது. இதில் ஒன்று டாக்டர் உ.வே. சாமிநாதைய்யரால் சேகரிக்கப்பட்டது. மஹாபரத சூளாமணி என்ற பெயரில் இந்த நூலும், அபிநய தர்பணமும் உ.வே.சா நூலகத்தில் அச்சிடப்பட்டுள்ளன. இவ்விரு நூல்களில் இருந்தும் தமிழும், சம்ஸ்கிருதமும் ஒன்றோடொன்று இணைந்தே நமது நாட்டியக் கலையை வளர்த்துள்ளன என்று தெரிய வருகிறது. இவ்விரு நூல்களையும் பின்பற்றிய பல நட்டுவனார்கள் தமிழ்நாட்டில் பரத நாட்டியத்தைப் போதித்து வந்துள்ளனர். இன்று பரத நாட்டியம் என்று வழங்கும் மரபு தமிழ் நாட்டியமும், பரதர் நாட்டியமும் தமது தனித்தண்மை இழக்காது ஆனால் ஒன்றால் ஒன்று வளம் பெற்று சாரங்கத் தேவர் மரபையும் பின்பற்றி வந்துள்ள கலையே என்பதில் ஐயமில்லை.
உலகின் தொன்மைான மொழிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழும், சம்ஸ்க்ருதமும் இந்திய நாட்டின் மொழிகள். இவ்விரு மொழிகளும், கிமு நான்காம் நூற்றாண்டு வரை ஒலி வடிவிலேயே, பேச்சு வழக்கில் இருந்தது. அத்தகைய ஒலிகளை, வரிவடிவில் வெளிப்படுத்துவதற்கான நடைமுறை தோன்றிய பின், இவ்விரு மொழிகளில் பதியப்பட்ட வரலாற்றுச் சான்றுகள் மூலம், அந்தந்தக் கால கட்டங்களில் வாழ்ந்த மக்கள், அவர்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், அரசியல் அமைப்பு, அரசாட்சி முறை, வர்த்தகம், வழக்கிலுள்ள மொழிகள் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. அம்மொழிகளின் வரிவடிவ அமைப்பு, இலக்கண, இலக்கியங்கள் பற்றிய பல செய்திகளையும் அறிய முடிகிறது. இவ்விரு மொழிகளும் வெவ்வேறு காலகட்டங்களில், பிராகிருதம், பிராமி, தமிழ், கிரந்தம், தேவநாகரி போன்ற பல பெயர்களால் அறியப்பட்டு, பல உருமாற்றங்களையும், திரிபுகளையும் அடைந்து, இன்று தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் என்ற மொழிகளாய் நம்மால் அழைக்கப்படுகின்றன.
கிளை மொழிகள்
தமிழ் மொழியானது, தமிழ்நாட்டில் வழக்கில் உள்ளது. தமிழ், கிரந்தம் மற்றும் சம்ஸ்க்ருதம் ஆகிய மூன்று மொழிகளை அடிப்படையாகக் கொண்டு தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளாக தென்னிந்தியாவின் மற்ற பிரதேசங்களில் வழக்கில் உள்ளது. சம்ஸ்க்ருதமானது ஹிந்தி, பெங்காலி, மராத்தி, குஜராத்தி, அசாமிமற்றும் வேறு சில வேறுபாடுகளுடன் பல பிராந்திய மொழிகளாக, வட மாநிலங்களில், வழக்கில் உள்ளது.
சென்ற நூற்றாண்டில் சம்ஸ்க்ருதமொழியின் நிலை
இந்தியாவில் சம்ஸ்க்ருத மொழி, பல நூற்றாண்டுகளாக, பரவலானப் பகுதிகளில், வழக்கில் இருந்தது. பிறகு, இந்தியாவை 900 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆக்ரமித்த ஒன்றுக்கும் மேற்பட்ட அன்னிய நாட்டு அரசாங்கங்கள், தங்களின் கலாச்சாரத்தை பரப்புவதற்காக, பல முயற்சிகளை மேற்க்கொண்டனர். பாரம்பரியமான கல்வி முறை மாற்றி அமைக்கப்பட்டு, ஆங்கில மொழி சார்ந்த கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. ஒன்றுபட்ட இந்தியாவை பிளவுபடுத்தும் நோக்கத்துடன், அரசியல் காரணங்களுக்காக, சம்ஸ்க்ருத மொழி பற்றிய தவறான கருத்துக்களை, மக்களிடையே பரப்பினர். இது போன்ற பல காரணங்களால், சம்ஸ்க்ருத மொழி வழக்கில் இல்லாமல் போய்விட்டது.
இந்திய நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்த பின்,ஹிந்தி, ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. அப்பொழுது, சம்ஸ்க்ருத மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டுமென, அண்ணல் அம்பேத்கர், பேராசிரியர். நஸ்ருதீன் அஹமது, டாக்டர். கேஸ்கர் போன்றோர், முனைந்த பொழுது, அத்தீர்மானம், சில அரசியல் கட்சிகளால், தோற்க்கடிக்கப்பட்டது. பின்னர், ஆட்சி பொறுப்பை ஏற்றவர்களும், சம்ஸ்க்ருத மொழியின் பயன்பாட்டை வளர்ப்பதற்க்கான முயற்சிகளில், பெரிதும் ஈடுபடவில்லை. எடுத்துக்கொண்ட முயற்சிகளும், முழுமையாகச் செயல் படுத்தப்படவில்லை. சில தனிப்பட்ட அமைப்புகளின் முயற்சிகளினால், சம்ஸ்க்ருத மொழி, முழு அழிவிலிருந்து, இன்று வரை காப்பாற்றப்பட்டுள்ளது.
இன்று சம்ஸ்க்ருத மொழியானது, இந்து சமயம் சார்ந்த படைப்புக்களிலும், நிகழ்ச்சிகளிலும், அதில் தேர்ச்சி பெற்ற விற்பன்னர்களிடம் மட்டுமே, வழக்கில் உள்ளது.
தமிழகத்தில் சம்ஸ்க்ருத மொழியின் நிலை
தமிழ் நாட்டின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக் குறிப்புகளிலும் சம்ஸ்க்ருத மொழி எழுத்துக்கள், காணப்படுகின்றன. இதன் மூலம் தமிழகத்திலும் இம்மொழி வழக்கில் இருந்தது என்று அறியப்படுகின்றது.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழகத்தில், மொழி சார்ந்த மூன்று முக்கிய கருத்துக்கள் முன்னிலைப் படுத்தப்பட்டன.
வடமொழி எதிர்ப்பு
ஆரியச் சார்பு சிந்தனைகள் எதிர்ப்பு
கடவுள் மறுப்புக் கொள்கை
வடமொழி எதிர்ப்பு
தமிழ் நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள வரலாற்று சின்னங்களில்,பிராகிருதம், பிராமி, தமிழ் பிராமி, தமிழ் வட்டெழுத்து, கிரந்தம், கிரந்தத் தமிழ்,மணிப்பிரவாளம், தேவநாகரி போன்ற பல எழுத்து நடைகள் காணப்படுகின்றன. சம்ஸ்க்ருத மொழியைக் காட்டிலும், தமிழ்மொழி சார்ந்த குறிப்புகள் அதிகம் காணப்படுவதால், தமிழ் இலக்கியங்களில், சம்ஸ்க்ருத மொழியானது, வடமொழி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்விரு மொழிகளுக்கு இடையே ஆரோக்கியமான பரிவர்த்தனைகள் இருந்துள்ளன என்பது, திருக்குறள், ஆத்திச்சூடி, கம்ப ராமாயணம் போன்ற இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள சொற்கள் மற்றும் பாடல் வரிகள் மூலம் நிரூபணமாகின்றது. பண்டைக் காலப் படைப்புகளில் சில வடமொழிச் சொற்களும் மத்திய மற்றும் நவீன காலப் படைப்புகளில் பல வடமொழிச் சொற்களும் காணப்படுகின்றன.
தமிழ்ப்படைப்புகளில் வடமொழிச் சொற்களை அறவே தவிர்க்க வேண்டும் என்ற கருத்தும், அச்சொற்களை தேவைகளுக்கு ஏற்றார் போல், தமிழின் தனித்தன்மைக்கு ஊறு விளைவிக்காத அளவுக்கு பயன்படுத்துவது தவறல்ல என்ற ஒரு கருத்தும், இன்றளவும் விவாதிக்கப்படுகிறது. வடமொழிச் சொற்களை பயன்படுத்துவது தவறல்ல என்ற கருத்திற்கு ஒப்பப் பொருள்பட அமைந்துள்ளது தொல்காப்பியரின் கீழ்க்கண்ட பாடல் வரிகள்.
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.
ஆரியச் சார்பு சிந்தனைகள் எதிர்ப்பு
சம்ஸ்க்ருத மொழியானது ஆரியர்களின் மொழி, தேவ பாஷை என்ற ஒரு கருத்து புதிதாக முன்வைக்கப்பட்டது. ஆரியர் என்றால் ‘போற்றுதலுக்கு உரியவர், தலைவர்’ என்றே பொருள் என்று குறுந்தொகை, தேவாரம், கம்பராமாயணம், திருவாசகம் போன்ற தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், அரசியல் காரணங்களுக்காக, ஆரியம் என்பது ஒரு இனம் என்றும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒவ்வாத சில சிந்தனைகள் உடையது என்றம், ஒரு கருத்து பரப்பப்பட்டது. மரபணு விஞ்ஞானிகளும், இந்த வாதத்திற்கு எந்த விதமான அறிவியல் சான்றுகளும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். எனினும், இந்த கருத்தின் அடிப்படையில், பல இலக்கியங்களில் காணப்பட்ட, சொற்கள் மற்றும் பாடல் வரிகள் வெளிப்படுத்தும் சிந்தனைகளில், சிலவற்றை, ஆரியச் சார்பு சிந்தனைகள் என்று இனம் காணும் முயற்சியில், சில தமிழறிஞர்கள், ஈடுபட்டனர்.
கடவுள் மறுப்புக் கொள்கை
கடவுள் மறுப்புக் கொள்கை என்பது ஒரு இயக்கமாக உருவாகி, பல்வேறு ஆன்மீக மற்றும் சமயம் சார்ந்த படைப்புக்களும், மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.
உதாரணத்திற்கு, திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரை, பல நூற்றாண்டுகளாக மிகச் சிறந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழறிஞர் பலர், மேற்க்கூறிய மூன்று கருத்துக்களின் அடிப்படையில், பரிமேலழகரின் அவ்வுரையை, மறு ஆய்விற்கு, உட்படுத்தி, அவற்றில் கண்ட வடமொழிச் சார்பு, ஆரியச் சார்பு மற்றும் ஆன்மீகச் சார்பு சிந்தனைகளின் தாக்கங்களை, இனம் கண்டு, அவற்றை விலக்கி, புத்துரைகள் எழுதினர்.
அத்துடன் நில்லாமல், மேற்க்கூறிய கருத்துக்களுடன், உடன்படாத, உரையாசிரியர்களுக்கும், அவர்களின் பதிவுகளுக்கும் முக்கியத்துவம் மறுக்கப்பட்டது.
மேற்க்கூறிய காரணங்களால்,, தமிழ் மற்றும் சம்ஸ்க்ருத மொழிகளுக்கு இடையே அதுவரை நிலவிய ஆரோக்கியமான பரிவர்த்தனைகள் பெரிதும் தடைப்பட்டன. இலக்கிய மொழியாக்கங்களில், தேக்க நிலை உண்டானது.
இன்றைய நிலை
சென்ற 10 ஆண்டுகள் வரை, மொழி ஆராய்ச்சியாளர்களால் மட்டுமே திரட்டக்கூடிய தகவல்கள், இன்றைய கணினி சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியால், வலை தளங்களிலும், தகவல் களஞ்சியங்களிலும், காணப்படுகின்றன. அத்தகைய வலை தளங்களில், ஒவ்வொரு கருத்திற்க்கான வரலாற்றுப் பின்னணிகளும், விவாதங்களும், மாற்றுக்கருத்து பற்றிய விமர்சனங்களும், காணப்படுகின்றன. சாமானிய மக்களால் கூட சரித்திர உண்மைகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
திருவள்ளுவரின்கூற்று,
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
என்பது இப்பொழுது சாத்தியப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பினை முழுவதம் பயன்படுத்தி, தமிழ் மற்றும் சம்ஸ்க்ருத மொழிகளுக்கு இடையே சென்ற நூற்றாண்டு வரை, நிலவிய ஆரோக்கியமான பரிவர்த்தனைகளை, மீண்டும், புதுப்பிக்க, முயற்சிகளை மேற்க்கொள்ள வேண்டும்.
ஏன் இந்தத் தொகுப்பு ?
வடமொழிச் சொற்களை தேவைகளுக்கு ஏற்றார் போல் பயன்படுத்துவது தமிழின் வளர்ச்சிக்கு சாதகமாகவே அமையும் என்கின்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டது இந்தத் தொகுப்பு.
கீழ்க்காணும் இணையதள முகவரியில், தமிழ் மொழியின் பேச்சு வழக்கில் அன்றாடம் பயன்படுத்தும் 1000+சம்ஸ்க்ருத சொற்களும், ஆங்கில மொழியில் அவற்றின் பொருளும் மற்றும் ஹிந்தி மொழியில் அதற்கு நிகரான சொற்களும்(800+)கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, தமிழ்மொழியில் பேச்சு வழக்கில் உள்ள 1000+ சொற்களில், 800க்கும், மேற்பட்ட சொற்கள், ஹிந்தி மொழியில், அதே பொருள் மற்றும் ஒலி ஓசையுடன் அமைந்துள்ளது. மேலும் அச்சொற்களுக்கு பெங்காலி, குஜராத்தி, மராத்தி போன்ற இதர மொழிகளில், அவற்றின் நிகரான சொற்களும் (உதாரணத்திற்கு 50 சொற்கள்) கொடுக்கப்பட்டுள்ளன.
அதே இணையதள முகவரியில்,மேலும் சில கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புக்களில் இடம் பெற்றுள்ளன.
தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் பற்றிய சிலஅறிஞர்களின் கருத்துக்கள்
இலக்கியப் படைப்புக்களில் சம்ஸ்க்ருத சொற்கள்
இந்தியமொழிகள் – ஒரு பார்வை
அன்றாட வாழ்வில் சம்ஸ்கிருத மொழி
வரலாற்றுச் சின்னங்களில் சம்ஸ்க்ருதம்
இவைகள், சம்ஸ்கிருதம், பற்றிய மேலும் பல அரிய தகவல்களை அளிக்கின்றன.
தமிழர்களாகிய நாம் ஏன் சம்ஸ்க்ருதம் பயில வேண்டும் ?
இன்றைய தமிழர்களின் நிலையை ஆராயும் பொழுது, பொருளாதார அடிப்படையில், அவர்களை இரு கூறாக பிரிக்க முடியும். முதல் பிரிவு, தமிழ் மொழி மட்டுமே அறிந்து , அதில் சரளமாக பேசக்கூடியவர்கள். இரண்டாம் பிரிவில், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு அல்லது அதற்குக்கும் மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்று, அம்மொழிகளில், சரளமாகவும் பேசக்கூடியவர்கள். இன்றைய பொருளாதார வளர்ச்சி, பெரும்பாலும் ,இரண்டாம் பிரிவில் உள்ள தமிழர்களை மட்டுமே, சென்றடைந்து உள்ளது. இதில் வேதனையான உண்மை, முதல் பிரிவில் 80 சதவிகிதத்திற்கும், மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள், பொருளாதார வளர்ச்சியில், ஒரு தேக்க நிலையை அடையக் கூடிய அபாயம் உள்ளது.
இரண்டாவதாக, இந்தியாவின் மற்ற மாநிலங்களில், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், சம்ஸ்க்ருதமொழி, ஒரு பாடமாக மீண்டும் கற்பிக்கப்படுகின்றது. அம்முயற்சிகள், மக்களிடையே நல்ல ஆதரவையும் பெற்றுள்ளன. தமிழர்களாகிய நாமும், இந்த முயற்சியில், முழுமையாக ஈடுபட்டு, மொழி ரீதியாக, தேசிய நீரோட்டத்தில் நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும்.
இதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?
ஆங்கிலத்தில், ‘The strength of a chain, lies in the strength of its, weakest link’ என்று சொல்வதுண்டு. அதாவது, ஒரு சங்கிலியின் வலிமை, அந்தச் சங்கிலியில் கோர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு வளையத்தின் வலிமையை பொறுத்தே அமையும். வலிமையற்ற ஒரே ஒரு வளையத்தால், அந்த சங்கிலியின் மற்ற வளையங்களின் முழு வலிமையை உபயோகிக்க முடியாமல் போகும். அதுபோன்று, 80 சதவிகித தமிழர்கள், தங்களது திறமைகளுக்கு, தமிழ்நாட்டுக்குள் மட்டுமே, வாய்ப்புகளைத் தேடும் ஒரு நிலை உள்ளது. அந்நிலையில் இருந்து விடுபட, இந்தியாவின் மற்ற பகுதிகளிலும், வாய்ப்புகளைப் பெறுவதற்கு, தங்களை தகுதி உள்ளவர்களாக, தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த இலக்கை அடைவதற்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட அணுகுமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று, இந்தியாவின் மற்ற பகுதிகளில், வழக்கத்தில் உள்ள மொழிகளில் ஓரளவேனும் பயிற்சி பெற வேண்டும். மற்ற பகுதிகளில், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் வழக்கத்தில் உள்ளதால், பெருவாரியான அம்மொழிகளின் வேராக (Root) கருதப்படுகிற, சம்ஸ்க்ருத மொழியை கற்க, முயற்சி செய்ய வேண்டும். சம்ஸ்க்ருத மொழியில் பயிற்சி பெறுவது, மற்ற மொழிகளின் பயிற்சியை துரிதப்படுத்தும் ஒரு திறவுகோல் ஆகும். மொழி ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில், அத்தகையபயிற்சி, இந்தியாவின் 75 சதவிகித மக்களுடன், மொழி ரீதியான தொடர்பை ஏற்படுத்தும் ஒரு வாய்ப்பை உருவாக்கும் என்று கணித்துள்ளனர்.
இன்றைய காலக் கட்டத்தில், வெளி நாடுகளில் வேலை வாய்ப்பு மற்றும் குடியுரிமை பெற, அந்நாட்டு மொழிகளை, பல லட்சங்கள் செலவழித்து, பயின்று வரும் நம் இந்திய நாட்டு மக்கள், பாரம்பரியமான, நமது சம்ஸ்க்ருத மொழியைப் பயில வேண்டும். அதன் மூலம் அம்மொழியின் படைப்புகளில் புதைந்துள்ள தகவல் களஞ்சியங்களைக் கொண்டு, உலக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடு படவேண்டும்.
சம்ஸ்க்ருதமொழியை பயில விரும்புவோருக்கு, அப்பயிற்சியை, இலவசமாக வழங்கும் சில நிறுவனங்களும் உள்ளன. அந்தப் பயிற்சிக்கான கால அவகாசமும் ஓரிரண்டு மாதங்களே. பேச்சு வழக்கில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்றொடர்களில், சம்ஸ்க்ருத சொற்கள், பரவலாக உள்ளதைக் காண முடியும். மேலும் சில, சொற்களையும், சொற்றொடர்களையும் பயின்று, சம்ஸ்க்ருத மொழியில், அடிப்படைத் தேர்ச்சி பெற்று, அதன் மூலம், மற்ற மொழிகளையும் பயில்வோம்.
மேற்கூறிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க விரும்புவோர், அருகிலுள்ள சம்ஸ்க்ருத பயிற்சி மையத்தில் / பயிற்சி முகாம்களில் தொடர்பு கொண்டு பயன் அடையலாம். வலைதளம் மூலமாகவும் சில நிறுவனங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றன. அப்பயிற்சிகளின் மூலமாக, நம்முடைய பன்மொழித் திறமைகளை வளர்த்துக் கொண்டு, நமது திறமைகளுக்கான வாய்ப்பைப் பெருக்கிக்கொள்வோம். பாரதியின் “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற கனவை, நிறைவேற்றுவோம்.
-- Edited by Admin on Saturday 31st of January 2015 12:34:34 PM
சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரையில் ஒரு கடவுளுக்கு இரு புறமும் இரண்டு நாகங்கள் படம் எடுத்த நிலையில் இருக்கின்றன. வேதங்களில் நாக ராணியைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இப்போது நடை பெறும் வேத ஆராய்ச்சிகள் பல புதிய உண்மைகளைத் தெரிவிக்கின்றன.
உலகத்தில் பாம்புகளைப் போற்றாத பழைய நாகரீகங்களே இல்லை. வேத காலம், சிந்து சமவெளி, கிரேக்க, எகிப்திய, சுமேரிய ,பாபிலோனிய, மாயா பண்பாடுகள் அனைத்திலும் நாக உருவில் தெய்வங்கள் உண்டு. ஆயினும் இந்துக்களுக்கு இதில் மிகவும் சிறப்பான இடம் இருக்கிறது. வேத காலத்தில் போற்றப்பட்ட நாகங்களுக்கு இன்றுவரை கோவில்கள் இருப்பதைப் பார்க்கிறோம். உலகில் வேறு எங்கும் காணாத புதுமை என்னவென்றால் உயிருள்ள பாம்புகளுக்கே நாக பஞ்சமி அன்று பூஜையும் செய்கிறோம். எல்லா இந்து தெய்வங்களும் பாம்புடன் சம்பந்தப்பட்டவை.
ஆர்தர் ஈவான்ஸ் என்ற தொல்பொருள் துறை நிபுணர் கிரீட் தீவில் நாசோஸ் என்னும் நகரில் பெரிய மினோவன் நாகரீக அரண்மனையை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்தார். அதில் ஒரு பெண் இரு கைகளிலும் பாம்புடன் நிற்கிறார். அவர் தெய்வமா பூசாரினியா என்று தெரியவில்லை. அந்தச் சிலை மேலை உலகில் மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டது.
மானசா தேவி, நாகராஜன், நாக யக்ஷி முதலிய பல வடிவங்களில் சபரிமலை முதல் சிந்து சமவெளி வரை கோவில்கள் அல்லது பாம்பு ராணி சிலைகள் இருக்கின்றன. அன்று போல் இன்றும் நாகங்களைத் தெய்வமாக வழிபடும் தொடர்ச்சியையும் காண்கிறோம்.
அயர்லாந்தில் ஹெகடெ (சக்தி என்ற சொல்லின் மருவு) என்ற நாகராணியை வணங்கினர். சுமேரியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன் கபஜா என்னும் இடத்தில் இரண்டு கைகளில் இரண்டு பாம்புகள் உடைய தெய்வத்தைக் காணலாம். இதே தெய்வம் நாக யட்சி என்ற பெயரில் கர்நாடகம் கேரளம் முழுதும் உள்ளன. ஒரிசா, வங்காளம் ஆகியவற்றில் மானசா தேவி இதே உருவத்தில் வழிபடப்படுகிறாள்.
ரிகவேதத்தில் 27 பெண் கவிஞர்களின் பெயர்களைக் காணலாம். அவர்களில் ஒருவர் பெயர் சர்ப்பராக்ஞி (பாம்பு ராணி). சர்ப்பராக்ஞீ என்ற தெய்வமும் பலவித தைத்ரீயம் முதலிய பிராமண நூல்களில் வருகிறது. தைமத என்ற பாம்புத் தெய்வத்தின் பெயரும் இருக்கிறது. இதை டியாமத் என்ற பாம்புத் தெய்வமாக பாபிலோனியர்கள் வணங்கினர். ஆக வேத கால தெய்வங்கள் 5000 ஆண்டு பழமை உடையவை என்பது நிரூபணம ஆகிவிட்டது.
அதர்வண வேதத்தில் வரும் அலிகி, விலிகி என்ற சொற்களுக்கு பொருள் விளங்காமல் இருந்தது. வேதங்களைப் பற்றி ஆராய்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் வேதங்கள் 6000 ஆண்டுப் பழமை உடையவை என்று நிரூபிக்கும் புத்தகத்தில் அலிகி, விலிகி ஆகியன சம்ஸ்கிருதம் அல்ல, அவை அக்கடியன் மொழிச் சொற்கள் என்று எழுதி இருந்தார். இதை இப்போது ஆராய்ந்த டாக்டர் பகவத்சரண் உபாத்யாயா, டாக்டர் நாவல் வியோகி முதலானோர் இந்தச் சொற்கள் கி.மு 3000இல் ஆட்சி செய்த ஆலால, வேலால (தமிழ் பெயர்களாகவும் இருக்கலாம்) என்ற இரண்டு அசீரிய மன்னர்கள் என்று கண்டுபிடித்தனர். இவைகள் உண்மை என்றால் அதர்வண வேதத்தின் காலம் 5000 ஆண்டுகளுக்கு முன் என்றாகிவிடும். மொழி இயல் ரீதியில் இதற்கு மிகவும் முற்பட்டது ரிக் வேதம். உலகின் மிகப் பழைய மத நூல். ஆகவே அது 6000, 7000 ஆண்டுகளுக்கு முந்தியது என்று திலகர் எழுதியது சரி என்றாகிறது.
வேதத்தில் குறிப்பிடப்படும் சரஸ்வதி நதி மறைந்து 5000 ஆண்டுகள் ஆகியதை பாபா அணுசக்தி ஆய்வு மையமும் அமெரிக்க விண்வெளி நாஸா- வும் உறுதி செய்ததாலும் வேத காலத்தின் பழமை உறுதியாகிறது
(இந்தக் கட்டுரை ஆங்கிலத்திலும் Serpent Queen: Indus Valley to Sabarimalai எழுதியுள்ளேன், பெயர்களின் சரியான ஸ்பெல்லிங் முதலியன தேவைப்பட்டால் ஆங்கிலக் கட்டுரையை வாசித்து கூகிள் செய்தால் மேலும் ஆழமான தகல்களைப் பெறலாம்)
சுமேரியாவின் வரலாற்றை எழுதிய பெரோருஸ் என்ற கிரேக்க ஆசிரியர் ஆதிகால மன்னர்களின் பெயர்களை அளிக்கிறார். ஊர்த்வரேதஸ் (ஒட்டரடெஸ்) மற்றும் துமுசி என்ற பெயரில் இரண்டு மன்னர்கள் சுமேரியாவை ஆண்டனர். ஒரு துமுசி இடையர், மற்றொரு துமுசி மீனவர். ராமன், கண்ணன் ஆகிய மன்னர்களை நாம் எப்படி தெய்வம் ஆக்கினோமோ அப்படி இவர்களை அவர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்திவிட்டார்கள். இவர்கள் தமிழர்களாக இருக்கலாம். ஏனெனில் துமுசி என்பதை தமிழி என்று வாசிக்கும்படி ஆங்கிலத்தில் எழுதபட்டிருக்கிறது. அதைப் பிற்காலத்தில் டம்முஸ் என்றும் சம்மட என்றும் பல வகையாக எழுதினர். டம்முஸ் என்பதும் தமிழன் என்பதை ஒட்டி வருகிறது.
இது தவிர சுமேரிய மொழிக்கு சிறிதும் தொடர்பில்லாத சுமுகன் என்ற தெய்வப் பெயரும் இருக்கிறது. இது விநாயகப் பெருமானைக் குறிக்கும் தூய சம்ஸ்கிருதச் சொல். பெரோரஸ் என்ற ஆசிரியரின் பெயரையும் வர ருசி என்றும் படிக்கலாம். அவர் சில மன்னர்களின் தலைநகரம் பத்தர்குரு என்று எழுதிவைத்தார். இந்த பத்தர்குரு புராணங்களில் மிகவும் போற்றப்படும் உத்தரகுரு ஆகவும் இருக்கக் கூடும்.
5000 ஆண்டுகளுக்கு முன் இப்படி சுமேரியாவில் தமிழும் சம்ஸ்கிருதமும் இருப்பதை நோக்கும் போது இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்ற பழைய கோட்பாடும் உயிர் பெறுகிறது. இத்துடன் இணைத்திருக்கும் படங்களைக் காண்போருக்கு, உண்மைகள் சொல்லாமலே விளங்கும்
தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்!
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1500; தேதி 20 டிசம்பர், 2014.
மீன், நீர், மயில் (மயூர) போன்ற தமிழ் சொற்கள் ரிக் வேதத்தில் இருப்பதாகவும், தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் காலம், உலகம், மனம், காமம் முதலிய சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதாகவும் அறிஞர்கள் சொல்லுவர். இதை எதிர்ப்போர் இவை எங்கள் மொழியில் இருந்து அங்கே சென்றவை என்று வாதிடுவர். உண்மையில் சில சொற்கள் காலத்தையும் மீறி உரு மாறாமல் இருந்ததால் இவைகளை இப்போது எந்த மொழியில் புழங்குகிறதோ அந்த மொழிச் சொல் என்று நாம் வாதாடுகிறோம். ஆனால் இவை இரு மொழிக்கும் பொதுவான சொற்கள் என்பதை அறிந்தால் இரு மொழிக்கு இடையில் உள்ள பிரிவினைக் கோடு மறைந்து போகும்.
இவைகளை எல்லாம் விட பெரிய ஆதாரம் இரு மொழி இலக்கியங்களில் உள்ளன. தமிழுக்கு மிக நெருக்கமான மொழி சம்ஸ்கிருதம்! இதே போல சம்ஸ்கிருதத்துக்கு நெருக்கமான மொழி தமிழ். இரு மொழிகளிலும் உள்ள பழைய கவிதை நூல்களை எடுத்துக் கொண்டு கடைசி பக்கத்தில் உள்ள பாடல் முதற்குறிப்பு அகராதிக்குப் போங்கள். ஒவ்வொரு மொழியிலும் உயிர் எழுத்தில் எத்தனை பாடல்கள் துவங்குகின்றன என்று பாருங்கள். அற்புதமான ஒற்றுமை இருப்பதைக் காண்பீர்கள்.
பகவத் கீதையில் அ-97, ஆ-17, இ-21, ஈ-1, உ-9, ஊ-2, க்ரு-1, ஏ-21, ஓ-2 வில் துவங்கும் ஸ்லோகங்கள் =171
மொத்தம் ஸ்லோகங்கள் 700
ஆக நாலில் ஒரு பகுதி உயிர் எழுத்தில் துவங்குபவை
மொத்தம் உள்ள குறள்கள் 1330
கட்டுரையின் இரண்டாவது பகுதியில் மேலும் பல விஷயங்களைத் தருகிறேன்.