கேள்வி இந்திய கலாச்சாரத்தில் வலது கையால் வாங்கிக் கொள்வதும், முக்கியமான விஷயங்களை வலக்கையால் மட்டுமே செய்வதும் வழக்கம். மேற்கத்திய நாடுகளிலும்கூட வலது கையால் செய்யுங்கள் என ஊக்குவிக்கின்றனர். எதற்காக இந்த வழக்கம்? சத்குரு: இருதய அமைப்பு இருதய அமைப்பு இடது பக்கமாக உள்ளது முக்கியமான ஒரு காரணம். வலது கையை பயன்படுத்தும் அளவிற்கு இடது கையை பயன்படுத்தக் கூடாத விதத்தில்தான் மனித உடல் உருவாக்கப்பட்டுள்ளது. பந்து எறிவது போன்ற செயல்களுக்கு இது பொருந்தும். ஆனால், வலது கையினால் பெற்றுக் கொள்வது எதனால்? இடது கை மற்றும் வலது கை வெவ்வேறான குணங்களைக் கொண்டுள்ளன. வலது கால் மீது இடது கால் அல்லது இடது கால் மீது வலது கால் வைத்து அமரும் நிலை இரண்டிற்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது. சித்துவேலை செய்வது போன்ற சூழ்நிலை தவிர, இடது காலினை உள்ளே வைத்து அமரும் வழக்கமே யோக கலாச்சாரத்தில் நிலவி வருகிறது. இடதுபுறத்தை மென்மையாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்வதன் மூலம் நம்மைச் சுற்றி நடப்பதை சிறப்பாக உணரலாம். உடலின் இடப்பக்கம் பெண்தன்மை உடையது. அதனை பேணிக் காப்பது அவசியம். வலப்பக்கம் ஆண்தன்மை கொண்டது. வெளிப்புற செயல்கள் அனைத்தையும் வலக்கையை பயன்படுத்தி செய்ய வேண்டும். வலது திடமானது, இடது மெல்லுணர்வு உடையது. உங்களை உணர வேண்டும் என்று நான் விரும்பினால், என் இடக்கையையே நீட்டுவேன். ஏனெனில், அதற்கு உள்வாங்கும் திறனும் மெல்லுணர்வும் உண்டு. இடதுபுறத்தை மென்மையாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்வதன் மூலம் நம்மைச் சுற்றி நடப்பதை சிறப்பாக உணரலாம். பிற செயல்களுக்கு அதைப் பயன்படுத்தினால் தன்னுடைய மெல்லுணர்வை அது இழந்துவிடும். ஏதோ ஒன்றுக்கு மென்மையான தொடுதல் தேவைப்படும்போது இடக்கையை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, கோல்ஃப் விளையாட்டு விளையாட உங்களுக்குள் இருக்கும் ஆண்தன்மையை மனத்திலிருந்து நீக்குவது அவசியம். இதனால் தான் கோல்ஃப் விளையாடும்போது, பெரும்பாலான சமயங்களில் நான் இடது கையை பயன்படுத்துகிறேன். இதனை இன்னும் ஆழமாய் பார்த்தால், கோல்ஃப் விளையாட சக்தி தேவையில்லை, மென்மையான ஒரு தொடுதலே போதும். பெண்மையின் குணம் இதுவே பெண்மையின் குணம், இடதுகை பெண்தன்மை உடையது. பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்குள் உள்ள பெண் தன்மையை கொன்று விட்டதால், இந்த வித்தியாசத்தை உணர்வதேயில்லை. பெண் தன்மையை உயிர்ப்புடன் வைத்திருந்தால் இதனை ஒருவரால் உணர முடியும். ஆனால், இன்றோ சம உரிமை என்ற பெயரில் அனைத்தையும் ஒரே மாதிரி ஆக்கிக் கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதிலும் ஆண் தன்மையையும் பெண் தன்மையையும் சமமாக மாற்றுவதற்கான தீவிரமான முயற்சிகள் அரங்கேறி வருகின்றன. இது துரதிருஷ்டவசமான, கொச்சையான உண்மை. பெண்களிடம் கூட இன்று பெண்தன்மை குறைந்து வருவது ஒரு பெருவிபத்து. நாம் முரடான ஒரு சில கருத்துக்களை கொண்டிருப்பதால், எங்கோ மனதின் ஒரு மூலையில் பெண்தன்மை பலவீனமானது என்று எண்ணத் துவங்கிவிட்டோம். ஆண்தன்மை அதிகமானால்… வெகுசிலருக்கு இருதயம் வலப்பக்கமாக அமைந்து விடுவதுபோல் ஒருசிலருக்கு பிறப்பிலேயே இடக்கைப் பழக்கம் அமைந்துவிடுகிறது. பொருளாதாரம் பிரதானமாய் போனால், ஆண்தன்மை மட்டுமே பிழைக்கும். அடிப்படையில் பார்த்தால், பொருளாதாரம் பிழைப்பு நடத்துவதற்கான ஒரு செயல்முறை. உலகில் இன்று வாழ்வு நடத்துவதற்கான பிழைத்தல் செயலுக்கு முக்கிய இடம் கொடுத்து உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது. இது முட்டாள்தனமான ஒரு வழி. இதுபோன்ற ஒரு முடிவெடுத்துவிட்ட பின் அங்கு பெண்தன்மை உயிர்ப்புடன் இருப்பதற்கான சாத்தியம் இல்லை. பெண்கள் பிழைப்பு நடத்த தெரியாதவர்கள் என்றில்லை, ஆனால் பெண்தன்மை என்னும் ஒரு குணத்தை முழுவதுமாக நாம் அழிக்கிறோம். அழித்துவிட்டு, இந்த உலகம் ஏன் இப்படி கரடுமுரடாக இருக்கிறது என்று அலுத்துக் கொள்கிறோம். சமூகத்தில் இன்று நாம் உருவாக்கிக் கொண்டுவரும் மதிப்பீடுகளைப் பார்க்கையில் உலகம் வேறு விதத்தில் இருக்கவே முடியாது. பெண்தன்மை செயல்பட, இடதினை மென்மையாகவும் விழிப்பாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். வலதுகை இந்த உலகில் நாம் செய்யும் செயல்களைச் செய்ய. சம்பாதிக்க, பந்துவிளையாட அல்லது இதுபோன்ற செயல்களில் ஈடுபட வலது கையை பயன்படுத்த வேண்டும். பிழைப்பு சார்ந்த அத்தனை செயல்களுக்கும் வலது கையை பயன்படுத்த வேண்டும். சூட்சுமமான, மெல்லுணர்வுடைய விஷயங்களைச் செய்ய இடது கையை பயன்படுத்துவது அவசியம். வெகுசிலருக்கு இருதயம் வலப்பக்கமாக அமைந்து விடுவதுபோல் ஒருசிலருக்கு பிறப்பிலேயே இடக்கைப் பழக்கம் அமைந்துவிடுகிறது. அவர்களுடைய சக்தி அவ்விதத்தில் இருப்பதால் அவர்கள் தவிர்க்க இயலாமல் இடக்கையை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இயல்பாக பார்த்தால் வலக்கையால் உங்களால் அதிக செயல்களைச் செய்ய முடியும். இடக்கையை குறிப்பிட்ட விதத்தில் வைத்திருந்தால், அதனை வேறு விஷயத்திற்காக பயன்படுத்தலாம். இதனை சரியாய் புரிந்துகொள்ளாமல் வலது கையை மட்டுமே பயன்படுத்தி உடற்பயிற்சி செய்யக்கூடாது. உங்கள் வலக்கையினைப் பயன்படுத்துவது போல் இடக்கையை மூர்க்கமாக பயன்படுத்தக் கூடாது. அதனை உள்வாங்கிக் கொள்வதற்காக காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் உங்களிடம் உள்வாங்கும் தன்மை என்பது இருக்காது.
நீங்கள் வலக்கையாளரா? இடக்கையாளரா?
நீங்கள் வலக்கையாளரா? இடக்கையாளரா?
No comments:
Post a Comment