மனிதனின் வாழ்கையில் குருவின் அத்தியாவசியம்:
தங்கத்தை பூமியிலிருந்து வெட்டி எடுத்து அப்படியே உடலில் அணிய முடியாது. தீயில் புடம் போட்டு நமது தேவைக்கேற்றவாறு தட்டி செதுக்கி ஒரு உருவகப்படுத்தி ஆபரணமாக்கி தான் அணிய வேண்டும். அப்போது தான் அதற்கு மவுசு அதிகம். அதேபோல் வைரத்தை பூமியிலிருந்து எடுத்து பார்த்தால் அது ஒரு கல் தான். அதனை முறைப்படி பட்டை தீட்டி எடுத்தால் மட்டுமே அது பிரகாசமாய் ஒளிவிடும் வைரமாகும். மனிதனும் பிறக்கும் போது சாராசரியாக ஒரேமாதிரித் தான் பிறக்கிறான். வளரும் போது நண்பர்களின் சேர்க்கை, அயலவர்களின் பாதிப்பு, சுற்றங்களின் பாதிப்பு இவற்றினால் அவன் நல்ல அல்லது கெட்ட இயல்புகளைப் பெற்று விடுகிறான். இந்த மனிதனை ஒரு பண்பாளனாய் பக்குவப் படுத்துவதற்கு அவனை புடம் போட்டு, செதுக்கி, பட்டைதீட்டுபவரே குரு என்ற ஒரு ஞானஒளி ஆகும்.
No comments:
Post a Comment