புத்தர் துறவறம் ஏற்றதும், அவரைப்பார்க்க வந்த பாவிகள் கூட மனம் திருந்தினர். சிலர் அவரைப் பின்பற்றி துறவறமும் பூண்டனர். இதனால், தேவர்களுக்குரிய யாகங்கள் நின்று போயின. தேவர்களுக்கு யாகம் மூலமே உணவு கிடைக்கும். இதனால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உணவு தாமதப்பட்டது. எனவே, கோபம் கொண்ட தேவர்கள், புத்தரை அழிக்க எண்ணம் கொண்டனர்.
பூலோகம் வந்த அவர்கள் புத்தரைச் சந்தித்தனர்.
"புத்தரே! நாங்கள் ஒரு யாகம் செய்ய விரும்புகிறோம். அதற்கு பூலோகத்தில் தூய்மையான இடம் வேண்டும். அந்த இடம் உங்களது மார்புதான். அங்கு யாக குண்டம் அமைத்து, தீ மூட்ட அனுமதிக்க வேண்டும்,'' என்றனர். தீயிட்டு அவரைக் கொன்று விடுவது தேவர்களின் திட்டம்.
புத்தரும் மறுப்பு சொல்லாமல் ஒப்புக் கொண்டார். யாகம் துவங்கி தீ மூட்டப்பட்டது. புத்தரின் முகம் முன்னைவிட, அந்த ஜுவாலையில் ஜொலித்தது. தேவர்கள் ஏதுமறியாமல் திகைத்தனர். ஒரு கட்டத்தில் அவரைத் தாக்கவும் ஆரம்பித்தனர். அப்போது ஒலித்த அசரீரி, "இந்த வீண்முயற்சி எதற்கு? மனத்தூய்மை உள்ளவர்களை யாராலும் அழிக்க முடியாது!'' என்றது.
தலைகுனிந்த தேவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பினர்.
மல்லிகை மலர் போல மனத்தூய்மை உள்ளவர்களுக்கு தெய்வத்தால் கூட அழிவு கிடையாது என்பதை புத்தரின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது.

No comments:
Post a Comment